இசைக்கும் மயங்காதவர்கள் உண்டோ? இந்த பரபரப்பான வாழ்க்கையில், நமக்கு பிடித்தமான இசையை நாம் கேட்டோமானால் நமது மனதும் சூழ்நிலையும் லேசாகிறது. இத்தகைய இசையை சிறுவயது முதலே கற்கும் குழந்தைகளின் IQ POWER மிகவும் அபாரமாக இருப்பதாக அமெரிக்க ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சிறுவயதில் பியானோ, புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளை பயிற்சி பெரும் குழந்தைகள், வயதான காலத்திலும் நல்ல புத்திக் கூர்மையுடன் இருப்பதாக வல்லுனர்கள தெரிவிக்கிறார்கள். சாதாரண இசையை கற்காத குழந்தைகள் விட நன்கு இசையை கற்ற குழந்தைகள வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இசையை கற்கும் குட்டிக் குழந்தைகள் தங்களது சிந்தனைகளை பல முனைகளிலும் ஒரு சேர செலுத்துவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். காரணம், மூளையின் இடது, வலது பாகங்களை ஒரு சேரப் பயன்டுத்தும் ஆற்றல சாதாரணக் குழந்தைகளை விடவும் இசையை கற்ற குழந்தைகளுக்கு அதிகமாக இருப்பதாக வல்லுனர்களின் ஆராய்ச்சி சொல்கிறது.
இளவயதில் மேற்கொள்ளும் இசைப்பயிற்சி வயதான காலத்தில் மூளை நரம்புகளில் ஏற்படும் சவால்களை எதிர் கொள்ள உதவுகிறது. சிறுவயது இசைப்பயிற்சி மூளையை துடிப்புடன் வைத்திருக்க உதவுகிறது. இதனால், மற்றவர்களை விட இசையை கற்றவர்கள் அறிவு நுணுக்கத்துடன் செயல்படுவதைக் காண முடிகிறது, என வல்லுனர்கள் கருத்து சொல்கிறார்கள்.
மனதுக்கு இதம் அளித்து பட்டதைக் குறைக்க உதவும் இசை, ஆழ்ந்த தூக்கத்தை இரவில் பெறவும் உதவுகிறது. மெல்லிய இசை நரம்புகளை நெகிழ்வடையச் செய்து உடலுக்கு உற்சாகம் அளிக்கிறது. இது மட்டுமில்லாமல், மூளை நரம்புகள், மிகச் சிறப்பாக செயல்படவும் உதவும் இசையை குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள். குழந்தைகள் சிந்திக்க தூண்டும் இசையை கற்க உங்கள் குழந்தைகளை இசைப்பயிற்சிக்கு இன்றே சேர்த்து விடுங்கள், என்கிறார்கள் ஆராய்ச்சி வல்லுனர்கள்.
ஒரு கட்டுரை வாயிலாக இவ்விசயத்தை அறிந்தேன். ஆகையால் பகிர்ந்துள்ளேன்.
.