ரோட்டோர கடைகளில் (அங்கு மட்டுமா?) சில்லி சிக்கன், சிக்கன் 65 போன்ற சிக்கன் வகையறாக்களை சாப்பிடுபவரா நீங்கள். அந்த மாதிரியான கடைகளில் என்னென்ன வகைகளில் கலப்படம் செய்கிறார்கள் என தெரியுமா? பழைய எண்ணையை உபயோகிப்பார்கள், அல்லது மசாலாக்களில் கலப்படம் இருக்கலாம் என நினைக்கலாம், நீங்கள் நினைப்பது சரி தான் ஆனால் சிக்கனிலேயே கலப்படம் செய்கிறார்கள். என்ன, செத்த கோழியை யூஸ் பண்ணியிருப்பாங்க என சொல்றிங்களா? அப்படி இருந்தா தான் பரவாயில்லையே.
சிக்கனுக்கு பதிலாக என்ன உயிரினம் கலப்படம் செய்யப்படுகிறது என உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் நீங்கள் சிக்கன் சாப்பிடுவதையே நிறுத்தி விடுவீர்கள். சிக்கனுக்கு பதிலா எலிக்கறி கலப்படமாக சேர்க்கப்படுகிறது. என்ன நண்பர்களே, அதிர்ச்சியா இருக்கா? ஆமாம், எலிக்கறி தான் சேர்க்கப்படுகிறது.
எப்படி எலி கிடைக்கிறது?
மளிகை கடைகள் இருக்கும் மார்க்கெட்டில் எலிகள் அதிகமா இருக்கும். சாக்கு மூட்டைகளுக்கு இடையில், டின்களுக்கு இடையில், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். கடைக்காரர்கள் அந்த எலிகளை பிடிப்பதில் அவ்வளவா ஆர்வம காட்டுவது கிடையாது. அப்புறம் யார் பிடிக்கராங்கன்னு கேட்கறிங்களா? சில்லி சிக்கன் விக்கிற ஆளுங்க பிடிக்கறாங்க. காலையில அஞ்சு மணிக்கெல்லாம் மார்க்கெட்டுக்கு போயிருவாங்க, ஏற்கனவே எலிகளை பிடிக்க பொறிகளை மொத நாளே வச்சிருப்பாங்க. அரிசி பருப்பை தின்னு நல்லா கொழுகொழுன்னு எலிகள் அந்த பொறிகளில் மாட்டி இருக்கும். கடைக்காரங்களுக்கு எலித்தொல்லை இல்லாம இருந்தா போதும்னு சந்தோசப்படுவாங்க.
சிக்கனுக்கும், எலிக்கும் என்ன வித்தியாசம்:
வெந்த சிக்கனை பிச்சு பாருங்க, வெளுமையா இருக்கும், நார் போல நீள நீளமா இருக்கும். ஆனா எலிக்கறியை பிச்சு பார்த்தா கொஞ்சம் பழுப்பு நிறமா இருக்கும். சதையும் சிக்கனை போல சற்று நார் நாராக இல்லாமல் நல்ல மிருதுவாக கட்டி கட்டியா இருக்கும். கொஞ்சம் கவனமா பார்த்தா வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.
என்ன நண்பர்களே! கடைசியா நீங்க ரோட்டோர கடைகளில் சாப்பிட்டது சிக்கனா? எலியா? யோசிங்க...
டிஸ்கி: இந்த செய்தி உண்மையே. திண்டுக்கல்லில் நடந்த உண்மை சம்பவம்.
31 கருத்துரைகள்:
கடைசியா நீங்க ரோட்டோர கடைகளில் சாப்பிட்டது சிக்கனா? எலியா? // அதைத்தான் நானும் உன்கிட்ட கேக்குறேன்..
மதுரைய விட்டு உன்ன யாருய்யா திண்டுக்கலுக்கு போய் சாப்பிட சொன்னது அதுவும் ரோட்டோர கடையில
காசு கம்மியா கொடுத்தா இப்படித்தான் போடுவாங்க...
தகவல் ஏற்றுக் கொள்ளப்பட்டது..
Acceptance of information ..
உடலுக்கு நல்லது எலிக்கறியா? சிக்கன் கறியா?
கொடும கொடும எண்டு கொட்டலுக்கு போனால் அங்க ஒரு கொடும எலிக்கறி தின்னுது ஹிஹிஹி
//சதையும் சிக்கனை போல சற்று நார் நாராக இல்லாமல் நல்ல மிருதுவாக கட்டி கட்டியா இருக்கும்.// நீங்க சொல்றதைப் பார்த்தா சிக்கனை விட எலி நல்லா டேஸ்ட்டா இருக்கும் போலிருக்கே..கடை அட்ரஸ் ப்ளீஸ்.
கோழி கடைல கிடைக்கும்..எலி பிடிக்கிறது எவ்ளோ கஷ்டம்..உங்களுக்காக கஷ்டப்பட்டு பிடிச்சு ஒருத்தன் 65 போட்டா, குறையா சொல்றீங்க?
எலிக்கறி நமக்கு புதுசா மாப்ள ஹிஹி!
உவ்வே.....கண்றாவி.
வித்தியாசம் கண்டுபிடிக்கிற அளவு பிச்சு தின்னு டேஸ்ட் பார்த்திட்டீங்களா?
எனக்கு இனி சிக்கனே வேண்டாம்டா ஆளை விடுங்கடா சாமிகளா.....
யோவ் நீதான் பரோட்டா கூட மிக்சர் திங்குற ஆளாச்செய்யா...!!!
உடலுக்கு நல்லது எலிக்கறியா? சிக்கன் கறியா?
ஐயையோ!!!... வேண்டாம் சாமி இத இத்தோட விட்டுங்கோ அப்புறம் நிஜமாவே மேசைக்கு எடுத்துடப் போறாங்கள்!...........
நன்றி சகோதரரே பகிர்வுக்கு. மன்னிக்கணும்
"தகவல்" பகிர்வுக்கு........ஹி....ஹி...ஹி..
எலிக்கறி சாப்பிடுறது குத்தமா? இல்ல அத சிக்கன்ல கலப்படம் பண்றது குத்தமா?
யாராச்சு சொல்லுங்க???
காட்டுல புடிக்கற எலி நல்லா தான் இருக்கும் நான் சாப்பிடிருக்கேனே...
அதுவும் இல்லாம ஒரு எலிய 6 பீசுக்கு மேல கட் பண்ண முடியாது....
இதுல எங்க 65 ல மிக்ஸ் பண்றது?????
//உடலுக்கு நல்லது எலிக்கறியா? சிக்கன் கறியா?//
same..................
ஒரு கிலோ செத்த கோழி 20 rs அதிகபட்சமா ....
எவ்ளோ பெரிய எலியா இருந்தாலும் 300 கிராம்க்கு மேல கறி வராது....
ஒரு கிலோவுக்கு எப்டியும் 3 எலி வேணும் இது எப்டிங்க மிக்ஸ் பண்ண முடியும்... விக்கற கூலி கூட கிடைக்காது...
இங்க செத்த கோழின பண்ணைல நோய் வந்து பாதில செத்து போற கோழி....
@!* வேடந்தாங்கல் - கருன் *!
நான் ரோட்டோர கடைகளில் சாப்பிடுறது கிடையாது கருண்
@சசிகுமார்
என் சொந்த ஊர்ல நடக்கற அவலம் எனக்கு தெரியாதா?
@koodal bala
உடலுக்கு நல்லது எலிக்கறியா? சிக்கன் கறியா?>>>>
நீங்க சாப்பிட்டு பார்த்து முடிவு பண்ணிக்கங்க
@கந்தசாமி.
கொடும கொடும எண்டு கொட்டலுக்கு போனால் அங்க ஒரு கொடும எலிக்கறி தின்னுது ஹிஹிஹி>>>>>>
டயலாக் நல்லா இருக்கே...
@செங்கோவி
சிக்கனை விட எலி நல்லா டேஸ்ட்டா இருக்கும் போலிருக்கே..கடை அட்ரஸ் ப்ளீஸ்.>>>>
திண்டுக்கல் குறுக்கு சந்து,
திண்டுக்கல் மெயின் ரோடு
திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டு அருகில்,
திண்டுக்கல்.
@விக்கியுலகம்
வஎலிக்கறி நமக்கு புதுசா மாப்ள ஹிஹி!>>>>>
எலிக்கறி மட்டுமா? எல்லா விலங்கு கறியும் உங்களுக்கு பழசு தான்.
பிச்சு வேற செக்கு பண்ண சொல்றாங்கையா...அவ்வவ்
டிஸ்கவரில பேர் கிரில்ஸ் சாப்பிடறதவிட, எலிக்கறி பிரமாதமாகத்தான் இருக்கும்.
மாப்ளே, படத்தோடு வேறு பதிவிட்டிருக்கீங்க.
பார்க்கவே வயிற்றை குமட்டுது,
லஞ்ச் டைம்மில போயி இதனை ஞாபகப்படுத்துறீங்களே.
ஹி...ஹி...
எலியை உண்பதால் பிளேக் நோய் வருமாம்...
எலியோ பூனையோ ஒரு கட்டு கட்டுரத விட்டுட்டு போங்க பாஸ் ... :)
என்ன இப்படி ஒரு குண்டைத்தூக்கி போடறீங்கப்பு! ஒரு தரமான கடைப்போடுவதற்குன்னே என்எச்-45ல ஒரு இடம் வாங்கிப்போட்டு.. கடைக்கு பெயரும் கூட தேர்வுசெஞ்சு வச்சிருக்கேன். நானெல்லாம் அப்படி செய்யமாட்டேன். துணிஞ்சு வந்து ஒரு கட்டுகட்டுங்க!
அவனவன் பாம்பு பல்லி,தேளைய் தின்னுபுட்டு இருக்கான்!
அடப்பாவிங்களா... மக்கள் கடைங்கள்ல எதையும் நம்பி திங்க முடியாது போலருக்கே....
உங்களது பதிவுகளை எல்லாமேதமிழ்.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் EllameyTamil.Com
இப்படிக்கு
EllameyTamil.Com