கோபாலு: எவன்யா காலங்காத்தால தூங்க கூட விடாம, சே...சே.... நமீதா கனவுல வந்து என் கையை பிடிச்சா? அதுக்குள்ள எவனோ எழுப்பிட்டான், யாரது கூப்பிட்டது?
தனபாலு: டேய், மணி பத்து ஆகுதடா, மர மண்டையா, நான் தான்டா கூப்பிட்டேன். நமீதா உன் கையை பிடிச்சா கூடவே போயிருவியா.... ஏண்டா ஒரு முக்கியமான வேலை இருக்கு. காலையில சீக்கிரமா கிளம்பி ரெடியா இருன்னு சொன்னேன்ல...
கோபாலு: அண்ணே, திட்டாதிங்க, நமீதா ஞாபகத்துல மறந்துட்டேன். இதோ ஒரு அரை மணி நேரத்துல கிளம்பிருறேன். கோச்சிக்காதிங்க...
தனபாலு: சரி வெயிட் பண்றேன், அந்த டி விய போட்டுட்டு போடா...
கோபாலு: இந்தாங்கண்ணே ரிமோட்டு, நீங்களே உங்களுக்கு பிடிச்சத பார்த்துக்கங்க.
தனபாலு: சீக்கிரம் வாடா, டைம் ஆகுது. சே.... டிவிய போட்டாலும் நமீதா பாட்டு தான் வருது.
கோபாலு: அண்ணே ரெடியாயிட்டேன். போகலாமா?
கோபாலு: ம்ஹும். இன்னைக்கு மட்டுமா சைக்கிள் மிதிக்கிறேன். உங்க கூட எப்ப பழக ஆரம்பிச்சேன்னோ அப்ப இருந்து நான் தான் சைக்கிள் மிதிக்கிறேன், நீங்க சொகுசா பின்னால உட்கார்ந்து சைட் அடிச்சிட்டு வருவீங்க.
தனபாலு: சரி சரி பேச்ச விடு. ஏதாவது முக்கியமான விஷயம் இருக்கா?
கோபாலு: கர்நாடகா முதலமைச்சரா இருந்த எட்டியூரப்பா ஊழல் பன்னுதா புகார் கிளம்புச்சுள்ள, அவரை கட்சி மேலிடம் ராஜினாமா பண்ண சொன்னாங்களாம், அவரும் ராஜினாமா பண்ணிட்டாரு.
தனபாலு: அவரு தான்யா மனுஷன். ஊழல் பண்ணியிருக்காரோ இல்லையோ, புகார் வந்த உடனே ராஜினாமா பண்ணிட்டாரே, நம்ம ஊருலயும் தான் ஊழல் பண்ணினதா சொல்றாங்க. ஆனா யாருமே ராஜினாமா பண்ண மாட்டிங்கறாங்க. மக்களா பார்த்து அவங்கள தூக்கி எறிய வேண்டியிருக்குடா.
கோபாலு: ஆமாண்ணே... நீங்க சொல்றது சரி தான்... அண்ணே மும்பைய திணறடிச்ச தீவிரவாதி கசாப் இருக்கான்ல, அவன் தூக்கு தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு பண்ணியிருக்கானாம். அவனுக்கு இந்த அளவுக்கு இடம் தரக் கூடாது அண்ணே.
தனபாலு: ஆமாண்டா. இந்நேரம் அவன ஒண்ணுமில்லாம ஆக்கியிருக்கணும். நம்ம சட்டம் அவ்வளவு கடுமையா இல்லாம இருக்கு. என்ன செய்ய?
கோபாலு: அண்ணே, நடிகை மீனா வேற ஒருத்தர் கூட ஓடி போயிட்டாங்களாமே கேள்விப்பட்டீங்களா?
தனபாலு: அது கண்ணழகி மீனா இல்லடா, துணை நடிகை மீனா
கோபாலு: அண்ணே, ஐஸ்வர்யா தனுஷை வைத்து ஒரு படம் இயக்குறாங்களாமே, தெரியுமா?
தனபாலு: சொல்ற விஷயத்தை தெளிவா சொல்லுடா, தனுஷ் மனைவி ஐஸ்வர்யா தான் தனுஷை வைத்து டைரக்ட் பண்ண போறாங்க. தனுஷ்க்கு ஜோடியா அமலா பால் நடிக்கிறதா சொல்றாங்கடா.
கோபாலு: தெளிவா தெரியாம தானே உங்களுக்கு தெரியுமான்னு கேட்டேன். அதுக்கு போயி இப்படி சலிச்சுக்கறிங்க.
தனபாலு: டேய் கோபாலு, இந்தியா பர்ஸ்ட் டெஸ்ட் மேட்சுல தொத்ததுக்கு காரணம் ஹர்பஜன் அதிக விக்கெட் எடுக்காதது தான் காரனமாமே. அப்படியா?
கோபாலு: அண்ணே, அவரு மட்டுமல்ல, பேட்ஸ்மேன் யாரும் சரியா விளையாடல. ஜாஹிர்கானுக்கு காயம் வேற... என்ன செய்றது? தோக்கணும்னு இருக்கு தோத்திட்டோம்.
தனபாலு: ஆமாண்டா, எப்படியோ தோத்துட்டாங்க, அடுத்து நடக்கற மேட்ச்சுல ஜெயிக்கணும். பாக்கலாம்.
கோபாலு: அண்ணே, எங்க போகணும்... நான் பாட்டுக்கு சைக்கிள் ஓட்டிட்டு வந்துட்டே இருக்கேன். எடத்தை சொல்லுங்க.
தனபாலு: மீனாட்சி பஜார் போடா. ஏதாவது புது பட சி டி வாங்கலாம்?
கோபாலு: அண்ணே, முன்னாடியே சொல்லியிருந்தா நான் இம்புட்டு தூரம் சைக்கிள் மிதிச்சிருக்க மாட்டேன். சி டி கடை எல்லாத்தையும் மூடி ஒரு மாசத்துக்கும் மேல ஆகுது. அம்மா ஆட்சியில் கடும் நடவடிக்கை எடுத்துட்டாங்க. அதனால ஒரு சி டி கடையும் இல்லை.
தனபாலு: அய்யோ. எப்படி இனி படம் பாக்கிறது? காசு நிறைய செலவு ஆகுமே.... சரி வா வீட்டுக்கு போலாம்
கோபாலு: அண்ணே, வீட்டுக்கு அப்புறமா போலாம். இம்புட்டு தூரம் சைக்கிள் ஓட்டிட்டு வந்திருக்கேன். நீங்க நெனச்ச மாதிரி சி டி யும் வாங்க முடியல, அதனால என்னை ஒரு படத்துக்கு கூட்டிட்டு போங்க.
தனபாலு: டேய் காசு ரொம்ப செலவாகுமே...
கோபாலு: அதெல்லாம் எனக்கு தெரியாது, இங்க பக்கத்துல தங்கரீகல் தியேட்டர் இருக்கு வாங்க அங்க போலாம். நானே சைக்கிள் ஓட்டறேன்.
தனபாலு: இன்னைக்கு எனக்கு மொய் வைக்காம விட மாட்ட? சரி வாடா போலாம். ஓட்டு சைக்கிளை, இனிமே உன்னை சைக்கிள் ஓட்ட சொல்லவே மாட்டேன்.
(இருவரும் தங்கரீகல் தியேட்டருக்கு போகிறார்கள்.)
டிஸ்கி: ஒரு சேஞ்சுக்கு இந்த முறை நடிகர்கள் படம் போட்டிருக்கேன். யாரும் எம்மேல கோவப்படாதீங்க.
27 கருத்துரைகள்:
முதல் வடை..மெது வடை..எனக்கே எனக்கா!
ஏன் நடிகர்கள் பொம்பளை வேசத்துல இருக்கிற படத்தை போட்டிருக்காரு?...புதுசா ஏதோ ட்ரை பண்றாரோ, பதிவுல?
//தனபாலு: டேய் காசு ரொம்ப செலவாகுமே...//
--விக்ரம் படத்துக்கு கீழே இப்படிப் போட்டு, மற்ற நடிகர்கள் எல்லாம் டொச்சுப் பிகர்கள்(!) என்று சொல்லாமல் சொல்லிய தமிழ்வாசிக்கு கடும் கண்டனங்கள்!
ம்ம்ம்ம்ம்ம்.............இப்ப நா அழுவுறன் ஏனய்யா
நம்ம விவேக் படத்த விட்டுட்டியள்.....அதெப்புடி
இவங்கதா கலக்கல் லேடீங்களா?....குசும்பு
ரொம்பத்தான் கூடிப்போச்சு.மண்டையில ரெண்டு
கொட்டு கொட்டீற்றுப் போயிர்ரன்....ஒகே.....
//நம்ம சட்டம் அவ்வளவு கடுமையா இல்லாம இருக்கு. என்ன செய்ய?//
ஆஹா... நகைச்சுவையாலயே சாடிட்டீங்க மச்சி.. சட்டம் கடுமையாக்க பட்டால் தான் குற்றங்கள் குறையும்
ஆஹா இன்னா படத்துக்கு போறீங்க இருப்பா நானும் வாரேன்... அய்யயோ..சைக்கிள் வேற பஞ்சராயிடுச்சே.... மச்சி டிரிப்பிள்ஸ் போலாமா மச்சி..
இன்று எனது வலைப்பதிவில்
நவீன கால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன்...
http://maayaulagam-4u.blogspot.com
நண்பர்களே வந்து நாடகத்தை கண்டு கழித்து கருத்துகளை கூறுங்கள்
சூப்பர் பதிவு தல.... சினிமா அரசியல்னு நிறைய விசயங்களை சொல்லிட்டீங்க
முக்கிய விஷயம்..அரட்டை எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை!
maapla kalakkal santhippudan asatthal pathivu...tamil petti work aagala sorry!
வணக்கம் சகோ இன்று என் தளத்தில் உறவுகளால் வஞ்சிக்கப்பட்ட ஒரு அவலையின் சோககீதம்
எழுத்துருவில் உள்ளது. உங்கள் கருத்தை தவற விடாதீர்கள்....
யோவ் என்னய்யா படங்கள் இதெல்லாம்? செங்கோவி அண்னனுக்கே பிடிக்கலை பாருங்க.
யோவ் பிரகாஷ் பழைய போட்டோவெல்லாம் போட்டு இருக்க நம்ம அவன் இவன் விஷால் போட்டோவும் போட்டு இருக்காலாம்.
எல்லா ஃபோட்டொக்களும் கலக்கல் தனபாலு கோபாலு லூட்டி தாங்கல
நல்ல நகைச்சுவை உரை யாடல்!
அருமை!
புலவர் சா இராமாநுசம்
சில நடிகைகளை விட நடிகர்கள் நல்லாத்தான் இருக்காங்க!
சில நடிகைகளை விட நடிகர்கள் நல்லாத்தான் இருக்காங்க!
நான் லேட் மச்சி..
இவனுங்க எதையும் விடமாடான்களா?
தனபாலு... கோபாலு... அரட்டை (மீனாட்சி பஜாரிலிருந்து//
வணக்கம் மாப்பு, ஒவ்வோர் மாதமும் அரட்டைக்கென்று ஒவ்வோர் இடமாப் போவீங்களா;-))))
எவன்யா காலங்காத்தால தூங்க கூட விடாம, சே...சே.... நமீதா கனவுல வந்து என் கையை பிடிச்சா?//
அவ்...உங்க கனவிலை அந்தக் காலை நடிங்கைங்க தானே வருவாங்களாம் மாப்ளே.
தனபாலு: சீக்கிரம் வாடா, டைம் ஆகுது. சே.... டிவிய போட்டாலும் நமீதா பாட்டு தான் வருது.//
நம்ம டாக்குட்டரை, நமீதாவிற்கு ஒப்பிட்டு, ஓவராக நக்கல அடித்த தமிழ்வாசியை, விஜய் ரசிகர்கள் கண்டு கொள்ளாமல் விட்டது ரொம்பப் பெரிய இழுக்காக இருக்கே.
கோபாலு: அண்ணே, வீட்டுக்கு அப்புறமா போலாம். இம்புட்டு தூரம் சைக்கிள் ஓட்டிட்டு வந்திருக்கேன். நீங்க நெனச்ச மாதிரி சி டி யும் வாங்க முடியல, அதனால என்னை ஒரு படத்துக்கு கூட்டிட்டு போங்க.//
யோ, நினைச்ச மாதிரிச் சீடி என்றால் என்ன அந்த சீடி தானே.
(இருவரும் தங்கரீகல் தியேட்டருக்கு போகிறார்கள்.)//
ஏன் அந்தப் படம் பார்க்கவா...
ஹி...ஹி...
நடிகர்கள் படம் நம்ம அண்ணன் செங்கோவிக்காகத் தானே,..
சமகால அரசியல், சினிமா மற்றும் குறும்புகளைத் தாங்கி வந்திருக்கிறது அரட்டை.
சமகால அரசியல், சினிமா மற்றும் குறும்புகளைத் தாங்கி வந்திருக்கிறது அரட்டை.
@நிரூபன் //நடிகர்கள் படம் நம்ம அண்ணன் செங்கோவிக்காகத் தானே,..//
எனக்கா?..இவங்களை வைச்சு நான் என்னய்யா செய்ய? கொஞ்சமாவது நியாயமா பேசுங்கப்பா.