CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts


வாசகர்கள் முட்டாள்கள் தான்! என்ன பொழப்புடா?



வணக்கம் வலை நண்பர்களே,

BLOG - வலைப்பூ என்பது கூகிள் தரும் ஓர் இலவச சேவை என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த இலவச சேவைக்கு சிலர் பணம் செலவு செய்து சொந்த முகவரியும் வாங்கியிருப்போம். ஆனாலும் கூகிளின் இலவச டாஷ்போர்ட் உபயோகித்து பதிவுகள் எழுதி வருகிறோம். பதிவுகளை எழுதுபவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு தனித்துவத்தை வைத்திருப்பார்கள். அதனடிப்படையிலே அவர்களின் பதிவுகள் எழுதப்பட்டு இருக்கும். அவரர்களின் பதிவுக்கும் கண்டிப்பாக வாசகர்கள் இருப்பார்கள். அந்த வாசகர்கள் அவரது பதிவை விரும்பி வந்து படிப்பவர்களாகவும் இருக்கலாம், அதே சமயம் பிடிக்கவில்லை என்றாலும் அந்த பதிவு எந்தளவுக்கு மோசமாக எழுதப்பட்டு உள்ளது என அறியவும் படிக்கலாம். எல்லோருக்கும் எல்லா வலைப்பூக்களும் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் வாசிக்க... "வாசகர்கள் முட்டாள்கள் தான்! என்ன பொழப்புடா?"



மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 - வெற்றிக்கரமாக நடந்தது, அனைவருக்கும் நன்றி!!!

வணக்கம் தமிழ் வலைப்பதிவர் நண்பர்களே,
நேற்று (26/10/2014) மதுரையில், மூன்றாவது தமிழ் வலைப்பதிவர் திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்தது.


மேலும் வாசிக்க... "மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 - வெற்றிக்கரமாக நடந்தது, அனைவருக்கும் நன்றி!!!"



மதுரை வலைபதிவர் திருவிழா 2014 - நேரலை ஒளிபரப்பு

வணக்கம்
தமிழ் வலைபதிவு நண்பர்களே,
தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் ஆண்டு வலைபதிவர் திருவிழா உங்கள் முன் நேரலையாக ஒளிபரப்பு ஆகிறது...
PLAY button press செய்யவும்...
நேரலை:


Live streaming video by Ustream
மேலும் வாசிக்க... "மதுரை வலைபதிவர் திருவிழா 2014 - நேரலை ஒளிபரப்பு"



மதுரை பதிவர் திருவிழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்!!!


வணக்கம் தமிழ் வலைப்பதிவர்களே,

நாளை மதுரையில் வலைப்பதிவர் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவிற்கு உலகின் பல பகுதியில் இருந்தும் பதிவுலக நண்பர்கள் வருகை தர இருக்கிறார்கள். சிறந்த பேச்சாளர்களும் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். இத்தகைய மாபெரும் விழாவில் பதிவர்களாகிய நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களாக சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.


1. அரங்க மேடையானது நடனம் பயிற்றுவிக்கும் மேடை. அதோடு மேடைக்கு பின்புறம் சுவாமி சன்னதி இருப்பதால் மேடையில் ஏறுபவர்கள் காலணிகள் அணித்து ஏற வேண்டாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். கீழேயே கழற்றி வைத்து விடவும்.

2. நாம் சந்திக்க விரும்பும் பதிவர்களின் பெயரை மறக்காமல் இருக்க ஒரு தாளில் எழுதி வைக்கலாம். இதனால் இணையத்தில் முகம் பாரா நண்பர்களாக இருப்பவர்களை மறக்காமல் சந்தித்து நட்புறவை வளர்க்க முடியும்.

3. விழா அரங்கில் நமக்கு அறிமுகமில்லாத பதிவர்களும் இருப்பார்கள். அவர்களிடம் நாமாக சென்று நம்மைப் பற்றி அறிமுகம் செய்வதோடு மட்டுமில்லாமல், அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகளையும் ஒரு தாளில் எழுதி வைக்கலாம். இதனால் பின்னாளில் அவர்களின் வலைப்பூவை வாசிக்கவும், அவர்களிடத்தில் நட்புறவை ஏற்படுத்தவும் உதவியாய் இருக்கும்.

4. நம்மைப் பற்றி, வலைப்பூவைப் பற்றி பிறரிடத்தில் அறிமுகம் செய்கையில் அவர்கள் நம்மை முழுமையாக அறியும் வண்ணம், தெளிவாக குறிப்பிட வேண்டும்.
உதாரணமாக: நண்பர் சீனிவாசன் பாலகிருஷ்ணன் தனது வலைப்பூ தலைப்பாக "திடங்கொண்டு போராடு" என்றும், வலைப்பூ முகவரியாக "சீனுகுரு" என்றும், பிறரது வலையில் கருத்துரை இடும் போது சீனு என்ற பெயரிலும் இருப்பார்.

இவ்வாறு பல பெயரில் இருந்தால் பெயரில் குழப்பமாக இருக்கலாம். இதனால் நாம் நம்மைப் பற்றி கூடுதல் தகவல்களை குறிப்பிட்டால் மற்றவர்கள் அறிய எளிதாக இருக்கும்.


5. முக்கியமாக விழா நடைபெறும் நாளன்று யாரும் மது அருந்தி வரக் கூடாது. இதனால் பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நமது வீட்டு விழா என்பதை நினைவில் கொள்ளவும்.

6. பொதுவில் முகம் காட்டா பதிவர்களையும், முக்கியமாக, பெண் பதிவர்களையும் அவர்கள் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுக்க வேண்டாம். தவறி எடுத்திருந்தாலும் பதிவில் வெளியிட வேண்டாம் நண்பர்களே.

7. மேடையில் பங்கேற்று உரை ஆற்றுபவர்களை விசிலடித்தோ, கை தட்டியோ உற்சாகப்படுத்த வேண்டும். அதே சமயம் முடிந்தவரை அமைதி காக்கவும் தவறக் கூடாது.

8. புதிய பதிவர்களை வரவேற்று, விழா அரங்கில் அவர்களுக்கு தேவையான வசதிகளையும், உதவிகளையும் செய்ய வேண்டும். இதனால் அவர்களுக்கு பதிவுலக புரிதலும், பதிவர்களின் நட்பும் கிடைக்கப் பெறும்.


நன்றி நண்பர்களே.....


தொடர்புடைய பதிவுகள்:

மதுரை வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வருவதற்கான பேருந்து வழித்தடம் விவரங்கள்!!!

வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-மதுரை-26.10.14 சந்திப்பு

வலைப்பதிவர் சந்திப்பு மதுரை - 2014, நன்கொடை அளிக்க விரும்புவோர் கவனத்திற்கு!!! 

மதுரை பதிவர் சந்திப்பிற்கு வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் முதல் பட்டியல்! 

மதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர் முன்னோட்டம்!!! 

வருகையை உறுதி செய்த பதிவர்களின் இரண்டாம் பட்டியல் - மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 

மதுரை வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் யார்? யார்!!
 
நிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014!!!
மேலும் வாசிக்க... "மதுரை பதிவர் திருவிழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்!!!"



மதுரை வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வருவதற்கான பேருந்து வழித்தடம் விவரங்கள்!!!

வணக்கம் உலக வலைப்பதிவர் நண்பர்களே...

மதுரையில்  நடைபெற இருக்கும் மூன்றாவது வலைப்பதிவர் திருவிழாவிற்கு வருகை தரும் பதிவர்களுக்கு பேருந்து வழித்தடம் பற்றிய தகவல்கள் வரும் பத்திகளில் பகிரப்படுகிறது.

பதிவர்கள்  இன்னமும் தங்கள் வருகையை உறுதி செய்யாமல் இருந்தால் விரைவில் இங்குள்ள இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து தங்கள் வருகையை உறுதி செய்யுங்கள்.

பதிவர்  சந்திப்பு நடைபெறும் கீதா நடனகோபால நாயகி மந்திர் அரங்கத்தின் பேருந்து நிறுத்தம் காமராஜர் சாலை தியாகராஜர் கல்லூரி முன்புறம் உள்ளது.
அரங்கத்திற்கு வரும் வழி மற்றும் பேருந்து நிறுத்தம்


பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து வருபவர்கள் வர வேண்டிய பேருந்தின் வழித்தட எண்கள்: 4,  15,  32,  96, 97,  99. 

இரயில் மூலம் வருபவர்களுக்கு:
மதுரை இரயில் நிலையத்தின் கிழக்கு நுழைவு வாயில் வழியாக வெளியேறி வலது பக்கம் ஐந்து நிமிட நடக்கும் தூரத்தில்  பெரியார் பேருந்து நிலையம் உள்ளது. 
பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அரங்கத்திற்கு வரும் வழி

ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து வருபவர்கள் பெரியார் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து மேற்கண்ட வழித்தட பேருந்தில் வர வேண்டும். 

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து வருபவர்கள் வர வேண்டிய பேருந்தின் வழித்தட எண்கள்: C3, 16w
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அரங்கத்திற்கு வரும் வழி

 விரகனூர் சுற்றுச் சாலையில்(ring road) இருந்து வருபவர்கள் வர வேண்டிய பேருந்தின் வழித்தட எண்கள்: 4,  15,  32,  96, 97,  99.
விரகனூர்  சுற்றுச்சாலையிலிருந்து அரங்கத்திற்கு வரும் வழி
எந்த பகுதியில் இருந்து அரங்கம் இருக்கும் தெப்பக்குளத்திற்கு வந்தாலும் பேருந்து நிறுத்தம் தியாராஜர் கல்லூரி முன்பாக மட்டுமே உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
 ****************************************
பதிவர்கள்  தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் (சனிக்கிழமை காலை முதல்):
பகவான்ஜி: 8903694875
மனசாலி: 9150023966

பெண்  பதிவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் (சனிக்கிழமை காலை முதல்):
திண்டுக்கல் தனபாலன்: 9043930051
பால கணேஷ்: 9003036166


தொடர்புடைய பதிவுகள்:
வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-மதுரை-26.10.14 சந்திப்பு

வலைப்பதிவர் சந்திப்பு மதுரை - 2014, நன்கொடை அளிக்க விரும்புவோர் கவனத்திற்கு!!! 

மதுரை பதிவர் சந்திப்பிற்கு வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் முதல் பட்டியல்! 

மதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர் முன்னோட்டம்!!! 

வருகையை உறுதி செய்த பதிவர்களின் இரண்டாம் பட்டியல் - மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 

மதுரை வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் யார்? யார்!!
 
நிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014!!!
மேலும் வாசிக்க... "மதுரை வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வருவதற்கான பேருந்து வழித்தடம் விவரங்கள்!!!"



நிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014!!!


வணக்கம் வலைப்பதிவு தோழமைகளே,
நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா இன்னும் ஆறே நாட்களில் (அக்டோபர் 26, ஞாயிறு) தமிழ்ச் சங்கம் தோன்றிய மதுரை மாநகரில், வரலாற்றுச் சிறப்புமிக்க மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் அருகில், கீதா நடன கோபால நாயகி மந்திர் அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது...

திருவிழாவில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்பதை ஏற்கனவே ஒரு முன்னோட்ட பதிவில் பகிர்ந்திருந்தோம்.
இந்த  பதிவில் முழுமையான நிகழ்ச்சிநிரல் பகிரப்பட்டு உள்ளது.
மேலும் வாசிக்க... "நிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014!!!"



மதுரை வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் யார்? யார்!!

வணக்கம் உலக தமிழ் வலைப்பதிவர்களே!!

வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி மதுரையில் மூன்றாவது வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் நடைபெற இருக்கும் நிகழ்வுகளின் முன்னோட்டம் பற்றி இப்பதிவில் தாங்கள் அறிந்திருப்பீர்கள். அதில் சிறப்பு விருந்தினராக இருவர் பங்கேற்க இருப்பதாக அறிவித்து இருந்தோம். அவர்கள் யாரென கீழ்வரும் பத்திகளில் பார்ப்போம்.
மேலும் வாசிக்க... "மதுரை வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் யார்? யார்!!"



மதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர் முன்னோட்டம்!!!



வணக்கம் வலைப்பதிவர் நண்பர்களே,

டந்த இரண்டு ஆண்டுகள் சென்னையில் பதிவர் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது தாங்கள் அறிவீர்கள். அதே போல இவ்வருடம் மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக திட்டமிட்டும், மிக விரைவாகவும் நடைபெற்று வருகிறது. 

இவ்விழாவின் நிகழ்ச்சி நிரல் வரும் நாட்களில் உங்களின் பார்வைக்கு வைக்க இருக்கிறோம். அதற்கு முன்னோட்டமாக என்னென்ன நிகழ்ச்சிகள் பதிவர் விழாவில் இருக்கும் என இப்பதிவில் பார்ப்போம்.

மேலும் வாசிக்க... "மதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர் முன்னோட்டம்!!!"



வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-மதுரை-26.10.14 சந்திப்பு

தமிழ்ப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அதே போல்.....

மேலும் வாசிக்க... "வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-மதுரை-26.10.14 சந்திப்பு"



வலைப்பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி, முதல் பரிசு ரூபாய் 5000!

அனைத்து வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்.
எங்களது வெட்டி பிளாக்கர் முகநூல் குழுமத்தில் இணைய இங்கே அழுத்துங்கள்



சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நமது ப்ளாக்கர் நண்பர்களுக்கு என்று ஒரு குழுமம் ஆரம்பிக்க வேண்டும் என்று சென்னையில் யூத் பதிவர் சந்திப்பு டிஸ்கவரி புக் பேலஸ்சில் நடைபெற்ற போது முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே வெட்டி பிளாக்கர் என்கின்ற பெயரில் குழு தொடங்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நம் பதிவுகளை பகிர ஒரு திரட்டியாகவும், நம் வலையுலக நண்பர்களுக்கு ஒரு நட்பு பாலமாகவும் திகழ்ந்து வருகின்றது…!


ஆனாலும் வலையில் எழுதுபவர்கள் குறைந்து வருகின்றார்கள், அதிகமாக முகப்புத்தகத்தில் இருக்கின்றார்கள், சிலருக்கு இப்படி ஒரு வசதி இருப்பது தெரியாமல் முகநூலில் பெரிய இடுகைகளைக் கூட வெளியிடுகின்றார்கள் அவர்களின் கவனம் வலைப்பதிவின் பக்கம் திருப்புவதற்கு ஒரு சிறுகதைப் போட்டி நடத்தலாம் என்று நண்பர்களால் முடிவெடுக்கப்பட்டு நடத்தப்படுகிறது. உங்களுடைய திறமையை குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்கு பறைசாற்ற இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் சிறுகதைகள் புகழ் பெற்ற பல தமிழ் எழுத்தாளர்கள், திரை இயக்குனர்கள் பதிப்பகத்தார்கள் என அனைவரின் பார்வையில் இருக்கின்றது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்;வெல்லுங்கள்.


பரிசுத் தொகை

முதல் பரிசு ரூ 5000

இரண்டாம் பரிசு ரூ 2500

மூன்றாம் பரிசு ரூ 1500

சிறப்பு பரிசு ரூ500 ஐந்து நபர்களுக்கு



விதிமுறைகள்.

1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)

2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.

3.இதுவரை எங்கும் வெளியாக கதைகளாக இருக்க வேண்டும்

4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5. கதைக்களம் இலக்கியம், க்ரைம், சஸ்பென்ஸ், நகைச்சுவை எதுவாகவும் இருக்கலாம். கட்டுப்பாடுகள் கிடையாது.

6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப்பிளாக்கர் அட்மின்கள் கலந்து கொள்ளக் கூடாது.



கதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்

----------------------------------------------------------------------------------------------

உங்களுடைய கதைகளை உங்கள் பெயர், வலைத்தள முகவரி,உங்கள் தொடர்புஎண் குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு

25-11-2013 லிருந்து 25-12-2013 இரவு 12.00க்குள் அனுப்பவும்.

கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொதுவெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும். 


நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்படமாட்டாது
போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை வெளியிடக்கூடாது. 

கதைகள் http://vettibloggers.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்



நடுவர்கள்

முதல் சுற்று நடுவர்கள்

கே.ஆர்.பி.செந்தில்
செங்கோவி
உணவுஉலகம் சங்கரலிங்கம்
மயிலன்
சிவக்குமார்
செல்வின்
தமிழ்வாசி
சங்கவி(சங்கமேஸ்வரன்)
வீடு.சுரேஷ்குமார்
முத்தரசு
ஆருர் மூனா செந்தில்


இரண்டாம் சுற்று நடுவர்கள்

பிச்சைக்காரன் (சாரு வாசகர் வட்டம்)
ராஜராஜேந்திரன் (சாரு வாசகர் வட்டம்)
செல்வேந்திரன்(விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)


மூன்றாம் சுற்று நடுவர்கள்

வாமுகோமு (எழுத்தாளர்)
வா.மணிகண்டன் (எழுத்தாளர்)
அதிஷா (புதியதலைமுறை நிருபர் வலைப்பதிவர்)



ஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com என்ற முகவரிக்கு மடல் வரைக.
source: vettiblogger
மேலும் வாசிக்க... "வலைப்பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி, முதல் பரிசு ரூபாய் 5000!"



அனைவரையும் கூடி கும்மியடிக்க அன்புடன் அழைக்கின்றோம்!!!

வணக்கம் வலை நண்பர்களே,

நாம் அனைவரும் ஒன்று கூடி நமது நட்புறவை மேலும் வளர்க்க, முகமறியா பதிவர்களுக்கு ஒரு பாலமாக, கருத்துக்களை பரிமாற்றிக் கொள்ளும் மேடையாக  உள்ள பதிவர் திருவிழா வருகிற செப்டம்பர் முதல் தேதி(01-09-2013) சென்னை - இசைக் கலைஞர்கள் சங்க மகாலில் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான நிகழ்ச்சிநிரல் மற்றும் அழைப்பிதழ் தயாராகி உள்ளது. பதிவுலக நண்பர்கள் அனைவரையும், தவறாது கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துத் தரும்படி இந்த அழைப்பிதழ் மூலமாக அழைக்கின்றோம்.
மேலும் வாசிக்க... "அனைவரையும் கூடி கும்மியடிக்க அன்புடன் அழைக்கின்றோம்!!!"



தல, சட்டுபுட்டுன்னு ஒரு முடிவைச் சொல்லுங்கையா!!

 
வணக்கம் வலை நண்பர்களே,

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவர்கள் திருவிழா (மாநாடு/சந்திப்பு) கோலாகலமாக நடந்தது. பல பகுதிகளில் இருந்தும் பதிவர்கள் சங்கமித்து ஒருங்கிணைந்து மிக சிறப்பாக நடைபெற்றது. அது போலவே இந்த ஆண்டும்  பதிவர் திருவிழா வரும் செப்டம்பர் முதல் தேதி (01-09-2013 - ஞாயிற்றுகிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டு சென்னை நண்பர்களால் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


சந்திப்பு நடைபெறும் இடம்:
சென்னை வடபழனியில் கமலா தியேட்டரை ஒட்டி இடதுபுரத்தில் இருக்கும் “CINE MUSICIAN’S UNION” க்கு சொந்த மான கட்டடம்.

 மதுரை, நெல்லையை சுற்றியுள்ள பதிவர்கள் இந்த பதிவர் விழாவில் கலந்து கொள்ள ஆர்வமிருப்போர் என்னைத் தொடர்பு கொண்டு, தங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள். முதல் நாளே சென்னை வருபவர்கள், அந்த தகவல்களையும் சேர்த்து சொல்லுங்கள். அப்பொழுது தான் அவர்களுக்கு  தங்கும் வசதி ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும்.


எனது மின்னஞ்சல்: thaiprakash1@gmail.com
மொபைல்: 9080780981

தீதும் நன்றும் பிறர் தர வாரா வலைபதிவர் ரமணி ஐயாவிடமும் தங்கள் வருகையை உறுதிப்படுத்தலாம்.
மின்னஞ்சல்: svramani08@gmail.com
மொபைல்: 9344109558

பதிவர்கள் தெரிவிக்க வேண்டிய விபரங்கள்:
1. வலைப்பூ பெயர், முகவரி ( blog name & blog url address)
2. தொடர்பு மின்னஞ்சல் முகவரி,
3. தொலைபேசி எண்,
4. ஊர் பெயர்,
5. முதல் நாள் வருகையா என்ற விபரம்.

நண்பர்களே, விரைந்து தங்கள் வருகையை உறுதி செய்யுங்கள். உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். 

பதிவர் விழா பற்றிய விபரங்கள்அடங்கிய அழைப்பிதழ் விரைவில் வெளியிடப்படும். 

விழா குழு பற்றிய விபரங்கள் அறிய இங்கே கிளிக்கவும்.


தென்னகத்தில் இருந்து கிளம்பும் பதிவர்கள்:
உணவுலகம் சங்கரலிங்கம் ஆபீசர்.
ரமணி ஐயா,
மதுரை சரவணன்,
தருமி ஐயா,
சிவகாசிகாரன் ராம் குமார்,
சதீஷ் செல்லத்துரை,
தமிழ்வாசி பிரகாஷ்,
ஜோக்காளி பகவான்ஜி,
கடற்கரை விஜயன் துரைராஜ்,
மணிவண்ணன்.
 
பதிவர் சந்திப்பு எப்படி இருக்கும்?
சென்ற ஆண்டு சந்திப்பின் போது பதிவர்களின் அறிமுகம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டு , பதிவர்களின் கவியரங்கம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்தததைப் போலவே இவ்வருடமும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த வருடம் பதிவர்களின் அறிமுகம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என அடிப்படை நிகழ்வுகளோடு பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்வுதனை வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பதிவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சி
ஒரு வலைப்பதிவராக மட்டும் நாம் அறியும் பதிவரின் இதர திறமைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில பதிவர்கள் தங்களின் திறமையை நிறைய மேடைகளில் வெளிப்படுத்தி வரலாம்.சில பதிவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்த மேடைகள் இல்லாமல் இருக்கலாம்.எனவே பதிவர்களின் மற்ற திறமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கோடு இந்நிகழ்ச்சி ஏற்பாடு ஆகி வருகிறது.அதாவது பாடும் திறமை, நடிக்கும் திறமை, நடனம் ஆடும் திறமை, பல குரலில் பேசி அசத்தும் திறமை, பதிவர்கள் ஒரு குழுவாக சிறு நாடகம் அமைப்பது என பதிவர்கள், தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருத்தல் நலம்.


இதில் பங்கேற்கும் பதிவர்கள் தங்கள் விபரங்களை 9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நூல் வெளியீடு:
கடந்த ஆண்டு நடந்த பதிவர் சந்திப்பில் பதிவர் சசிகலா அவர்களின் 'தென்றலின் கனவு' கவிதை நூல் வெளியிடப்பட்டது.அதே போல் இந்த வருடமும் பதிவர்கள் தங்களின் நூலை இந்த நிகழ்வில் வெளியிடலாம். 
 
அவ்வாறு நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் 9894124021 இந்த எண்ணிலோ அல்லது kavimadhumathi@gmail.com இந்த மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். குறிப்பிட்ட தேதிக்குள் சொன்னால் மட்டுமே நிரலில் அது சேர்க்கப்படும் என்பதை சொல்லிக்கொள்கிறோம்.

(கோவை பதிவர் அன்பு நண்பர் சங்கவி அவர்களின் கவிதை நூல் வெளியிடுவது மட்டும் உறுதியாகியிருக்கிறது)
வருகைப் பதிவு:
கடந்த முறை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள், முறையாக தங்களின் வருகையை மின்னஞ்சல் வாயிலாக உறுதி படுத்திய பின்னரே வருகை தருவோரின் பட்டியலில் அவர்களின் பெயரை இணைத்துக்கொண்டோம். அதைப் போலவே இந்த முறையும் பதிவர்கள் தங்களின் வருகையை தயவு கூர்ந்து மின்னஞ்சலில் உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.கடந்த முறை பதிவு செய்தவர்கள் தவிர நிறைய பதிவர்கள் சந்திப்பிற்கு வந்ததால் அவர்களை சரியான முறையில் உபசரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.எனவே வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள். உணவு மற்றும் உபசரிப்பு போன்றவை வருகைப் பதிவு செய்த பதிவர்களை வைத்தே தீர்மானிக்கப் படுவதால் தங்களின் வருகையை அவசியம் மின்னஞ்சல் வாயிலாக உறுதிபடுத்தவும்.

தமிழ்வாசி பிரகாஷ்: thaiprakash1@gmail.com
ரமணி ஐயா: svramani08@gmail.com
நன்கொடை:
இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது.சென்றமுறை மக்கள் சந்தை கொஞ்சம் உதவியது.இந்த முறை அப்படியேதும் வாய்ப்பு இல்லை என்றேத் தெரிகிறது.. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பதிவர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.. பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்து தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.
 

 
மேலும் வாசிக்க... "தல, சட்டுபுட்டுன்னு ஒரு முடிவைச் சொல்லுங்கையா!!"



இன்ஸ்டன்ட் போஸ்ட்..., மேட்டர் வேணுமா?!!!!


நம்ம பிளாக்கில் நெனச்ச உடனே ஒரு போஸ்ட் போடணும்னு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்தா என்ன எழுதறதுன்னு தெரியாம முழிக்கறிங்களா? மேட்டர் கிடைக்காம அலையற உங்களுக்கு உடனே மேட்டர் வேணுமா? மேல.. சாரி.. கீழ படியுங்க...

மேலும் வாசிக்க... "இன்ஸ்டன்ட் போஸ்ட்..., மேட்டர் வேணுமா?!!!!"



சென்னை தமிழ்ப் பதிவர் விழாவின் பரபரப்பான நிகழ்வுகள், "ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா"

வணக்கம் பதிவுலக நண்பர்களே,
    எல்லா(கலந்துகிட்ட, கலந்துக்காத ஹி..ஹி..) பதிவர்களுமே "ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா" அப்படின்னு நேத்து(26-08-2012) ஈவ்னிங் பெருமூச்சு விட்டிருப்பிங்க. அதுக்கு காரணம், போன வாரம் பதிவுலகில் நடந்த பரபர விசயங்கள். இதனால பதிவுலகமே ரொம்பவே கிர்ராகி இருந்துச்சு. ஆனா அந்த கிர் நேத்து தூள் தூளாகி போச்சு. ஆமாங்க, இந்த சென்னையில் நடந்த தமிழ் பதிவர் சந்திப்பு மாபெரும் ஹிட் ஆகிருச்சு. இதுல டவுட்டே இல்லை என்பதை பதிவுலக நண்பர்களின் வருகைகளும், பதிவுகளும், கமெண்ட்ஸ்களும் நிருபிச்சிருச்சு.  

          இந்த பதிவர் சந்திப்பு வெற்றிக்கரமா நடந்து முடிஞ்சதுல நம்ம "மது"வுக்கு பெரும் பங்கு இருக்கு. அதே போல இந்த சந்திப்பு நடக்க விதை இட்ட புலவர் ராமானுசம் ஐயா, பதிவுலக அஜித் சென்னைபித்தன் ஐயா, மின்னல் கணேஷ் சார், தென்றல் சசிகலா ஆகியோருக்கும் பெரும் பங்கு இருக்கு. இவர்களுக்கு உறுதுணையா விழாவை சக்சஸ் ஆக்குனதுல சிவா, பிரபா, ஆரூர் மூனா, அஞ்சா சிங்கம், கேபிள் சார், ஜெய், மோகன் குமார், கருண், சௌந்தர், சீனு,  அரசன், கசாலி, சிராஜ், (இன்னும் சிலரின் பேரு மறந்திருச்சு) ஆகியோர்களுக்கு ரொம்பவே பங்கு இருக்கு.. மேடை அலங்காரம், மைக்செட், உணவு, டீ, காபி, ஸ்நாக்ஸ், பேனர்ஸ், புக் ஸ்டால், கேமரா, வீடியோ என அனைத்திலும் பங்கு பெற்ற நண்பர்களுக்கு இதயங்கனிந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

      அப்புறமா முக்கியமா, வலையகம் திரட்டி இவ்விழாவை ரொம்பவே சூப்பரா நேரடி ஒளிபரப்பு செஞ்சாங்க (நேரடி ஒளிபரப்பு பார்த்த நிறைய பேர் பாராட்டி பதிவு போட்டிருக்கிங்க, நன்றி). 

காலை நடந்தது என்ன?
"பத்து மணி அளவில மதுமதியால் கடவுள் வாழ்த்து மூலம் ஆரம்பித்து விழாவின் நிகழ்ச்சிகளை தொகுக்க, மோகன்குமார் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்த, செல்வி தூயா குறிப்புரை மூலம் திரு. சென்னைபித்தன் ஐயா விழா தலைமை ஏற்க, சௌந்தர் குறிப்புரை மூலம் புலவர். ராமானுசம் ஐயா முன்னிலை வகிக்க, என்னுடைய குறிப்புரை மூலம் வலைச்சரம் சீனா ஐயா'வும் முன்னிலை வகிக்க, கேபிள், சிபி, சங்கவி, சிராஜ் அவர்களின் வர்ணனைகளுடன் ஒவ்வொரு பதிவர்களும் தங்களைப் பற்றிய சிறு குறிப்பு ஆற்ற,
... ஹி..ஹி..." அப்புறமென்ன மதிய நேரம் வந்திருச்சு. 

மதிய உணவு வெஜ் தான். ரொம்பவே டேஸ்டா இருந்துச்சு. சமையல் பதிவருக்கு நன்றி.

மதியம் நடந்தது என்ன?
"திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் தலைமை வகிக்க, மின்னல் கணேஷ் வரவேற்புரை ஆற்ற, சாப்பாடு உண்ட களைப்பில் பதிவர்கள் அமர்ந்த வாறே தூங்கி வழிய, அவர்களை சுரேகா கையை தட்டுங்க, கையை தட்டுங்க என எழுப்பி சுவாரஸ்யமாய் நிகழ்ச்சியை தொகுக்க, நண்டு நொரண்டு குறிப்புரை ஆற்ற, மூத்த பதிவர்கள் பாராட்டு பெற, சசிகலாவின் "தென்றலின் கனவு" கவிதை நூலை பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் வெளியிட, சேட்டைக்காரன் நூலைப் பெற்றிட, நூலின் நாயகி சசிகலா ஏற்புரை வழங்க,
....ஹி...ஹி... " அப்புறமென்ன மாலை நேரம் வந்திருச்சு.

மாலை நடந்தது என்ன?
பட்டுக்கோட்டை பிரபாகர், புலவர். ராமானுசம், ரமணி ஐயா அவர்கள் முன்னிலையில் கவியரங்கம் ஆரம்பிக்க, அவ்வப்போது சுரேகா கவரும் வர்ணனைகளுடன் பதிவர்கள் கவிதைகளை முழங்க, கசாலி நன்றியுரை ஆற்ற...
.....ஹி..ஹி... அப்புறமென்ன விழா வெற்றியுடன் முடிஞ்சுச்சு...

ரொம்ப  சுருக்கமா சந்திப்பு பத்தி பதிவைமுடிச்சுட்டேனா?போதுங்க...

அடுத்த  பதிவாக, 
பதிவர்களின் கலகலப்பு, கலாய்ப்பு, கிசுகிசு, சீக்ரெட் வர இருக்குங்கோ....


ஹி...ஹி... ஈரோடு, நெல்லை பதிவர் சந்திப்புக்கு தொடர் பதிவு போட்டு தேத்து தேத்துன்னு பதிவை தேத்துனோம்ல. அந்த பதிவுகளின் லிங்க் கீழே உங்கள் பார்வைக்கு.
நெல்லையில்  உணவுலகம் சங்கரலிங்கம் ஆபீசர் வீட்டு கல்யாணத்தில்:
நெல்லையை கலக்க போகும் பதிவர்கள்! அலப்பறை ஸ்டார்ட்
நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பாகம் 1
நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 2
நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 3

ஈரோட்டில் நடந்த பதிவர் சந்திப்பில்:
ஈரோடு சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...
ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...
ஈரோடு பதிவர் சங்கமம்: நிகழ்ச்சி தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அய்யா பேசியது என்ன?

குறையொன்றுமில்லை லக்ஷ்மி அம்மாவுடன் மினி சந்திப்பில்:
மதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - 1
மதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - இரண்டு

நெல்லையில்  நடந்த பதிவர் சந்திப்பில்:
நெல்லையில் பதிவர்களின் சந்திப்பு! சந்தோஷ பகிர்வுகள் (பாகம் 1)
நெல்லையில் பதிவர்களின் சந்திப்பு! இனிமையான பகிர்வுகள் (பாகம் 2)
நெல்லைக்கு பதிவர்கள் பயணமும், சதி செய்த அரசு பேருந்தும்....

 மேற்கண்ட லிங்க்-களை தனிப் பதிவாகவே போட்டிருக்கலாமோ?
மேலும் வாசிக்க... "சென்னை தமிழ்ப் பதிவர் விழாவின் பரபரப்பான நிகழ்வுகள், "ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா" "



உலக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - நேரலை, TAMIL BLOGGERS MEET LIVE FROM CHENNAI

வணக்கம் பதிவுலமே,
இதோ நாம் எல்லோரும் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்த உலக தமிழ் வலைப்பதிவர்கள் விழா இனிதே ஆரம்பித்துள்ளது. முகமறியா ஆருயிர் நண்பர்கள், சமூக பதிவாளர்கள், நகைச்சுவை பதிவாளர்கள், இலக்கிய பதிவாளர்கள், அரசியல் பதிவாளர்கள்(பதிவுலக அரசியலை சொல்லவில்லை), என தங்களின் மனங் கவர்ந்த பதிவர்கள் இங்கே விழா அரங்கில் உள்ளார்கள். அவர்களின் உரை, கவியரங்கம், மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை இங்கே கீழே பகிர்ந்துள்ள காணொளியில் பார்த்து மகிழுங்கள்.
இங்கே கீழே இருக்கும் காணொளியில் ப்ளே பட்டனை அழுத்துவதன் மூலம் பதிவர் சந்திப்பினை நேரலையாக கண்டு மகிழலாம் நண்பர்களே...!


Sheduled post.,
மேலும் வாசிக்க... "உலக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - நேரலை, TAMIL BLOGGERS MEET LIVE FROM CHENNAI"



சென்னை பதிவர் விழாவுக்கு வர இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கும் பதிவர்கள்?!

வணக்கம் நண்பர்களே,
வருகிற (26-08-2012) ஞாயிறு காலை ஒன்பது முப்பது மணியளவில் சென்னையில் பதிவர் விழா நடைபெற இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த பதிவர் விழாவில் இணைய இதுவரை நிறைய பதிவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளார்கள். இவ்விழாவில் வயதில் மூத்த பதிவர்களுக்கு பாராட்டும் நடைபெற உள்ளது. இவ்விழா இனிதே நடைபெற நமது நண்பர்கள் தமது வேலைகளுக்கும் மத்தியில் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றிகள்!
மேலும் வாசிக்க... "சென்னை பதிவர் விழாவுக்கு வர இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கும் பதிவர்கள்?!"



வலைப்பதிவர்களே, வலைப்பூ மூலம் சம்பாதிக்க விருப்பமா? சென்னைக்கு வாங்க!

வணக்கம் வலை நண்பர்களே,
நமது வலை நண்பர்கள், உலகில் உள்ள ஏனைய தமிழ் வலைப்பதிவர்களுடன் இணைந்து ஒரு மாபெரும் வலைபதிவர்கள் சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு வரும் 26-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் மூலம் முகமறியா நண்பர்கள் முகமறிந்து மகிழ உள்ளார்கள். காலை முதல் மாலை வரை இடைவிடாமல் நடக்கும் இந்த மாபெரும் விழாவின் அழைப்பிதழை இங்கே இணைத்துள்ளேன். 

இந்த அழைப்பினை ஏற்று அனைத்து வலை நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். இனி வருகை தர முடிவெடுத்துள்ள நண்பர்கள், வருகையை கீழ்க்கண்ட நண்பர்களிடம் தெரிவித்து தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தோழர் மதுமதி (98941 24021),
மின்னல் வரிகள் கணேஷ் (7305836166),
மெட்ராஸ்பவன் சிவா (9841611301), 
சென்னைப்பித்தன் (9444512938), 
புலவர் சா. இராமாநுசம் (9094766822),
தென்றல் சசிகலா (9941061575)
 வெளியூரிலிருந்து வரும் நண்பர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய மிக ஏதுவாக இருக்கும்.


இந்த விழாவில் நீங்கள் பங்கு பெறுவதன் மூலம் அறியாத விஷயங்கள் சிலவற்றை அறிந்து கொள்ள இருக்கிறீர்கள். அதாவது இன்றைய காலத்தில் ஆங்கில வலைப்பூக்கள் மூலமாகவே விளம்பரம் வைத்து சம்பாதிக்கும் முறை உள்ளது. இம்முறை தமிழுக்கோ, இந்திய மொழிகளுக்கோ இல்லை. ஆனால் மக்கள் சந்தை டாட் காம் நிறுவனத்தினர் தமிழ் மொழி வலைப்பூவில் எவ்வாறு விளம்பரம் அமைத்து சம்பாதிப்பது என்ற வழிமுறையை நமக்கு தெரியப்படுத்த இருக்கிறார்கள். ஆகவே, நண்பர்களே, சென்னை பதிவர்கள் விழாவுடன் இணைந்திருங்கள்.

நன்றி,
பதிவர் விழாக் குழுவினர் சார்பாக, தமிழ்வாசி பிரகாஷ்.
மேலும் வாசிக்க... "வலைப்பதிவர்களே, வலைப்பூ மூலம் சம்பாதிக்க விருப்பமா? சென்னைக்கு வாங்க!"



பதிவுலகிலிருந்து சற்று ஓய்வு பெறப் போகிறேன் - 500-வது பதிவு (500TH POST)

வணக்கம் நண்பர்களே,

இந்த பதிவு நமது தமிழ்வாசியின் 500-வது பதிவு. இதுக்கெல்லாம் ஒரு  பதிவா என நீங்கள் நினைக்கறீர்களா? ஆம்... சில விசயங்களை குறிப்பிட்டு சொன்னால் அதற்கு தனி சிறப்பு தான். என்ன சில விஷயங்கள் என கேட்கறீர்களா? இதோ பார்ப்போமே....!!!

தமிழ்வாசி பெயர்க் காரணம்:
தமிழ்வாசி என்ற பெயரை எப்படி தேர்ந்தெடுத்திங்க என நிறைய நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சொல்லிய விளக்கத்தை உங்களுக்கும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். 2010ம் வருட ஆரம்பத்தில் "என் தமிழ்ப் பதிவு" என்ற பெயரில் ஒரு வலைப்பூ ஆரம்பித்து என்ன எழுதுவது என தெரியாமலே நாளிதழ்களில் வரும் செய்திகளை இரண்டு மாதங்கள் வரை ஏதோ என பகிர்ந்து கொண்டிருந்தேன். யாராச்சும் வாசிப்பாங்களா? என வலைப்பூவை ரெப்ரெஷ் செய்து செய்து பார்ப்பேன். ம்ஹும்... பக்க எண்ணிக்கைகளை பார்த்தால் நான் ரெப்ரெஷ் செய்த எண்ணிக்கைகளையே காட்டும். ஹி..ஹி... என்ன செய்ய? 

அப்படி காற்று வாங்கிக் கொண்டிருந்த என் வலைப்பூவில் திடீரென புதிய பதிவுகள் எழுதும் பக்கம் பிழை (ERROR) ஆனது. டெம்ப்ளேட்டில் என்ன மாற்றம் செய்தேன் என தெரியவில்லை. அந்த பக்கம் சரியாக திறக்கவில்லை. நானும் எப்படியாவது சரி செய்ய  வேண்டும் என இணையத்தில் தேடினால் ஒரு வழியும் புலப்படவில்லை. பிறகு ஓரிரு மாதங்கள் வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இணையத்தில் ஏதேதோ மேய்ந்து கொண்டிருந்தேன். ஒரு நாள் அந்த வலைப்பூவில் என்ன தவறு செய்தோம், என என்னையே விசாரித்துக் கொண்டு இருந்தேன். அப்போது ஒன்றை அறிந்தேன். இனி புதிதாக ஒரு வலைப்பூ ஆரம்பிப்போம். அதன் டெம்ப்ளேட்-ஐ விவரம் தெரியாமல் திருத்தக் கூடாது என எனக்குள் ஒரு உறுதி எடுத்துக் கொண்டு வலைப்பூவுக்கு நல்ல பெயரை தேர்ந்தெடுக்க விரும்பினேன். 

ஆனால் தமிழ் என்ற சொல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என விரும்பி அதையொட்டியே சில பெயர்களை இணையத்தில் தேடினால் அவை அனைத்தும் வலைதளங்களாகவெ இருந்தது. அப்போது தமிழ் என்பதை விடுத்தது வசிக்கிற ஊர் பெயரை மையமாக வைத்து சில பெயர்களை யோசித்துப் பார்த்தேன். அப்போது மதுரைக்காரன், என் மதுரை... இப்படி யோசித்து மதுரை வாசி என கடைசியில் முடிவு செய்தேன். அப்போது "வாசி" என்பதற்கு வாசித்தல் என்றும், வசித்தல் என்றும் இரு பொருள்கள் வருவதை கண்டு தமிழுடன் பொருத்தி தமிழ்வாசி என இணையத்தில் தேடியபொழுது இணையதளமா, வலைப்பூவோ இல்லை என அறிந்து அப்பெயரையே தேர்வு செய்தேன்.

"தமிழ்வாசி" தமிழகத்தில் வசிப்பவன் என்றும், தமிழை வாசிப்பவன் என்று இரு பொருள்களில் அமையும். சரி வலைப்பூ பெயர் வைத்தாயிற்று. அடுத்து பதிவுகள் எழுத வேண்டுமே, என்ன செய்வது என அறியாமலே சில தளங்களில் பகிர்ந்த பதிவுகளை எடுத்து (அவர்கள் அனுமதி பெறாமலே) எனது வலைப்பூவில் பகிர்ந்தேன். ஆனால் அவ்வாறு செய்யக் கூடாது என அறிந்ததும் என்னைத் திருத்திக் கொண்டேன். 
(வாசிக்க போரடிக்கிறதா... ஹி..ஹி...)

தமிழ்வாசி பெற்றுத் தந்த நண்பர்கள்:
இணையத்தில் வாசிக்க வந்த காலத்தில் இருந்தே தொழில்நுட்ப தளங்களை அதிகமாக வாசித்து வருவதால் பல்சுவை பதிவுகளுடன் தொழில்நுட்பங்கள் பற்றியும் பதிவிட ஆரம்பித்தேன். இதனால் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அதோடு மட்டுமில்லாமல் எனக்கு தெரிந்த நுட்பங்களை பிறருக்கும் சொல்லிக் கொடுத்துள்ளேன். நிறைய நண்பர்களின் வலைப்பூவின் தோற்றத்தை அமைத்துக் கொடுத்துள்ளேன். அவர்கள் மனம் மகிழும் போது எனக்கும் சந்தோஷம் தான்... தொழில்நுட்பத்திற்கு என தனியாக இணையப்பூங்கா என வலைப்பூ வேறு தொடங்கினேன். அதிலும் தற்சமயம் தொடர இயலவில்லை

இந்த பதிவுலகம் மூலமாக நான் நிறைய நண்பர்களைப் பெற்றுள்ளேன். இன்னும் பெற்றுக் கொண்டு தான் இருக்கிறேன். இந்தப் பதிவுலகில் நான் எழுத வந்து பெற்ற பயன்கள் என்றால் எனது நண்பர்கள், நண்பர்கள், நண்பர்கள்... தான். என்னைப் பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும் என் எண்ணம் என்னவென்று? "எனக்கு எல்லோரும் வேண்டும். யாரும் பகையாளியாய் இருக்கக் கூடாது என" இந்த வரியை சில சமயம் எனது நண்பர்களிடம் அதிகமாக சொல்லி இருக்கிறேன். ஏனெனில் இவ்வாறு சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் சில சமயம் வந்துள்ளது. அந்த சில சந்தர்ப்பத்திற்காக இப்போதும் திரும்ப சொல்கிறேன்,"எனக்கு எல்லோரும் வேண்டும். யாரும் பகையாளியாய் இருக்கக் கூடாது என"
(வாசிக்க போரடிக்கிறதா... ஹி..ஹி...)

பதிவுலக ஓய்வு பற்றி:
சரி, நண்பர்களே... தலைப்பில் சற்று ஓய்வு பெறப் போகிறேன் என போட்டுள்ளேன். ஆமாம்... தொடர்ந்து என்னால் இடுகைகள் எழுத முடியவில்லை. காரணம், சொந்த வேலைகள் சில தலைக்கு மேலே உள்ளது. அதற்காக நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது. சில மாதங்களாகவே, பதிவுலகில் ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. அப்புறம் சில நேரம் பதிவெழுத நேரம் கிடைத்ததால் சில பதிவுகள் எழுதி வந்தேன். ஆனாலும் சொந்த வேலைகளுக்கு கண்டிப்பாக நேரம் தேவை என்ற சமயம் இப்போது வந்து விட்டதால் இந்த ஓய்வு முடிவு... பதிவுலகில் ஓய்வு என்றாலும் எனது நண்பர்களை மறந்துவிட மாட்டேன். கண்டிப்பாக தொடர்பில் இருப்பேன். அவர்களின் பதிவுகளை நேரம் கிடைக்கையில் கண்டிப்பாக வாசிப்பேன்... 

வலைச்சரத்தில் நான் ஆசிரியர் குழுவில் இருப்பதால் அதில் மட்டும் இணைந்திருக்கலாம் என முடிவெடுத்துள்ளேன். ஏனெனில் சில சமயம் மட்டுமே அதில் பொறுப்புகள் வரும். ஆகையால் அந்த பொறுப்பை கவனிக்க முடியும் என நினைக்கிறேன். 

எனது வேலைகள் நல்ல படியாக முடிந்த பின் மீண்டும் பதிவுலகம் பக்கம் வருவேன். எப்போது வருவேன் என உறுதியாக சொல்ல முடியவில்லை. 

மெக்கானிக்கல் நண்பர்களுக்காக ஒரு தொழில்நுட்ப தொடர் எழுதி பாதியில் நிறுத்தியுள்ளேன். என்றைக்காவது நேரம் கிடைக்கையில் அந்த தொடரை மட்டும் எழுதலாம் என நினைத்துள்ளேன். முடியுமா என தெரியவில்லை. பார்ப்போம் முடியுமா என?
(வாசிக்க போரடிக்கிறதா... ஹி..ஹி...)

ஐநூறாவது பதிவு பற்றி:
நண்பர்களே, தலைப்பில் 500வது பதிவு என போட்டுள்ளேன். ஆம்... இந்த பதிவு என் வலைப்பூவில் வெளியாகும் 500வது பதிவாகும். எப்படியோ சில காப்பி/பேஸ்ட் பதிவுகளையும் ( உண்மையை ஒத்துக்கனும்ல) உள்ளடக்கி ஐநூறை தொட்டாச்சு. இதுவரை என்னைத் தொடர்ந்து வந்த நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். நான் பதிவிட்ட ஒர்த் இல்லாத/ ஏதோ கொஞ்சம் ஒர்த்தான(ஹி..ஹி..) பதிவுகளையும் வாசித்து மெனக்கட்டு கமென்ட் எழுதிய நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். 


தமிழ்வாசி இதுவரை:
மொத்த பதிவுகள்: 500


மொத்த கருத்துரைகள்: 10371 (இந்த பதிவு பதிவிடுவதற்கு முன்)


மொத்தம் பக்கப் பார்வைகள்:(இந்த பதிவு பதிவிடுவதற்கு முன்)


மொத்தம் தொடர்பவர்கள்: 571


அலாஸ்கா மற்றும் இண்டி பிளாக்கரில்:
 


தொடர்புக்கு: 
முகநூல்:https://www.facebook.com/sprakashkumar


முகநூல் குழுமம்:https://www.facebook.com/groups/tamilvaasi/


ட்விட்டர்:https://twitter.com/#!/tamilvaasi


மொபைல் எண்: 9894567375

(வாசிக்க போரடிக்கிறதா... ஹி..ஹி...) என அடிக்கடி மேலே எழுதினேனே, அதற்கு காரணம் பதிவு கொஞ்சம் நீளமா இருக்குல அதான்... அடுத்து எப்போ எழுதப் போறோம்னு தெரியலைல. அதான் கொஞ்சம் நீளமா எழுதிட்டேன்.

நல்லதொரு நாளில் புதிய பதிவின் வழியாக உங்களை சந்திக்கும் வரை என்றும் நன்றியுடன் தமிழ்வாசி பிரகாஷ்.
மேலும் வாசிக்க... "பதிவுலகிலிருந்து சற்று ஓய்வு பெறப் போகிறேன் - 500-வது பதிவு (500TH POST)"



கண்டேன் செங்கோவியை! ப்யூர் பதிவர் சந்திப்பு!

ரெண்டு மாசத்துக்கு முன் நண்பர் செங்கோவி கிட்ட இருந்து ஒரு மெயில் வந்துச்சு, இந்தியாவுக்கு வர்றேன்யா அப்படின்னு. வாங்க,,,, மாம்ஸ் வாங்க, ரொம்ப சந்தோசம், மீட் பண்ணுவோம் சீக்க்ரமா'ன்னு ரிப்ளை அனுப்பினேன். அப்ப இருந்து செங்கோவி எப்படி இருப்பார்னு ஒரே யோசனையா இருந்துச்சு. ஹன்சி, பத்மினி ரசிகரா இருக்காரே, நல்லா கலரா செம ஹான்ட்சம்மா இருப்பாரா? இல்ல, கருப்பா? இருப்பாரான்னு டவுட் மாறி டவுட் வந்துச்சு.

அவரும் இந்தியா வந்ததும் டெய்லியும் போன் செஞ்சு எப்ப பிரகாஷ் பிரீயா இருப்பிங்க? மீட் பண்ணனும்னு கேட்க, மாம்ஸ், நீங்க எப்ப பிரீயா இருபிங்கன்னு நானும் கேட்க? சரிய்யா, குவைத் போறதுக்கு முந்தின வாரம் மீட் பண்ணலாம்னு ஓரு வழியா முடிவு செஞ்சோம். சும்மாவே கூகிள் வாய்ஸ் சாட்ல மணிக்கணக்கா பேசுவோம்.  இப்ப போன்லையும் தெனமும் அரட்டை தான். பிளைட் விட்டு இறங்கியதுல இருந்து மாமனார் வீட்டுல செம கவனிப்பாம். ஆடு, கோழி, மீன் என ஒரே நான்வெஜ் அயிட்டமா வயிறு முட்ட சாப்பிடுவதாக சொன்னார். சரிய்யா, மாமனார் வீடுன்னா சும்மாவா, என்ஜாய் பண்ணுங்கன்னு சொன்னேன்.

ஒருவழியா எங்க ரெண்ட பேருக்கும் ஒரு நாள் ஈவினிங் டைம் கெடச்சுசு. பெரியார் பஸ்ஸ்டாண்டுக்கு ஆறு மணிக்கு வந்திருவேன்னு சொன்னார். வாங்க மாம்ஸ் நானும் கரெக்டா வந்திருவேன்னு சொல்லிட்டேன். ஆனா நான் கம்பெனியில இருந்து வீட்டுக்கு வந்து சேரவே ஆறு மணியாச்சு. அடாடா, செங்கோவி வந்திருவாரேன்னு நெனைக்க அவர் கிட்ட இருந்து போன், பெரியார் வந்துட்டேன் எங்க வெயிட் பண்ண என கேட்க, பர்மா பஜார் பக்கத்துல சர்ச்க்கு முன்னாடி வெயிட் பண்ணுங்கன்னு சொன்னேன். நானும் ரெப்ரெஷ் பண்ணிட்டு ஜங்சன் பக்கத்துல தங்கரீகல் தியேட்டர் பக்கத்துல பைக் பார்க் பண்றப்போ மணி ஆறு முப்பது. செங்கோவிக்கு போன் பண்ண மொபைலை எடுக்க அவரே கூப்பிட்டார். இதோ நீங்க நிக்கிற இடத்துக்கு பக்கத்துல வந்துட்டேன்னு சொல்ல ஒரு உருவம் என்னைப் பார்த்து கை அசைத்தது. ஆகா, கண்டேன் செங்கோவியை என மனசுக்குள் ஒரு சந்தோஷம். (நான் பதிவுலகிற்கு வந்து முதலில் எனக்கு நண்பரானவர் செங்கோவி. அப்போ அவரது பிளாக்கில் மன்மத லீலை தொடர் செம இன்ட்ரஸ்ட்டா போயிட்டு இருந்துச்சு. பிளாக்கிலும் கமென்ட் போட்டு, மெயில்லும் அனுப்பி அப்படியே சாட் செய்து நண்பரானோம். இப்போ இந்த நட்பு கதையை ஒத்தி வச்சுட்டு சந்திப்பு எப்படி இருந்துச்சுன்னு பார்ப்போம்) செங்கோவி எப்படி இருப்பார்னு கீழ இந்த போட்டோவை பாத்துக்கங்க.

இருவரும் பரஸ்பர விசாரிப்புக்கு பின், வெயிலுக்கு இதமா கரும்புச்சாறு சாப்டுட்டு பேசிட்டே பைக் இருக்குற இடத்துக்கு வந்தோம். செங்கோவி அங்க தங்கரீகல் தியேட்டரை பார்த்துட்டு, சிரிச்சார். என்ன மாம்ஸ், தியேட்டரை பார்த்து சிரிக்கறிங்க'ன்னு கேட்க, அதுவாயா, நான் காலேஜ் படிக்கிறப்போ இங்க தான்யா படங்கள் பாப்போம்ன்னு சொன்னார். அதாவது அப்போ தங்கரீகல் சகிலா நடிகையின் தியேட்டராக இருந்துச்சாம். இப்போ அப்படியே டோட்டலா மாறி நல்ல படங்கள் போடறாங்களேன்னு ஆச்சர்யப்பட்டார். தியேட்டர் நல்ல படத்துக்கு மாறி ஏழெட்டு வருஷமாச்சு என சொன்னேன். சரிய்யா, நல்லது நடந்தா சரிதான்யா... அப்படின்னு சொல்லிட்டே ஏதோ கடையை தேடினார். மாம்ஸ், என்ன கடையை தேடுறிங்க'ன்னு கேட்க, இங்க தியேட்டருக்கு பக்கத்துல ஒரு இலக்கிய புத்தக கடை இருந்துச்சே' என அவரின் பழைய ஞாபகத்தில் கிளறினார். இதோ இங்க இருக்குன்னு கடைக்கு கூட்டிட்டு போனேன். செங்கோவி கலகல காவியம் படைப்பவராச்சே, ஆனா உண்மையிலஇலக்கிய புழுவா இருக்காரே'ன்னு நினைச்சு ரொம்பவே ஆச்சர்யப்பட்டேன் (ஏன்னா அவரது பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும், அவரது எழுத்து பற்றி). 

புத்தக கடையில ஏதேதோ புத்தக பேரை சொல்லி செங்கோவி கேட்க கடைக்காரர் இல்லைன்னு தலையாட்டிட்டே வந்தார். அட, கடையில் இல்லாத புக்கா கேட்கறாறேன்னு  ராணிமங்கம்மாள் சத்திரத்தில் இருக்குற வேற புத்தக கடைக்கு கூட்டிட்டு போனேன். அங்கேயும் அவர் கேட்ட புத்தகங்கள் இல்லை, அப்புறம் அவரா ரேக்ல தேடி ரெண்டு மூணு புத்தகங்கள் வாங்கிகிட்டார். நம்மளையும் இலக்கிய ஆளா மாத்த பரிசா ஒரு புத்தகத்தை வாங்கித் தந்தார். ரொம்ப நன்றிங்கோ மாம்ஸ்.

புக் வாங்கிட்டு, சாப்பிட நல்ல வெஜிட்டேரியன் கடைக்கு போலாம்ன்னு சொன்னார். நான் அதிர்ச்சியாகி என்ன மாம்ஸ், அன்னைக்கு போன்ல நல்ல பிரியாணி கடையை சூஸ் பண்ணி வையுங்க, நாம மீட் பண்றப்ப போலாம்னு சொன்னிங்களே, அத நம்பி நாலஞ்சு கடையில பிரியாணி சாப்ட்டு ஒரு கடையை சூஸ் பண்ணி வச்சிருக்கேன், இப்படி பொசுக்குன்னு வெஜ் தான் வேணும்னு சொல்லிடிங்களே'ன்னு கேட்க, இந்தியா வந்ததுல இருந்து இப்ப வரைக்கும் மாமனார் வீட்டுல போதும் போதும்ங்ற அளவுக்கு நான்வெஜ் சாப்பாடுதான், நைட் தூங்குறப்போ கூட சாப்பிட்ட ஆடு, கோழி எல்லாம் வந்து மிரட்டுது. அதான், ஒரு சேஞ்சுக்கு வெஜ் சாப்பிடலாம்னு சொன்னேன்,ன்னு அவர் சொல்ல, டவுன்ஹால் ரோட்டில் இருக்குற மீனாட்சிபவன் ஹோட்டலுக்கு கூட்டீட்டு போனேன். ஆளுக்கு சப்பாத்தி, சில்லி பரோட்டா சாப்பிட்டே பேசிட்டு இருந்தோம். எனது பதிவுகள், அவரது பதிவுகள், எழுதும், எழுதிய தொடர்கள், நாட்டுநடப்பு பற்றி பேசினோம். 

அப்போ நாய்நக்ஸ் பத்தி ரொம்பவே விசாரிச்சார். (எந்த பதிவரா இருந்தாலும் நாயநக்ஸ் பத்தி ஒரு முன்னேச்சரிகையாவே பேசுறாங்க? அவர்கிட்ட அப்படி என்ன தான் இருக்கோ?) ரொம்ப விசாரிக்கறாரேன்னு நக்ஸ்க்கு போனை போட்டேன். செங்கோவியும் நானும் இருக்கோம்னு சொல்ல, அந்தாளு எந்த பார்ல என்னென்ன சரக்கு அடிச்சுட்டு இருக்கிங்கய்யா?ன்னு சட்டுன்னு கேட்டார். யோவ், அவர் கிட்ட போனை தரேன், நீங்களே கேளுங்க எங்க இருக்கோம்னு என சொல்லிட்டு செங்கோவி கிட்ட போனை தந்தேன். செங்கோவி எங்க இருக்கோம்னு சொல்ல, என்கிட்ட பேசனும்னு நக்ஸ் சொல்றார்னு என்கிட்ட போனை தந்தார். நான் ஹலோ, சொன்னது தான் மிச்சம், யோவ், ஏன்யா சரக்கடிக்கலன்னு கேட்க, செங்கோவிக்கு பழக்கம் இல்லையா, அதான் சாப்பிடலன்னு சொன்னேன். அதுக்கு நக்ஸ், தண்ணி அடிக்காதவரெல்லாம் ஒரு பதிவரா? இனிமே இந்த மாதிரி பச்சப் புள்ள பதிவருங்க கூட சேராதிங்கன்னு (பதிவர்களே நக்ஸிடம் கவனம் தேவை) சொல்ல, நான் நக்ஸ் அண்ணே, நாம அப்புறம் பேசுவோம்னு போனை கட் பண்ணிட்டேன்.

செங்கோவி புக்ஸ் வாங்குறப்போ அவருக்கு தெரியாம ஒரு போட்டோ எடுத்தேன். அதை அவர்கிட்ட காட்டி யாருன்னு கேட்டேன், அவரு யாரா இருக்கும்னு யோசிக்க ஆரம்பிச்சார். அட, நீங்க தான் அது. புக்ஸ் வாங்குறப்போ எடுத்தேன்னு சொன்னேன். அப்புறமா நல்லா உத்து பார்த்துட்டு அட ஆமாயா நான்தான்னு அசடு வழிஞ்சார். அப்புறமா சாபிட்டதுக்கு பில் பே பண்ணிட்டு கடைக்கு வெளியே வந்தோம். அங்க என் பைக்கை சுத்தி நாலஞ்சு லேடி கான்ஸ்டபிள்ஸ் நின்னுட்டு இருந்தாங்க. ஐயோ, நோ பார்க்கிங்ல நிறுத்திட்டோமான்னு வேகமா போனேன். ஆனா, அங்க பார்க்கிங்ன்னு தான் போட்டிருந்துச்சு. அப்புறம் ஏன் அங்க அவங்க நிக்கறாங்கன்னு யோசிச்சா, நான் அங்க நிறுத்தும் போது நிறைய பைக் இருந்துச்சு. இப்போ அந்த இடத்துல என்பைக் மட்டும் இருந்ததால கொஞ்சம் இடம் விலாசமா இருந்துச்சு. அதனால அங்க நின்னு அரட்டை அடிச்சிட்டு இருந்தாங்க போல.

செங்கோவியும் ஊருக்கு கிளம்பறேன்னு சொல்ல, அடுத்து எப்ப இந்தியா வருவிங்க?ன்னு கேட்டேன். அடுத்த வருசம்ன்னு சொன்னார். அப்போதாச்சும் ரெண்டு நாள் இங்க தங்குற மாதிரி பிளான் பண்ணிட்டு வாங்கன்னு சொன்னேன். அவரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் பஸ் ஏற்றி விட கூட்டிச் சென்றேன். அன்னைக்குன்னு பாத்து ரொம்ப ட்ராபிக், ட்ராபிக்ல ஊர்ந்து பஸ்ஸ்டாண்ட் போகவே அரை மணிநேரம் ஆச்சு. அவரை பஸ் ஏற்றி விட்டதுடன் எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டோமா என மனம் நினைத்தது. ஆனாலும் சாட்டில் எப்பவேணாலும் பேசிக்கலாமே என நினைக்க, அப்போது பஸ் கிளம்பியது. இருவரும் கையசைத்து விடை பெற்றோம். இனிதே எங்கள் சந்திப்பு நிறைவுற்றது.

நாய்நக்ஸ் கவனிக்க: தலைப்பில் ப்யூர் பதிவர் சந்திப்புன்னு இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்ன்னா? டாஸ்மாக் கலந்துக்காத சந்திப்புன்னு அர்த்தம்.
மேலும் வாசிக்க... "கண்டேன் செங்கோவியை! ப்யூர் பதிவர் சந்திப்பு!"



சென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரலை லிங்க் இதோ...(chennai youth blogger meet live telecost)

இனிய சக வலைபதிவர்களே,


சென்னையில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் யூத் பதிவர்கள் சந்திப்பின் நேரலைக்கான லிங்க்:


http://www.justin.tv/selwin76?utm_campaign=post_live&utm_source=live&utm_medium=url#/w/3108118000


மேற்கண்ட லிங்க்-ஐ கிளிக் செய்து பதிவர்களின் அரட்டைகளுடன் நீங்களும் இணையுங்கள்.


பதிவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியை நேரலையில் காண கீழே உள்ள ப்ளேயரில் ப்ளே(play) செய்யவும்....
(நண்பர்களே, சந்திப்பு நிறைவடைந்த படியால் கீழ்க்கண்ட லிங்க் வேலை செய்யாது. )


Watch live video from selwin76 on www.justin.tv
மேலும் வாசிக்க... "சென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரலை லிங்க் இதோ...(chennai youth blogger meet live telecost)"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1