CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ. ராசா ஜாமீனுக்கும், மொபைல் சிம்கார்டு ஆபர்களுக்கும், சம்பந்தம் இருக்குமோ?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
ஸ்பெக்ட்ரம்ல பெரும் ஊழல்ன்னு ஜெயிலுல பதினைஞ்சு மாசமா நம்ம ராசா தனிமையில குடும்பத்த விட்டுபுட்டு, ருசியா சாப்பிடாம, தலைவருக்கு ஆதரவா தேர்தல் மேடைகளில் ஏறாம ரொம்பவே இறுகிப் போயிட்டார். என்ன நெனச்சாரோ, ஜாமீன்ல வந்தா உயிருக்கு உத்திரவாதம் இல்லைன்னு சொல்லிட்டு இருந்தவரு, திடீர்னு ஜாமீனுக்கு அப்ளை பண்ணி, கோர்ட்டும் அவரை ஜாமீன்ல விட்டுடுச்சு. ஆனா தலைநகரத்தை விட்டு வெளியே போக முடியாதுன்னு நீதிபதி சொல்லிப்புட்டார். அதனால ராசா கொஞ்சம் நிம்மதியா இருப்பார்னு சொல்றாங்க. ஏன்னா, ஏற்கனவே உயிருக்கு உத்திரவாதம் இல்லைன்னு சொல்லி இருக்காரே, அப்போ தமிழகம் வந்தா?????? அதான் வரமுடியாம கோர்ட் தடை போட்டிருக்கு.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செஞ்ச எல்லோருமே ஜாமீனுல வெளிய வந்துட்டாங்க. திமுக எம்பி கனிமொழி, சித்தார்த் பெகுரா, என வழக்குல சிக்கிய எல்லோருமே ஜாமீனுல வந்ததுக்கு அப்புறமா நம்ம ராசா வந்திருக்கார். இனி இந்த வழக்குல என்ன நடக்கும்? ஸ்பெக்ட்ரம்ல பல கோடிகளுக்கு வித்த தொலைதொடர்பு அலைவரிசைகள் என்னாவாகும்? சில மொபைல் நிறுவனங்கள் ஆபர் மேல ஆபர் போட்டு, சிம் கார்டுகளை ரோட்டோரத்துல ஒரு நிழல்குடையை போட்டு விக்கராங்களே, அதெல்லாம் ஸ்பெக்ட்ரம்ல வாங்கினதா இருக்குமோ? என்னமோ போங்க, கம்மியான காசுல சிம் கார்டு, அதுல நம்ப முடியாத அளவுக்கு டாக்டைம் இருக்குல. அது போதுங்கன்னு சொல்றிங்களா? ஓகே... ரைட்டுங்க.... இருக்குற வரை என்சாய் பண்ணுங்க. 

இப்படித்தான் நானும் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி குடைக்கு கீழ வித்த டிவி நிறுவன சிம் கார்டு நல்லா ஆபர் (டெயிலி ஒரு மணிநேரம் பிரீ டாக் டைம்) இருக்குன்னேன்னு வாங்கி யூஸ் பண்ணிட்டு இருந்தேன். ஆனா, ஒரு மாசமா சரியா கவரேஜ் கிடைக்க மாட்டிங்குது. சிட்டிக்கு அவுட்டர்ல போனா வேற மொபைல் நிறுவன கவரேஜ் காட்டும். ஆனா, இப்போ அந்த நிறுவன கவரேஜ்ம் கிடைக்க மாட்டிங்குது. இந்த நிறுவன கவரேஜ்ம் கிடைக்க மாட்டிங்குது. அந்த ஏரியாவுல டவர் பிராப்ளமா இருக்கும்னு நெனச்சுட்டு இருந்தேன். அப்புறமா ரீசார்ஜ் கடையில கேட்டா, அந்த மொபைல் நிறுவனம் ஓட்ட போன் டவரை வாடகைக்கு எடுத்திருந்தாங்க, இப்போ அந்த டீலிங் முடிஞ்சிருக்கும்னு சொன்னார். சரி, கஸ்டமர்கேர் போன் போட்டு கேட்டா ஒன்னை அமுக்குங்க, ரெண்டை அமுக்குங்க, மூணை அமுக்குங்க அப்படித்தான் சொல்றாங்க. யாருமே பேச வர மாடிங்கறாங்க. அப்படியே லைன் கிடைச்சாலும் எல்லா சேவை அதிகாரிகளும் ரொம்ப பிசியா இருக்காங்கன்னு சொல்லி கட் பண்றாங்க. இந்த கவரேஜ் இல்லாத்ததுனால கம்பெனி வேலை விஷயமாவும், நண்பர்கள் கிட்டயும் தொடர்பு கொள்ள முடியாம போயிருச்சு.

அதுக்காக யார்கிட்டயும் பேசாம இருக்க முடியாதே, அதான் மறுபடியும் ஒரு குடைக்கு கீழ வித்த இன்னொரு கம்பெனி சிம் வாங்கிட்டேன். ஹி..ஹி... அதுலயும் கம்மியான காசுக்கு நிறைய பேசலாம். டாப்அப் பணத்துக்கும் அதிகமா டாக்டைம். நமக்கு அதானே வேணும். ஒரு ஏழெட்டு வருசமா டெல் நிறுவன நம்பர்தான் பெர்மணென்ட்டா வச்சிருந்தாலும், ஒரு கால் பேசவே கால்ரேட் அதிகம். அதனால தான் இன்னொரு சிம் கார்டு.... 

இப்ப என்ன சொல்ல வரேன்னா? ஸ்பெக்ட்ரம் ராசா ஊழலுக்கும் இந்த சிம் கார்டுகளுக்கும் தொடர்பு இருக்கக் கூடாது. ஆமாங்க, நாம யூஸ் பண்ணிட்டு இருக்குற சிம் கார்டுகள் திட்டீர்னு முடங்கி போகக்கூடாதுங்க..... இப்படியே எத்தனை சிம்கார்டு வாங்குறது???


12 கருத்துரைகள்:

MARI The Great said... Best Blogger Tips

ஹி ஹி ஹி .., என் தம்பிய விட நீங்க மோசம் இல்லை.

என்னென்னா, எங்கேயோ ஆபர்ல 50 ரூபாய்க்கு 50 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து வச்சிருக்கான் .., வாரத்துக்கு ஒரு சிம் வாங்கி ப்ரீ கால் முடிஞ்சதும் தூக்கிகடாசிகிட்டு இருக்கான் ..!

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம் பிரகாஷ்!அங்கயும் குடை போட்டு கார்டு விக்கிறாங்களா???ஹி!ஹி!ஹி!இங்கயும் விக்கிறாங்க,அதான் கேட்டேன்!மாசா மாசம் பில்லுக்கு அழுவுறத வுட கார்டுன்னா சேப்டி தானே?நீங்க சொல்லுறாப்புல "அந்த" தொடர்பு இருந்திடக் கூடாது!

ராஜி said... Best Blogger Tips

வரலாற்று சுவடுகள் said...

ஹி ஹி ஹி .., என் தம்பிய விட நீங்க மோசம் இல்லை.

என்னென்னா, எங்கேயோ ஆபர்ல 50 ரூபாய்க்கு 50 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து வச்சிருக்கான் .., வாரத்துக்கு ஒரு சிம் வாங்கி ப்ரீ கால் முடிஞ்சதும் தூக்கிகடாசிகிட்டு இருக்கான்
>>>
நாம பரவாயில்ல. இது தீவிரவத செய்ல்களுக்கும், சமூக குற்றவாளிகளுக்கும் ஈசியா போய்டும்தானே.

rajamelaiyur said... Best Blogger Tips

//நாம யூஸ் பண்ணிட்டு இருக்குற சிம் கார்டுகள் திட்டீர்னு முடங்கி போகக்கூடாதுங்க..... இப்படியே எத்தனை சிம்கார்டு வாங்குறது???

//
நக்ஸ் சார் போல 50 சிம் வாங்கி வசிகொங்க

rajamelaiyur said... Best Blogger Tips

i like docomo , call rate , booster all are low cost

செங்கோவி said... Best Blogger Tips

//ஒன்னை அமுக்குங்க, ரெண்டை அமுக்குங்க, மூணை அமுக்குங்க அப்படித்தான் சொல்றாங்க.//

சொன்னா அமுக்க வேண்டியது தானே? அதை விட்டுட்டு புலம்பிக்கிட்டு இருக்கீரு?

வவ்வால் said... Best Blogger Tips

பிரகாஷ்,

தொடர்பு இல்லாமலா ,நிறைய இருக்குங்க, என்னனு சொல்றேன்,

இப்போ கேன்சல் செய்யப்பட்ட அலைக்கற்றை உரிமம் மீது ஒவ்வொரு நிறுவனமும் வழக்கு போட்டு இருக்கு, வழக்கின் முடிவைப்பொறுத்தே எதிர்காலம் அமையும், மேலும்,

1)நிறைய வாடிக்கையாளர்கள் இருந்தால் இத்தனைப்பேர் எங்களை நம்பி இருக்காங்க அவங்களுக்காகவாவது கருணைக்காட்டி தீர்ப்பை திருத்த சொல்வார்கள்,

2)சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் ஏற்கனவே நிறைய சிம் கார்டுகள் தயாரிக்கப்பட்டு விட்டது , ஒரு வேளை தீர்ப்பு பாதகமாக வந்து நிறுவனம் மூடப்பட்டால் அத்தனை சிம்கார்டுகளும் வீண் ஆகிவிடும் எனவே அனைத்தையும் விற்றுவிட முடிவு செய்திருக்கலாம்.

3)கோர்ட் அனைத்து நிறுவனங்களையும் சந்தை விலைக்கு அலைக்கற்றை உரிமக்கட்டணம் செலுத்திவிட்டு தொடரலாம் என இடைக்கால தீர்வாக சொல்லியுள்ளது. விருப்பப்பட்டவர்கள் அப்படி செய்யலாம் இல்லை எனில் வாய்தா வாங்கி முடிந்த வரை வழக்கை இழுத்துவிட்டு நிறுவனத்தை மூடவும் செய்யலாம் அதானால் தான் வேகமாக சிம்கார்டு விற்று தீர்க்கிறார்கள்.

4) அனேகமாக அந்த டீ.வி கம்பெனி நிறுவனத்தினை மூடிவிட தீர்மானித்து இருக்கலாம் எனவே தான் செல் போன் டவர் ஒப்பந்தத்தினை நீட்டிக்காமல் விட்டு விட்டார்கள் என நினைக்கிறேன், ஏன் எனில் இது போன்ற ஒப்பந்தங்கள் 5 ஆண்டு போல போடப்படும், அப்பீல் மனு விசாரணை சீக்கிரம் முடிந்து மூட வேண்டி வந்தால் ஒப்ப்ந்தம் போட்டது தண்ட செலவாகிவிடுமே.

அப்படியே 2ஜீ ஊழல் பற்றி நான் போட்ட பதிவையும் பாருங்க,

சூரியனுக்கே டார்ச் அடிச்ச ராசா வாராரு

Unknown said... Best Blogger Tips

//ஒன்னை அமுக்குங்க, ரெண்டை அமுக்குங்க, மூணை அமுக்குங்க அப்படித்தான் சொல்றாங்க.//

இதுக்கும்

//எல்லா சேவை அதிகாரிகளும் ரொம்ப பிசியா இருக்காங்க////

இதுக்கும் ஏதோ தொடர்பு இருக்கு மக்கா!

'பரிவை' சே.குமார் said... Best Blogger Tips

நீங்க போன் பண்ணும் போது சேவை அதிகாரிங்க பிசியா இருக்காங்கன்னா சொல்றாங்க...
ஆஹா... எவனோ சூனியம் வச்சிட்டாங்கய்யா... வச்சிட்டாங்க...
பாத்து சூதனமா பேசுங்க ராசா.

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் பாஸ்..

சூப்பரா யோசித்திருக்கிறீங்க.
வெகு விரைவில் உண்மைகள் வெளிவரும் என நினைக்கின்றேன்.

பொறுத்திருப்போம்.

MaduraiGovindaraj said... Best Blogger Tips

நீங்க இனிமே அடிகடி சிம் மாத முடியாது ஒரு id இரண்டு சிம் என்று திட்டம் வரபோகுது

உழவன் said... Best Blogger Tips

அண்ணே..பொறுத்திருந்து பார்போம் தொடர்பு இருக்கா என்று..உங்கள் யோசனை சூப்பர்..

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1