வணக்கம் சகோதரர்களே,
நம் தமிழ்வாசியில் முதல் பேட்டியாக வலைச்சரம், சீனா அவர்களின் பேட்டி வெளியிட்டு வலைப்பூக்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அவரை தொடர்ந்து இரண்டாவதாக மதியோடையில் நனைவோமா வலைப்பூவை எழுதி வரும் திரு. மதி சுதா அவர்களை பேட்டி காண போகிறோம்.
மதி சுதா யார்?
“சுடுசோறு” தமிழ் பதிவுலகமே அதிசயத்துடனும், ஆச்சரியத்துடனும் கேட்டுக்கொண்ட புதியதொரு வார்த்தை. இந்த வார்த்தைகளின் சொந்தக்காரன் பதிவர். திரு.மதி.சுதா அவர்கள். ஒரு கலைஞனோ அல்லது ஒரு எழுத்தாளனோ, அன்றில் ஒரு வலைப்பதிவனோ, தன் கலைகள், எழுத்துக்கள்போலவே மற்றவர்களின் கலைகள், எழுத்துக்களை திறந்தமனதுடன் ஓடிச்சென்று பாராட்டிவிடும் மனம் உள்ளவனாக இருப்பது அவசியம்.
வஞ்சகமற்ற வாஞ்சையுடனான உடனயடியான பாராட்டுக்கள், களங்கங்கள் அற்ற நட்புகளை ஏற்படுத்திவிடுவது மிக இயல்பானது, யதார்த்தமானதும் கூட.
அப்படி ஒரு வெள்ளை மனதுக்காரன் பதிவர் மதி.சுதா.
மதி.சுதா என்ற ஒரு பெயர் இன்று பதிவுலகத்தில் மிகப்பிரபலம். ஏனென்றால் மதி.சுதா அத்தனைபேருக்கும் சொந்தக்கார் என்பதுடன் மிக நெருக்கமானவன் என்ற உணர்வுகள்தான். சலிப்பற்ற தொடர்வாசிப்பு, ஈகோக்களை தூக்கி எறிந்த ஒரு பண்பு, அதிரடியான பதிவுகள், இயல்பான மிக லேசான நடைகளுடனான எழுத்துக்கள், எழுத்துக்களில் மட்டும் இன்றி செயல்பாடுகளிலும் வாஞ்சையான பண்பு, இவற்றின் மொத்தப் பெயர்தான் இந்த மதி.சுதா.
தில்லையம்பலம் சுதாகரன் என்ற இயற்பெயரை உடைய பதிவர் மதி.சுதா, தனது தாயாரான மகேஸ்வரியின் “ம”, தந்தை தில்லையம்பலத்தின் “தி” இரண்டையும் தன் பெயரின்முன்னே “மதி” ஆக்கி பதிவுலகத்தில் மதி.சுதா என்ற பெயருடன் ஆயிரம் கைகளின் கரகோசங்களுடன் வலம்வந்துகொண்டிருக்கின்றார்.
அதேபோல முன்னரே “சுடர் ஒளி” பத்திரிகைக்கு எழுதிய தாய் பற்றிய தனது கவிதையுடன் கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன்மாதம் பதிவெழுத தொடங்கி தன் முதன் பதிவையே தனது தாய்க்கு சமர்ப்பித்து பதிவுலகத்திற்கு வந்தார்.
ஆரம்பத்திலேயே ஒரு சென்டிமென்ட் “டச்” உடன் வந்த மதிசுதா, பதிவுலகத்திலும், பதிவெழுதுவதிலும் காட்டியவிஸ்பரூபம் பதிவுலகத்தையே ஆச்சரியப்படவைத்தது.
காட்டாறு உடைப்பெடுத்தால் எப்படி கரைபுரண்டோடுமோ, தன் போக்கிற்கு எப்படி அது எதிர்ப்பட்டவற்றை எல்லாம் ஈர்த்துக்கொள்ளுமோ அப்படி ஒரு காட்டாறாக பெருக்கெடுத்தது மதி.சுதாவின் பதிவுகள்.
ஒரு சவலாக வேண்டும் என்றாலும் சொல்லிவிடலாம் பதிவெழுத தொடங்கி சில நாட்களிலேயே மிகப்பெரும் பிரபலம் அடைந்து, எண்ணற்ற நண்பர்களை தனக்குள் ஈர்த்துக்கொண்டது இன்றுவரை மதி.சுதாவைத்தவிர வேறு எவரும் கிடையாது.
அந்த வேகத்திற்கும், அந்த எழுத்துக்களுக்கும், அந்த தொடர்ச்சிக்கும், காரணம், கடந்தகால வரலாற்றுவடுக்களால் மதி.சுதாவின் மனதின் தாக்கங்கள், ஏக்கங்களாகக்கூட இருக்கலாம். இதுகூட மதி.சுதாவின் பல பதிவுகளில் வெளிப்படையாகத் தெரிந்தன.
கவிதை, இலக்கியம், விஞ்ஞானம், புதிய, பாரம்பரிய, கிராமிய கண்டுபிடிப்புக்கள், சமுகத்தின் மீதான சாட்டைகள், யதார்த்தங்கள், சினிமா, கதைகள் பற்றிய ஆராட்சிகள், என பல வடிவங்களையும் மதி.சுதாவின் எழுத்துக்கள் தொட்டுக்கொண்டன.
கவிதைகளில்க்கூட அறிவியலைப்புகுத்தும் நுட்பம், சாதாரண நிகழ்கால உள்ளுர் கண்டுபிடிப்புக்களைக்கூட காலப்பதிவாக எழுத்தில் அடக்கும் பண்பு என மதி.சுதா எழுத்துக்களால் தொடும் விடயப்பரப்புக்கள் சில மூக்கில் விரலை வைக்க வைக்கின்றது.
பதிவெழுதத்தொடங்கி முழுதாக 7 மாதங்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், மதி.சுதா சாதித்துக்காட்டியவை மிகநிறைய. பெரும் ஆர்வக்கோளாறு மதி.சுதா என சக பதிவர்கள் வெளிப்படையாகவே பேசும் அளவிற்கு உண்மையிலேயே பதிவுலகில் பெரும் ஆர்வக்கோளாறாகவே மதி.சுதா அதிவேகத்துடன் வலம் வந்துகொண்டிருக்கின்றார். தன் பின்னூட்டம் என்னும் மிகப்பெரும் பானையில் இருந்து, பதிவுலகத்தின் 70 வீதத்திற்கும் அதிகமான பதிவர்களுக்கு சுடச்சுட சுடுநோறுகளை வழங்கி ஆச்சரியப்படவைத்திருக்கின்றார்.
இது வேறு எந்த பதிவர்களுக்கும் சாத்தியப்படாத விடயம். உண்மையை சொல்லவேண்டும் என்றால், எதிர்பார்ப்புக்கள், ஈகோக்கள், பதிவுலக வீணான குரோதங்கள், தங்களுக்கான வட்டங்கள், மமதைகள், பதிவுலக அரசியல்கள், அத்தனையையும் தாண்டிய ஒரு தெளிந்த மனம், வெள்ளை உள்ளம் உடையவர்களாலேயே இது சாத்தியம். அந்த வகையில் பதிவுலகத்தில் சகலரையும்விட உயர்வான இடத்தில் இருக்கின்றார் மதி.சுதா.
கடந்த 30 வருட இருண்ட யுத்தத்தினால், உயிர், உடமை இழப்புக்களைவிட, தமது கற்ற கல்வி, எதிர்காலம், நாளைகள் அத்தனையையும் தொலைத்துவிட்டு நிற்கும் ஒரு சமுதாயத்தின் பிரதிநிதிகளில் மதி.சுதாவும் ஒருவர்.
இருந்தபோதிலும் நம்பிக்கையை தொலைக்காமல், வாழ்வில் மீண்டும் முன்றேத்துடிக்கும் இயல்பு மதி.சுதாவிடம் உண்டு. அதே தொனிகள் எழுத்துக்களிலும் ஆங்காங்கே வருவதை அவதானிக்கலாம்.
அவரிடம் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான், அவரிடம் வலைப்பூ எழுதும் பதிவர்களும் கேள்விகள் கேட்கலாம். அதோடு மட்டுமல்லாமல் இம்முறை வலைப்பூவை வாசிக்கும் வாசகர்களாக இருக்கும் அனைவரும் தங்கள் சுவாரசியமான கேள்விகளை கேட்கலாம்.
உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: palsuvaitamil@gmail.com
நண்பர்களே, உங்கள் கேள்விகள் என்னும் மழையில் நனைய மதி.சுதா காத்திருக்கிறார். விரைவீர்.
28 கருத்துரைகள்:
எனது முதல் கேள்வி
1. சுதா.. நீங்க டிஃபன் சூடா சாப்பிட மாட்டீங்களா?
@சி.பி.செந்தில்குமார்
கேள்விகள் கேட்க தனி மெயில் ஐடி உள்ளது: palsuvaitamil@gmail.com
நண்பர்களே, பின்னூட்டத்தில் யாரும் கேள்விகள் கேட்க வேண்டாம்.
நல்லதொரு அறிமுகம் - கேள்வி பதிலில் சூடாக பரிமாறட்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பகிர்வுக்கு நன்றி
இருந்தபோதிலும் நம்பிக்கையை தொலைக்காமல், வாழ்வில் மீண்டும் முன்றேத்துடிக்கும் இயல்பு மதி.சுதாவிடம் உண்டு. அதே தொனிகள் எழுத்துக்களிலும் ஆங்காங்கே வருவதை அவதானிக்கலாம்.
....உண்மை..... தன் மனதில் உள்ள உணர்வுகளை .....தனக்கு நியாயம் என்று படுவதை, துணிந்து எழுதும் சுதாவுக்கு வாழ்த்துக்கள்!
கேள்வி: எத்தனயோ சோதனைகளை, வேதனைகளை கடந்து வந்து கொண்டிருக்கும் இவர், எப்பொழுதும் positive ஆக சோர்ந்து போகாமல் எப்படி இருக்க முடிகிறது? It is a blessing, indeed!
மதி.சுதா அவர்களின் பல தகவல்களை தெரிய வைத்ததற்கு நன்றி..
அவர் அவ்வளவு பிரபலமா என்ன?
தலைப்பை திருத்துங்கள் .. ஓடையா? ஓட்டையா?
ஹ....ஹ... என்னிடம் என்ன இருக்கிறது என்று என்னை தெரிந்தீர்களோ தெரியல... ஆனால் இச்சந்தர்ப்பத்திற்கு தங்களுக்க மிக்க நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்..
மனதில் பட்டதை எழுதுகிறேன்.. மனச்சாட்சிக்கு மட்டும் கட்டுப்படுகிறேன்... வேறு என்னிடம் ஒன்றுமே இல்லை...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
நானும் சுதாவிடம் சில பல கேள்விகள் கேட்கணும்! மொக்கையா கேட்டாலும் பதில் சொல்லுவாரா? அல்லது சீரியஸா?
///cheena (சீனா), விக்கி உலகம், Chitra, !* வேடந்தாங்கல் - கருன் *!,///
வருகைக்கு நன்றி... அப்படியே கேள்விகளும் கேட்கலாமே...
@சமுத்ரா///தலைப்பை திருத்துங்கள் .. ஓடையா? ஓட்டையா?///
தலைப்பை திருத்தி விட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.
@♔ம.தி.சுதா♔
தயங்காமல் எழுதுங்கள்... நன்றி.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
///நானும் சுதாவிடம் சில பல கேள்விகள் கேட்கணும்! மொக்கையா கேட்டாலும் பதில் சொல்லுவாரா? அல்லது சீரியஸா///
அட என்னய்யா கேள்வி இது... மொக்கை..சிரியஸ் கேள்வி என எல்லாத்துக்கும் பதில் சொல்லவார்... don't worry
கலக்குங்க ,
ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்
மதி.சுதா கலக்கல் டிரைலர்
கேள்வியை அனுப்புகிறேன்..
இதையும் படியுங்கரஜினியை தொடர்ந்து மாஸ் ஹீரோக்கள் காணாமல் போவார்கள்
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..
மதி. சுதாவைப்பற்றி நிறைய தெரிந்துகொள்ள உதவிய சிறப்பான தகவல்களுக்கு நன்றி. ஏற்கனவே கேள்வி அனுப்பியாச்சே.
நானும் மதிசுதா பற்றி தெரிந்து கொண்டேன்.வாழ்த்துக்கள்.
நானும் மதிசுதா பற்றி தெரிந்து கொண்டேன்.வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோ, சுதாவின் வலையுலக வாழ்வு, பற்றி பேட்டி காணும் உங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள் தோழா!
இதர வலைத் தளங்களில் இருந்து தகவல்களை எடுத்துப் பகிரும் போது, அந்த வலைத் தளம் பற்றிய குறிப்பினை கொஞ்சம் பெரிய அளவில் போடலாமே?
ஏனெனில் பதிவினை விட பதிவின் தலைப்பினையும், ஒரு சில வரிகளினையும் படித்து விட்டுப் பின்னூட்டம் போடுவோர் முன்னே அந்த வலைப்பதிவாளர் காணாமற் போய்விடுவார் எனும் ஒரு சின்ன ஆதங்கம் தான்!
உங்களின் வலையில் வெளியாக விருக்கும், மதிசுதாவுடனானா நேர்காணலை படிக்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நடத்துங்க நடத்துங்க....
நம்பிக்கையை தொலைக்காமல், வாழ்வில் மீண்டும் முன்றேத்துடிக்கும் இயல்பு மதி.சுதாவிடம் உண்டு//
நல்வாழ்த்துகள் ..
@ தனது தாயாரான மகேஸ்வரியின் “ம”, தந்தை தில்லையம்பலத்தின் “தி” இரண்டையும் தன் பெயரின்முன்னே “மதி” ஆக்கி பதிவுலகத்தில் மதி.சுதா என்ற பெயருடன் ஆயிரம் கைகளின் கரகோசங்களுடன் வலம்வந்துகொண்டிருக்கின்றார்.
மதி.சுதா?
நானும் ரொம்ப நாளா கேட்க்க வேண்டும் என நினைத்தேன் ஆனால் இங்கே பதில் கிடைத்து விட்டது அடுத்து தம்பியிடம் என்ன கேள்வி கேட்ப்பது ??
பதிவுக்கு நன்றி தமிழ் வாசியாரே.
வாழ்த்துக்கள்
good luck Sutha.