ஸ்ரீ பத்மனாபஸ்வாமி கோவில்:
கடந்த சில நாட்களாக ஸ்ரீ பத்மனாபஸ்வாமி கோவிலில் லட்சக்கனக்கான மதிப்புள்ள கோவில் சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சொத்து மதிப்பு ரூ 1,00,000 கோடி. கோல்டன் பட்டம், 17 கிலோ தங்க நாணயங்கள், 2.5 கிலோ எடையுள்ள 18 அடி நீண்ட தங்க நகை, தங்க கயிறுகள்,வைர நகைகள், பழமையான ஆயிரக்கணக்கான நகைகள் துண்டுகள் மற்றும் தங்ககுழாய்கள் போன்ற பொக்கிசங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரர்:
ஆண்டு தோறும சுமார் ரூ 650 கோடி வருமானம் பெறும் திருப்பதி பாலாஜி இந்தியாவின் இரண்டாவது பணக்கார கடவுள். கோவிலின் தங்கம் 3000 கிலோ, ரூ 1000 கோடி ரூபாய் பணம் பல்வேறு வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. ரூ 300 கோடி, 350 கிலோ தங்கம் மற்றும் நன்கொடைகள், 500 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் நன்கொடையாக பெறப்படுகிறது.
ஸ்ரீ சாயி சன்ஸ்தான் ஷீரடி:
மகாராஷ்டிரா ஷீரடியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா கோவில் பணக்காரகோவில்களில் ஒன்றாகும். ரூ. 32 கோடி முதலீடுகள், 450 கோடிக்கும் அதிகமான தங்க நகைகள் மற்றும் கோவில் நம்பிக்கை ரூ 1,288 கோடி மற்றும் ரூ 1,123 கோடி மதிப்புள்ள தங்க பதக்கங்கள், ரூ 6,12 லட்சம் மதிப்புள்ள தங்கநாணயங்கள், ரூ 3.26 கோடி மதிப்புள்ள வெள்ளி நாணயங்கள் கொண்டிருக்கிறது. ஆண்டு வருவாய் சுமார் ரூ 450கோடி உள்ளது.
மாதா வைஷ்ணவ தேவி:
திருப்பதி பாலாஜி பிறகு நாட்டின் இரண்டாவது அதிக விஜயம் செய்யும் கோவில் இது. ஜம்மு காஷ்மீர் கட்ரா அருகே உள்ளது. வைஷ்ணவ தேவி கோவில் ரூ.500கோடி ஆண்டு வருமானம் கொண்டிருக்கிறது. ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோவில் வாரியம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது, கோவிலில் ரூ 40 கோடி தினசரி வருமானம் கிடைகிறது.
சித்தி விநாயகர் கோவில்:
மகாராஷ்டிரமாநிலத்தில் மும்பை மைய பகுதியில் அமைந்துள்ள, இரண்டாவது பணக்கார கோயில் இது. ரூ 46 கோடி ஆண்டு வருமானம் கொண்டிருக்கிறது மற்றும் நிரந்தர வைப்பு நிதி ரூ 125 கோடி உள்ளது. பக்தர்களால் பிரபலமான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நன்கொடைகள் ரூ 10-15 கோடி வசூல் ஆகிறது. ஸ்ரீ சித்தி விநாயகர் கணபதி கோயில் அறக்கட்டளை கோவில் சொத்துக்களை மார்ச் 2009 ஆண்டு வரை கணக்கிட்ட போது சுமார் 140கோடி சொத்துகள் இருந்தது.
குருவாயூர் கோவில்:
கேரளா தேவஸ்தானம் வாரியத்தின் கீழ் ஒரு ஒன்பது உறுப்பினர் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்படும் இக் கோவில் தென் இந்தியாவில் மிக புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் ஆகும். ஆண்டுதோறும்ரூ 2.5 கோடி வருமானம் கிடைகிறது.நிரந்தர வைப்பு நிதி சுமார் ரூ 125 கோடி உள்ளது. உதயஸ்த்தமான பூஜைக்கு 2049 நபர்கள் காத்திருப்பில் உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. அந்த பூஜைக்கு ரூ 50000 செலவாகிறது.
32 கருத்துரைகள்:
பிரசாதம் எனக்கே.
பணக்கார கோயில்களா? அப்போ அங்க வர்றவங்களுக்கு கோவில் வாரியம் காசு கொடுக்குதா?
சபரிமலை அய்யப்பன் இந்த லிஸ்ட்ல வர மாட்டாரா?
ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடியுடன் சம்பந்தப்பட்ட அறிவாலயம் ஏன் இந்த லிஸ்ட்ல வரலை?
பாவம் தமிழ்வாசி அண்ணை கமெண்ட் பண்ணி களைத்து நித்திரையாச்சு போல!
செங்கோவி said...
ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடியுடன் சம்பந்தப்பட்ட அறிவாலயம் ஏன் இந்த லிஸ்ட்ல வரலை?//
ஆமா இவரு ரமணா விஜயகாந்து, பெரிய லிஸ்டு வைச்சிருப்பார் போல..
பதிவு நன்னாயிருக்கு, கோயில் கோபுரம் தங்கத்திலை சட்டை போட்டிருக்கு, இடுப்பில ஒரு பழைய துணி கட்ட முடியாம நிறைய ஏழைங்க இருக்காங்க..
nalla pakirvu... vaalththukkal
யப்பா , ஏன் இப்படி எல்லோரும் கோவிலுக்கு அள்ளி கொடுக்கிறாங்க???
இந்த பணத்தில் கொஞ்ச பணத்தை கோவிலை சுற்றி உள்ள பிரதேச அபிவிருத்திக்கு கொடுத்து உதவலாம் தானே...
கூகிளுக்கு ஏன் இந்த வேலை?????
Voted 3 to 4
சாமியின் வரவு செலவுகள் ஒரு சில ஆசாமிகளின் வரவு செலவுகளைப்போலவே மிகவும் பிரமிக்க வைப்பதாக உள்ளன.
நல்ல அருமையான தகவல்கள்.
”காசே தான் கடவுளடா” என்று சும்மாவா பாடியிருப்பார்கள்?
வை.கோபாலகிருஷ்ணன் சார் சொன்னது போல்... காசே தான் கடவுளடா பாடல் முனுமுனுக்க தோன்றுகிறது
ஹேய் பிரகாஷ் - தகவல்களைத் தேடிப்பிடித்து - ஒரு பதிவு ஆக்கிட்டே -நல்லாவே இருக்கு - பலே பலே ! நட்புடன் சீனா
அருமையான தகவல்கள்.
இப்போவே கண்ணைக் கட்டுதே, இன்னும் பாக்கி எண்ணி முடிக்க வேண்டி இருக்குதே !
அசத்தல் பதிவு பாஸ்! கண்ணைக்கட்டுது!!
அட நான் நினைத்தேன் திருப்பதி சாமிதான் பணக்கார சாமியென்னு அவர்தான் காசோட போறவங்கள மொட்டையடித்து நாமம் போட்டுவிடுவார்..!
காட்டான் குழ போட்டுட்டான்..
அருமையான படைப்பு என்ன நம்ம வீட்டுப்பக்கம் ஆள காணல
கோவிலிலும் (சாமிக்கும் )உண்டு பணக்கார ஏழை பாகுபாடு .
வேறு என்ன சொல்றது நண்பரே.
நன்றி நண்பா பகிர்வுக்கு .
நன்றி!
பணக்கார சாமிகள் பட்டியல்
இவ்வளவு தானா..?
அப்போ, நடுத்தர சாமிகள்,
ஏழை சாமிகள் பட்டியல் வருமா..?
புலவர் சா இராமாநுசம்
//மாதா வைஷ்ணவ தேவி: //
புள்ளி விவரதுல இந்த கோயில் எங்க இருக்குன்னு சொல்லல நண்பா. பதிவு நல்லா இருக்கு
கேப்டனை மிஞ்சிடுவீங்க போல இருக்கே?
பயபுள்ள பக்திமானா ஆகிட்டாரே?
நல்ல தகவல்கள் ஆன்மீகத்திற்கு கொடுப்பவர்கள் கொடுக்கிறார்கள் நிர்வகிப்பவர்கள் சிறந்த சேவை செய்யலாம் அதற்கும் மனம் வரனுமே !
தீராநதி விமர்சனம் தனிமரத்தில் நேரம் இருந்தால் வாங்க பிரகாஸ்!
அரிய தகவல்கள் ...நன்றி !
இன்னும் இருக்கிற கோயிலையெல்லாம் தோண்டிப்பார்த்து எது பெரிசுன்னு சொல்ல வேண்டியதுதான்...
எந்தந்த கோயில்ல எவ்வளவு புதயல் இருக்கிறதே...
அருமையான தகவல் நன்றி சகோ.....
நான் போட்ட கோடிகள்லாம் கணக்கிலேயே வரலையே...
'லபக்'கிட்டீங்களா தமிழ்வாசி..
பணக்காரக் கோயில்கள் பற்றிய தகவல் புதிதாக இருந்தாலும், படிக்கையில் ஆத்திரமும், கோபமும் தான் வருகின்றது. ஆன்மீகத்தின் பெயரால் இத்தனை கோடி சொத்துக்களை வைத்துக் கொண்டா, இந் நாட்டில் ஏழைகள் வாழும் போது பாராமுகமாய் இருக்கின்றார்கள்(((((:
@KANA VARO
ஓ...நீங்க கருணாநிதி,முரசொலி மாறன் குடும்பம்,டி.ஆர் பாலு,வீரபாண்டி ஆறுமுகம்,கோ.சி.மணி, இவங்க குடும்பத்த சொல்லறீங்களா அண்ணாச்சி.அதெல்லாம் பழைய கதை.இப்ப அவங்க கோடி,கோடீஸ்வரங்க அண்ணாச்சி..