தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா தொண்டர் ஒருவர் கடந்த புதன் அன்று தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை அஞ்சலிக்காக வைக்க அனுமதி கேட்டு TRS MLA ஹரிஸ் ராவ் ஆகியோர் ஆந்திர இல்லத்தின் துணை ஆய்வாளர் சந்தர் ராவை அணுகினார்கள். அவர் அனுமதி தர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிஸ் ராவ் அவரை சராமாரியாக அடித்து உதைத்தார். போடோகிராபர்கள், மீடியாவினர் மத்தியில் அவரை அடித்து நொறுக்கினார். அடித்ததோடு மட்டுமில்லாமல் மிரட்டினார்.
எம் எல் ஏ அடித்த வீடியோ காட்சி:
நன்றி: சன் செய்திகள்
நமக்கு நல்ல ஆட்சியை தருவார்கள் என்ற நம்பிக்கையில் இவர்களை MLA வாக ஆக்கி அழகு பார்க்கிறோம். ஆனால் அவர்களோ காட்டுமிராண்டிகளாக நடக்கிறார்கள். தான் தான் பெரிய ஆள் என புழங்காகிதம் அடைந்து அவர்கள் அராஜகத்தை கட்டவிழ்கிறார்கள்.
ஒரு அரசு ஊழியரை பணி நேரத்தில் அதுவும் அவருடைய பணியை சரியாக செய்யும் நேரத்தில் இப்படி அடிக்கலாமா. அந்த நேரத்தில் அவருடைய உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லையே.
நண்பர்களே! நம் நாடு எங்கே தான் செல்கிறது?
32 கருத்துரைகள்:
ஃபர்ஸ்ட் சிடி எனக்கே.
ஆந்திரா அரசியலும் செம காரம் மாப்பு..பண்ணையார் வீட்டு வாசலுக்கு போகணும்னாலே மண்டியிட்டே மத்தவங்க நுழையற வழக்கம் இன்னும் இருக்காம்..என் அஃபீஸ் நண்பர் சொன்னது.
வீடியோ செம ஹாட் மச்சி.
எதுக்குய்யா திடீர்னு ஆந்திராக்குப் போனீங்க?
ஹா..ஹா..என்னடா பிரகாசு சீரியஸ் பதிவு போட்டிருக்காரேன்னு வருத்தப்பட்டேன்...//
நன்றி: சன் செய்திகள்// இதைப் பார்க்கவும் சிரிப்பு தாங்கலை..சன் இன்னும் வாய் பேசலாமா?
முதலில் பார்த்தவன்..
மீடியா கவர் பண்ணிடிச்சுல்ல இனி கவலை இல்ல .. மாட்டிக்கிட்டாரு
தங்களை முத்தான மூன்று முடிச்சு தொடர்பதிவை எழுத அழைத்திருக்கிறேன்.. பார்க்கவும்.. நேரம் கிடைக்கும்பொழுது எழுதவும்.. நன்றி
நெட் ஸ்லோவா இருக்கு..வீடியோ ஓப்பன் ஆகலை..ஸ்டில்லும் போட்டிருக்கலாம்ல?
வீடியோ அருமை..நன்றி பிரகாஷ்.
(எப்படியும் பார்த்துட்டு இதைத் தான் சொல்லப் போறோம்!)
//தங்களை முத்தான மூன்று முடிச்சு தொடர்பதிவை எழுத அழைத்திருக்கிறேன்.//
பிரபலப் பதிவர் பிரகாஷ் வாழ்க..
// நேரம் கிடைக்கும்பொழுது எழுதவும்..//
பார்றா..பார்றா..இவரு சும்மாதான்யா இருக்காரு..நாளைக்கே எழுதுவாரு பாருங்க.
//ஒரு அரசு ஊழியரை பணி நேரத்தில் அதுவும் அவருடைய பணியை சரியாக செய்யும் நேரத்தில் இப்படி அடிக்கலாமா. //
அப்போ சாயந்திரமா கூட்டிப்போய் லாட்ஜுல ரூம் போட்டு அடிக்கலாமா?
@செங்கோவி
ஃபர்ஸ்ட் சிடி எனக்கே.>>>
உமக்கு இந்த சிடி வேணாம். அம்பிகா சிடி தரேன்..
@செங்கோவி
வீடியோ செம ஹாட் மச்சி.>>>>
உமக்கு எந்த வீடியோனாலும் செம ஹாட்டா தான் இருக்கும்.
@மாய உலகம்
தங்களை முத்தான மூன்று முடிச்சு தொடர்பதிவை எழுத அழைத்திருக்கிறேன்.. பார்க்கவும்.. நேரம் கிடைக்கும்பொழுது எழுதவும்.. நன்றி>>>>
நல்லவேளை உடனே எழுத சொல்லல... நேரம் வரட்டும்.
@செங்கோவி
நெட் ஸ்லோவா இருக்கு..வீடியோ ஓப்பன் ஆகலை..ஸ்டில்லும் போட்டிருக்கலாம்ல?>>>>
செங்கோவி வேண்டுகோளுக்கு இணங்க ஸ்டில் இணைக்கப்பட்டுள்ளது.
கொடும ,அதுவும் ஊடகங்களுக்கு முன்னாடி இப்படியா !!!
அட படத்துக்கு போஸ்டரும் ஒட்டியாச்சா
பொங்கலுக்கு ரிலீஸீஸீஸ்
என்ன அழகு எத்தனை அழகு....
இப்படியும் மனிதர்கள்...
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...........
நமது நடவடிக்கையை உலக நாடுகள் கவனித்துக் கொண்டு இருக்கின்றன என்றாலும் தயக்கமில்லாமல் அராஜகம் காட்டும் மனிதர்களை என்ன செய்வது?
ஒருவேளை விஜயகாந்தை பிரச்சாரத்தில் பார்த்தாரோ என்னவோ ...
ஊடகங்கள் நடந்த சம்பவத்தின் ஒரு கோணத்தை மட்டும் தான் காட்டுது. தற்கொலை செய்து கொண்ட யாதி ரெட்டியின் உடலை ஆந்திர பிரதேஷ் பவனில் வைக்க அனுமதிக்கக் கூடாது என்று மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி கடிதம் வழியாக அனுப்பிய உத்தரவை ஒட்டியே இந்த கைகலப்பு நிகழ்ந்திருக்கிறது.
அனுமதி கிடையாது என்று ஆரம்பம் முதலே சொல்லி வந்த அதிகாரி கைகலப்புக்குப் பிறகு தான் முதலமைச்சரின் உத்தரவு குறித்த விபரங்களைச் சொல்கிறார். இதை முன்னதாகவே கூறியிருந்தால் கைகலப்புக்கு அவசியமே இல்லை.
யாதி ரெட்டியின் உடல் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் தெலங்கானா பகுதியிலிருந்து ராஜினாமா செய்த மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் 10க்கும் மேற்பட்டோர் 4 மணி நேரத்திற்கும் மேலாகத் தேடிக் கொண்டிருந்த செய்தியை எந்த ஊடகமும் வெளியிடவில்லை.
யாதி ரெட்டியின் உடல் அவசர அவசரமாக விமானத்தில் ஏற்றப்பட்டு மத்திய காவல் படையால் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஹைதராபாத் விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்த வந்திருந்த மக்களுக்கு யாதி ரெட்டியின் உடலைக் காட்டாமலே வேனில் ஏற்றி எடுத்துச் சென்றனர். ”நேர்மைக்குப் பேர் போன” தமிழ் ஊடகங்கள் எதுவும் இந்த செய்திகளை வெளியிடவில்லை.
//ஆந்திரா அரசியலும் செம காரம் மாப்பு..பண்ணையார் வீட்டு வாசலுக்கு போகணும்னாலே மண்டியிட்டே மத்தவங்க நுழையற வழக்கம் இன்னும் இருக்காம்..என் அஃபீஸ் நண்பர் சொன்னது.//
இதே ஒடுக்குமுறை காலம் காலமாகத் தெலங்கானா மக்கள் மீதும் சீமாந்திர மக்களால் ஏவப் பட்டு வருகிறது.
பொறம்போக்கு இந்த மாதிரி அரசியல் வாதிகள மக்களே பிடிச்சு உதச்சா தான் சரியா வருவானுங்க
ஏன் மாப்ள இந்த ஆளு எம் எல் ஏவா
ஆவரதுக்கு முன்னாடி என்னாவா இருந்திருப்பாரு.
அம்பிகா சிடியா ,அத யாரு மாப்ள அம்பிகா ,ராதா அக்காவா நடிச்சாங்களே
அந்த பாட்டியா
அன்பு நண்பா இன்று தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்
நன்றி.
http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_22.html
நண்பர்களே! நம் நாடு எங்கே தான் செல்கிறது? // அத நீதாண்டா சொல்லனும்..
ப்ராப்ள பதிவர் ச்சே பிரபல பதிவருக்கு வாழ்த்துக்கள்...ஹிஹி...
யோவ்...அந்த அரசியல் வியாதிய அடிச்சாத்தான் நியுஸ்...மாத்தி போடு!
அரசு ஊழியராக தகுதி வேண்டும்.
அரசியல் வாதிகளுக்கு, அது தேவை
யில்லை.
எனவேதான் இந்த நிலை
யாரை நோவது..?
புலவர் சா இராமாநுசம்
நாடு இங்கேயேதான் இருக்கிறது. நாம்தான் எங்கேயாவது செல்லவேண்டும்போல.
வியஜகாந்தின் உறவினரா , ?
குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்.
பகிர்வுக்கு நன்றி சகோ.....
வீடியோ ரொம்ப நல்ல இருந்துச்சு