வணக்கம் நண்பர்களே,
தீபாவளி நவம்பர் முதல் வாரம் வருது. இப்ப தான் சம்பளம் வாங்கி எப்பவும் போல செலவுகளை பட்ஜெட் போட்டுட்டு இருப்போம். எப்பவும் பட்ஜெட்க்கு துணையா இருக்கிற மனைவிமார்கள் இந்த மாசம் கொஞ்சம் கிராக்கி பண்ணுவாங்க. ஆமாங்க, தீபாவளிக்கு புது துணிமணிகள் வாங்கணும் தான். ஆனாலும் நம்ம வீட்டுல அதுக்குனே தனியா பட்ஜெட் போட்டு தருவாங்க.
அந்த லிஸ்ட் பார்த்தாலே நமக்கு தலை சுத்திரும். அதுல பாத்திங்கனா, நமக்கு ஒரு சட்டை, ஒரு பேன்ட் அப்படின்னு லிஸ்ட் போட்டிருக்கும். ஆனா, மனைவி போட்டிருப்பாங்களே லிஸ்ட், சுடிதார், சேலை அப்படின்னு எண்ணிக்கையில ஒன்னுன்னு இருக்காது. அப்போதைக்கு மனசுல தோணின எண்ணிக்கை தான் போட்டிருப்பாங்க, அதுலயும் ரேட் இவ்ளோல இருந்து தான் ஸ்டார்ட் பண்ணனும்னு போட்டிருப்பாங்க. அப்போ நெலமைக்கு நம்ம சம்பளமோ, வரிசையா இருக்கிற லோனோ அவங்களுக்கு தெரியாது. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் தீபாவளி அன்னைக்கு மினுக்கணும். நம்ம மனைவி மினிக்கிரதுல நமக்கு உள்ளுக்குள்ள சந்தோசம் தான் என்றாலும், அவங்க வாங்க துணிகளை நெனச்சாத்தான் அந்த மிணுக்கள் அவசியமானு தோணுது.....
சரிங்க அவங்களோட பட்ஜெட்க்கு ஒத்து போயி கடைக்கு போனோம்னா, கடைக்காரன் சோர்ந்து போற அளவுக்கு தேடுவாங்க, தேடுவாங்க, தேடிட்டே இருப்பாங்க. ஒண்ணு கலர் நல்லா இல்லைன்னு சொல்வாங்க, அப்புறம் கலர் அமைஞ்சா பார்டர் நல்லா இல்லைன்னு சொல்வாங்க, எல்லாமே அமைஞ்சா ரேட் கொறச்சலா இருக்குன்னு ஒதுக்கி தள்ளிருவாங்க. அப்புறம் ஒரு வழியா புடவை அமஞ்சிரும். அப்ப பாத்து பக்கத்துல நிக்கிற லேடி ஒரு சேலை நல்லா இருக்குன்னு சொல்லி எடுப்பாங்க, உடனே நம்ம வீடு கையில வச்சிருக்றத தூக்கி போட்டுட்டு அவங்க வச்சிருக்கிற மாதிரி இருக்கானு கடைக்காரரை கேட்பாங்க. அவரு ரெண்டு நிமிஷம் தேடிட்டு அதுமாதிரி இல்லைன்னு சொல்லிருவாரு. சரி, செலக்ட் பண்ணின புடவை எங்கேன்னு மறுபடியும் தேடினா இந்தப் பக்கத்து லேடி அதை தூக்கி பில்லு போட கொடுத்திருக்கும். அந்த நிமிஷம் நாமளும் டென்சன் ஆயிருவோம். சரிம்மா, வேற செலக்ட் பண்ணிக்கன்னு சொன்ன அடுத்த நொடி, இந்த கடையில ஒண்ணுமே இல்லை,
வாங்க வேற கடைக்கு போலாம்னு ஈசியா சொல்வாங்க. இப்படி பாதி நாளை ஒரு கடைக்கே செலவு பண்ணியிருப்பாங்க. சரி எனக்காவது புது துணி எடுத்துக்கலாம்னு சொன்னா போதும், எனக்கு அமையட்டும். உங்களுக்கென்ன ரெண்டு நிமிசத்துல எடுதுறலாம்னு சொல்லி நம்மள ஆப் பன்னிருவாங்க. அடுத்த கடை, மொத கடையில என்ன கூத்து நடந்துச்சோ, அதே கூத்து இங்கேயும் நடக்கும். அப்புறம் ஒரு வழியா தேடி தேடி களைச்சு போயி அதிக ரேட்டுல அரைகுறை மனசோட ரெண்டு மூணு எடுத்துக்கிருவாங்க. சரி அவ்ளோதானு நெனச்சோம்னா, அடுத்து சுடிதார் பக்கம் போயி நிப்பாங்க பாருங்க, நமக்கு தலையே சுத்தியிரும். அப்பிடி இப்பிடின்னு அதுலயும் ரெண்டு எடுத்துட்டு, அப்புறமா நம்மள பத்தி யோசிப்பாங்க. வாங்க. உங்களுக்கு டிரஸ் எடுக்கலாம்னு சொல்லி ஜென்ட்ஸ் பக்கம் கூட்டிட்டு போவாங்க. அப்புறம் செலக்ட் பண்றதுல இருந்து எல்லாமே அவங்க சாய்ஸ் தான். நாம அப்படியே எல்லாத்துக்கும் பொம்மை மாதிரி நிக்க வேண்டியது தான். எப்படியோ, நமக்கு ஒண்ணு செலக்ட் பன்னிருவாங்க. நமக்கு பிடிக்குதோ, இல்லையோ... அதெல்லாம் கேட்கவே மாட்டாங்க. ரைட்டுங்க, நமக்கு எப்படியோ ஒரு புது ட்ரெஸ் கிடச்ச திருப்தியில இருக்க வேண்டியது தான்.
அடுத்து குழந்தைகளுக்கும் எடுக்கணும்ல? பெரியவங்களுக்கு கூட எடுத்திடலாம் போல, ஆனா குழந்தைகளுக்கு டிரஸ் ரேட் ரொம்ப அதிகமாவே இருக்கும். குழந்தைகள் விரும்பற மாதிரி எடுத்து தர்றதுக்குள்ள மனைவிக்கு ஒரு சேலையே வாங்கிரலாம், அம்புட்டு நேரம் ஆகும் பசங்களுக்கு எடுக்க. ஒரு வழியா ரெண்டு மூணு கடை ஏறி இறங்கி, கூட்ட நேரிசல்ல சிக்கி வேர்த்து விறுவிறுத்து எல்லோருக்கும் ட்ரெஸ் எடுத்துட்டு வீட்டுக்கு போலாம்னு வண்டிய ஸ்டார்ட் பண்ணுவோம். அப்ப மனைவிகிட்ட இருந்து ஒரு வேண்டுகோள் வரும் பாருங்க, வேறென்ன வேண்டுகோள்?
நீங்க யூகிச்சதே தான்....
"நல்ல ஹோட்டலா பார்த்து வண்டிய விடுங்க, ரொம்ப பசிக்குது. குழந்தைகள் பசியில வாடுது". இன்னும் வீட்டுக்கு போயி சமைச்சு சாப்பிட ரொம்ப நேரமாயிரும். டிபனுக்கு தேவையானது வீட்டுல வேற இல்லை. அதனால ஹோட்டலுக்கு போங்கன்னு சொல்லிருவாங்க. ம்ஹும், நமக்கு அப்படியே தூக்கி வாரிப்போடும். அப்புறம் என்னங்க? சொன்ன பட்ஜெட்டை தாண்டி ட்ரெஸ் எடுத்திருக்காங்க. அதுல இப்பிடி ஹோட்டலுக்கு போன கொறஞ்ச பட்சம் ஐநூறு ரூவா செலவாகும். அதெல்லாம் யோசிக்றதே இல்லை... ஹி...ஹி... நாம இப்ப யோசிச்சு என்ன பண்றது? வேற வழி இல்லாம ஹோட்டலுக்கு போனோம்னா ஆர்டர் பண்ணுவாங்க பாருங்க, விதவிதமான அய்ட்டமா ஆர்டர் பண்ணுவாங்க, வீட்டுல இட்லி, தொசைன்னு சாப்பிடுறவங்க அந்த மாதிரி ஒரு அய்ட்டமே இல்லாத மாதிரி புதுசு புதுசு அய்ட்டமா ஆர்டர் பண்ணுவாங்க. எல்லாமே ரொம்ப காஸ்ட்லியா வேற இருக்கும். ம்ஹும், நாம ஜாடைமாடையா சொன்னாலும் அவங்க புரிஞ்சுக்க மாட்டாங்க. அவங்க சாப்பிடுறத பார்த்து நமக்கும் நல்லா பசிக்க ஆரம்பிச்சிரும். வேறவழி நாமளும் நிறையவே சாப்பிட்டருவோம். குழந்தைகளும் அவங்களுக்கு பிடிச்சதுன்னு நல்லா சாப்பிடுவாங்க. ஆக மொத்தம் எல்லோருமே காசை பற்றி கவலைப்படாம சாப்பிட்டருவோம். பில்லு வரும் பாருங்க ஆயிரத்தை தொட்டிருக்கும். ஆக இப்படியே தீபாவளி ட்ரெஸ் முதல் நைட் டிபன் வரை செலவு நாம போட்ட பட்ஜெட்டை தாண்டி இருக்கும்.
வீட்டுக்கு வந்து எல்லோர் கிட்டயும் எடுத்த துணிகளை காட்டி பெருமை பட்டுக்கிருவாங்க. அப்புறம் சொல்வாங்க பாருங்க டயலாக், நான் வேணாம் வேணாம்னு தான் சொன்னேன், இவரு தான் நல்லா காஸ்ட்லியா எடுத்துக்க சொன்னாருன்னு நம்ம மேல பழியை போட்டிருவாங்க. நாமளும் அதை ஆமோதிச்சுதான் ஆகணும்.
ரெண்டு மூணு நாள் போனதுக்கு அப்புறம் என்னங்க, என்னங்க அப்படின்னு நச்சரிக்க ஆரம்பிப்பாங்க. என்னன்னு கேட்டோம்ன்னா வீட்டுல இருக்கிறப்போ போட சாதா சேலையே இல்லை. கொஞ்சம் ரேட் கம்மியா ஒரு ரெண்டு மூணு சேலை வாங்கணும், அதனால கொஞ்சம் பணம் கொடுங்கன்னு கேட்பாங்க. வேறவழி, தந்துதான் ஆகணும் பணத்தை. அதுக்கு வேற ஒரு முறை கடைக்கு கூட்டிட்டு போகணும். அப்புறம் போன பாகத்தில் நான் சொன்னேனே, அதெல்லாம் தவறில்லாம நடக்கும். அந்த சாதா சேலைகள் எடுக்க ஒரு நாள் காலி தான்...
அப்பாடி ஒரு வழியா துணிமணிகள் எடுத்தாச்சு. இனி நிம்மதிதான்னு நெனச்சிட்டு இருப்போம். என்னங்க.... என்னங்க... அப்படின்னு ஒரு பீடிகை போடுவாங்க. நமக்கு இன்னும் என்ன செலவு வரப்போகுதோன்னு அடிவயிறு கலக்கும். ஆமாங்க, நம்ம வீட்டுக்கு தான் செலவு பண்றோம். தப்பில்லை. அதுக்காக ஒரு அளவு வேணும்ல... ஹி..ஹி... சரி.. சரி... என்ன பீடிகைன்னு கேட்கங்களா? வேறென்ன? சேலை சுடிதாருக்கு ஏற்ற மாதிரி வளையல், பொட்டு, கவரிங் டிஸைன் நகைகள் என வாங்கி தர்றதுக்கு தான் அந்த பீடிகையே... வேற வழி அவங்க கேட்குற எல்லாத்தையும் வாங்கித் தந்திரனும். இல்லையினா எப்படி எப்படியெல்லாம் பழி வாங்க முடியுமோ வாங்குவாங்க. ஹி..ஹி... நமக்கு நல்ல சாப்பாடு, சுத்தமான டிரஸ் போட்டுக்கிற வேணும்ல. அப்ப வாங்கிக் கொடுதிரனும்.
அப்புறம் ஒரு வழியா எல்லாத்தையும் எடுத்துக் கொடுத்த நிம்மதியில இருப்போம். தீபாவளி வர நாலு நாள் இருக்கும் போது மறுபடியும் "என்னங்க" அப்படின்னு ஆரம்பிப்பாங்க. ஐயோ மறுபடியும் என்னங்கவா?என்ன செலவு வைக்க போறாங்களோன்னு மறுபடியும் உள்ளுக்குள்ள கலக்கம். என்ன "என்னங்கம்மா" என்ன விஷயம்னு கேட்ட உடனே அவங்க சொல்வாங்க. தீபாவளிக்கு ஸ்வீட் காரம் எல்லாம் செய்யணும். அதுக்கு மளிகை சாமான்கள் வாங்கணும். நான் லிஸ்ட் தரேன். கடைக்கு போய் வாங்கிட்டு வந்திருங்கனு சொல்வாங்க. வேற வழி அவங்க தர்ற லிஸ்ட்டை வாங்கி பொருட்கள் வாங்கித் தந்திரனும். அப்புறம் அவங்க சமையல் புக், பக்கத்து வீட்டு பெண்கள் சொன்ன பலகாரங்கள் என செலக்ட் பண்ணி இனிப்பு மற்றும் கார வகைகளை செஞ்சிருவாங்க.
அப்புறம் பட்டாசு வாங்கணும். நம்ம குழந்தைகளுக்கு பட்டாசு வெடிக்க பயம் இருக்கும். ஆனாலும் அதையும் காட்டிக்காம நிறைய பட்டாசுகள் வேணும்னு அடம் பிடிக்குங்க. மனைவியும் தீபாவளிக்கு இவ்ளோ செலவு செஞ்சீங்க. குழந்தைகளை அழ வைக்காதிங்க. அவங்க கேட்கறத வாங்கிக் கொடுங்கன்னு மனைவியும் சொல்வாங்க. நாம மனைவி பேச்சை தட்டாம இருப்போமா? குழந்தைகளை கூட்டிட்டு அவங்களுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்து அவங்களையும் சந்தோசப்படுத்தி நமக்கும் உள்ளுக்குள்ள ஒரு மகிழ்ச்சி.
இப்படி எல்லோரையும் சந்தோஷப்படுத்தி பாக்றதுல நமக்கும் சந்தோசம் வரும் பாருங்க, அதான் உண்மையான தீபாவளி.
repost
23 கருத்துரைகள்:
அப்பு, கடைசில ஒரு பன்ச்ச வச்சு முடிச்ச பாரு. அங்க நிக்கறீக.. ஆல் ஹச்பெண்ட்ஸ் ஷுட் ரீட் இட்.. ஷேர் பண்றேன்..
உங்களுக்குள் ஒரு 'மிடில் கிளாஸ் மாதவன்'இருப்பதை இதுவரைக்கும் சொல்லவே இல்லே !
இப்படி குடும்பத்துலருக்கற எல்லாருக்கும் எல்லாத்தையும் வாங்கிட்டு மீதி இருக்கற காசுல ஒரு நமக்குன்னு கதர்ல ஒரு சர்ட்டும் வேட்டியும் வாங்கினோம்னு வைங்க... சூப்பராக்குங்க இது உங்களுக்கு என்பாரே மனைவி அதில்தான் இருக்கு பண்டிகையின் சந்தேஷமே...
nanba theebavli november first week
நாம மனைவி பேச்சை தட்டாம இருப்போமா? குழந்தைகளை கூட்டிட்டு அவங்களுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்து அவங்களையும் சந்தோசப்படுத்தி நமக்கும் உள்ளுக்குள்ள ஒரு மகிழ்ச்சி.
இப்படி எல்லோரையும் சந்தோஷப்படுத்தி பாக்றதுல நமக்கும் சந்தோசம் வரும் பாருங்க, அதான் உண்மையான தீபாவளி.
yes true
அடடா இப்பவே தீபாவளி களை கட்ட தொடங்கிருச்சே.....
ஒருத்தருக்கு ஒருத்திதானே அது என்ன பொண்டாட்டிகள்...
அனுபவம் பேசுகிறதா...? ரைட்டு
எத்தனை கஷ்டமானாலும் ,இந்த மாதிரி எல்லோரையும் வருஷத்தில் ஒரு தடவை சந்தோஷமாக வைப்பது தரும் மன நிறைவுக்கு ஈடு எதுவுமே இல்லை .
தலைவலி ஆரம்பிச்சுட்டுதா?!
நல்லது... வாழ்த்துக்கள்...
அன்புடன் DD
http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Desire-Greedy.html
Good. Glad. Nice to Read. Arumai aiya the last punch
எலலோருடைய அனுபவமும் இப்படித்தான் என்றாலும் ரொம்ப ரொம்ப நல்லாவே பதிவு பண்ணியிருக்கீங்க. அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்
அது எப்புடிங்க,உங்களுக்கு மட்டும் இப்புடி விலாவாரியா விளக்கி,பொறுமையா(சேலை எடுக்கிற பொறுமை மாதிரி)இவ்வளவும் எழுத்தில வடிக்க முடியுது?யு ஆர் கிரேட் பிரகாஷ்,ஹ!ஹ!!ஹா!!!
ஒரு மாசம் முன்னாடியே உங்கள் கஷ்டங்களை பகிர்ந்து எங்களை விழிப்புணர்வு செய்தமைக்கு வாழ்த்துக்கள்!
இதுக்குதாங்க நாங்க தீபாவளியே கொண்டாடுவதில்லை...அக்கம் பக்கத்து வீடுகளுக்காக கொடுப்பதற்கு ஸ்வீட் காரத்துடன் முடிந்து விடும் எங்க வீட்டு தீபாவளி...ஐந்து நிமிடங்களில் துணி எடுக்கும் எனக்கு பெண்கள் துணி எடுப்பதை எல்லோரும் எழுதும் போது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு..இன்னொரு விஷயம் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும் எத்தனை மணி நேரம் தேடி எடுத்தாலும் அக்கம் பக்கத்து வீட்டுத் தோழிகள் எடுத்ததை பார்க்கும்போது நமது சரியில்லையோ எனத் தோன்றும் வரை இப்படித்தான் கடையை அலசிக் கொண்டிருப்பீர்கள்...மாற்றிக்கொள்ளுங்கள் உங்களை தோழிகளே....
ஹிஹி இதெல்லாம் இல்லாம எப்படி தீபாவளி கொண்டாடுறது? அதிலும் அந்த பொட்டு வளையல் சமாச்சாரம் கொஞ்சம் ஓவர்...
கல்யாணம் ஆனவங்களுக்கான கவலை நமக்கில்லை விடுறா அரசா வண்டிய ...
வீட்டுக்கு வீடு வாசப்படி! :)))))
ஆனால் இதிலும் ஒரு சந்தோஷம் இருக்கு தான்......
சூப்பர்...ஆனா ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கே, மீள்பதிவா?
செங்கோவி said...
சூப்பர்...ஆனா ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கே, மீள்பதிவா?/////இந்த ஆளு எப்புடித் தான் இதெல்லாம் நெனைப்புல வச்சிருக்காரோ?ஹூம்!!!
ஹா.ஹா..சொ(நொ)ந்த அனுபவங்களா... இந்த அனுபவங்கள் எல்லோருக்குமே உண்டு... ஆனாலும் அதில் ஒரு சிறு சந்தோசம் எல்லோருக்குமே உண்டு... நல்லா அனுபவிச்சி எழுதியிருக்கீங்க ..
என்ன ஒரு அனுபவம்... என்ன ஒரு அனுபவம்.. எல்லாத்தையும் ஒரே பதிவுல கொண்டு வந்துட்டீங்களே.. அதுதான் உங்களோட திறமை..!!!
தீபாவளி பண்டிகை கொண்டாடிய பீலிங் கொண்டு வந்துட்டீங்க..!!
எவ்வளவு பணம் செலவழித்தாலும், கடைசியா கிடைக்கும் அந்த "மகிழ்ச்சியை" சொன்னீங்களே...! அதுதான் சூப்பர்..
அந்த சந்தோஷதுக்கு எவ்வளவு விலை வேணும்னாலும் கொடுக்கலாம்...!!!
இன்று என்னுடைய தளத்தில்: பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்
பர்ஸ்க்கு வேலை வந்துருச்சு டோய்