ஐபிஎல் 4வது சீசன் தொடக்க ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அனிருதா ஸ்ரீகாந்த் 64 ரன் விளாசினார். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாசில் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்தது.
தொடக்க வீரர்களாக முரளி விஜய், அனிருதா ஸ்ரீகாந்த் களமிறங்கினர்.
இக்பால் அப்துல்லா வீசிய முதல் ஓவரிலேயே விஜய் 4 ரன் மட்டும் எடுத்து ரஜத் பாட்டியாவிடம் பிடிபட்டார். அடுத்து அனிருதாவுடன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். பொறுப்பாக விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்தனர்.
ரெய்னா 33 ரன் (29 பந்து, 4 பவுண்டரி) எடுத்து யூசுப் பதான் சுழலில் சரப்ஜித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் டோனி ரசிகர்களின் ஆரவாரத்துக்கிடையே களமிறங்கினார்.
அதிரடியாக விளையாடிய அனிருதா அரைசதம் கடந்து அசத்தினார். மறுமுனையில் டோனியும் அடித்து நொறுக்க சிஎஸ்கே ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. காலிஸ் பந்தில் சிக்சர் அடிக்க முயன்ற டோனி 29 ரன் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பர் பிஸ்லாவிடம் பிடி கொடுத்து பெவிலியன் திரும்பினார். அனிருதா 64 ரன் எடுத்து (55 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) காலிஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன் குவித்தது. மார்கெல் 15 ரன், ஸ்டைரிஸ் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் காலிஸ் 2, அப்துல்லா, பதான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 154 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்து தோற்றது. காலிஸ் அதிகபட்சமாக 54 ரன் எடுத்தார்.
வீடியோ ஹைலைட்ஸ்:
இன்றைய பொன்மொழி:
மனிதனை அழகு செய்யும் குணங்களில் ஒன்று துணிவு!
இன்றைய விடுகதை:
நாகோஜி ராஜாவே நாலுகால் மந்திரியே
தொங்க தொங்க நாக்கழகு
தின்னத் தின்ன பல்லழகு
தும்பைப் போல வாலழகு. அது என்ன?
(விடை அடுத்த பதிவில் வரும்)
முந்தைய பதிவிற்கான விடுகதையின் விடை: கொடுக்காப்புள்ளி
முந்தைய விடுகதையின் பதிவு:

7 கருத்துரைகள்:
முதன் முறையாக இங்கேயும் ஒளிபரப்பினார்கள். :-)
m m ம் ம் செம ஃபாஸ்ட்டாதான் இருக்கீங்க
thank you
கலக்கல் வெற்றி..
பகிர்வுக்கு நன்றி..
கிரிக்கெட் நமக்கு தெரியாதண்டி.....
உங்கள் ஒளிபரப்புக்கு நன்றிகள்.. விளக்கத்திற்கும் நன்றிகள்..
அன்பின் பிரகாஷ் - நல்லதொரு இடுகை. பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா