என்னை மறுபடியும் ஸ்கூலுக்கு போயிட்டு வரச் சொன்ன ராஜி அக்கா அவங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ். என்ன செய்ய? நம்மளுக்கு ஞாபக சக்தி ரொம்ப கம்மி. அதனால என் மைண்டுல பள்ளி விஷயங்கள் பத்தி என்ன ஞாபகம் இருக்கோ அதை இங்கே எழுதறேன்.
சரி, வாங்க ஸ்கூலுக்கு போலாம்.
ஒண்ணாம் வகுப்பு:
கொடைக்கானல் பக்கத்துல இருக்குற தாண்டிக்குடில தான் LKG ல இருந்து பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் வர படிச்சேன். அவ்ளோ தாங்க நம்ம இங்கிலீஸ் படிப்பு. என்னால இந்த மூணு வருசத்தையும் எப்பவுமே மறக்க மாட்டேன். ஏன்னா, . எங்க ஊரு தாண்டிக்குடிக்கு பக்கத்து ஊரு. அப்போ ஸ்கூல் பஸ் இல்லாததுனால அரசு பஸ் வரும். பஸ் செம கூட்டமா வரும். அந்த கூட்டத்துல அந்த சின்ன வயசுல பஸ்ல டிக்கெட் எடுத்து போயிட்டு வருவேன். ஒரு தடவ நாலாவது ரேங்க் வாங்கிட்டேன்னு ரொம்ப பீல் பண்ணினேன். எதுக்குனா மொத மூணு ரேங்க்குக்கு தான் ஸ்பெஷல் பேட்ஜ் தருவாங்க. நாலாவது ரேங்க்குக்கு பேட்ஜ் இல்லாததுனால தான்.
ரெண்டாம் வகுப்பு:
திண்டுக்கல் பக்கத்துல சின்னாளபட்டியில வீடு கட்டி செட்டில் ஆனோம். அதனால ரெண்டாம் வகுப்பு ஆர்சீ ஸ்கூல சேர்த்து விட்டாங்க. என்னவோ தெரியல தமிழ் மீடியத்துல சேர்த்துட்டாங்க. ஸ்கூல்ல சாயுங்காலமா எக்ஸ்ட்ரா டைமில் வாய்ப்பாடு புக்க வச்சிட்டு படிச்சு மனப்பாடம் செஞ்சது இன்னும் மறக்கல.
மூணாம் வகுப்பு:
டீச்சர் நோட்டுல கொஸ்ட்டின் ஆன்சர் எழுதச் சொல்வாங்க. நானும் பக்கத்துல இருக்றவனும் யார் பர்ஸ்ட் எழுதறான்னு போட்டி போட்டுட்டு கடகடன்னு எழுதுவேன். எழுதி முடிச்சுட்டு நோட்டை திருப்பி பார்த்தா கையெழுத்து ரொம்ப ஒர்ஸ்ட்டா இருந்துச்சு. அப்புறம் வேறென்ன, டீச்சர் கிட்ட இருந்து செம திட்டு தான் கெடைச்சுச்சு.
நாலாம் வகுப்பு:
டீச்சருக்கு பிடிச்ச ஸ்டூடன்ட்டா இருந்தது நாலாம் வகுப்புல இருந்துதான். ஒரு எக்ஸாம்ல சயின்ஸ்ன்னு நினைக்கிறன். மார்க் கம்மியா போட்டிருக்காங்கன்னு டீச்சர் கிட்ட சண்டை போட்டதா ஞாபகம். ட்ராயிங் வரைய ஆரம்பிச்சது அப்போதான்னு நினைக்கிறேன். பென்சில் ட்ராயிங் ஓரளவு வரைவேன்.
அஞ்சாம் வகுப்பு:
அப்போ லீடரா இருந்தேன். மதியம் லஞ்ச் டைமில் படிக்காம விளையாடுறவங்க பேரை தினமும் எழுதணும். அப்போ ஒரு பொண்ணு பேரை எழுதிட்டு, அந்த பொண்ணு ரொம்ப கெஞ்சுச்சுன்னு அழிச்சுட்டேன். ஆனா டீச்சர் அந்த பேரையும் வாசிச்சு பணிஸ்மென்ட் தந்தாங்க. ஏண்டா, பேரை அழிச்சுட்டன்னு, என்னையும் திட்டினது இன்னும் ஞாபகம் இருக்கு,
ஆறாம் வகுப்பு:
திண்டுக்கல் MSP நாடார் ஸ்கூலுக்கு மாறினேன். புதுப்புது பசங்க. கொஞ்சம் மிரண்டுதான் போனேன். எப்பவும் அஞ்சு ரேங்க் வாங்கி பழக்கப்பட்ட நான் ஒரு மார்க், ரெண்டு மார்க் வித்தியாசத்துல பத்து இருபதுன்னு வாங்க ஆரம்பிச்சேன். எப்படி எழுதினாலும் ரேங்க் வர முடியல. காம்பிடிசன் அதிகம்.
ஏழாம் வகுப்பு:
கணக்கு பாடம் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. மொத மொதலா டியூசன் போனேன். வீட்டுக்கு போக ஈவ்னிங் ஏழரை மணி ஆயிரும். அப்புறமா படிச்சு ஹோம் ஒர்க் எழுதியும் எழுதாம தூங்கிடுவேன். காலையில ஸ்கூலுக்கு பஸ்ல போறப்ப மீதி ஹோம் ஒர்க் செஞ்சதா ஞாபகம்,
எட்டாம் வகுப்பு:
இந்த கிளாஸ் எனக்கு மறக்க முடியாதது. ஏன்னா சோசியல் சயின்ஸ் பாடத்துல வகுப்புல அதிக தடவ பர்ஸ்ட் மார்க் வாங்கியிருந்தது தான். எப்படி வாங்க முடிஞ்சதுனா, சோசியல் சயின்ஸ் சார் காலையில சீக்கிரமா எங்கள வரச் சொல்லி ஒவ்வொரு பாடத்திலும் ஒவ்வொரு பக்கத்தையும் படிச்சு அப்படியே ஒப்பிக்க சொல்வார். அப்படி படிச்சதுனால எப்படி கேள்வி கேட்டாலும் பதில் எழுத முடிஞ்சது. அப்ப இருந்தே எல்லா பாடத்தையும் எல்லா பக்கமும் அட்லீஸ்ட் வாசிட்டு எக்ஸாமுக்கு போற பழக்கம் வந்துச்சு.
ஒன்பதாம் வகுப்பு:
இந்த வகுப்புல எல்லா வாத்தியார்களும் வழக்கத்துக்கு மாறா ரொம்பவே ஸ்ட்ரிக்ட். அடுத்து டென்த்ல, அதனால எல்லோரும் நிறைய மார்க் வாங்கனும்கிற நோக்கத்தில பாடம் நடத்தினாங்க. எங்களையும் அப்படியே தயார் செஞ்சாங்க. கணக்கு பாடம் கொஞ்சம் கடினமா இருந்துச்சு. அதுல கொஞ்சம் கவனம் செலுத்தி படிச்சேன்.
பத்தாம் வகுப்பு:
என்னை பாக்றவங்க எல்லாம் நானூறு, நானூத்தி அம்பதுக்கு மேல வாங்கனும்னு சொல்லி சொல்லியே ஒரு பயத்தை உண்டாக்கினாங்க. எழுதுன எல்லா மாச, ரிவிஷன் எக்ஸாம்ல மார்க் ரொம்பவே கம்மியா வந்துச்சு. எல்லா பசங்களுக்கும் அப்படித்தான். அப்படியே புக்ல இருக்றத வரி மாறாம எழுதினாலும் மார்க் வரவு கம்மி தான். அதனால புக்கை அட்டை டூ அட்டை படிச்சோம். பப்ளிக் எக்ஸாம் எழுதினேன். எங்கே, மார்க் கம்மியா வந்திரும்னு பயத்துல இருந்த நான் நானூத்தி அம்பதுக்கு மேல வாங்காட்டியும், நானூறுக்கு மேல வாங்கிட்டேன். அப்பத்தான் கொஞ்சம் பயம் போச்சு.
பதினொன்னாம் வகுப்பு:
டூல் & டை(tool&die) படிக்கணும்னு ஆசைப்பட்ட நான் சில சூழ்நிலைக் காரணத்தால ஸ்கூல் வேற மாறி எங்க ஊர் தம்பித்தோட்டம் ஸ்கூலில சேர்ந்தேன். மொத்தமே ஐநூறு மார்க்குக்கு படிச்சு பழகி இருந்த எனக்கு ஆயிரத்து இருநூறு மார்க்கு பாடத்த பார்த்து மயக்கமே வந்திருச்சு. இருந்தாலும் ஆசிரியர்கள் நல்லா பாடம் சொல்லிக் கொடுத்தாங்க. அந்த வருஷம் ஆண்டு விழாவுல கப்பலோட்டிய தமிழன் அப்படின்னு ஒரு நாடகம் போட்டோம். அதுல நான்தான் மெயின் ரோல். சிதம்பரனார் இல்லை. ஆங்கிலேய துரை வேஷம். அதுக்காக பட்லர் இங்கிலீஷ் பேசிப் பேசி பழகினேன். ஓரளவு நல்லா வந்துச்சு பட்லர் இங்கிலீஷ். இந்த மாதிரி ஜாலியாவும், படிப்புமா அந்த கிளாஸ் போச்சு.
பனிரெண்டாம் வகுப்பு:
கல்வி வாழ்வின் முக்கியமான கட்டம் பன்னிரெண்டாம் வகுப்பு. அதுக்கேத்த மாதிரியே வகுப்புல ஆசிரியர்கள், வீட்டுல பெற்றோர்கள், நண்பர்கள் எல்லோர் ஒத்துழைப்பு கெடச்சு நல்லா படிச்சேன். பிசிக்ஸ் சார் வீட்டுல நைட்டு தங்கி (ட்யூசன் தான். ஆனா நேரங்காலம் இல்லாமல்) கண் முழிச்சு படிப்போம், காலையில நாலு மணிக்கு பிசிக்ஸ் சார் கையில டீயோடஎங்கள எழுப்பி விடுவாரு. ஒவ்வொரு பாடத்துக்கும் பக்கம் பக்கமா படிச்சு, நிறைய நோட்ஸ் படிச்சு பப்ளிக் எழுதி ஓரளவு மார்க் வாங்கினேன்.
ரைட்டுங்க, என்கூட ஸ்கூலுக்கு பொறுமையா வந்த உங்களுக்கு நன்றிங்கோ.
என்னை மாதிரி கீழே இருக்குற அஞ்சு பேரை அவங்களோட ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகனும்னு அன்பா கூப்பிடுறேன்.
உணவுலகம் சங்கரலிங்கம் சார் அவர்கள்.
கற்போம் தள பிரபு அவர்கள்
இந்திராவின் கிறுக்கல்கள் இந்திரா அவர்கள்
தமிழ்பேரன்ட்ஸ் சம்பத்குமார் அவர்கள்
ரேவா கவிதைகள் ரேவா அவர்கள்
இந்த பதிவு மூலமா எனது பள்ளிக்கால நண்பர்களை சந்திக்கனும்னு ஆசை. யப்பா, ஸ்கூல் பிரண்ட்ஸ் யாராச்சும் இருக்கிங்களா?