CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label விதிமுறை மீறல். Show all posts
Showing posts with label விதிமுறை மீறல். Show all posts


நீங்க டிரைவரா? அப்போ கண்டிப்பா உங்களுக்குத்தான்...!

         சாலை பாதுகாப்பு வார விழா கடந்த ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. காவல் துறையினர், விபத்தைக் குறைக்கவும், சாலை விதிகளை கடைபிடிக்கவும் பல இடங்களில் வாசக பேனர்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தியும் வருகின்றார்கள்.
இரு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு:
► இரு சக்கர வாகனம் இருவருக்காக மட்டுமே இருவருக்கு மேல் பயணம் செய்யக் கூடாது.
► உரிய சைகைகள் காட்டாமல் திரும்பக் கூடாது.
► பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டக்கூடாது.
► முன் செல்லும் வாகனத்தை முந்தும் போது இடது பக்கமாக முந்துதல் கூடாது.
► மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டுதல் கூடாது.
► 50 கி.மி. வேகத்திற்கு குறைக்காமல் செல்லக்கூடாது.

► சாலை சந்திப்புகளில் வேகத்தை முறைக்காமல் செல்லக்கூடாது.
► மஞ்சள் கோட்டைத் தாண்டி வாகனத்தை ஓட்டக்கூடாது.
► வளைவுகளில் முன் செல்லும் வண்டியை முந்தக்கூடாது.
► வாகனங்களில் சரக்குகளை ஏற்றிச் செல்லக்கூடாது.

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு:
► ஓட்டுனர்களுக்கு அருகில் பயணிகளை அமரச் செய்து ஓட்டக்கூடாது.
► மூணு நபர்களுக்கு மேல் ஆட்டோவில் பயணிகளை ஏற்றக்கூடாது.
► பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது பைகள் வெளியே தொங்கிக் கொண்டு வருமாறு எடுத்துச் செல்லக்கூடாது.
► அளவுக்கு அதிகமாக பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவில் அடித்துச் செல்லுதல் கூடாது.
► சீருடை பெயர் வில்லை அணியாமல் ஒட்டுதல் கூடாது.
► அனுமதி பெறாமல் விளம்பரப் பலகை மாட்டக்கூடாது.
► அதிக பிரகாசமுள்ள மஞ்சள் விளக்குகளை வாகனத்தின் முன்பாக பொருத்தக் கூடாது.
► புகை பிடித்துக் கொண்டு ஆட்டோ ஓட்டக் கூடாது.
► மது அருந்திய நிலையில் ஆட்டோ ஓட்டக் கூடாது.
► வாகனங்களை சரக்குகள் ஏற்றிச் செல்ல பயன்படுத்துதல் கூடாது.
சுற்றுலா வாகனங்கள் மற்றும் கார் ஓட்டுனர்களுக்கு:
► அனுமதிக்கப்பட்ட வேகமாகிய 65கி.மீ. வேகத்திற்கு மேல் வாகனத்தை ஓட்டக் கூடாது.
► சீருடை பெயர் வில்லையின்றி ஓட்டக்கூடாது.
► உரிய அனுமதிச் சீட்டின்றி வாகனத்தை ஓட்டுதல் கூடாது.
► தகுதிச் சான்று இன்றி வாகனத்தை ஓட்டுதல் கூடாது.
► உபரி இருக்கைகள் அமைத்து வாகனத்தை ஓட்டக்கூடாது.
► நடைச் சீட்டு பராமரிக்காமல் இருத்தல் கூடாது.
► அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது.
► வாகனங்களில் சரக்குகள் ஏற்றிச் செல்ல பயன்படுத்தக் கூடாது.
► சட்ட விரோத செயல்களுக்கு வாகனத்தை பயன்படுத்தக் கூடாது.
மது அருந்திய நிலையில் வாகனத்தை ஓட்டக் கூடாது.

சரக்கு வாகன ஓட்டுனர்களுக்கு:
► ஓவர் லோடு சரக்குகள் ஏற்றக் கூடாது.
► அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது.
► அதிகப்பிரகாசம் தரும் உபரி முகப்பு விளக்குகள் பொருத்தக் கூடாது.
► மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டக்கூடாது.
தூக்கக் கலக்கத்துடன் வாகனம் ஓட்டக்கூடாது.
► கிளீனரிடம் வாகனத்தை ஓட்டச் செல்லக்கூடாது.
► அதிக உயரமான சரக்கு வாகனங்களை ஓட்டிச் செல்லக் கூடாது (தரையிலிருந்து 380 செ.மீ. க்கு மேல் இருக்ககூடாது).
► பர்மிட், இன்சூரன்ஸ், தகுதிச் சான்றிதழ்களை சரி பார்க்காமல் ஓட்டக் கூடாது.
► அனுமதிக்கு மேல் நபர்களை கேபினில் ஏற்றக்கூடாது.
► சரக்குகளின் மேல் அபாயமான முறையில் ஆட்களை ஏற்றிச் செல்லக் கூடாது.


பேருந்து ஓட்டுனர்களுக்கு:
► அளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது.
► புட் போர்டுகளில் பயணிகளை அனுமதிக்க கூடாது.
► முன் இடது இருக்கைகளில் ஓட்டுனர் பார்வையை மறைக்கும்படி பயணிகளை அமர வைக்கக்கூடாது.
► கால அட்டவணை பேருந்தில் இல்லாமல் இருக்கக் கூடாது.
► முன்னால் இருக்கும் பயணிகளிடம் பேசிக் கொண்டு பேருந்தை ஓட்டக் கூடாது.
► இசை நாடா ஒலி இருப்பின் அதில் கவனம் செலுத்திக் கொண்டே பேருந்தை ஓட்டக் கூடாது.
► சீருடை, பெயர் வில்லை அணியாமல் பேருந்தை ஓட்டக் கூடாது.
► புகைபிடித்துக் கொண்டு பேருந்தை ஓட்டக் கூடாது.
மது அருந்திய நிலையில் பேருந்தை ஓட்டக் கூடாது.

பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்போம்! விபத்தைக் குறைப்போம்!!
THANKS: S.B. RAAJENDRAN
DISTRICT CHAIRPERSON ROAD SAFETY & TRAFFIC AWARENESS

மேலும் வாசிக்க... "நீங்க டிரைவரா? அப்போ கண்டிப்பா உங்களுக்குத்தான்...!"



வாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா?

நண்பர்களே,
இன்று  காலை மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனை அருகில் உள்ள சாலை சந்திப்பில் ஒரு நண்பருக்காக சிறிதுநேரம் காத்திருந்தேன். காலை நேரமாதலால் வாகனங்கள் அதிக அளவில் சாலையை ஆக்கிரமித்திருந்தது. மாட்டுதாவனியில் இருந்து மேலூர் வழியாக நேரே செல்லும் சாலையும், வலது புறமாக ராமேஸ்வரம், சிவகங்கை வழியாக செல்லும் சாலையும் செல்கிறது. 

        இந்த சந்திப்பில் வலது புறமாக திரும்பும் வாகனங்கள் பெரும்பாலும் சாலை விதிகளை மதிக்காமல் தங்கள் இஷ்டத்துக்கு திரும்பி சென்றது. நான் நின்ற சுமார் பதினைந்து நிமிடங்களில் சென்ற வாகனங்கள் பெரும்பாலும் தவறான வழியிலேயே சென்றது. 

    அந்த எதிர் பக்கத்தில் இருந்து திரும்பும் வாகனங்களுக்கு பெரும் சிக்கல்களாக இருந்தது. வாகன ஓட்டிகளே சாலை விதிகளை மதித்து விதிகளை மீறாமல் சரியான வழியை தேர்ந்தெடுத்து பயணியுங்கள். உங்கள் பயணம் இனிதே இருக்கும்.


    அந்த சந்திப்புக்கு அருகே போலீஸ் செக்போஸ்ட் உள்ளது. பெரும்பாலான நேரங்களில் பூட்டியே இருக்கும்.காவல்துறை நண்பர்களே, சாலை விதிகளை மீறும் வாகனங்களை சிறை பிடியுங்கள். இல்லையேல் பெரும் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
படங்கள்: என் மொபைல் மூலம்...

பின் குறிப்பு: 
எல்லோரும் என்ன மொபைல் என கேட்கறாங்களே? MICROMAX Q7 தானுங்கோ...





மேலும் வாசிக்க... "வாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா?"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1