வர்ற, செப்டம்பர் 15 முதல் ஜெ அரசு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்ற பொருட்களை மகளிருக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. அதே போல மாணவ மாணவியர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டமும செப்டம்பர் முதல்ஆரம்பிக்க உள்ளது. மேலும் முதியோர்களுக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
கலைஞர் காப்பீடு திட்டம் நிறுத்தப்பட்டு, புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இவை தவிர, அரசு பெண் ஊழியர்களுக்கு கூடுதலாக மகப்பேறு விடுப்பு காலம், 20 கிலோ இலவச அரிசி திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. ஜெ அரசால் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன இலவச திட்டங்களும், சொல்லாத திட்டங்களும் படிப்படியாக மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டங்கள் எல்லாம் நாம் பெறவேண்டுமானால் நம்முடைய குடும்பத்திற்கான ஆவணங்கள் சரியாக வைத்திருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக ரேசன் கார்டு சரியான முகவரியில் வைத்திருக்க வேண்டும். நம் பெயரிலோ, முகவரியிலோ தவறிலாமல் வைத்திருக்க வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படின் தகுந்த அதிகாரிகளை பார்த்து சரி செய்ய வேண்டும்.
புதிதாக திருமணம் செய்தவர்கள் தங்களுக்கென தனியாக ரேசன் கார்டு வாங்க வேண்டும். புது ரேசன் கார்டு விண்ணப்பிக்கும் போது பெற்றோர்களிடம் சேர்ந்து இருக்கும் பெயரை முதலில் நீக்கம் செய்து ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும். அந்த சான்றிதழை நம் புதிய ரேசன் கார்டுக்கான விண்ணப்பத்தில் இணைத்து வினப்பிக்க வேண்டும்.
ஆக மக்களே, ரேசன் கார்டு இல்லாதவர்கள் புது ரேசன் கார்டுக்கு விண்ணப்பம் செய்யுங்க. ரேசன் கார்டில் பிழைகள் இருப்பவர்கள் சீக்கிரமா திருத்தம் செஞ்சுக்கங்க. அப்ப தான் அரசு வழங்கும் எல்லா இலவசமும் நம் வசம் ஆகும்.
17 கருத்துரைகள்:
இதோ கிளம்பிட்டேன் நண்பா கார்ட் வாங்குறதுக்கு நன்றி அப்புறம் பாப்போம்
இதோ நானும் ஊர் வாறேம்லேய் ஒன்னுக்கு ரெண்டு ரேசன்கார்டு வாங்கிபுடனும் ம்ஹும்...
எனக்கு கல்யாணமே ஆகல ரேசன் கார்டு குடுப்பான்களா?
@பிரபாஷ்கரன்
இவ்வளவு நாளா வாங்கலியா?
@MANO நாஞ்சில் மனோ
இதோ நானும் ஊர் வாறேம்லேய் ஒன்னுக்கு ரெண்டு ரேசன்கார்டு வாங்கிபுடனும் ம்ஹும்...>>>>
இந்தியாவுல ரெண்டு வீடு வச்சிருக்ரத்தை மனோ ஒத்துக்கிட்டார்
@!* வேடந்தாங்கல் - கருன் *!எனக்கு கல்யாணமே ஆகல ரேசன் கார்டு குடுப்பான்களா>>>>
பொய் சொல்றார்... பொய் சொல்றார்.
பகிர்வுக்கு நன்றி.
மக்களுக்கு நல்ல மெசேஜ்....
ஜனங்களே சீக்கீரம் ரேஷன் கார்டு வாங்கிடுங்க...
இனிப்பான செய்தி! அனைவரும் தயாராக இருப்போம்!!
நல்லது நடத்தட்டும்!
ம்ம்ம்ம், இதெல்லாம் தமிழ் நாட்டில் மட்டும்தானே?
பாஸ், நம்மளை மாதிரி அயல் நாட்டு படங்களுக்கும் இலவசங்கள் தருவாங்க என்றால் நான் இப்பவே கிளம்பி வர ரெடி..
ஹி....ஹி...
எனக்கு மிக்ஸி வேணாம், மிஸ்ஸி தான் வேணும்,
ஹா...
மக்களுக்குத் தேவையான பதிவு. பகிர்விற்கு நன்றி மாம்ஸ்.
ரேசன் கார்டு பிரச்சனை வீடுவரை இருந்தது... இப்ப பிளாக்கிலும் கொடுத்துள்ளீர்கள்.. அரைத்தல் தினமும் நடைப்பெறப் போகிறது.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
இதெல்லாம் தேவையே இல்ல
விலைவாசிய குறைச்சா போதும்
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
லேப்டாப் மனோவின் New Keyboard
http://speedsays.blogspot.com/2011/06/new-keyboard.html
என் கிட்டே பக்காவா இருக்கு