ஒரு பிரச்சாரத்தில் நடிகர் வடிவேலு கேப்டனின் பேச்சு உளறிய பிரச்சாரத்தை நக்கலடித்து பேசினார். அதன் விவரம் பின்வருமாறு:
கேப்டனு நா மனுசனா? நீ மனுசனா? ஐயா கேப்டனு ஒன் எடம் உனக்கு மட்டுமா போச்சு. எத்தன ஏழ விவசாயிகளோட நிலமும் போச்சு. இப்படி நெலம் போனதுக்கு கட்சி ஆரம்பிச்சா, ஒவ்வொரு வெவசாயியும் ஒரு ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டியது தான். புதுசு புதுசா சின்னம் வச்சுக்கிற வேண்டியது தான்... இந்தாய்யா நானும் இப்ப கட்சி ஆரம்பிக்கிறேன். என் கட்சி சின்னம் கொய்யாப்பழம். இப்படி கட்சி ஆரம்பிச்சா எத்தன பேரு ஆரம்பிக்கறது?
ஒன் கூட்டணியில இருக்கிற கட்சிகளோட சின்னம் ஒனக்கு தெரியுதா? சின்னம் தெரியாம ஒளருற. பாவம்யா, அந்த கம்யுனிஸ்டு கட்சி வேட்பாளரு எம்புட்டு நேரந்தா ரெண்டு கைய தூக்கிகிட்டு நிப்பாரு. இவுரு சின்னத்த மாத்தி சொல்லிட்டாரு. பாவம்யா அந்த வேட்பாளர், அண்ணே! சின்னத்த தப்பா சொல்லிட்டிங்க, அப்படின்னு சொன்னா எங்கே நமக்கு அடி விழுந்திரும்னு பயத்துல நடுங்கிகிட்டு இருக்காரு. பாவம்யா அந்த வேட்பாளர் கடைசி வரைக்கும் பேச முடியாம முழுங்கி முழுங்கி நின்னிக்கிட்டு இருந்தாரு.
இவ்வாறு கேப்டனை நக்கலடித்து பிரச்சாரம் செய்தார்.
நன்றி: சன் நியுஸ்
நண்பர்களே! ஓர் இனிய அதிர்ச்சி.
வலைச்சரத்தின் இந்த வார ஆசிரியராக பொறுப்பேற்று இருப்பதால் தமிழ்வாசி வலைப்பூவில் இந்த வாரத்திற்கு தொடர்ந்து பதிவுகள் இட முடியுமா என தெரியவில்லை. முயற்சி செய்கிறேன். நீங்களும் தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.
இன்றைய வலைச்சரத்தில் என் பதிவு: திங்கள் தொடுத்த சுய'சரம்'
இன்னொரு முக்கியச் செய்தி : தமிழ் மணத்தில், தமிழின் முண்ணனி வலைப்பதிவுகளில் என்னுடைய வலைப்பதிவும் பன்னிரண்டாம் இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தினை, உங்கள் ஆதரவுடன் அடைய விரும்புகிறேன்.
இன்றைய பொன்மொழி:
தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாது என்று எதுவுமே இல்லை.
இன்றைய விடுகதை:
கோணல் எத்தனை இருந்தாலும்
குணமும் குறியும் மாறாது. அது என்ன?
(விடை அடுத்த பதிவில் வரும்)
முந்தைய பதிவிற்கான விடுகதையின் விடை: நாய்
முந்தைய விடுகதையின் பதிவு:
15 கருத்துரைகள்:
இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்..
ஆசிரியருக்கு வணக்கம்!
பொன்மொழியும் விடுகதையும் சிறப்பான அம்சங்கள். :-)
அசத்துங்க மக்கா அசத்துங்க...
வடிவேலுவுக்கு ஏழரை சனி ஆரம்பிச்சாச்சு...
ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துகள் மக்கா...
இதோ நான் அங்கேதான் போறேன் நேரா....
@!* வேடந்தாங்கல் - கருன் *!
///This post has been removed by the author.///
என்னத்த சொல்லி அழிச்சிங்க
@செங்கோவி
///ஆசிரியருக்கு வணக்கம்///
ம்ம்ம்..வணக்கம்...வணக்கம்...
@Chitra
///பொன்மொழியும் விடுகதையும் சிறப்பான அம்சங்கள். :-)///
தாங்க்ஸ்
@MANO நாஞ்சில் மனோ
///அசத்துங்க மக்கா அசத்துங்க...///
அசத்திருவோம்
அண்ணாத்தைக்கு அப்புறம் இருக்குது...
திமுக ஜெயிச்ச தப்பிச்சாரு...
வலைச்சரத்தில் சிறக்க வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்
கேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான பதில்கள் பாகம்-1
http://speedsays.blogspot.com/2011/04/1.html
வலைச்சரத்தில் தொடர்ந்து ஆசிரியர் பணி சிறக்க நல் வாழ்த்துக்கள்..