CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts


இன்ஸ்டன்ட் போஸ்ட்..., மேட்டர் வேணுமா?!!!!


நம்ம பிளாக்கில் நெனச்ச உடனே ஒரு போஸ்ட் போடணும்னு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்தா என்ன எழுதறதுன்னு தெரியாம முழிக்கறிங்களா? மேட்டர் கிடைக்காம அலையற உங்களுக்கு உடனே மேட்டர் வேணுமா? மேல.. சாரி.. கீழ படியுங்க...

மேலும் வாசிக்க... "இன்ஸ்டன்ட் போஸ்ட்..., மேட்டர் வேணுமா?!!!!"



திரும்ப ஸ்கூலுக்கு போகலாம், வாங்க - தொடர் பதிவு

என்னை மறுபடியும் ஸ்கூலுக்கு போயிட்டு வரச் சொன்ன ராஜி அக்கா அவங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ். என்ன செய்ய? நம்மளுக்கு ஞாபக சக்தி ரொம்ப கம்மி. அதனால என் மைண்டுல பள்ளி விஷயங்கள் பத்தி என்ன ஞாபகம் இருக்கோ அதை இங்கே எழுதறேன். 

சரி, வாங்க ஸ்கூலுக்கு போலாம்.

ஒண்ணாம் வகுப்பு:
கொடைக்கானல் பக்கத்துல இருக்குற தாண்டிக்குடில தான் LKG ல இருந்து பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் வர படிச்சேன். அவ்ளோ தாங்க நம்ம இங்கிலீஸ் படிப்பு. என்னால இந்த மூணு வருசத்தையும் எப்பவுமே மறக்க மாட்டேன். ஏன்னா, . எங்க ஊரு தாண்டிக்குடிக்கு பக்கத்து ஊரு. அப்போ ஸ்கூல் பஸ் இல்லாததுனால அரசு பஸ் வரும்.  பஸ் செம கூட்டமா வரும். அந்த கூட்டத்துல அந்த சின்ன வயசுல பஸ்ல டிக்கெட் எடுத்து போயிட்டு வருவேன். ஒரு தடவ நாலாவது ரேங்க் வாங்கிட்டேன்னு ரொம்ப பீல் பண்ணினேன். எதுக்குனா மொத மூணு ரேங்க்குக்கு தான் ஸ்பெஷல் பேட்ஜ் தருவாங்க. நாலாவது ரேங்க்குக்கு பேட்ஜ் இல்லாததுனால தான்.

ரெண்டாம் வகுப்பு:
திண்டுக்கல் பக்கத்துல சின்னாளபட்டியில வீடு கட்டி செட்டில் ஆனோம். அதனால ரெண்டாம் வகுப்பு ஆர்சீ ஸ்கூல சேர்த்து விட்டாங்க. என்னவோ தெரியல தமிழ் மீடியத்துல சேர்த்துட்டாங்க. ஸ்கூல்ல சாயுங்காலமா எக்ஸ்ட்ரா டைமில் வாய்ப்பாடு புக்க வச்சிட்டு படிச்சு மனப்பாடம் செஞ்சது இன்னும் மறக்கல.

மூணாம் வகுப்பு:
டீச்சர் நோட்டுல கொஸ்ட்டின் ஆன்சர் எழுதச் சொல்வாங்க. நானும் பக்கத்துல இருக்றவனும் யார் பர்ஸ்ட் எழுதறான்னு போட்டி போட்டுட்டு கடகடன்னு எழுதுவேன். எழுதி முடிச்சுட்டு நோட்டை திருப்பி பார்த்தா கையெழுத்து ரொம்ப ஒர்ஸ்ட்டா இருந்துச்சு. அப்புறம் வேறென்ன, டீச்சர் கிட்ட இருந்து செம திட்டு தான் கெடைச்சுச்சு. 

நாலாம் வகுப்பு:
டீச்சருக்கு பிடிச்ச ஸ்டூடன்ட்டா இருந்தது நாலாம் வகுப்புல இருந்துதான். ஒரு எக்ஸாம்ல சயின்ஸ்ன்னு நினைக்கிறன். மார்க் கம்மியா போட்டிருக்காங்கன்னு டீச்சர் கிட்ட சண்டை போட்டதா ஞாபகம். ட்ராயிங் வரைய ஆரம்பிச்சது அப்போதான்னு நினைக்கிறேன். பென்சில் ட்ராயிங் ஓரளவு வரைவேன்.

அஞ்சாம் வகுப்பு:
அப்போ லீடரா இருந்தேன். மதியம் லஞ்ச் டைமில் படிக்காம விளையாடுறவங்க பேரை தினமும் எழுதணும். அப்போ ஒரு பொண்ணு பேரை எழுதிட்டு, அந்த பொண்ணு ரொம்ப கெஞ்சுச்சுன்னு அழிச்சுட்டேன். ஆனா டீச்சர் அந்த பேரையும் வாசிச்சு பணிஸ்மென்ட் தந்தாங்க. ஏண்டா, பேரை அழிச்சுட்டன்னு, என்னையும் திட்டினது இன்னும் ஞாபகம் இருக்கு,

ஆறாம் வகுப்பு:
திண்டுக்கல் MSP நாடார் ஸ்கூலுக்கு மாறினேன். புதுப்புது பசங்க. கொஞ்சம் மிரண்டுதான் போனேன். எப்பவும் அஞ்சு ரேங்க் வாங்கி பழக்கப்பட்ட நான் ஒரு மார்க், ரெண்டு மார்க் வித்தியாசத்துல பத்து இருபதுன்னு வாங்க ஆரம்பிச்சேன். எப்படி எழுதினாலும் ரேங்க் வர முடியல. காம்பிடிசன் அதிகம்.

ஏழாம் வகுப்பு:
கணக்கு பாடம் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. மொத மொதலா டியூசன் போனேன். வீட்டுக்கு போக ஈவ்னிங் ஏழரை மணி ஆயிரும். அப்புறமா படிச்சு ஹோம் ஒர்க் எழுதியும் எழுதாம தூங்கிடுவேன். காலையில ஸ்கூலுக்கு பஸ்ல போறப்ப மீதி ஹோம் ஒர்க் செஞ்சதா ஞாபகம், 

எட்டாம் வகுப்பு:
இந்த கிளாஸ் எனக்கு மறக்க முடியாதது. ஏன்னா சோசியல் சயின்ஸ் பாடத்துல வகுப்புல அதிக தடவ பர்ஸ்ட் மார்க் வாங்கியிருந்தது தான். எப்படி வாங்க முடிஞ்சதுனா, சோசியல் சயின்ஸ் சார் காலையில சீக்கிரமா எங்கள வரச் சொல்லி ஒவ்வொரு பாடத்திலும் ஒவ்வொரு பக்கத்தையும் படிச்சு அப்படியே ஒப்பிக்க சொல்வார். அப்படி படிச்சதுனால எப்படி கேள்வி கேட்டாலும் பதில் எழுத முடிஞ்சது. அப்ப இருந்தே எல்லா பாடத்தையும் எல்லா பக்கமும் அட்லீஸ்ட் வாசிட்டு எக்ஸாமுக்கு போற பழக்கம் வந்துச்சு.

ஒன்பதாம் வகுப்பு:
இந்த வகுப்புல எல்லா வாத்தியார்களும் வழக்கத்துக்கு மாறா ரொம்பவே ஸ்ட்ரிக்ட். அடுத்து டென்த்ல, அதனால எல்லோரும் நிறைய மார்க் வாங்கனும்கிற நோக்கத்தில பாடம் நடத்தினாங்க. எங்களையும் அப்படியே தயார் செஞ்சாங்க. கணக்கு பாடம் கொஞ்சம் கடினமா இருந்துச்சு. அதுல கொஞ்சம் கவனம் செலுத்தி படிச்சேன்.

பத்தாம் வகுப்பு:
என்னை பாக்றவங்க எல்லாம் நானூறு, நானூத்தி அம்பதுக்கு மேல வாங்கனும்னு சொல்லி சொல்லியே ஒரு பயத்தை உண்டாக்கினாங்க.  எழுதுன எல்லா மாச, ரிவிஷன் எக்ஸாம்ல மார்க் ரொம்பவே கம்மியா வந்துச்சு. எல்லா பசங்களுக்கும் அப்படித்தான். அப்படியே புக்ல இருக்றத வரி மாறாம எழுதினாலும் மார்க் வரவு கம்மி தான். அதனால புக்கை அட்டை டூ அட்டை படிச்சோம். பப்ளிக் எக்ஸாம் எழுதினேன். எங்கே, மார்க் கம்மியா வந்திரும்னு பயத்துல இருந்த நான் நானூத்தி அம்பதுக்கு மேல வாங்காட்டியும், நானூறுக்கு மேல வாங்கிட்டேன். அப்பத்தான் கொஞ்சம் பயம் போச்சு. 

பதினொன்னாம் வகுப்பு:
டூல் & டை(tool&die) படிக்கணும்னு ஆசைப்பட்ட நான் சில சூழ்நிலைக் காரணத்தால ஸ்கூல் வேற மாறி எங்க ஊர் தம்பித்தோட்டம் ஸ்கூலில சேர்ந்தேன். மொத்தமே ஐநூறு மார்க்குக்கு படிச்சு பழகி இருந்த எனக்கு ஆயிரத்து இருநூறு மார்க்கு பாடத்த பார்த்து மயக்கமே வந்திருச்சு. இருந்தாலும் ஆசிரியர்கள் நல்லா பாடம் சொல்லிக் கொடுத்தாங்க. அந்த வருஷம் ஆண்டு விழாவுல கப்பலோட்டிய தமிழன் அப்படின்னு ஒரு நாடகம் போட்டோம். அதுல நான்தான் மெயின் ரோல். சிதம்பரனார் இல்லை. ஆங்கிலேய துரை வேஷம். அதுக்காக பட்லர் இங்கிலீஷ் பேசிப் பேசி பழகினேன். ஓரளவு நல்லா வந்துச்சு பட்லர் இங்கிலீஷ். இந்த மாதிரி ஜாலியாவும், படிப்புமா அந்த கிளாஸ் போச்சு.

பனிரெண்டாம் வகுப்பு:
கல்வி வாழ்வின் முக்கியமான கட்டம் பன்னிரெண்டாம் வகுப்பு. அதுக்கேத்த மாதிரியே வகுப்புல ஆசிரியர்கள், வீட்டுல பெற்றோர்கள், நண்பர்கள் எல்லோர்  ஒத்துழைப்பு கெடச்சு நல்லா படிச்சேன். பிசிக்ஸ் சார் வீட்டுல நைட்டு தங்கி (ட்யூசன் தான். ஆனா நேரங்காலம் இல்லாமல்) கண் முழிச்சு படிப்போம், காலையில நாலு மணிக்கு பிசிக்ஸ் சார் கையில டீயோடஎங்கள எழுப்பி விடுவாரு. ஒவ்வொரு பாடத்துக்கும் பக்கம் பக்கமா படிச்சு, நிறைய நோட்ஸ் படிச்சு பப்ளிக் எழுதி ஓரளவு மார்க் வாங்கினேன். 

ரைட்டுங்க, என்கூட ஸ்கூலுக்கு பொறுமையா வந்த உங்களுக்கு நன்றிங்கோ.

என்னை மாதிரி கீழே இருக்குற அஞ்சு பேரை அவங்களோட ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகனும்னு அன்பா கூப்பிடுறேன்.
உணவுலகம் சங்கரலிங்கம் சார் அவர்கள்.
கற்போம் தள பிரபு அவர்கள்
இந்திராவின் கிறுக்கல்கள் இந்திரா அவர்கள்
தமிழ்பேரன்ட்ஸ் சம்பத்குமார் அவர்கள்
ரேவா கவிதைகள் ரேவா அவர்கள்

இந்த பதிவு மூலமா எனது பள்ளிக்கால நண்பர்களை சந்திக்கனும்னு ஆசை. யப்பா, ஸ்கூல் பிரண்ட்ஸ் யாராச்சும் இருக்கிங்களா?
மேலும் வாசிக்க... "திரும்ப ஸ்கூலுக்கு போகலாம், வாங்க - தொடர் பதிவு"



பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?!

தைப்பொங்கல் வரலாறு:
    சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள்.  உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்தது வழிபட்டனர்.

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது.

முதல் நாள் போகிப் பண்டிகை:
       தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
        இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும். பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
     போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.

இரண்டாம் நாள் தைப்பொங்கல்:
தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

      தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்.
       பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.


மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்
          மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
      உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.
       உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

நான்காம் நாள் காணும் பொங்கல்:
      காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.
       இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.

டிஸ்கி: என் பக்கத்து வீட்டு ஆறாம்வகுப்பு படிக்கும் மாணவி பொங்கல் பண்டிகை பற்றிய குறிப்புகள் வேண்டும் எனக் கேட்டதால் இணையத்தில் தேடி எழுதிக் கொடுத்தேன். அந்த குறிப்புகள் உங்கள் பார்வைக்கும் பகிர்ந்துள்ளேன்.
நன்றி: விக்கிபீடியா

கடந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நான் எழுதிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு:

கடந்த வருடம் போல இந்த வருடமும் மதுரையை சுற்றி நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் தொலைக்காட்சி தொகுப்பை தங்களுக்காக ஒளிப்பதிவு செய்து தர முயற்சிக்கிறேன்.


மேலும் வாசிக்க... "பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?!"



மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0

     மைக்ரோசாப்ட் விண்டோஸ் முதல் பதிப்பில் இருந்து அண்மைய பதிப்பு (Windows version 1.0 to 8.0) வரை எப்படி இருந்தது என இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

1985 - Windows 1.0 
      அந்த காலத்தில் கணினி உபயோகம் கடினமாக இருந்த சமயத்தில் விண்டோஸ் 1.0 பதிப்பு வெளியானது. அது ஓரளவு எளிமையாகவும், பல விசயங்களை உள்ளடக்கியும் இருந்தது.


1987 - Windows 2.0
      முதல் பதிப்பில் இருந்து கண்ட்ரோல் பேனலில் சில திருத்தங்களுடன் 1987-இல் இரண்டாம் பதிப்பு வெளியானது.


1988 - Windows 2.1
    இரண்டாம் பதிப்பில் இருந்து புதியதாக பெயிண்ட் மென்பொருள் இணைத்து மேலும் சில மேம்பட்ட வசதிகளுடன் மூன்றாம் பதிப்பு வெளியானது.


1990 - Windows 3.0
     இந்த மூன்றாம் பதிப்பில் FILE MANAGERஆனது MS DOS முறையிலிருந்து மேம்படுத்தப்பட்டு புதிய FILE MANAGER மற்றும் PROGRAM MANAGER உருவாக்கப்பட்டது.


1992 - Windows 3.1
    இந்த பதிப்பில் HARD DISKஇல் 32 BIT சப்போர்ட் செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல் முறையாக Minesweeper game உருவாக்கி செயல்படுத்தப்பட்டது.


1995 - Windows 95
     GRAPICS SUPPORT மற்றும் COMMUNICATION PROGRAMS உடன் DESKTOP பார்க்க சிம்பிளாக அழகாக இந்தப் பதிப்பு வெளியானது.


1998 - Windows 98
       இப்போது வரை விண்டோஸ் 98 மிகவும் வெற்றிகரமான பதிப்புகள் ஒன்று, இந்த பதிப்பு இன்னும் கூட சில கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரிவாக்கப்பட்ட மென்பொருள்கள், சிறந்த செயல்திறன் கொண்ட, இந்த பதிப்பு விண்டோஸ் வளர்ச்சி பாதையில் முதல் மைல்கல்லாக இருந்தது.


2000 - Windows ME
    இந்த பதிப்பு "விண்டோஸ் மீ" அல்லது "விண்டோஸ் மில்லினியம்" என அழைக்கப்படுகிறது. மிகவும் பிரபலமான இந்தப் பதிப்பு தற்போதைய விண்டோஸின் சில செயல்பாடுகளை விட சிறந்த செயல்பாட்டைக் கொண்டு இயங்குகிறது. (இன்றும் நான் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு கணினியில் இந்த பதிப்பு தான் உள்ளது)


2001 - Windows XP
   விண்டோஸின் அனைத்து பதிப்புகளின் தந்தை என இது அழைக்கப்படுகிறது. இன்றும் இந்தப் பதிப்பு மிக பிரபலமாக உபயோகப்படுத்தபடுகிறது. இதற்குக் காரணம் இதன் எல்லையில்லா செயல்திறன், முகப்பு பக்க வடிவமைப்புகள், மற்றும் சிறந்த டூல்ஸ்களை கொண்டுள்ளது. விண்டோஸ் 7 வரும் வரை இந்தப் பதிப்பே சிறந்த பதிப்பாக இருந்தது.


2006 - Windows Vista
       இந்தப் பதிப்பின் முகப்பு மட்டும் பிரபலம். ஆனால் சிறந்த பதிப்பாக அனைவராலும் அங்கீகரிக்கப்படவில்லை. இருந்தாலும் முந்தைய பதிப்பில் இருந்து நிறைய மாறுபாடுகள் கொண்டிருந்தது.


2009 - Windows 7
      இன்றைய தேதிக்கு விண்டோஸின் சிறந்த பதிப்பு இது. பக்க இணைப்புகள் மற்றும் நிறைய மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இந்த பதிப்பில் புதிதாக இணைக்கப்பட்டன. இதனால் விண்டோஸ் 98 மற்றும் விண்டோஸ் எக்ஸ்பி க்கு அடுத்த மைல் கல்லாக இந்தப் பதிப்பு உள்ளது. 


2012 - Windows 8
     அநேகமாக அடுத்த ஆண்டு இறுதியில் வெளிவரும் என நினைக்கிறேன். முந்தய பதிப்புகளை காட்டிலும், தோற்றம், செயல்பாடுகள், வேகம் போன்றவற்றில் மேம்பட்டு இருக்கும் வகையில் இருக்கும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
images and contents: google search

இன்றைய பொன்மொழி:
ஆயிரம் உபதேசங்கள் சொல்பவர்களை விட ஒரு ஆசிரியரே மேல்!

இன்றைய விடுகதை:
மங்கை வந்து குளிப்பாட்டி
அமுதூட்டி எழுந்தாள்
நாணிக்கோணி இடையில் வைத்து 
அனைத்துக் கொண்டு நடந்தாள். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: வெடி
முந்தைய விடுகதைக்கான இடுகை: 

போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி! (போலீஸ்-லேடி உரையாடலுடன்)



மேலும் வாசிக்க... "மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0"



வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

நண்பர்களே, 
உங்களுடன் சில கருத்துகளை இந்த இடுகையின் மூலமாக பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்து எழுதியுள்ளேன். தொடர்ந்து வாசியுங்கள்.
             வலைப்பூ தொடங்கிய காலத்தில் எல்லோருக்கும் ஏற்படும் அனுபவமே எனக்கும் ஏற்பட்டது. நானும் ஆரம்ப காலங்களில் காப்பி பேஸ்ட் பதிவுகள் போட்டுள்ளேன். அது தவறு என தெரிந்தவுடன் அத்தகைய தவறுகள் செய்வதில்லை. அப்புறம் யாராவது கமென்ட் போடுவாங்களா? திரட்டியில் பிரபல இடுகையாக வருமா? என ஏங்கிய காலம் உண்டு. அப்புறம் தான் தெரிந்தது, நாமும் மற்ற பதிவுகளுக்கு கமென்ட் போட்டால் தான் நமக்கும் கமெண்ட்ஸ் வரும். அதே போல தான் திரட்டிகளில் ஓட்டும் (பதிவுலக பாஷையில் சொல்லனும்னா மொய்க்கு மொய்) என சிலர் மூலம் தெரிந்து கொண்டேன். அப்புறந்தான் கமெண்ட்ஸ் மற்றும் திரட்டிகளில் பிரபல இடுகைகளும் வரத் தொடங்கியது. 
    போதும் போதும், இதே மாதிரி எத்தனை பதிவர்கள் தான் பதிவு போடுவாங்களோன்னு நினைக்கறிங்களா? ஹே.. ஹே.. கோச்சுக்காதிங்க, இந்த மாதிரியான பதிவுகள் தான் புதியவர்களுக்கு ஊக்கம் தரும் நண்பர்களே. புதிய ப்ளாக் தொடங்குபவர்கள் பிளாக் டிப்ஸ் தரும் பதிவுகளை கண்டிப்பாக வாசியுங்கள். உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

 தமிழ்வாசி வலைப்பூ கடந்த வருடம் மே மாதம் தொடங்கப்பட்டு தங்கள் நல்ஆதரவுடன் இன்று நானூறுக்கும் மேலான (FOLLOWERS) தொடர்பவர்களையும், மூணு லட்சத்துக்கும் மேலாக பக்க பார்வை (PAGE VIEW HITS) ஹிட்ஸ்ம் பெற்று உள்ளது. இதற்கு காரணமான அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று பதிவுலகில் புதியவர்கள் வருகை அதிகமாக உள்ளது. அதுவும் புதிய தகவல்களை அள்ளித்தரும் பதிவர்கள் நிறைய வலம் வரத் தொடங்கியுள்ளார்கள் என்பதை குறித்து மகிழ்ச்சியே.

தமிழ்வாசி பற்றிய சில புள்ளி விவரங்கள்:
ஆரம்பம்: மே 2010
மொத்த இடுகைகள்:361
மொத்த கருத்துரைகள்: 7018
இன்றைய அலாக்ஸா ரேங்க்: 108079
இந்திய அளவில் அலாக்ஸா ரேங்க்: 14776
மொத்த பக்கப் பார்வைகள்: 303000 க்கு மேல்..

தொடர்பு கொள்ள:
முகநூல் முகவரி: https://www.facebook.com/sprakashkumar
முகநூல் குழும முகவரி: https://www.facebook.com/groups/tamilvaasi/
கூகிள் ப்ளஸ் முகவரி: https://plus.google.com/u/0/106412922467461633842/posts
ட்விட்டர் முகவரி: https://twitter.com/#!/tamilvaasi

இன்றைய பொன்மொழி:
நேரத்தைத் தள்ளிப் போடாதே. தாமதித்தால் அபாயகரமான முடிவுகள் ஏற்படும்!

இன்றைய விடுகதை:
பத்து விரல் பந்தாட
ஐந்து விரல் அமர்ந்திருக்க
சூரியனுடன் வாதாட
எமனுடன் போராட. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.


புதிதாக தொடர்பவர்களையும், வலைப்பூவுக்கு தவறாமல் வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறேன். நன்றி


மேலும் வாசிக்க... "வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!"



பல்பு போட்ட குப்பை! குப்பையை பாதுகாத்த கார் - ஹி... ஹி... வரலாறு

        அறிவியல் விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் தன் பரிசோதனை கூடத்தில் இரவும் பகலும் ஏதாவது சோதனைகளும், பரிசோதனைகளும் செய்வதிலேயே பிசியாக இருப்பார். அப்படிச் செய்யும் போது அந்த அறை முழுவதுமே கணக்கற்ற, தூக்கி எறியப்பட்ட விதவிதமான சிறிய பெரிய பொருட்களால் நிறைந்து விடும். அந்த குப்பை முழுதும் அவர் அந்த ஆய்வகத்திலிருந்து வீட்டின் புழக்கடையில் கொண்டு போய் போட்டு விடுவார். அவர் ஒரு புதிய ஆய்வகத்திற்கு மாற்றம் செய்து போன போது தன் பழைய வீட்டை ஹென்றி ஃபோர்டு (முதன் முதலாக போர்டு காரை உருவாக்கியவர்) அவர்களுக்கு விற்று விட்டார். ஹென்றி ஃபோர்டு வீட்டை புதுப்பித்து குடியேறினார். ஆனால் புழக்கடையிருந்த குப்பைக் குவியல் மட்டும் அகற்றாமல் அப்படியே விட்டு வைத்திருந்தார்.
         இந்த குப்பையை எதற்காக அகற்றாமல் வைத்திருக்கிறீர்கள் என அவர் நண்பர் ஒருவர், ஒருநாள் அவரைப் பார்த்து கேட்டார். அதை நான் அப்படியே பாதுகாப்பாக வைத்திருக்க போகிறேன். பலப்பல கண்டுபிடிப்புக்கு பின்னால், எடிசன் எவ்வளவு உழைத்திருக்கிறார் என்று மக்களுக்கு நான் காட்டப் போகிறேன். பல சோதனைகளில் அவர் எத்தனை முறை ஏதோ தவறு காரணமாக தொல்லி அடைந்தார் என்பதற்கு இந்தக் குப்பைக் குவியல் தான் சாட்சி. எந்த ஒரு லட்சியத்தை அடைவதற்கு முன்பு பலமுறை தோல்வியடைந்தாலும், அதை எதிர் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று என் நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் இதன் மூலம் அறிவுறுத்த போகிறேன்.
         வெற்றியடைவதற்கு முன் தோல்விகளைச் சந்திக்க தைரியமில்லை எனில், எந்த ஒரு லட்சியத்தையும் நாம் அடைய முடியாது என்று கூறினார் ஃபோர்டு. உண்மைதான் தவறுகள் இழைக்க சுதந்திரமிருக்கும் இடத்தில் தாமதமாக வேணாலும் வெற்றி கிடைப்பது நிச்சயம். தவறிழைக்க அஞ்சுபவர்கள் பாதுகாப்பைத் தேடி ஆமை போலத் தன் ஓட்டுக்குள் புகுந்து விடுகிறார்கள். அவர்களால் எதையும் சாதிக்க முடியாது. 
மேலும் வாசிக்க... "பல்பு போட்ட குப்பை! குப்பையை பாதுகாத்த கார் - ஹி... ஹி... வரலாறு"



சுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வரையிலான படங்கள்

முதல் சுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வரையிலான முக்கிய படங்களின் தொகுப்பு
Capture of Bahadur Shah Zafar and his sons by William Hodson at Humayun's tomb on 20 September 1857.
The hanging of two participants in the Indian Rebellion of 1857. Albumen silver print by Felice Beato, 1858.
Forced disarmament of cavalry of Berhampore.
British soldiers looting Qaisar Bagh, Lucknow, after its recapture (steel engraving, late 1850s).
Secundra Bagh after the slaughter of 2,000 Rebels by the 93rd Highlanders and 4th Punjab Regiment. Albumen silver print by Felice Beato, 1858.
Blowing from Guns in British India (1884) by Vasily Vereshchagin.
Gandhi in 1918, at the time of the Kheda and Champaran satyagrahas
The Jallianwala Bagh couple of months after the April 1919 massacre which killed about 1,526 people.
Gandhi on the Salt March.
Gandhi at Dandi, April 5, 1930.
Indian freedom fighter Bhagat Singh, at the age of 21 in jail.
Procession view at Bangalore.
Netaji Subhas Chandra Bose in INA Uniform 1943 August 15. 
Cabinet members of the Provisional Government of Azad Hind, 1943:
1st Row (L to R): Lt Col Chatterjee, Lt Col J K Bhonsle, Dr Lakshmi Swaminadhan, Subhas Chandra Bose, A. M. Sahay and S A Ayer
2nd Row (L to R): Lt Col Gulzara Singh, Lt Col Shah Nawaz Khan, Lt Col Aziz Ahmed, Lt Col M Z Kiani, Lt Col N S Bhagat, Lt Col Ehsan Qadir, Lt Col Loganathan.
An old Sikh man carrying his wife. Over 10 million people were uprooted from their homeland and travelled on foot, bullock carts and trains to their promised new home.
Midnight of August 14, 1947 Jawaharlal Nehru Claiming Independence from British
நன்றி: கூகிள் தேடல்.
மேலும் வாசிக்க... "சுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வரையிலான படங்கள்"



நடிகர் அஜித்தின் திரைப்பட வரலாறு - ஒரு பார்வை

   
   நடிகர் அஜித் குமார் 1971 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் நாள் ஹைதராபாத் நகரில் பிறந்தார். இவரின் அண்ணன் பெயர் அனில் தம்பி பெயர் அனுப் குமார். 1986 ஆம் ஆண்டு இவர் ஆசன் மெமோரியல் சீனியர் செகண்டர் பள்ளியிலிருந்து விலகி பகுதி நேர இரு மற்றும் நான்கு சக்கர வாகன மெக்கானிக்காக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் 1990 வரை ஈரோட்டில் துணி ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் சிறிது காலம் மாடலிங் வேலையும் செய்தார். ஒரு சமயம் இவர் மோட்டர் சைக்கிள் விபத்தில் முதுகுத்தண்டில் அடிபட்டதால் கால்கள் உணர்விழந்தன. ஆனால் இவர் விடாமுயற்சியுடன் அதிலிருந்து மீண்டு சென்னையிலுள்ள அவரின் வீட்டிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 1996 ஆம் வருடத்தில் அஜித் குமார்-நடிகை ஹீரா காதல் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அந்த காதல் 1999 ஆம் வருடத்தின் முற்பகுதியில் முடிவுக்கு வந்தது.
அஜித் குடும்பம்
     அஜித் குமார் அமர்க்களம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஷாலினியை 2000 ஆம் வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார். 03-01-2008 அன்று அஜித்-ஷாலினி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அனுஷ்கா என பெயரிட்டுள்ளனர். அஜித் குமார் ஒரு சிறந்த மோட்டார் பந்தய வீரர். அவர் ஜெர்மனி மற்றும் மலேசியாவில் நடைபெற்ற மோட்டார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். அவர் பார்முலா 3 கார் பந்தயங்களிலும் கலந்து கொண்டுள்ளார்.

அஜித் பெற்ற விருதுகள்:
  • அஜித் குமார் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புஸ்தகம்) பரத்முனி ஆர்ட் அகாடமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
  • 1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.
  • 2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார். 
  • 2001 ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார்.
  • 2002ஆம் வருடம் வில்லன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.
  • தென் இந்திய சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார். 
  • கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.  

ரஜினியுடன் அஜித்
சர்ச்சைகள்:
பிப்ரவரி 06 2010 அன்று நிகழ்ந்த கலைஞர் கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் பேசும்போது திரையுலகினரை அரசியல் இயக்கங்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாக பகிங்கரமாக புகார் கூறினார். இதனால் அஜித்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிகழ்ச்சிகளால் மன வருத்தம் அடைந்த அஜித் மீண்டும் கார்பந்தயத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினார்.

2011 ம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தை சில பல காரணங்களால் கலைத்தார்.



அஜித் நடித்துள்ள படங்கள்:
1. பிரேம புஸ்தகம் - (தெலுங்கு) - 1992 - பவன்
2. அமராவதி - (தமிழ்) - 1993 - ரமேஷ் குமார்
3. பாசமலர்கள் - (தமிழ்) (நட்புக்காக) - 1994 - ரமேஷ் குமார்
4. பவித்ரா - (தமிழ்) - 1994 - நிதின்
5. ராஜாவின் பார்வையிலே - (தமிழ்) (நட்புக்காக) -1995 - மன்மோகன்
6. யுவா ரக்தம் - (தெலுங்கு) (நட்புக்காக) - 1995 - மன்மோகன்
7. ஆசை - (தமிழ்) - 1995 - வசந்த்
8. ஆசா ஆசா ஆசா - (தெலுங்கு) - 1995 - வசந்த்
9. வான்மதி - (தமிழ்) - 1996 - அகத்தியன்
10. கல்லூரி வாசல் - (தமிழ்) - 1996 - பவித்ரன்
11. காலேஜ் கேட் - (தெலுங்கு) - 1996 - பவித்ரன்
12. மைனர் மாப்பிள்ளைகள் - (தமிழ்) (நட்புக்காக) - 1996 - ஏ. மனோகர்
13. காதல் கோட்டை - (தமிழ்) - 1996 - அகத்தியன்
14. நேசம் - (தமிழ்) - 1997 - நாராயண்
15. ராசி - (தமிழ்) - 1997 - முரளியப்பாஸ்
16. உல்லாசம் - (தமிழ்) - 1997 - ஜேடி-ஜெர்ரி
17. உல்லாசம் - (தெலுங்கு) - 1997 - ஜேடி-ஜெர்ரி
18. பகைவன் - (தமிழ்) - 1997 - டி. ராஜசேகர்
19. ரெட்டை ஜடை வயசு - (தமிழ்) - 1997 - சிவக்குமார்
20. காதம் மன்னன் - (தமிழ்) - 1998 - சரண்
21. அவள் வருவாளா - (தமிழ்) - 1998 - ராஜ் கபூர்
22. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - (தமிழ்) (நட்புக்காக)- 1998 - விக்ரமன்
23. உயிரோடு உயிராக - (தமிழ்) - 1998 - சுஷ்மா
24. தொடரும் - (தமிழ்) - 1999 - ரமேஷ் கண்ணா
25. உன்னைத் தேடி - (தமிழ்) - 1999 - சுந்தர் சி
26. பிரேமடோ பிலிசா - (தெலுங்கு) - 1999 - சுந்தர் சி
27. வாலி - (தமிழ்) - 1999 - எஸ்.ஜே. சூர்யா
28. வாலி - (தெலுங்கு) - 1999 - எஸ்.ஜே. சூர்யா
29. வாலி - (இந்தி) - 1999 - எஸ்.ஜே. சூர்யா
30. ஆனந்த பூங்காற்றே - (தமிழ்) - 1999 - ராஜ் கபூர்
31. நீ வருவாய் என - (தமிழ்) (நட்புக்காக) - 1999 - ராஜகுமாரன்
32. அமர்க்களம் - (தமிழ்) - 1999 - சரண்
33. அத்புதம் - (தெலுங்கு) - 1999 - சரண்
34. முகவரி - (தமிழ்) - 2000 - துரை
35. சிறுநாமா - (தெலுங்கு) - 2000 - துரை
36. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - (தமிழ்) - 2000 - ராஜீவ் மேனன்
37. பிரியுரலு பிலிச்சிண்டி - (தெலுங்கு) - 2000 - ராஜீவ் மேனன்
38. உன்னைக் கொடு என்னைத் தருவேன் - (தமிழ்) - 2000 - கவி காளிதாஸ்
39. தீனா - (தமிழ்) - 2001 - ஏ.ஆர். முருகதாஸ்
40. சிட்டிசன் - (தமிழ்) - 2001 - சரவண சுப்பையா

41. சிட்டிசன் - (தெலுங்கு) - 2001 - சரவண சுப்பையா
42. பூவெல்லாம் உன் வாசம் - (தமிழ்) - 2001 - எழில்
43. அசோகா - (இந்தி)(நட்புக்காக) - 2001 - சந்தோஷ் சிவன்
44. சாம்ராட் அசோகா - (தமிழ்) (நட்புக்காக) - 2001 - சந்தோஷ் சிவன்
45. ரெட் - (தமிழ்) - 2002 - ராம் சத்யா
46. ராஜா - (தமிழ்) - 2002 - எழில்
47. நூவு நாக்கு காவாலி - (தெலுங்கு) - 2002 - எழில்
48. வில்லன் - (தமிழ்) - 2002 - கே.எஸ். ரவிக்குமார்
49. வில்லன் - (தெலுங்கு) - 2002 - டாக்டர் ராஜசேகர்
50. என்னை தாலாட்ட வருவாளா - (தமிழ்) (நட்புக்காக) - 2003 - கே.எஸ். ரவீந்திரன்
51. ஆஞ்சநேயா - (தமிழ்) - 2003 - மகராஜன்
52. ஆச்சார்யம் - (தெலுங்கு) - 2003 - மகராஜன்
53. ஜனா - (தமிழ்) - 2004 - ஷாஜி கைலாஷ்
54. ரௌடி டான் (தெலுங்கு) - 2004 - ஷாஜி கைலாஷ்
55. அட்டகாசம் - (தமிழ்) - 2004 - சரண்
56. ஜீ - (தமிழ்) - 2005 - லிங்குசாமி
57. ஜீ - (தெலுங்கு) - 2005 - லிங்குசாமி
58. பரமசிவன் - (தமிழ்) - 2006 - பி. வாசு
59. பரமசிவம் - (தெலுங்கு) - 2006 - பி. வாசு
60. திருப்பதி - (தமிழ்) - 2006 - பேரரசு
61. திருப்பதி - (தெலுங்கு) - 2006 - பேரரசு
62. வரலாறு - (தமிழ்) - 2006 - கே.எஸ். ரவிக்குமார்
63. ஆழ்வார் - (தமிழ்) - 2007 - செல்லா
64. கிரீடம் - (தமிழ்) - 2007 - விஜய் ஆனந்த்
65. பில்லா - (தமிழ்) - 2008 - விஷ்ணுவர்த்தன்
66. ஏகன் - (தமிழ்) - 2008 - ராஜு சுந்தரம்

67. அசல் - (தமிழ்) - 2010 - சரண்
68. மங்காத்தா - விரைவில்
69. பில்லா - 2 - தயாரிப்பில்
நன்றி: பல இணைய தளங்கள்
மேலும் வாசிக்க... "நடிகர் அஜித்தின் திரைப்பட வரலாறு - ஒரு பார்வை"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1