CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



இந்திய அரசே... எனக்கும் வீங்குதே! என்ன செய்ய?

இந்த நிலைக்கு இந்தியா தள்ளப்படுமா?
அய்யா மத்திய அரசே, உங்களுக்கு கஜானா காலி ஆனாலும், நாட்டுல பண வீக்கம் ரொம்ப வீங்கினாலும், இன்டர்நேசனல் பேங்க் கடன் அதிகமானாலும் நீங்க கையை வைக்கறது எங்க அடி மடியில தானே, ஏன்னா உங்களுக்கு இளப்பம் நாங்கதானே. இவிங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டான்னு எங்க நெத்தியில போஸ்ட்டர் அடிச்சு எப்பவோ ஒட்டிட்டிங்களே. நாட்டை ஆள நீங்க மட்டுமல்ல, யாரு வந்தாலும் எங்கள அடிக்கறாங்கயா, எவ்வளவு தான் நாங்களும் தாங்குவோம்? எங்க புலம்பல், எங்க ஏழ்மை, எங்க குடும்ப பொருளாதார வீக்கம் (ஏன், அரசுக்கு மட்டும் தான் பொருளாதாரம் வீங்குமா?) என எதுவுமே உங்களுக்கு தெரியாது. உங்களுக்கு சுமை தாங்கியே நாங்க தான?

ரொம்ப  நல்லா ஆட்சி நடத்தி, எங்க வாழ்வாதாரத்தையும் முன்னேத்தி, நாட்டையும் சர்வதேச அளவுல முன்னேத்த உங்கள நம்பி கொண்டு வந்தோம். ஆனா நீங்க எங்கெல்லாம் ஓட்டை, ஓடிசல் இருக்குன்னு பாத்து அங்க போயி எல்லாத்தையும் காலி பண்ணி சுத்தமா தொடச்சு அவங்களோட பாக்கெட்டை நொப்பிக்கறாங்க(நொப்பிக்கிட்டாங்க). அது மட்டுமில்லாம என்னன்னமோல்லாம் நடக்குது. அட, என்னவேனாலும் நீங்க நடத்துங்க. ஆனா எங்களை ஏன் கஷ்டப்படுத்துறிங்க? நாங்க சம்பாதிக்கிற பணத்துக்கும் வரி காட்டுறோம். அதுல நாட்டை ஆள பணம் பத்தலையா? ஏன் பத்தலை? பல முதலைங்க வரி கட்டாம ஏப்பம் விடறாங்க. வெள்ளைப் பணத்தை கருப்பாக்கி உலகத்துல எங்கேயோ ஒரு மூலையில பதுக்குறாங்க. அட, அந்த கறுப்பை பதுக்க நம்ம நாடு கூட அவங்களுக்கு லாயக்கு இல்ல போல... சரி, இதெல்லாம் காலங்காலமா நடந்துட்டு வருது.

இப்ப  நமக்கு என்ன முக்கியம்? விலை வாசி கையை கடிக்க கூடாது. கொஞ்சமாச்சும் நம்ம வருமானத்துல சேமிக்கணும்னு ஆசை வரும். ஆனா நாளைக்கு எதுல விலை கூடப் போகுது? நாளான்னைக்கு எதுல கூடப்போகுதுன்னு தெரியாதுல. அதனால சேமிக்கிற ஆசையும் வேணாம் நமக்கு. பஸ் டிக்கட் ரேட் கூடுனதுல ஒரு லாபம் இருந்துச்சு. அதாவது ரெண்டு பேரு சேர்ந்து பைக்ல போனா கொஞ்சம் காசு மிச்சமாகும். நேரமும் மிச்சமாகும்னு இருந்துச்சு. ஆனா எப்போ பெட்ரோல் உரிமை அரசுக்கிட்ட இருந்து அந்த நிறுவனங்களுக்கு போச்சோ? அப்பவே பைக்ல சேர்ந்து போகறதுக்கும் ஆப்பு வச்சுட்டாங்கயா. ஆமா, அரசு கிட்ட பவர் இருக்குறப்போ வருசத்துல ரெண்டு மூணு வாட்டி பெட்ரோல், டீசல் விலையேத்துவாங்க. அதுவே நம்ம வருமானத்தை மீறி செலவுல வீங்கும். 
இந்தப் படத்துல உள்ள டீடெயில்ல பார்த்து மலைச்சு போயிராதிங்க?

ஆனா, இந்த நிறுவனத்துக்கு பவர் எப்போ போச்சோ? அப்பவே போச்சுங்க நம்ம நிம்மதி. எங்கேயோ சர்வதேசத்துல ரேட் கூடுதாம். அதனால இங்க செலவு கட்டுபடி ஆகலையாம். அப்படியும் மீறி செலவு பண்னுன்னா பண வீக்க விகிதம் ரொம்பவே வீங்குதாம். அதனால பெட்ரோல் ரேட் ஒரு கணக்கு போட்டு கூட்டுவாங்க. இங்க தாங்க அவங்க ஆட்டம் அடங்காம போக ஆரம்பிச்சுச்சு. அவங்க கையிக்கு பவர் போனதுல இருந்து சுமாரா பதினெட்டு தடவ ரேட் கூடியிருக்கு. அதனால நுகர்வோர் பொருட்களின் விலையும் பதினெட்டு தடவ கூடியிருக்கு(இப்படியும் எடுத்துக்கலாம்ல). ஆனா நம்மளோட வருமானம் மட்டும் கூடாது. ஏன்னா, அது நாம வேலை பாக்குறவங்க கையில இருக்கு. அப்படியும் அவங்க வருசத்துக்கு ஒரு தடவ வருமானத்தை கூட்டும் போதும் இந்த விலையேற்றத்தை கவனத்துல வைப்பாங்களா? ம்ஹும்.... ம்ஹும்....

பால் விலை, ஸ்கூல் பீஸ், பஸ் டிக்கட், நுகர்வோர் சாமான்கள் விலையேற்றம், ஆட்டோ,கார் வாடகை ரேட், நெடுந்தூர பேருந்து ரேட், என இப்படி எல்லாமும் விலையேறி சாமானிய மக்களும் நிம்மதியா குடும்பத்த ஓட்ட முடியால. இந்த ரெண்டு மூணு வருசத்துல எல்லா விலையுமே எவரெஸ்ட் மலை மாதிரி ஏறிப் போச்சு. ஆக, இந்த எவரெஸ்ட் மலையில் நாம தான் ஏறணும்? எத்தன பேரால அந்த மலையில ஏற முடியும்? ஏதாவது குறுக்கு வழியில சம்பாதிப்பவன், கறுப்பு பணத்தை பெருக்குறவன், பெரிய பெரிய பவர் இருக்குறவங்க தாராளமா விலையேற்ற எவரெஸ்ட் மலையில் ஏறலாம். ஆனா சாமானிய மக்களான நாம அதுல கண்டிப்பா ஏறித்தான் ஆகணும். ஆனா முடியாது? அதுக்குள்ள இன்னொரு ரூபத்துல ஏதாவது விலையேற்றம் வந்து நம்மள கீழ தள்ளி விட்டுரும். நாம கீழ விழுந்து அடிப்பட்டு நம்ம ஒடம்பு வீங்கும், அதாவது நம்ம குடும்ப வருமானத்தை மீறி செலவு வீங்கும். இந்த வீக்கத்துக்கு மருந்து போட யாரும் வர மாட்டாங்க. வேணும்ன்னா வீக்கத்தை கிள்ளிப் பாக்க வேணா வருவாங்க. அதுதான் இவங்கள நம்புனதுக்கு நமக்கு கெடச்ச பரிசு. 

எல்லா ரேட்டும் ஏறிப்போச்சுங்க, இன்னும் நம்மள எவ்வளவு தான் வீங்க வப்பாங்களோ? ஓட்டு பொட்டு இவங்கள உட்கார வச்சதுக்கு நமக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்? சரி, விடுங்க ஏதோ பொலம்பிட்டேன் இன்னைக்கு.... (நான் மட்டுமா புலம்பறேன்? இந்தியாவே புலம்புது)
மேலும் வாசிக்க... "இந்திய அரசே... எனக்கும் வீங்குதே! என்ன செய்ய?"



மதுரையில் சித்திரைப் பொருட்காட்சி - madurai chithirai exhibition 2012

மதுரையில் சித்திரை மாதத்தில் தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் சித்திரைப் பொருட்காட்சி கோலாகலமாக ஆரம்பித்து ஒரு மாதமாக போகிறது. எங்களுக்கு இன்று தான் பொருட்காட்சிக்கு செல்ல நேரம் கிடைத்தது. கோரிப்பாளையதில் இருந்தே டிராபிக் அதிகமா இருக்கு. அங்க இருந்து தமுக்கம் போகவே எப்படியும் பத்து நிமிஷம் ஆச்சு. கூட்டம் ரொம்பவே அதிகம். மைதானத்தின் முன் பக்கம் கவுண்ட்டர் பக்கத்துல ஆரம்பிச்ச கியூ ராஜாஜி பார்க் இருக்குற ரோட்டுக்கு திரும்பி ரொம்ப நீளமாவே இருந்துச்சு. ஆனாலும் கியூ வேகமா மூவ் ஆச்சு, ஒரு டிக்கட் பத்து ரூபாய் மட்டுமே.
நுழைவுச்சீட்டு வழங்கும் இடத்தில் மக்கள் கூட்டம்

பெண்களுக்கான பேன்சி பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்கள்

மைதானத்திற்கு உள்ளே எங்க பாத்தாலும் கடைகள், கலர் கலர் லைட், பெரிய விளம்பர ஆர்ச் என ரொம்ப பிசியா களை கட்டி இருந்துச்சு. பஞ்சு மிட்டாய், பாப்கார்ன் என சாப்பிடும் அயிட்டங்களும், லேடிஸ்களுக்கான ஸ்டிக்கர் பொட்டு, ஹேர் பேன்ட், சமையல் அறைகளுக்கான சின்ன சின்ன பொருட்கள், என கடைகள் வரிசையாவே இருந்துச்சு, எல்லா கடைகளும் கியூவால் நிரம்பி இருந்துச்சு. ஒரு கடைக்கு பேரு வெங்காய வெட்டர் அப்படின்னு போட்டிருந்தாங்க. என்னான்னு நுழைஞ்சு பார்த்தா வெங்காயம் வெட்டுற கட்டருக்கு தான் அப்படி வெட்டர்ன்னு போட்டிருக்காங்கன்னு புரிஞ்சுச்சு. அப்படியே ஒவ்வொரு கடைகளா வேடிக்கை பார்த்துட்டு போனோம். 
கைத்தறி ஆடைகளின் ஸ்டால்

அம்மாவின் பெருமையை விளக்கும் ஸ்டால்

இன்னொரு பக்கம் அம்மா படங்கள் பொட்டு ரெண்டு மூணு ஸ்டால் போட்டிருந்தாங்க. வீட்டு வசதி வாரியம், அரசின் விலையில்லா பொருட்கள் உதவி, வடிகால் வாரியம் என அம்மா படங்கள் பொட்டு அவரது சாதனைகள் மற்றும் மக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகளை பிளக்ஸ் பேனரில் போட்டிருந்தாங்க.கலையரங்கத்தில் ஆடல் பாடல் நடந்துட்டு இருந்துச்சு. ஆனா நிகழ்ச்சியை பாக்க கூட்டம் தான் இல்லை. 
ஜெயின்ட்வீல் ராட்டினம்


அப்பளம், மிளகாய் பஜ்ஜி ஸ்டால்
சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்களை கவரும் விதவிதமான ராட்டினங்கள் நிறைய இருந்துச்சு. வனத்துறை சார்பா ஒரு ஸ்டாலும், பயங்கர பாம்பு திகில் செய்யும் ஸ்டால் என சில இருந்துச்சு. பானிப்பூரி, பாவபஜ்ஜி, சோலாபூரி, மசாலா பூரி, ஐஸ்க்ரீம், பால்கோவா, கூல்ட்ரிங்க்ஸ் என ஏகப்பட்ட கடைகள். எனக்கென்னமோ இந்த வருட பொருட்காட்சியில் நிறைய மிஸ் ஆனது போல இருந்துச்சு. பொதுவா கடைகள் குறைவாகவே இருந்துச்சு. வீட்டு உபயோக பொருட்களின் ஸ்டால்களும் குறைவே.
எந்தப்பொருள் எடுத்தாலும் ஏழு ருபாய்

எந்தப் பொருள் எடுத்தாலும் அஞ்சு ரூபான்னு இருந்தது எல்லாம் இந்த வருஷம் ஏழு ரூபாயா விலை ஏறி இருந்துச்சு. அடுத்த வருஷம் இந்த பொருட்கள் எப்படியும் பத்து ரூபாய்க்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. மதுரை மக்களுக்கு பொழுபோக்க சில இடங்களே இருப்பதால் தமுக்கம் மைதானத்தில் எந்த பொருட்காட்சி, கண்காட்சி போட்டாலும் கூட்டம் அலை மோதும். அதிலும் ஞாயிறு என்றால் சொல்லவே வேண்டாம். பயங்கர கூட்டம் இருக்கும். பொதுவாக பொருட்காட்சி, கண்காட்சி என தமுக்கத்தில் குடும்பத்துடன் நன்றாக என்ஜாய் செய்து பார்க்க திங்கள் முதல் வெள்ளி வரையிலான நாட்களில் போகணும். 
மேலும் வாசிக்க... "மதுரையில் சித்திரைப் பொருட்காட்சி - madurai chithirai exhibition 2012"



சென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரலை லிங்க் இதோ...(chennai youth blogger meet live telecost)

இனிய சக வலைபதிவர்களே,


சென்னையில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் யூத் பதிவர்கள் சந்திப்பின் நேரலைக்கான லிங்க்:


http://www.justin.tv/selwin76?utm_campaign=post_live&utm_source=live&utm_medium=url#/w/3108118000


மேற்கண்ட லிங்க்-ஐ கிளிக் செய்து பதிவர்களின் அரட்டைகளுடன் நீங்களும் இணையுங்கள்.


பதிவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியை நேரலையில் காண கீழே உள்ள ப்ளேயரில் ப்ளே(play) செய்யவும்....
(நண்பர்களே, சந்திப்பு நிறைவடைந்த படியால் கீழ்க்கண்ட லிங்க் வேலை செய்யாது. )


Watch live video from selwin76 on www.justin.tv
மேலும் வாசிக்க... "சென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரலை லிங்க் இதோ...(chennai youth blogger meet live telecost)"

சென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு, ஓர் புதிய முயற்சி

இனிய சக வலை பதிவர்களே,

சென்னையில் இன்று(20-05-2012) மாலை நான்கு மணியளவில் டிஸ்கவரி புக் பேலசில் சென்னை பதிவர்கள் ஒன்று கூடி நடத்தும் யூத் பதிவர்கள் சந்திப்பு இனிதே நடைபெற உள்ளது. இந்த சந்திப்பில் கலந்து கொள்ள தமிழகமெங்கும் உள்ள பதிவர்கள் சென்னையை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தமிழ்வாசியின் வாழ்த்துக்கள்.


இந்த சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியை நேரடியாக பார்க்கும் வண்ணம் நமது சக பதிவர்கள் நக்ஸ்+சுரேஷ் அவர்கள் ஓர் சிறப்பு ஏற்பாடு செய்ய இருக்கிறார்கள். சந்திப்பின் நேரலை www.justin.tv என்ற முகவரியில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒளிபரப்பிற்கான தனி லிங்க் நமது பதிவர்களின் முகநூல் மற்றும் டிவிட்டர் தளங்களில் மாலை நான்கு மணியளவில் வெளியிடப்படும். நமது தமிழ்வாசி தளத்திலும் நேரலை-யின் லிங்க் இணைக்கப்படும்.

மேலும் நேரலை வீடியோவாக ஒளிபரப்ப நமது தமிழ்வாசி தளத்தில் முயற்சி மேற்கொண்டுள்ளோம். நாம் மேற்கொண்டுள்ள தொழில்நுட்பங்கள் வெற்றி பெற்றால் நமது பதிவுலக வரலாற்றில் புதிய நேரலை நுட்பம் அடுத்தடுத்து நடக்கவிருக்கும் எல்லா பதிவர்கள் சந்திப்பிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

யூத் பதிவர்கள சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.


டிஸ்கி: எனது அலுவக வேலை காரணமாக யூத் பதிவர்கள் சந்திப்பிற்கு என்னால் செல்ல இயலவில்லை.
மேலும் வாசிக்க... "சென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு, ஓர் புதிய முயற்சி"



இந்தப் பெண்ணின் கணக்குக்கு விடை என்ன?

ஹாய் மக்காஸ்,
இந்த பொண்ணு ஏதோ ரிஸ்க்கான கணக்கு போட்டிருக்கு. ஆன்சர் யாருக்காச்சும் தெரியுமா? தெரியும்னா சொல்லுங்க. தெரியலைன்னா அடுத்த படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க. ஆனா அந்த ஆன்சரை உங்களுக்காக எடுத்துக்க கூடாது, ஆமா சொல்லிப்புட்டேன்.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

இதான் அந்த கணக்குக்கு ஆன்சர்.....
(ஹி...ஹி..... என்ன மக்காஸ் பொண்ணு ஐலவ்யூ ஆன்சரா சொல்லியிருக்கு...)
மேலும் வாசிக்க... "இந்தப் பெண்ணின் கணக்குக்கு விடை என்ன?"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1