CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts


மக்களே! மறுபடியும் வச்சுட்டாங்கையா ஆப்பு...? நம்பி மோசம் போயிட்டோமோ?

இந்த சந்தோஷம் எத்தன நாள்கள் தான் நீடிக்கும் என எண்ணிட்டு இருந்தேன். நான் மட்டுமல்ல, நம்ம தமிழகமே சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போச்சு. ஆம், அது இன்னையோட முடிவுக்கு வந்துருச்சு. வெறும் பத்து நாட்கள் தான் இருக்கும் அந்த சந்தோஷம்.
 ஆமாங்க, என்னத்த சொல்ல, போன வாரம் ரொம்ப சந்தோசமா ஒரு பதிவு போட்டேனுங்க. மதுரையில கரண்ட் கட் இல்லைன்னு போட்டிருந்தேன். அந்த பதிவ படிச்சுட்டு நம்ம நண்பர்களும் அவங்க ஊர்லயும் கரண்ட் கட் இல்லைன்னு சொல்லியிருந்தாங்க. மதுரைக்கு மீனாட்சியம்மன் அருள்ன்னு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா காற்றாலை மூலமா ஆயிரம் மெகாவாட்க்கும் மேலாக கரண்ட் கிடச்சதால எல்லா ஊர்லயும் கரண்ட் கட் செய்றத நிறுத்தி மக்களை சந்தோசப்படுத்தினாங்க. 

இன்னைக்கு எல்லாம் போச்சு. இன்னையுல இருந்து மறுபடியும் ஸ்டார்ட் பண்ணிட்டாங்கன்னு நினைக்கிறேன். ஆமாங்க, சுமார் அஞ்சு மணி நேரம் கரண்ட் கட் பண்ணிட்டாங்க. மதியம் 12.00 - 3.00, அப்புறம் 6.30 - 7.30, அப்புறம் 9.30 - 10.15 இப்படி கரண்ட் கட் பண்ணிட்டாங்க. அப்போ காற்றாலை கரண்ட் தீந்துச்சா? இல்ல, மதுரையில அழகர் திருவிழா முடிவுக்கு வர்றதுனால மீனாட்சியம்மன் அருளை நிறுத்திட்டாங்களான்னு தெரியல. மதுரை அல்லாத மற்ற இடத்திலையும் அந்த சந்தோஷம் முடிவுக்கு வந்துருச்சான்னு தெரியல. 

ஆக, மக்கள் சந்தோசமா, நிம்மதியா கரண்ட் காத்தை சுவாசிக்க அரசு விரும்பல போல. சரிங்க, மறுபடியும் ஏதாவது நல்லா பலமா காத்தடிக்குதான்னு பாப்போம், அரசும் இப்ப மாதிரியே நம்மள சந்தோசப்படுத்துறாங்களான்னு பொறுத்திருந்து தான் பார்ப்போமே?????????????????????
மேலும் வாசிக்க... "மக்களே! மறுபடியும் வச்சுட்டாங்கையா ஆப்பு...? நம்பி மோசம் போயிட்டோமோ?"



மதுரையில பவர் கட் இல்லைங்கோ! என்னா காரணமாம்?

மதுரையில நாலஞ்சு நாளா ஹாட் டாபிக் என்னான்னு தெரியுமா? இங்க மதுரையில பவர் கட் இல்லைங்கோ, இங்க மட்டும் தானா, இல்ல தமிழகம் முழுதும் பவர்கட் இல்லையா? இங்க மதுரையில மட்டும் பவர்கட் இல்லைன்னா. அதுக்கு காரணம் இங்க சித்திரை திருவிழா நடந்துகிட்டு இருக்கு. மீனாட்சி திருக்கல்யாணம், சாமி தேர்கள் வீதி உலா, அழகர் வைகை ஆற்றில் இறங்குதல், எதிர்சேவை என மதுரை களை கட்டியுள்ளது. இதனால தான் பவர் கட் இல்லைன்னு நினைக்கிறேன். 
எத்தனை மாசம்(வருஷம்) கழிச்சு புல் டே கரண்ட் இருக்கு. எல்லாம் அந்த மீனாட்சி அருள் தான் போல. இப்படியே பவர்கட் இல்லாம மத்த நாட்களும் இருக்குமா? மீனாட்சியம்மனே அருள் தாங்க. இப்படியே மதுரையில பவர்கட் இல்லாத மாதிரி தமிழகம் முழுதும் பவர்கட் இல்லா நிலை வரணும். அரசே, உங்களை தூற்றாம போற்றுவாங்க.

இந்த  போஸ்ட் எழுதிகிட்டே நியூஸ்பேப்பரை படிச்சேன். அதுல காற்றாலை மூலமா தயாரிக்கப்படும் மின்சார அளவு கூடியிருக்காம். அதனால மதுரை, நெல்லை, கோவை மாவட்டங்களில் பவர்கட் நேரம் கொறஞ்சிருக்குன்னு போட்டிருக்காங்க. அப்புறம் இன்னொரு நியூஸில் நெல்லையிலும் நாலஞ்சு நாளா பவர்கட் இல்லைன்னு போட்டிருக்காங்க. இந்த நிலை இப்படியே தொடருமா? 
எப்படியோ, மதுரையில பவர்கட் இல்லைங்கோ, இருக்குற வரை கரண்ட் காத்த சுவாசிக்க வேண்டியது தான். இல்லைனாலும் கரண்ட் இல்லா காத்தை சுவாசிச்சு தான் ஆகணும். எப்படி இருந்தாலும் தமிழனோட தலைவிதி இதுதான்னா நடந்தே தீரும். ஹி..ஹி..
மேலும் வாசிக்க... "மதுரையில பவர் கட் இல்லைங்கோ! என்னா காரணமாம்?"



மரமும்..மனிதனும்....



உயிர் இருந்தாலும், இல்லா விட்டாலும்...
மரம் மதிப்பையும், பயனையும் தரும் ஆனால்...
மனிதனுக்கு உயிர் இருந்தாலும் மதிப்பு மிக்க பயனுள்ள
செயல்களைச் செய்யாவிடில்
பட்ட மரத்திற்கு கூட ஒப்பாக மாட்டான்!
மேலும் வாசிக்க... "மரமும்..மனிதனும்...."



கொழு கொழு குழந்தையா? பெற்றோர்கள் கவனத்திற்கு!

        குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. தாயாவது ஒரு பெண்ணின் குறிக்கோள். அதை அடைய எத்தனையோ மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் சந்தோசமாக, ஒரு தவமாக அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் கணவனும், மனைவியும் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பதில் சரியான முறைகளை கையாள்கிறார்களா? என்றால் பெரும்பாலும் இல்லை என்பதே பதிலாக கிடைக்கும்.

      நம் தாய்மார்களுக்கு குழந்தை கொழு கொழு என இருப்பது தான் ஆரோக்கியம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிறந்த முதல் ஆண்டிலேயே குண்டாக வளரும் குழந்தை பெரியவனாகும் போதும் குண்டாக இருப்பதற்கு 80 சதவீதம் வாய்ப்புகள் இருகின்றன. குழந்தைகள் அதிக எடையோடு வளரும் போது அவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்படுகின்றன என்பதைப்பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்வது மிக முக்கியம்.

         உடல் எடை அதிகமாவதால் அதிக சோர்வு ஓடி விளையாட சோம்பல், எந்த நேரமும் டி.வி பார்ப்பது அல்லது வீடியோ கேம்ஸ் விளையாடுவது, படிப்பில் அக்கறையின்மை. இவை எல்லாவற்றையும் விட கால் எலும்புகள் வளைந்து போதல் ஆகியவை ஏற்படுகின்றன. ஆனால் இதெல்லாம் விட பெரிய ஆபத்து அவர்களுக்கு சிறுவயதிலேயே 5 வயது முதல் வரும் அதிக ரத்த அழுத்தம். அது போக சர்க்கரை வியாதி (டைப் இரண்டு), பெரியவர்களுக்கு மட்டுமே இந்த இரத்த அழுத்தமும் சர்க்கரை வியாதியும் வரும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தாள் அது முழுக்க முழுக்க தவறு.

       குண்டான குழந்தைகளைக் குறி வைத்து தாக்கும் இந்த உயர் இரத்த அழுத்தம் குழந்தைகளுக்கு வந்திருப்பது கூட பெற்றோர்களுக்கு தெரியாது. நவீன சிகிச்சை முறையில் இந்த இரத்த அழுத்த நோயை இப்பொழுது குணப்படுத்தி விடலாம் என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஆனால் உடல் பருமனாக இருக்கும் குழந்தைகளை உடனே மருத்துவரிடம் காட்டி இரத்த அழுத்த நோயும், சர்க்கரை நோயும் இருக்கிறதா? என சோதனை செய்து பார்த்த பின்னர் உடனே சிகிச்சையை தொடங்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

       சரியான எடையுடன் ஆரோக்கியமாகக் குழந்தைகளை வளர்க்க certified children fitness மருத்துவர்களை அணுகி அவர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம். உணவு முறைகளையும் உடல் பயிற்சிகளையும் தெரிந்து கொண்டு அவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்தி சரியான ஆரோக்கியமான மனிதனாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.

    கவனிக்கப்படாத உயர் இரத்த அழுத்த நோய் குழந்தை இருதய நோயாளியாகவும், சிறுநீரக நோயாளிகளாகவும் மாறிவிடும் வாய்ப்பு அதிகம். வரும் முன் காப்பது சிறந்தது. வந்த பின் வருந்துவது வீண். அதை விரைவில் குணப்படுத்த முயற்சிப்பதே புத்திசாலித்தனம்.
images: google search
-Obesity Doctor-

அஞ்சலி தினம்
         தோழர் திரு. ராஜேஷ் (மாயஉலகம் வலைப்பூ) அவர்களின் மறைவை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை சகபதிவர்கள்  அனைவரும் பதிவிடாமல், அவரது குடும்பத்தினருக்கு நம் இரங்கலைத் தெரிவித்து ஓரிரு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துவோம். அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
மேலும் வாசிக்க... "கொழு கொழு குழந்தையா? பெற்றோர்கள் கவனத்திற்கு!"



நான் தமிழனா? இல்ல, டமிலனா?

          
          ஒரு கட்டுரை எழுத நினைக்கும் போது நாம் என்ன செய்வோம்? நமக்கு தெரிந்த விஷங்களை எழுதுவதோடு மட்டும் இல்லாமல், நூலகம் சென்று தேடி குறிப்புகள் எடுத்து கட்டுரையை உருவாக்குவோம். இன்றைய காலகட்டத்தில் நூலகமே இணையத்தில் வந்துவிட்டது. நமக்கு தேவையான கட்டுரை குறிப்புகளை இணையத்தில் தேடுவது தவறா? நமது பாரம்பரிய பண்டிகைகள் பற்றியும் நாம் எல்லாம் தெரிந்து வைத்திருப்பது இல்லை. 
       அப்படியே தெரிந்து வைத்திருந்தாலும் மேலோட்டமான வரலாறே அறிந்து வைத்திருப்போம். ஆழமான வரலாறு வேண்டுமானால் நூலகம் செல்லலாம், அல்லது பெரியவர்களிடம் கேட்கலாம். இன்று அதையே இணையத்தில் தேடுகிறோம். 
        சரியான குறிச்சொல்லை கொடுத்தால் ஆயிரக்கணக்கான குறிப்புகள் இணையத்தில் கிடைக்கும்,. அவற்றில் எது நமக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்பதை நாம் முடிவு செய்து அதை குறிப்பெடுத்துக் கொள்கிறோம். 
        நாம் எந்த சமயத்தை சார்ந்தவராக இருந்தாலும், அவர்களது சமயம் சார்ந்த புத்தகங்களை முழுமையாக அறிந்து வைத்திருக்கும் அவசியம் இருக்கா? இங்கே நான் குறிப்பிட விரும்புவது என்னவெனில் அனைவரும் அட்டை டூ அட்டை அறிந்து வைத்திருக்க மாட்டார்கள் (ஒரு சிலரை தவிர). முக்கியமான வரிகளை மட்டுமே பெரும்பாலோனோர் அறிந்து வைத்திருப்பார்கள். அவைகள் எல்லோராலும் உச்சரிக்கப்படும் முக்கியமான வரிகளாக இருந்திருக்கலாம்.
        அதே போல அவர்களது விழாக்கள் பற்றிய முழுமையான வரலாறும் குழந்தை பிறந்த உடனேயே எல்லோருக்கும் தெரிந்து விடாது. அவர்கள் வளர வளர பெரியவர்கள் சொல்லக் கேட்டு, புத்தகங்கள் வாசித்து, அனுபவ பூர்வமாக அறிந்து வந்திருந்தால் ஓரளவு முழுமையான தெரிந்து கொள்ளலாம். 
        இன்றோ இயந்திர உலகில் இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு நாம் பழகி விட்டோம். இந்நிலையில் இன்றைய குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்க நமக்கு தெரிந்த விசயத்தை மட்டும் சொல்லாமல் நாமளே அக்கறை எடுத்து அந்த வரலாற்றை ஓரளவு அறிந்து சொல்வதில் தவறில்லையே. இது ஒன்றும் அவலமான நிலை இல்லையே. 
      எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாக நாம் தான் உள்ளோம். அவர்கள் நம்மை சார்ந்தே இருக்கிறார்கள். அவர்களுக்காக நாம் எங்கே வேண்டுமானாலும் தேடலாம். ஆங்கிலம், தமிழ் என்ற பாகுபாடு இல்லாமல் எந்த புத்தகங்களும் வாசிக்கலாம். அடுத்தவரிடம் கேட்டு சொல்லலாம். இது கேவலமான நிலை இல்லையே. இன்றைய தொழில்நுட்ப உலகில் இணைய தேடுதலும் அவசியமே என்பது என் கருத்து. இத்தகைய தேடுதலினால் நான் "தமிழன்" இல்லாமல் "டமிலன்" ஆகிவிட மாட்டேன்.

கொசுறு: மேற்கண்டவை என் சொந்த கருத்துகளே,

மேலும் வாசிக்க... "நான் தமிழனா? இல்ல, டமிலனா?"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1