கர்நாடகாவில் கடந்த சில ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த சட்டவிரோதச் சுரங்கம் தொடர்பான லோக் ஆயுக்தா நீதிமன்றத்தின் அறிக்கை மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட்டவுடனே அந்த மாநில அரசியலில் மீண்டும் பரபரப்பு பற்றிக் கொண்டது. கர்நாடகாவில் பெல்லாரி, தும்கூர் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் விதிகளுக்கு புறம்பான சட்ட விரோத இரும்புச் சுரங்கங்கள் மாநில முதலமைச்சர் எடியூரப்பா ஆசியுடன் மாநில கனிம வளத்தை சுரண்டி வருவதாக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தனது பரிந்துரையில் தெரிவித்து விட்டார்.
சுமார் 25 ஆயிரம் பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையில் 300 பக்கங்களில் அவர் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளார். சட்டவிரோதச் சுரங்கங்களை நடத்திவரும் முக்கிய புள்ளிகளான ரெட்டி சகோதரர்கள் இருவர், எடியூரப்பா அமைச்சரவையிலேயே முக்கிய அமைச்சர்களாக உள்ளனர். ஒருவர் கருணாகர ரெட்டி, மற்றொருவர் ஜனார்த்தன ரெட்டி. ஒரு அரசின் அமைச்சரவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சகோதரர்கள் இடம் பெற்றிருப்பது இந்திய அரசியல் வரலாற்றில் கர்நாடகாவில் தான். அவர்கள் வெறும் அமைச்சர்கள் மட்டு மல்ல. மாநில அரசையே தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஆட்டிப்படைத்து வருபவர்கள். சுருக்கமாக சொன்னால் தென்னிந்தியாவின் முதல் பாஜக அரசே இந்த சுரங்க கொள்ளையர்களின் வழி காட்டுதல்படி தான் நடந்து வந்தது. இதற்கு பாஜக தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோரின் ஆசியும் உண்டு.
ஒரு கட்டத்தில் ரெட்டி சகோதரர்களுடன் மோதல் முற்றி சட்டவிரோதச் சுரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக முதல்வர் மிரட்டிய போது, மேலிடத்தின் சமரசம் காரணமாக பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டது. இதன் பின்னர் ரெட்டி சகோதரர்களிடமிருந்து முதல்வருக்கும் அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் அறக்கட்டளைக்கும் கணிசமான தொகை கிடைக்கத் துவங்கியவுடன் அவர்களது கொள்ளைக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கியது போல் ஆகிவிட்டது. இதனால் தான் அவர்கள் 2006 முதல் 2008 ஆம் ஆண்டுவரை சுமார் 16 ஆயிரத்து 85 கோடி ரூபாய் அளவுக்கு மாநில அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக எடியூரப்பா மீதும் ரெட்டி சகோதரர்கள் மீதும் லோக்ஆயுக்தா குற்றம் சாட்டியுள்ளது. இதில் நேரடியாகவே முதல்வர் எடியூரப்பா ஆதாயம் அடைந்துள்ளதாகவும் அதற்காக அவரது குடும்பத்தினர் நடத்திவரும் அறக்கட்டளைக்கு ரூ.30 கோடி ரூபாய் நன்கொடை என்ற பெயரில் வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அறிக்கை வெளியாகி விட்டதால் வேறு வழியில்லாமல் எடியூரப்பாவை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு கட்சியின் மேலிடம் பணித்துள்ளது. தற்போதைக்கு இதை விட்டால் அவர்களுக்கு வேறு வழியில்லை. இருந்தாலும் முதல்வரை மாற்றுவதால் மட்டும் இந்த ஊழலை மூடி மறைத்து விட முடியாது.
இந்த ஊழலுக்கு முக்கிய காரணகர்த்தாக்களான ரெட்டி சகோதரர்களையும் அமைச்சரவையில் இருந்து நீக்கி, ஊழல் வழக்குகளை சந்திக்க வேண்டும். பாஜக தலைமை இதைச் செய்யாமல் ஆட்களை மட்டும் மாற்றி ஏமாற்ற முயன்றால் அடுத்த தேர்தலில் மக்கள் நல்ல பாடத்தை கற்றுக்கொடுப்பர். அரசுக் கட்டுப்பாடுகள் எல்லாம் விலக்கிக் கொள்ளப்பட்டு, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் அமலுக்கு வந்த பின்னர் நாட்டில் ஊழல்களுக்கும் முறைகேடுகளுக்கும் பஞ்சமில்லை. இதில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் விதிவிலக்கு அல்ல.
11 கருத்துரைகள்:
எப்பூடி எல்லாம் கொள்ளையடிக்கிறாங்க !!! எண்ணில எழுத முடியாத தொகை ...!!!
இந்த எடி ஆட்சிக்கு வந்தப்போ பிரம்மச்சாரி-சொக்கத் தங்கம்னு சில அறிவுஜீவிங்க எழுதுனது ஞாபகம் வருது.
ஏன் இப்படி செல்கிறது இந்த அரசியல்...
வாழ்க ஜனநாயகம்...
இது தெரிஞ்சது மட்டும் தான்,
தெரிந்தது கைஅளவு இன்னும் தெரியாதது எவ்வளவு!!??
டாஸ் போட்டு பாக்கலாமா?
ஒரு கட்சி ஊழல் பண்ணுனா அடுத்த கட்சிக்கு ஒட்டு போடலாம் .......இப்படி எல்லா கட்சி காரங்களும் ஊழல் பண்ணுனா எங்க ஓட்ட எங்கய்யா கொண்டு போடுறது ...
மாப்ள பகிர்வுக்கு நன்றிங்கோ!
வாய் கிழிய பேசுறாங்க. கடைசில இவிங்க முதுகுலயும் அழுக்கு.
என்ன கொடுமை சரவணா...இதிலையும் ஒப்பீடா ஹிஹி
அடப்பாவிகளா.. இப்படி கொள்ளையடிக்கிறான்களே... மச்சி டூ மச்சி
அடப் பாவிகளா... இப்படியுமா கொள்ளையடிக்கிறாங்க