ஸ்பெக்ட்ரம்ல பெரும் ஊழல்ன்னு ஜெயிலுல பதினைஞ்சு மாசமா நம்ம ராசா தனிமையில குடும்பத்த விட்டுபுட்டு, ருசியா சாப்பிடாம, தலைவருக்கு ஆதரவா தேர்தல் மேடைகளில் ஏறாம ரொம்பவே இறுகிப் போயிட்டார். என்ன நெனச்சாரோ, ஜாமீன்ல வந்தா உயிருக்கு உத்திரவாதம் இல்லைன்னு சொல்லிட்டு இருந்தவரு, திடீர்னு ஜாமீனுக்கு அப்ளை பண்ணி, கோர்ட்டும் அவரை ஜாமீன்ல விட்டுடுச்சு. ஆனா தலைநகரத்தை விட்டு வெளியே போக முடியாதுன்னு நீதிபதி சொல்லிப்புட்டார். அதனால ராசா கொஞ்சம் நிம்மதியா இருப்பார்னு சொல்றாங்க. ஏன்னா, ஏற்கனவே உயிருக்கு உத்திரவாதம் இல்லைன்னு சொல்லி இருக்காரே, அப்போ தமிழகம் வந்தா?????? அதான் வரமுடியாம கோர்ட் தடை போட்டிருக்கு.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செஞ்ச எல்லோருமே ஜாமீனுல வெளிய வந்துட்டாங்க. திமுக எம்பி கனிமொழி, சித்தார்த் பெகுரா, என வழக்குல சிக்கிய எல்லோருமே ஜாமீனுல வந்ததுக்கு அப்புறமா நம்ம ராசா வந்திருக்கார். இனி இந்த வழக்குல என்ன நடக்கும்? ஸ்பெக்ட்ரம்ல பல கோடிகளுக்கு வித்த தொலைதொடர்பு அலைவரிசைகள் என்னாவாகும்? சில மொபைல் நிறுவனங்கள் ஆபர் மேல ஆபர் போட்டு, சிம் கார்டுகளை ரோட்டோரத்துல ஒரு நிழல்குடையை போட்டு விக்கராங்களே, அதெல்லாம் ஸ்பெக்ட்ரம்ல வாங்கினதா இருக்குமோ? என்னமோ போங்க, கம்மியான காசுல சிம் கார்டு, அதுல நம்ப முடியாத அளவுக்கு டாக்டைம் இருக்குல. அது போதுங்கன்னு சொல்றிங்களா? ஓகே... ரைட்டுங்க.... இருக்குற வரை என்சாய் பண்ணுங்க.

இப்படித்தான் நானும் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி குடைக்கு கீழ வித்த டிவி நிறுவன சிம் கார்டு நல்லா ஆபர் (டெயிலி ஒரு மணிநேரம் பிரீ டாக் டைம்) இருக்குன்னேன்னு வாங்கி யூஸ் பண்ணிட்டு இருந்தேன். ஆனா, ஒரு மாசமா சரியா கவரேஜ் கிடைக்க மாட்டிங்குது. சிட்டிக்கு அவுட்டர்ல போனா வேற மொபைல் நிறுவன கவரேஜ் காட்டும். ஆனா, இப்போ அந்த நிறுவன கவரேஜ்ம் கிடைக்க மாட்டிங்குது. இந்த நிறுவன கவரேஜ்ம் கிடைக்க மாட்டிங்குது. அந்த ஏரியாவுல டவர் பிராப்ளமா இருக்கும்னு நெனச்சுட்டு இருந்தேன். அப்புறமா ரீசார்ஜ் கடையில கேட்டா, அந்த மொபைல் நிறுவனம் ஓட்ட போன் டவரை வாடகைக்கு எடுத்திருந்தாங்க, இப்போ அந்த டீலிங் முடிஞ்சிருக்கும்னு சொன்னார். சரி, கஸ்டமர்கேர் போன் போட்டு கேட்டா ஒன்னை அமுக்குங்க, ரெண்டை அமுக்குங்க, மூணை அமுக்குங்க அப்படித்தான் சொல்றாங்க. யாருமே பேச வர மாடிங்கறாங்க. அப்படியே லைன் கிடைச்சாலும் எல்லா சேவை அதிகாரிகளும் ரொம்ப பிசியா இருக்காங்கன்னு சொல்லி கட் பண்றாங்க. இந்த கவரேஜ் இல்லாத்ததுனால கம்பெனி வேலை விஷயமாவும், நண்பர்கள் கிட்டயும் தொடர்பு கொள்ள முடியாம போயிருச்சு.
அதுக்காக யார்கிட்டயும் பேசாம இருக்க முடியாதே, அதான் மறுபடியும் ஒரு குடைக்கு கீழ வித்த இன்னொரு கம்பெனி சிம் வாங்கிட்டேன். ஹி..ஹி... அதுலயும் கம்மியான காசுக்கு நிறைய பேசலாம். டாப்அப் பணத்துக்கும் அதிகமா டாக்டைம். நமக்கு அதானே வேணும். ஒரு ஏழெட்டு வருசமா டெல் நிறுவன நம்பர்தான் பெர்மணென்ட்டா வச்சிருந்தாலும், ஒரு கால் பேசவே கால்ரேட் அதிகம். அதனால தான் இன்னொரு சிம் கார்டு....
இப்ப என்ன சொல்ல வரேன்னா? ஸ்பெக்ட்ரம் ராசா ஊழலுக்கும் இந்த சிம் கார்டுகளுக்கும் தொடர்பு இருக்கக் கூடாது. ஆமாங்க, நாம யூஸ் பண்ணிட்டு இருக்குற சிம் கார்டுகள் திட்டீர்னு முடங்கி போகக்கூடாதுங்க..... இப்படியே எத்தனை சிம்கார்டு வாங்குறது???