சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம் இன்று காலை 9.15 மணி அளவில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 147 பயணிகளும், 5 சிப்பந்திகளும் இருந்தனர். ஓடுபாதையில் விமானம் சென்று கொண்டு இருந்தபோது திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டு அங்கேயே நின்றுவிட்டது. அந்த நேரம் டெல்லியில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு தரை இறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அந்த விமானத்தில் 160 பயணிகளும், 6 சிப்பந்திகளும் பயணம் செய்தனர். தரை இறங்க விமானம் முயன்றபோது ஓடு தளத்தில் மற்றொரு விமானம் நிற்பதை விமானி கவனித்துவிட்டார். தரை இறங்கினால் மோதும் சூழ்நிலை ஏற்படும் என்பதால் உடனடியாக விமானி விமானத்தை உயரே கிளப்பினார். பின்னர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். ஓடு தளத்தில் இன்னொரு விமானம் நிற்பதால் தரை இறக்க முடியவில்லை.
உடனடியாக அதை அப்புறப்படுத்துங்கள் என்று கூறினார். அப்போதுதான் எந்திர கோளாறு காரணமாக டெல்லி விமானம் ஓடு தளத்தில் நிற்பதை அதிகாரிகள் கவனித்தனர். உடனடியாக “தள்ளு வாகனம்” மூலம் டெல்லி விமானம் அப்புறப்படுத்தப்பட்டு புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வரப்பட்டது. இதன்பின் டெல்லியில் இருந்து வந்த விமானம் தரை இறக்க அனுமதிக்கப்பட்டது.
25 நிமிட தாமதத்துக்கு பிறகு விமானம் தரை இறங்கியது. விமானியின் சாமர்த்திய முயற்சியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 318 பயணிகள் உயிர் தப்பினார்கள். ஒரு தளத்தில் விமானம் நிற்கும் போது இன்னொரு விமானம் இறங்க அனுமதி அளித்தது ஏன்? இந்த தவறு நடப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து விமான தள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நன்றி: சன் நியூஸ், மாலைமலர்
22 கருத்துரைகள்:
சுட சுட
நல்ல வேலை சென்னை பரபரப்பாக ஆயிருக்கும்...
ஒரு உறைக்குள் 2 கத்தி இருந்தாலே தப்பு அதுவும் 3 விமானமா ?
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்
சுடசுடச் செய்தி...
வடை போச்சே ?/
சுடச்சுட - சூப்பர்யா - பதிவு போடறதல சரித்திரம் படைக்க்ப் போறேன்னு நினைக்கறேன். பலே பலே ! நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
தலைப்புல மூன்று விமானங்கள்னு இருக்கு? செய்தி 2 விமானத்தை பற்றி தானே இருக்கு?
சாமார்த்தியசாலி பைலட்டை வாய் நிறைய பாராட்டனும்யா....!!!
@என். உலகநாதன்
சன் நியுஸ் வீடியோ இணைப்பு பாருங்க.
நாங்க சென்னையில் இருந்து பாம்பே வந்தப்போவும் இதே பிரச்சனைதா. அல்ரெடி எங்க விமானம் இறங்குமிடத்தில் இன்னொரு விமானம் யந்திரக்கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்தது. எங்க ஜெட் விமானம் கடலுக்கு மேலேயே 2 மணி நேரம் சுத்திக்கிட்டு இருந்தது. அப்புரம்தான் கீழே இறங்க அனுமதி கிடைத்தது. இப்படி அடிக்கடி நடக்குது போல இருக்கு. சரியானபடிகவ்வனித்ததால் விபத்து தவிற்க்கப்பட்டது.
அப்பா பெரிய விபத்து தவிர்க்கப் பட்டு விட்டது..
இப்போதுதான் சன் டிவியில் பார்த்தேன்.
அந்த விமானிக்கு பாராட்டுக்கள்!
தமிழ்வாசி- லைவ் ஆரம்பிக்கலாம் போல!
சரியான முறையில் கவனிக்க பட வேண்டியது...
பீதிய கெளப்புறாங்கப்பா......
பைலேட்டுக்கு ஒரு போக்கே, பதிவருக்கு ஒரு நன்றி...
TM7 voted!
சில நபர்களின் அலட்சியத்தால் நிறைய உயிர்சேதம் ஏற்படுகிறது என்பது ஒத்து கொள்ள வேண்டிய வேதனையான விஷயம் தான் நண்பரே
Very lucky passengers
விமானிக்கு ஸலூட்
சமயோசிதமாகச் செயற்பட்ட விமானிக்கு சல்யூட்.