CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



சமச்சீர் கல்வி இந்த ஆண்டே அமல்படுத்தல்! கோர்ட் தீர்ப்பு - வீடியோ இணைப்பு.

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
அட்ரா சக்க சி.பி செந்திலின் பேட்டியின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்
******************************************
     1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டில் இருந்தே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
      மேலும் சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ்  வரும் 22-ம் தேதிக்குள் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும், அதில் திருத்தங்கள் செய்ய வேண்டும் எனில் ஒரு குழுவை அமைத்து 3 மாதங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு சமச்சீர் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி கடந்த கல்வியாண்டில் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. பிற வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட இருந்தது.      இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றது. இந்தக் கல்வியாண்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்த புதிய அரசு, அதற்காக சமச்சீர் கல்விச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது.     இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் சட்டத் திருத்தத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.அப்போது, 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 10-ம் வகுப்பு வரையிலான பிற வகுப்புகளைப் பொருத்தவரை, தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஆராய வேண்டும் என்றும், அந்த நிபுணர் குழுவின் அறிக்கை மீது சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.              இதன்படி கடந்த ஜூன் 17-ம் தேதி 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழுவின் அறிக்கை கடந்த ஜூலை 5-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு சமச்சீர் கல்வி விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர்.தங்களது தீர்ப்பில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டில் இருந்தே 
அமல்படுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.




நன்றி: தினகரன், கலைஞர் செய்திகள்


19 கருத்துரைகள்:

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

செய்திக்கு நன்றி மாப்ள!

ம.தி.சுதா said... Best Blogger Tips

கல்வி தான் முக்கிய ஆணிவேர் அதை கட்டியெழுப்பினாலே ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பலாம் சகோ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

கூடல் பாலா said... Best Blogger Tips

அரசியல்வாதிகளின் பிடிவாதத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது ....

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

நீதி மன்றத்தின் செயவ்பாடுகள் பராட்டும்வண்ணம் உள்ளது...

நிரூபன் said... Best Blogger Tips

வரவேற்கத்தக்க விடயம். அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையுள்ளது என்று பொறுத்திருந்து பார்ப்போம். பல ஏழை மாணவர்களுக்கு மீண்டும் ஒளி பிறந்தது போன்ற மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

Unknown said... Best Blogger Tips

செய்திக்கு நன்றி மாப்ள! -முதல் கமன்ட் என்னோடது

M.R said... Best Blogger Tips

நல்ல தீர்ப்பு .

பகிர்வுக்கு நன்றி நண்பரே

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

post publish'kku thanks vikki maams

Unknown said... Best Blogger Tips

எப்படியோ நல்லது நடந்தா சரிதான்

Anonymous said... Best Blogger Tips

நல்லதே நடந்தால் நன்று...

செங்கோவி said... Best Blogger Tips

வீடியோவா?..இதுக்கு எதுக்குய்யா வீடியோ? எழுதுனாப் போதாதா?

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி.

சசிகுமார் said... Best Blogger Tips

திரும்பவும் இந்தம்மா உச்சநீதி மன்றத்துல மேல் முறையீடு செய்வாங்க.. என்ன #$%$#@#@% சட்டம்டா இது

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

மாப்ள நடத்து,,
பரப்பரப்பான செய்தி..

Unknown said... Best Blogger Tips

புது சூடான செய்தி மாப்பு!!
ஹிஹி விக்கி குழப்பிட்டார் முதல் கமேன்ன்டில்!

Anonymous said... Best Blogger Tips

சி பி பெட்டிக்கு பிறகு அடுத்த பதிவுக்கு ஆறுதல் பரிசு தான்...தமிழ்வாசி...

Anonymous said... Best Blogger Tips

சி பி பேட்டிக்கு பிறகு அடுத்த பதிவுக்கு ஆறுதல் பரிசு தான்...தமிழ்வாசி...

cheena (சீனா) said... Best Blogger Tips

ம்ம்ம்ம்ம்ம் பரவால்ல - பேப்பர் டிவி ஒண்ணூலே கூட ஏதாச்சும் வந்துரக் கூடாத - உடனே ஒரு பதிவு - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

மாய உலகம் said... Best Blogger Tips

பகிர்வுக்கு பாராட்டுங்கோ ங்கோ ங்கோ

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1