எல்லா நண்பர்களுக்கும் இனிய வணக்கங்கள். கடந்த புதனன்று பதிவர் நண்பர் பாலகுமார் அவர்களின் திருமணத்தில் மதுரை பதிவர்களின் சந்திப்பு அய்யா சீனா (CHEENA) தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. திரு. நேசமிதிரனின் இலக்கிய சுவையிலும், பொன்னியின்செல்வன் ( திரு கா. பா.) அவர்களின் நகைச்சுவையிலும் மூழ்கி திளைத்தோம்.
கலந்து கொண்ட பதிவர்கள்: திரு. சீனா அய்யா, திரு. கா. பா, திரு. நேசமிதிரன், திரு. மதுரை சரவணன், திரு. மணிவண்ணன், திரு. ஸ்ரீ , திரு. அன்பு.
இவர்களோடு என்னையும் இணைத்துக் கொள்கிறேன். இச்சந்திப்புக்கு காரணமான அனைவருக்கும் நன்றி.
*********************************************************************
கிறுக்கல்கள்:
அன்பே! நான் உன் அன்புக்காக மயங்குகிறேன்
அடிப்பாவி, நீயோ என் பணத்திற்காக மயங்குகிறாய்
ஆனாலும், நான் உன் மனதை மாற்றுவேன்,
ஏனெனில் உன்னை அவ்வளவு நேசித்து விட்டேன் பெண்ணே!
*************************************
மயங்கினேன் உன்னுடைய அழகில்,
இன்னும் மயங்கினேன் உன்னுடைய தங்கையின் பேச்சில்,
இன்னும் இன்னும் மயங்கினேன் உன்னுடைய அக்காவின் உபசரிப்பில்,
ஐயோ! யாரை நான் கைப்பிடிக்க?
****************************************************
பேருந்தில் ஏறினேன், என்னவள் இருக்கிறாள் என்பதால்
அடுத்த நிறுத்தத்தில் இறங்கினேன், அவள் தந்தை அருகில் இருந்ததால்
மாலையில் அவளிடமிருந்து கைபேசி அழைப்பு
வீட்டுக்கு அம்மா, அப்பாவோட வாங்க மாப்ளே என்றார் அவளின் அப்பா!
***************************************************
உன்னிடம் பேசுவதை தவிர்த்தேன்
உன்னைப் பார்ப்பதை தவிர்த்தேன்
உன்னிடம் பழகுவதையும் நிறுத்தினேன்
நீ வேண்டாமென்று, ஆனாலும்
ஏதோ, ஒன்று என்னை ஈர்க்கிறதடி பெண்ணே!
**********************************************************
சங்கம்:
19 கருத்துரைகள்:
முத வெட்டு
ஜோக்ஸ் தனியா கவிதை தனியா பிரிச்சு 2 பதிவா போட்டிருக்கலாமே..
கவிதைகளுக்கு சினிமா நடிகைகள் ஃபோட்டோ மேட்சிங்க் ஆவது சூப்பர்.. ஜோக்ஸ் கலக்கல் ரகம். லே அவுட்டும் ஓக்கே
>>>>தங்கள் பொன்னான ஓட்டை எனக்கு அளித்து இந்த பதிவை வெற்றி பெற செய்யும் ஒவ்வொருவருக்கும் அடுத்த பதிவு இலவசம்...இலவசம்...
இது செம
Nice, Super, Good..
என்னப்பா - செம ஃபார்ம்ல இருக்காப்ல இருக்கு - ம்ம்ம்ம்ம்
உங்களை சந்திக்க முடிந்ததில் ரொம்ப மகிழ்ச்சி நண்பா..
கவிதைக்காக அசினா இல்ல அசினுக்காக இந்தக் கவிதைகளா? ஒரே கன்ஃப்யூசா இருக்கே..:-)))
கவித..கவித..
கவித..கவித..
@சி.பி.செந்தில்குமார் அட ஆமால்ல
நண்பரே உங்கள் கவிதைகளும், ஜோக்குகளும் சூப்பராக இருக்கின்றன! இப்படியான ப்ளாக் குகளைப் படிப்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம்!
நண்பரே நான் முன்பு பல தடவைகள் இன்ட்லியில் உங்களுக்கு வாக்களித்து வந்தேன்! ஆனால் நீங்கள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை! அதனால் கடந்தவாரம் உங்களை block செய்திருந்தேன்! இப்போது Unblock செய்துவிட்டு மறுபடியும் ஓட்டுப் போட்டுள்ளேன்! என்னுடன் நட்புக் கொள்வதில் உங்களுக்கு ஏதும் சிக்கலா என்ன?
@மாத்தி யோசி
/////நண்பரே நான் முன்பு பல தடவைகள் இன்ட்லியில் உங்களுக்கு வாக்களித்து வந்தேன்! ஆனால் நீங்கள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை! அதனால் கடந்தவாரம் உங்களை block செய்திருந்தேன்! இப்போது Unblock செய்துவிட்டு மறுபடியும் ஓட்டுப் போட்டுள்ளேன்! என்னுடன் நட்புக் கொள்வதில் உங்களுக்கு ஏதும் சிக்கலா என்ன?////
இனி உங்களை தொடர்ந்து வருகிறேன். ஆமா? இன்ட்லியில யார் யார் ஓட்டு போட்டிருக்கான்னு பாக்க முடியுமா? எனக்கு சொல்லுங்களேன்.
முடியும் நண்பா! எனக்கு கூட இது நீண்ட காலமாக தெரியாமல் இருந்தது! discuss என்று இருப்பதைக் கிளிக் செய்தால், who liked என்று வரும்! அதைக் கிளிக் செய்தால் நமக்கு ஓட்டுப் போட்டவர்களின் விபரங்கள் கிடைக்கும்! உங்களுடைய ' கிறுக்கலும் சங்கமும் ' பதிவுக்கு முதலாவது ஓட்டு உங்களுடையதும், ஏனைய ஓட்டுகளாக sriramanandaguruji, cpsenthilkumar , karun010, jeevanraj ஆகியோர் வாக்களித்து உள்ளனர்! இதில் jeevanraj என்பது எனது வாக்காகும்!
ஜோக்ஸ் + கவிதை ஒரே பதிவுல இருப்பதால எதுக்கு பின்னூட்டம் கொடுப்பதுன்னு தெரியலை. இரண்டுமே நல்லா இருக்கு.
@மாத்தி யோசி
///////discuss என்று இருப்பதைக் கிளிக் செய்தால், who liked என்று வரும்! அதைக் கிளிக் செய்தால் நமக்கு ஓட்டுப் போட்டவர்களின் விபரங்கள் கிடைக்கும்! ////
மிக்க நன்றி ஜீவன். இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. இன்ட்லியில் ஹிட் கிடைக்க எத்தனை ஓட்டுகள் தேவை?
@komu
முதல் வருகைக்கு நன்றி.
தொடர்ந்து வாருங்கள்.
செம கலக்கல்
இப்படிக்கு தண்ணியே இல்லாத ஆற்றில் உட்க்கார்து யோசிப்போர் சங்கம் //அப்ப நம்ம ஊரு ஆத்துல உக்கார்ந்து யோசிச்சீங்கன்னு சொல்லுங்க
இன்ட்லியில் ஹிட்ஸ் பெற நீங்கள் 15 ஓட்டுக்களைத் தாண்டியிருக்க வேண்டும்! அதுவும் பதிவு போட்டு 24 மணி நேரத்தினுள் உங்களுக்கு ஓட்டுக்கள் கிடைத்திருக்க வேண்டும்! முயற்சி செய்யுங்கள்! நிறைய நண்பர்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்! நீங்களாக முதலில் சென்று ஓட்டுக்கள் போட்டு, கமெண்டுகளும் போடுகள்!
இயன்றவரை அருமை, சூப்பர் இந்த மாதிரி கமெண்டுகளைத் தவிர்த்து விட்டு, பதிவை முழுமையாகப் படித்து வித்தியாசமான கோணத்தில் கமெண்டுகளைப் போட்டால், நீங்கள் அவர்களது மனதில் இடம்பிடித்துவிடுவீர்கள்! அவர்களும் உங்களுக்கு பதில் ஓட்டுக்களும், கமெண்டுகளும் போடுவார்கள்!
சிலர் நமது ஓட்டுக்களையும், கமெண்டுகளையும் வாங்கிவிட்டு கம்மென்று இருந்து விடுவார்கள்! காலப் போக்கில் அவர்களை அடையாளம் கண்டு நீக்கி விடலாம்! முன்பு நான் இன்ட்லியில் நிறையப் பேருக்கு ஓட்டுக்களை அள்ளிப் போட்டேன்! பலர் கண்டு கொள்ளவே இல்லை.
இப்போது இன்டிலியில் 136 பேரை block பண்ணியுள்ளேன்! என்னிடம் ஓட்டு வாங்க அவர்களுக்கு கசக்குது போல! நான் என்ன செய்ய முடியும்? ஹி.... ஹி... ஹி...!