இப்போட்டியில் 3&1 என்ற கணக்கில் தொடரை இங்கிலாந்து வென்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முடிந்த கடைசி டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 225 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 102 ரன் எடுத்து திணறியது. இந்த நிலையில், 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டிராட் & ஸ்டூவர்ட் ஜோடி 332 சேர்த்து உலக சாதனை படைத்தது. இந்த ஒரு போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால், தொடரை சமன் செய்திருக்க முடியும். ஆனால், இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இங்கிலாந்தின் Ôநியூஸ் ஆப் வேல்டுÕ பத்திரிகை பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. முகமது அமீர், முகமது ஆசிப் இருவரை நோ&பால், வொய்டாக பந்து வீசுமாறு பாகிஸ்தானைச் சேர்ந்த சூதாட்டக்காரர் மசார் அஜித் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக அவர்களுக்கு ^1.15 கோடி பணம் கொடுத்துள்ளார். இந்த சூதாட்டத்தில் கேப்டன் சல்மான் பட், விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் உட்பட 7 வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், சூதாட்டத்தில் சம்பந்தப்பட்ட தரகர் மசார் மஜித்தை லண்டனில் கைது செய்த ஸ்காட்லாந்து யார்டு போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 வீரர்கள் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சூதாட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த தரகர்களும் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரத்தை மஜித் கொடுத்துள்ளார். இந்த பிரச்னையில் மேலும் பல தரகர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.பாகிஸ்தான் வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டல்களில் போலீசார் தீவிர சோதனை செய்துள்ளனர். அப்போது, வீரர்கள் சூதாட்டத்தில்ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, வீரர்களின் லேப் டாப், செல்போன், பணம் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர்களிடம் விசாரனை நடத்தப்பட் டதை அணி மேலாளர் யாவர் சயீத் உறுதி செய்துள்ளார்.
சூதாட்டம் நடந்த விதம் டி.வி.யில் ஒளிபரப்பு
லார்ட்ஸ் டெஸ்டில் சூதாட்டம் எப்படி நடந்தது என்பது குறித்த வீடியோ ஆதராத்தை தனியார் தொலைக்காட்சிகள் நேற்று இரவு போட்டி போட்டு வெளியிட்டன. சூதாட்ட தரகர் மசார் மஜித், கட்டு கட்டாக பணத்தை வைத்திருப்பது, வீரர்களை சந்தித்து பேசுவது, கேப்டன் சல்மான் பட்டுடன் சேர்ந்து புகைப்படத்தில் இருப்பது போன்ற காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டன.
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - சூதாட்டம் - என்ன செய்வது - எல்லத் துறைகளிலும் கொடி கட்டிப் பறக்கிறது. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா