CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



நெல்லைக்கு பதிவர்கள் பயணமும், சதி செய்த அரசு பேருந்தும்....

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
           காலையில் சீக்கிரமா எந்திருச்சு கிளம்பி சீனா ஐயாவையும் பிக்கப் பண்ணிட்டு மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டு வந்து சேர்ந்தப்ப மணி 5: 15. அங்க இருக்கற தமிழ்நாடு தேயிலை தொட்டக்கழக டீ கடையில் ஆளுக்கு ஒரு காபி சாப்பிட்டு வம்ப வெலைக்கு வாங்குற மணிக்காக ரெண்டு பேரும் வெயிட் பண்ணிட்டு இருந்தோம். அவர்க்கு போன் பண்ணினா இதோ வந்துட்டேன்னு தான் சொன்னார். ஆனா வரல... அப்புறமா ஒரு பத்து நிமிசம் கழிச்சு அவர்கிட்ட இருந்து போன் வந்துச்சு. எந்த எடத்துல இருக்கீங்க என கேட்டாரு. அப்புறமா அவருக்கு இடத்தை சொல்லி அவரும் எங்க கூட ஜாயின் பண்ணிட்டாரு. 

         அப்புறமா நெல்லை போற பஸ் இருக்கிற எடத்துக்கு வந்தா தமிழ்நாடு விரைவு பேருந்து தான் அதிகமா இருந்துச்சு. அந்த பஸ்ல டிக்கெட் 90 ரூபா என மணி திகிலா சொன்னார். ஆமாங்க, சாதா பஸ்ல 56 ரூபாயாம் அதையும் சொன்னார். மணிக்கு 90 ரூபா கொடுத்து போகனுமான்னு யோசிக்க ஆரம்பிச்சாரு. நானும் சீனா அய்யாவும் விரைவு பேருந்து சீக்கிரமா போயிருமேனு சொல்லி ஒரு விரைவு பேருந்தில் ஏறினோம் (அப்ப தான் சனி எங்களை புடிச்சது). வேற வழி இல்லாம மணியும் ஏறிக்கிட்டார். பஸ்ல அங்க ஒரு சீட்டு, இங்க ஒரு சீட்டுன்னு இருந்துச்சு. மூணு பேரும் பக்கத்துல உட்கார முடியாதேன்னு கீழே இறங்கினோம். உடனே கண்டக்டர் வேகமா ஓடி வந்து சார் ஏன் இறந்குறிங்க, என கேட்க சீட் இல்லைன்னு நாங்க சொல்ல, அவரோ சார் வாங்க நான் சீட் அரேஞ் பண்ணி தர்றேன்னு மறுபடியும் எங்களை பஸ்சில் ஏத்தி விட்டார் (மறுபடியும் சனி எங்களை புடிச்சது). ஒத்த ஒத்த சீட்டுல தூங்கிட்டு இருந்த ஒரு அப்பாவியை அவரு எழுப்பி மாறி உட்கார சொன்னார். நானும் சீனா ஐயாவும் பக்கத்துல உட்கார்ந்துட்டோம். மணிக்கு ரெண்டு சீட் தள்ளி இடம் கிடைச்சுசு. பஸ் 5:50 க்கு கிளம்பிச்சு. நாங்களும் 9 மணிக்குள்ள நெல்லை போயிடுவோம்னு சந்தோசமா இருந்தோம்.
     பஸ் பைபாஸ்ல போகாம பெரியார் வழியா போச்சு.  சீக்கிரமா நெல்லைக்கு போலாம்னு பார்த்த பஸ்காரன் மதுரையை சுத்தி காமிச்சு போறானே என நானும் ஐயாவும் வருத்தமா பேசிக்கிட்டோம். என்னான்னு தெரியல பஸ் ரொம்பவே மொள்ளமா போயிட்டு இருந்துச்சு. ஒரு வழியா மதுரையை தாண்டி திருமங்கலம் பைபாஸ் ரோட்டுக்கு பஸ் வந்ததும் ஒரு இடத்துல நின்னுச்சு. எங்களுக்கு வச்சான்யா ஆப்பு ன்னு நெனச்சிட்டு இருந்தப்போ மறுபடியும் பஸ் கிளம்பிச்சு. ஏதோ ட்ராபிக் ன்னு நெனச்சிட்டு நானும் ஐயாவும் பேசிட்டு வந்தோம்.  மறுபடியும் பஸ் ஒரு இடத்துல நின்னுச்சு. ஒரு நிமிஷம், ரெண்டு நிமிஷம் என நிமிஷம் போயிட்டே இருந்துச்சு. பஸ்சுக்குள சவுண்டு விட ஆரம்பிச்சாங்க. அப்ப தான் தெரிஞ்சது அந்த பஸ் பெங்களூரில இருந்து வருதுன்னும், அங்கே இருந்து உருட்டிட்டே வராங்கிறதும் ஒரு பெரிசு போலம்பினார். பெரிய இவிங்க மாதிரி முன்னாடி கதவை வேற பூட்டி வச்சுட்டாங்க. பஸ்ல இருந்த ஆளுக (நாங்க மட்டும் எங்கே இருந்தோமாக்கும்) கண்டக்டர், கண்டக்டர் என சத்தம் போட்ட பின்னரே கதவை தொறந்து விட்டார்.       இறங்கி பார்த்தா ஒரு பஞ்சர் கடையில பஸ் நின்னுட்டு இருந்துச்சு. சீக்கிரமா போகலாம்னு தானே இந்த பஸ்ல ஏறினோம், இப்படி ஆயிருசென்னு மூணு பேரும் நொந்து போயிட்டோம்.
       பஞ்சர் கடையில ஆளே இல்லை. கண்டக்டர் தேடிட்டு இருந்தார். அப்ப பக்கத்துல இருந்த கடைக்காரர் உள்ள தூங்கிட்டு இருப்பாங்க கொஞ்சம் சத்தம் போட்டு அவிங்கள எழுப்புங்க என டிப்ஸ் கொடுத்தார். கண்டக்டரும் சத்தம் போட்டு அவிங்கள எழுப்பினார். கண்டக்டர் அவிங்க கிட்ட என்னமோ சொன்னார். அவிங்களும் ஒரு பாக்ஸ் ஸ்பேனரை எடுத்துட்டு வந்து முன் டயரை கழட்ட ஆரம்பிச்சாங்க. கண்டக்டர் வேகமா ஓடி வந்து டேய், இந்த டயர் இல்லைடா, அந்த பக்கம் டிரைவருக்கு கீழே இருக்கற டயர் என தெளிவா சொன்னார். அவிங்க, சார் பாக்ஸ் ஸ்பேனர் செட் ஆகுதான்னு செக் பண்ணினேன்னு ஒரு சமாளிபிகேஷன் (வார்த்தை உபயம்: திரு சி.பி)  சொன்னான். பஞ்சர் பய டயரை கழட்ட ஆரம்பிச்சான். ஜாக்கிய எந்த எடத்துல வைக்கணும்னு டிரைவருக்கு தெரியல. அந்த பஞ்சர் பயலை அந்த பக்கம் வைக்க முடியுமா, இந்த பக்கம் வைக்க முடியுமான்னு கன்பியுஸ் ஆக்கினார். நான் என் மொபைல்ல போட்டோ எடுத்திட்டு இருந்தேன். (சப்போஸ் பதிவு எழுதரப்போ படம் போடலாமேன்னு தான்). கண்டக்டர் ஒரு மாதிரியா என்னை பார்த்தார். சார், நீங்க பத்திரிக்கைகாரங்களா, அரசு விரைவு பேருந்தின் அவலம்னு பேப்பர்ல எழுதாதிங்கன்னு சொல்ல (அட பதிவின் தலைப்பு அவரே கொடுத்திட்டாரே என நான் ஆனந்தப்பட), பக்கத்துல இருந்த சீனா ஐயா நாங்க பத்திரிகை ஆளுங்க இல்லை சும்மா படம் எடுக்கறோம்னு அவரை கூல் பண்ணினார். ஆனா அவருக்கு தெரியும், நான் ஒரு பதிவா போட்ட்ருவேன்னு. 
     ஒரு வழியா டயரை கழட்டிட்டாங்க. டயர்ல பட்டன் சொல்லுவாங்களே அது புல்லா பிஞ்சு போயி தனியா தொங்கிட்டு இருந்துச்சு. அடப்பாவிகளா இப்படியே தான் பெங்களூர்ல இருந்து வந்திங்களான்னு நெனச்சிக்கிட்டேன். ஒரு ஸ்டெப்னி டயரை கண்டக்டர் உருட்டிட்டு வந்தாரு பாருங்க, அந்த டயருல பட்டனே இல்லைங்க, மொழுக்குன்னு இருந்துச்சு. நல்ல ஸ்டெப்னி வச்சிருக்காங்கய்யா... ஒரு வழியா அந்த மொழுக் டயரை மாட்டிட்டு பஸ் அங்கருந்து கிளம்பரப்ப மணி ஏழு. 

   அப்ப நிரூபன் போன் பேசினார். அவர் கிட்ட ஏன் லேட்டுன்னு சொன்னேன். பஸ் மெதுவா உருண்டு போயிட்டு இருந்துச்சு. கொஞ்சம் சீக்கிரமா நெல்லை போயி காலை டிபனை சாப்பிட்டு ரிலாக்ஸா பதிவர் சந்திப்பை அட்டன் பண்ணலாம்னு நெனச்சா இப்படி ஆயிருசென்னு ஐயாவும் நானும் பேசிக்கிட்டோம், பத்து மணிக்குள்ள போயிரலாம்னு அவர் சொன்னார், ஆனா பஸ் போற வேகத்தை பார்த்தா பன்னிரண்டு மணி ஆகும் போல என நான் சொன்னேன், கொஞ்ச நேரத்துல அவர் தூங்க ஆரம்பிச்சார். நான் ஹெட் போனை காதுல மாட்டிட்டு பாட்டு கேட்டுட்டே தூங்கிட்டேன். ஐயா எந்திரி, என்திரின்னு என்னை எழுப்பினார். நெல்லை வந்திருச்சான்னு கேட்டுட்டே முழிச்சேன். இல்லைப்பா ஒரு ரோட்டோர கடையில பஸ் நிக்குதுன்னார். ம்ஹும்... இன்னும் நெல்லை போகலியான்னு நொந்துக்கிட்டேன். பஸ்ஸை விட்டு இறங்கி கீழே நின்றோம்.
     மூணு பேருக்குமே நல்ல பசி... எங்களுக்கு அந்த மாதிரி மோட்டல்கள்ள சாப்பிட பிடிக்காதுங்ரதுனால நாங்க சாப்பிடாம பசியோட இருந்தோம். அப்ப வேற பஸ் கண்டக்டர் எங்க பஸ் பின் பக்க டயரை தட்டி பார்த்துட்டு பஞ்சரா இருக்கும் போல, என் பஸ்ல ஏறிக்குங்க என சொல்லிட்டு எங்க பஸ் டிரைவர் கண்டக்டரை தேடினார். போச்சுடா, இன்னும் லேட் ஆகுமேன்னு நெனச்சோம்.  சந்திப்புக்கு மதிய சாப்பாடு நேரத்துக்கு தான் போவோம்னு பேசிட்டு இருந்தோம். அப்ப பஸ் டிரைவர் வந்தார். பக்கத்து பஸ் கண்டக்டர் அவர்கிட்ட டயர் பஞ்சரா இருக்கும் போல, உங்க பஸ்ல இருக்கறவங்கள என் பஸ்ல ஏத்திகறேன்னு சொல்லிட்டு இருந்தார். நாங்க 90 ரூபா கொடுத்துட்டு இப்படியா கஷ்டப்படுரதுன்னு பேசிக்கிட்டோம். அப்ப எங்க பஸ் டிரைவர் இது பஞ்சர் இல்லை, இது ரேடியல் டயர் அப்படி தான் இருக்கும்ன்னு சொன்னார். அதுவா, அப்ப காத்து கொறஞ்ச மாதிரி தான் இருக்கும்னு சொல்லிக்கிட்டாங்க. பஸ் கிளம்புச்சு.  ஐயா இன்னும் 65 கிமி இருக்குன்னு சொன்னார். எப்படியும் பத்து மணிக்கு போயிரலாம்னு மணி சொன்னார். நான் மறுபடியும் ஹெட் போனை மாட்டிட்டு பாட்டு கேட்க ஆரம்பிச்சேன். ஐயா தூங்க ஆரம்பிச்சார். மணியும் தான். கொஞ்ச நேரத்துல நிரூபன்ட்ட இருந்து போன் வந்துச்சு. ஐயாவும் , மணியும் அவர் கிட்ட பேசினாங்க. எல்லா பஸ்சும் எங்க பஸ்ஸ முந்திட்டு போச்சு. வேற வழி ஏறி உட்கார்ந்தாசே... அனுபவிக்க வேண்டியது தான் என ஐயா சொன்னார். அப்புறம் ஒரு வழியா நெல்லை வந்து சேர்ந்தோம். டவுன் பஸ் பிடிச்சு நெல்லை சந்திப்புல இறங்கினோம். மணி கரெக்டா பத்து. அப்புறம் ஜானகிராமன் ஹோட்டல் எங்கேன்னு விசாரிச்சுட்டு போனோம். மணி பத்து பத்து. ரொம்ப பசி வேற... பக்கத்துல இருந்த ஹோட்டல்ல சாப்பிட்டு சந்திப்பு நடகிற ஹாலுக்கு சென்றோம். அப்புறம் தான் என்ன நடந்துச்சுன்னு மொத ரெண்டு பதிவு போட்டிருக்கேனே... அத படிச்சுக்கங்க.....

நெல்லையில் பதிவர்களின் சந்திப்பு! சந்தோஷ பகிர்வுகள் (பாகம் 1)

நெல்லையில் பதிவர்களின் சந்திப்பு! இனிமையான பகிர்வுகள் (பாகம் 2)


  சரி, சந்திப்பு முடிஞ்சு மதுரைக்கு வர்றப்ப பதிவு தேத்துற மாதிரி விஷயங்கள் இருந்துச்சான்னு கேட்கறிங்களா? ம்ஹும்.. நத்திங்.... 


37 கருத்துரைகள்:

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

ஹா ஹா பதிவு பஞ்சர் ஆகிடுச்சுன்னு யாரும் சொல்ல முடியாது.. ஏன்னா பதிவே பஞ்சர் பற்றித்தானே ஆஹா என்னே ஒரு ஐடியா

செல்ல நாய்க்குட்டி மனசு said... Best Blogger Tips

இவ்வளவு கஷ்டப்பட்டா வந்தீங்க. சொல்லவேயில்ல .... by pass rider ல ஏறியிருக்கணும் அப்போ தான் சீக்கிரமா வரலாம். ஒண்ணே முக்கால் மணி நேரம் தான் . என்ன காதில புகைவருதா?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்
ரயில்ல வந்திங்களே 25 ம் தேதி தான் அத பற்றி சொல்லுவிங்களோ...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@நாய்க்குட்டி மனசு
ஹி...ஹி... அந்த நேரத்துல பைபாஸ் ரைடர் இல்லையே அக்கா... அது வர்ற வரைக்கும் வெயிட் பண்ணியிருக்கனும்னு சொல்றிங்களா?

செங்கோவி said... Best Blogger Tips

இவரு பை-பாஸ் ரைடர்ல ஏறினா, அதுக்கும் இதே கதி தானே.

ஷர்புதீன் said... Best Blogger Tips

:-)

Unknown said... Best Blogger Tips

அடப்பாவமே இம்புட்டு கஷ்டப்பட்டீங்களா...
பேசாம வண்டி கட்டிட்டு போயிருக்கலாமோ!

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

அப்பாடா நான் ஒரு தகர டப்பா பஸ்ல ஏறிட்டு பட்ட பாடு இருக்கே, ஆமா இந்த பஸ்'காரனுக எப்பவுமே இப்பிடிதானா...??? இப்பிடித்தான் எப்பவுமா...???

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
எலேய் நக்கலு....

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ஷர்புதீன்
:-)>>>>

ஏனுங்கோ.... என்ன சொல்றிங்க நீங்க?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@விக்கியுலகம்
நேரம்னு ஒன்னு இருக்கே...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ
இந்த பஸ்'காரனுக எப்பவுமே இப்பிடிதானா...??? இப்பிடித்தான் எப்பவுமா...???>>>>>>>

இப்படிதான் அப்படி... அப்படிதான் இப்படி...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

அடடா பதிவர் சந்திப்புலதான் சுவாரசியம்னு பார்த்தா, அதுக்காப்ன பயணம், அதவிட இண்டெரெஸ்ட் ஆக இருக்குதே!

கூடல் பாலா said... Best Blogger Tips

மதுரை பதிவர்களுக்கு வந்த சோதனையா ?

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

இன்னும் இதை பற்றி எத்தனை பதிவுகள் வரும் நண்பா?

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

பேசாம வண்டி கட்டிட்டு போயிருக்கலாமோ! -- மாட்டு வண்டிதானே விக்கி..

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

பேசாம வண்டி கட்டிட்டு போயிருக்கலாமோ! -- மாட்டு வண்டிதானே விக்கி..

Anonymous said... Best Blogger Tips

சோதனை தாண்டி வெற்றி கண்ட பாண்டிய மைந்தன் .......... ( சகோ ஓகே வா சொல்லி குடுத்த அப்பிடியே சொல்லிட்டேன் )

கடம்பவன குயில் said... Best Blogger Tips

பதிவர்கள் சந்திப்புதான் சுவாரஸ்யம் என்றால் பயணம் ஆரம்பித்ததே படுசுவாரஸ்யமாக இருக்கிறதே.
பொரிகடலையை வாங்கித்தின்றுகொண்டே பொடிநடையாய் போயிருந்தாலும் சீக்கிரம் போயிருக்கலாம் போல.

சிநேகிதன் அக்பர் said... Best Blogger Tips

ஹா ஹா ஹா செம காமெடி.

இது மாதிரி சூழல் காஞ்சிபுரத்திலிருந்து நாகப்பட்டிணம் போகும் போது இதே அரசு விரைவு பேருந்தில் ஏற்பட்டுச்சு.

ஆட்டோக்காரன் கூட முந்திட்டு போனான் :)

சசிகுமார் said... Best Blogger Tips

அவனவன் பஸ் பஞ்சராகி விட்டதேன்னு கவலையில இருந்தா உனக்கு போட்டோ கேக்குதான்னு எவனாவது ரெண்டு விட்டிருந்தா என்ன பண்ணி இருப்ப மாப்ள ஹி ஹி

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அடடா பதிவர் சந்திப்புலதான் சுவாரசியம்னு பார்த்தா, அதுக்காப்ன பயணம், அதவிட இண்டெரெஸ்ட் ஆக இருக்குதே!>>>

இருக்காதே பின்ன...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@koodal bala
மதுரை பதிவர்களுக்கு வந்த சோதனையா ?>>>>

ஆமாய்யா

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!
இன்னும் இதை பற்றி எத்தனை பதிவுகள் வரும் நண்பா?>>>

ஹா...ஹா... எனக்கே தெரியல நண்பா..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@கல்பனா
சோதனை தாண்டி வெற்றி கண்ட பாண்டிய மைந்தன் .......... ( சகோ ஓகே வா சொல்லி குடுத்த அப்பிடியே சொல்லிட்டேன் )>>>>

கரெக்டா சொல்லிட்டிங்க... தப்பு இல்லாம...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@கடம்பவன குயில்
ஹி...ஹி... காலையிலே பொரி கடலையா...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@சிநேகிதன் அக்பர்
ஆட்டோக்காரன் கூட முந்திட்டு போனான் :)>>>>

சரியா சொல்லுங்க... ஆட்டோ முந்திட்டு போச்சா... இல்லை ஆட்டோக்காரன் முந்திட்டு போனானா?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@சசிகுமார்
அண்ணே! போட்டோ எடுத்தப்ப எவனும் பாக்கல... கண்டக்டரை தவிர...மீ எஸ்கேப்.

இம்சைஅரசன் பாபு.. said... Best Blogger Tips

Reverse பதிவு ...எல்லோரும் முதல் ல வீட்டுல இருந்து கிளம்பியத எழுதுவாங்க ..இவரு கடைசியா முடிச்சிருக்காறு

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

இன்னிக்கு பஸ்ஸை வசசி பதிவை ஓட்டியாச்சி...


உண்மையில் சில அனுபவங்கள் நம்மால் மறக்க முடியாது....

அதில் இது ஒன்று...
எனக்கு இதுமாதிரி நிறைய அனுபவங்கள் இருக்கிறது..

Kousalya Raj said... Best Blogger Tips

நெல்லைக்கு வந்ததில் உங்களுக்கு இவ்வளவு அவஸ்தையா ??

ஆனா இது எதையும் சந்திப்பின் போது நீங்க சொல்லவில்லையே...!

எது எப்படியோ நெல்லையை நீங்க அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டீங்க !! :)))

Prabashkaran Welcomes said... Best Blogger Tips

பஸ் மெதுவா போனது நல்லதுதான் ஒரு பதிவு எழுதியாச்சே .பார்த்து தொடரும் தொடரும் அப்படினு சொல்லி மெகா சீரியல் ஆகிடாதிங்கா ஹா ஹா

cheena (சீனா) said... Best Blogger Tips

பரவால்ல பிரகாஷ் - அபார நினைவாற்றல் - அத்தனியும் ஒண்னூ விடாம் எழுதிட்டேயே- அத்தமகளத் தவிர - ம்ம்ம்ம்ம்ம் - பலே பலே - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

நிரூபன் said... Best Blogger Tips

பதிவர் சந்திப்பிற்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட நிகழ்வுகளைச் சுவைபடத் தொகுத்து எழுதியிருக்கிறீங்க சகோ.

விதியின் விளையாட்டானது இங்கே அரசுப் பேருந்து வடிவில் என நினைக்கும் போது எரிச்சலாக இருக்கிறது.

எப்போது தான் சீரான போக்குவரத்தினை வழங்குவார்களோ என்று ஏக்கத்தை உருவாக்குகிறது,..

Mahan.Thamesh said... Best Blogger Tips

இவ்வளவு சிரமத்தில தான் போய் இருக்கீங்க . அத சுவைபட எழுதி இருக்கீங்க

J.P Josephine Baba said... Best Blogger Tips

ஆகா.....நெல்லை வந்து சேர இவ்வளவு சோதனை வேதனைகளா?

nellai ram said... Best Blogger Tips

Slow Express Transport Corporation

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1