சூரியன் FM இல் மகளிர் மட்டும்னு பெண்கள் மட்டுமே பங்கு பெறும் நிகழ்ச்சி மதிய நேரத்தில் போடுவாங்க. அந்த நிகழ்ச்சியில் தினமும் ஏதாவது பிரச்னையை கேள்வியா பெண்கள்கிட்ட கேட்பாங்க. பெண்களும் போன் பண்ணி அவங்களோட கருத்துக்களை சொல்வாங்க. நேத்து என்ன பிரச்னையை எடுதுக்கிட்டாங்கனா, தங்கம் விலை இப்படி நெனச்சு பாக்க முடியாத அளவுக்கு ஏறிட்டே போகுதே? அதனால என்னென்ன விளைவுகள் வருதுன்னு டாபிக் எடுத்திருந்தாங்க, நிகழ்ச்சியில பேசியவங்க கல்யாண சீர்வரிசை மற்றும் செய்முறை செய்றதும் பிரச்சனையா இருக்கு. அதுவுமில்லாம தங்கத்தில் முதலீடு செய்யலாம்னு நெனச்சாலும் அதன் விலையை பார்த்து மலைக்க வேண்டியதா இருக்கேன்னு பேச்சு ஓடிட்டு இருந்துச்சு.
ஒவோருத்தரா போன் பண்ணி ஒவ்வொரு யோசனையா சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா ஒரு பெண் சொன்னாங்க தங்கம் விலையெல்லாம் ஏறிப்போச்சு. அதனால சீர்வரிசை நிறைய, இல்லை கொஞ்சம் கொடுக்கிறது கூட கஷ்டம் தான், அதை தவிர்க்கனும்னா லவ் மேரேஜ் பண்ணிகிட்டாங்கன்னா அந்த பிரச்சனையே இல்லைன்னு சொன்னாங்க. ஆகா ஒரு பெண்ணிடமிருந்து இப்படி ஒரு கருத்தான்னு நிகழ்ச்சி தொகுப்பாளர் அசந்து போயிட்டாங்க. மறுபடியும் அவங்க சொன்னாங்க, இன்னைக்கு நிலைமையில ஒரு பொண்ணுக்கு பையனையோ, அல்லது பையனுக்கு ஒரு பொண்ணை பார்க்றதும் சிரமமான விசயமா இருக்கு. வரன் அமைந்தாலும் பொருத்தம் அமையறது இல்லை. அப்படியும் அமைஞ்சா ஏதாவது காரணம் சொல்லி தட்டிப் போயிருது. ஆக வரன் தேடுறதும் கஷ்டமான விஷயமாத்தான் இருக்கு.
அப்படியே கஷ்டப்பட்டு தேடி ஒரு வரன் கிடைச்சாலும் மண்டபத்தில் இருந்து சாப்பாடு, அழைப்பிதழ், பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் நகைகள் போட்டு, அப்பப்பா ஏகப்பட்ட பார்மாலிடிஸ் இருக்கு. அப்படியே செலவு செஞ்சு திருமணம் நடத்தினாலும் அதுல, இதுல என ஏகப்பட்ட குறை சொல்வாங்க... இப்படி எந்த இம்சையிலும் சிக்காம இருக்கணும்னா, தங்கம் விலையிலிருந்தும் தப்பிக்கனும்னா லவ் மேரேஜ் தான் கரெக்ட்னு அவங்க ஒரு விளக்கமே சொன்னாங்க.
ஹி... ஹி... தங்கம் விலையேற்றத்தை பார்த்தா ஒரு வகையில லவ் மேரேஜ்ம் ஓகே தான்னு நினைக்கத் தோணுது....
40 கருத்துரைகள்:
முதல் லவ்!
ரொம்ப சின்ன டைட்டிலா இருக்கே?
நண்பர்களே! தமிழ்மணம் இணைச்சிருங்க... நன்றிங்கோ...
மாப்ள உமக்கு எதோ இந்த விஷயத்துல வருத்தம் போல ஹிஹி...லேட்டா சொல்றாங்களேன்னு!
tm இணைச்சாச்சு!
Nalla aaivu
சரி நானும் ஒத்துக்கிறேன் .நீங்க சொல்லி அப்பீலேது நண்பா !
தமிழ் மணம் இரண்டு
@சி.பி.செந்தில்குமார்
ரொம்ப சின்ன டைட்டிலா இருக்கே?>>>
உங்க லெவலுக்கு முடியுமா எனால
@விக்கியுலகம்
மாப்ள உமக்கு எதோ இந்த விஷயத்துல வருத்தம் போல ஹிஹி...லேட்டா சொல்றாங்களேன்னு!>>>>
ஹி...ஹி...
@FOOD
அடுத்து ஒரு லவ் மேரேஜிற்கு அடி போடுறாரோ!>>>>
அய்யோ... பெரியவங்க இப்படி சொல்லலாமா?
@கோகுல்
tm இணைச்சாச்சு!>>>
நன்பேண்டா.....
@NAAI-NAKKS
Nalla aaivu>>>>
அந்த லேடியை தானே சொல்றிங்க?
தங்கம் விலை நேற்றைய நிலைக்கு கிராம் ரூ2630. இன்னைக்கு எவ்ளோனு தெரில.
முன்னாடியெல்லாம் பவுனே 4000 தான் வித்துச்சு.
தங்கம் தான் இப்டினா வெள்ளி போட்டி போட்டுகிட்டு விக்குது.
என்ன தான் விலை கூடினாலும், சீர் கேட்பது குறைய மாட்டீங்குதே..
லவ் மேரேஜ் பண்ணினாலும், பொண்ணுங்க பெத்தவங்க கிட்ட, வாங்குறத கரெக்டா (பின்னாடி) வாங்கிட்றாங்களே.
ஆகா, காதல் திருமணம் என்றாலும் பெற்றோர் சம்மதித்தால் நகை பேச்சு வருகிறதே. அக்காக்களுக்கு போட்ட கணக்கு வைத்து சில பொண்ணுங்களும் கறாராக வசூல் பண்ணுகிறார்களே.
வரதட்சணை கேட்காதா காதல்க் கல்யாணம் வாழ்க!....
ஆனாலும் பாருங்க இந்தப் பொண்ணு ரொம்ப சமத்து இல்லீங்களா?...
நன்றி சகோ வரவர சமூக சேவை ஏறிட்டே போகுது .நம்ம தமிழ் வாசிக்கு ஹி...ஹி ....ஹி ...
நன்றி சகோ பகிர்வுக்கு .
லவ் மேரேஜ்லயும் இந்த
நகை ஆசை பெண்களை
விட்டு வைப்பதில்லை
காதல் திருமணம் செய்தாலும் தாலி தங்கத்தில் தான் போடனும்....
//
ஹி... ஹி... தங்கம் விலையேற்றத்தை பார்த்தா ஒரு வகையில லவ் மேரேஜ்ம் ஓகே தான்னு நினைக்கத் தோணுது....
//
முன்பே திருமணம் ஆனவர்கள் என்ன பண்ணுவது
தமிழ்மணம் - 7
ஏண்டா அவுங்க தான் மகளிர் மட்டும்னு போர்ட் மாட்டிட்டான்களே அப்புறம் நீ ஏன் அதெல்லாம் பாக்குற... ஒருவைளை ??
தங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா? //
வாழ்த்துக்கள் மாப்பு, தலைப்பில் ஒரு சிலேடை...
கலக்கலாக இருக்கே.
அதனால சீர்வரிசை நிறைய, இல்லை கொஞ்சம் கொடுக்கிறது கூட கஷ்டம் தான், அதை தவிர்க்கனும்னா லவ் மேரேஜ் பண்ணிகிட்டாங்கன்னா அந்த பிரச்சனையே இல்லைன்னு சொன்னாங்க.//
ஆகா...சூப்பரான ஐடியா.
காதல் செய்வீர் உலகத்தீரே..
காதலால் தங்கமோகம் குறைகிறதோ
இல்லையோ..
சாதியாவது தொலையட்டும்!!!!!!
முனைவர்.இரா.குணசீலன் said... 27
காதல் செய்வீர் உலகத்தீரே..
காதலால் தங்கமோகம் குறைகிறதோ
இல்லையோ..
சாதியாவது தொலையட்டும்!!!!!!
அதையே வழிமொழிகிறேன்
மாற்றங்கள் வரும்.இனிமேல் பெண்களுக்கு மொத்த நகையும் மாப்பிள்ளை வீட்டில் போடணும் என்ற நிலை வரும்.
அமுதா கிருஷ்ணா said...
மாற்றங்கள் வரும்.இனிமேல் பெண்களுக்கு மொத்த நகையும் மாப்பிள்ளை வீட்டில் போடணும் என்ற நிலை வரும்
காலம் மீண்டும் இவ்வாறு மாறினால்
அன்றைய பெண்சிசுக் கொலைகளுக்குப் பதிலாக ஆண்சிசுக் கொலைகள் வரலாம்...
இங்கயும் தங்கமா...அட்வைஸ் விவகாரமா இருக்கே!
ஒரு பொண்ணு சொல்லுச்சுன்னு சொன்னதால தப்பிச்சீங்க..இல்லேன்னா தமிழ் தனியா வாசி தனியா பிச்சிருப்பாங்க!
புரியாத விடலைப் பருவத்தில் காதலில் இறங்கி வாழ்ககையை தொலைச்சவங்க எத்தனயோ பேர் உண்டே..தங்கம் பெருசா....வாழ்ககி பெருசா?
தங்கமான பொண்ணு தான் வேணும் தங்கம் வேணாம் ஹிஹி
பெரியவங்க பாத்து வச்ச திருமணமாக இருந்தாலும், காதல் திருமணமானாலும் சரி தங்கம் வாங்காமல் திருமணம் செய்தால் நல்லது.
ரைட்டு..
கல்யாணம் ஆன அப்புறம் புருஷன கேக்க பிளானா
FM கேட்டுட்டே பேருந்தில் பயணம் போய் CNC ல வேலை போல...
தங்கமான பொண்ணு
தங்கமான பதிவு!
புலவர் சா இராமாநுசம்
தங்கம் விலையேற்றத்தை பார்த்தா ஒரு வகையில லவ் மேரேஜ்ம் ஓகே தான்னு நினைக்கத் தோணுது....
..... Parents approved love marriages லேயும் எல்லா formalities செய்தாகணும். அவங்க register marriages என்பதைத்தான் அப்படி குறிப்பிட்டு விட்டார்களோ?
ஹிஹி உங்க பாடு திண்டாட்டம் தானுங்கோ!!
நகை விலை ஏறியதால் காதலி என்னை பார்த்து புன்னகைத்தாள்... ஒரு வேளை உங்க பதிவ பாத்துட்டாளா.... பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே...
தமிழ் மணம் 16