
எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காகவே இனி நான் விளம்பரப் படங்களில் நடிக்க உள்ளேன் என நடிகர் கமல்ஹாஸன் கூறியுள்ளார்.
கமலின் பேட்டி:
எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த சரியான கல்வி, ஊட்டச்சத்தான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கச் செய்வது நாம் ஒவ்வொருவரின் கடமை. பொதுமக்களின் ஆதரவு பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தினை உருவாக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் கனவுகள் உண்டு. அவர்களின் கனவுகளை நினைவாக்க நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்.
இதுவரை நான் விளம்பரப் படங்களில் நடித்ததில்லை. விளம்பரப் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தும் அதை நான் பயன்படுத்தவில்லை. அந்த வாய்ப்புகளை நான் தவிர்த்து வந்தேன். இனி விளம்பர படங்களில் நடிக்க உள்ளேன். அதில் வரும் வருமானத்தை, நான் எனக்காகப் பயன்படுத்தப் போவதில்லை. அந்தப் பணம் என்னுடையது அல்ல. அந்தப் பணத்தை எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொடுப்பதாக முடிவு செய்துள்ளேன்.
நான் தனி மனிதனாகக் கொடுக்கும் பணத்தைவிட, இரண்டு மடங்கு பணத்தை இந்தக் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அரசாங்கம் கொடுக்குமேயானால் அது நன்றாக இருக்கும். அரசாங்கத்துக்கு இது ஒரு வேண்டுகோள்தான். கோரிக்கை அல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.
3 கருத்துரைகள்:
நல்ல தகவல் ஒன்று தங்களின் 100 வது பதிவிற்கு முற்கூட்டிய வாழ்த்துக்கள்...
@ம.தி.சுதா
நன்றி...ம.தி. சுதா
TANSACS ஊழியர்களிடம் தங்களது ஒரு நாள் ஊதியத்தை, contribution என்ற பெயரில் பிடிங்கிவிட்டு, அப்படி contribution தராதவர்களை மிரட்டி வசூல் செய்து, அதற்கு பின்னர், இப்போது என்னவோ தங்கள் சொந்த பணத்தை வாரி வழங்கியது போல், கமலுடன் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் tansacs நிர்வாக உண்மைகளை பற்றி தெரியாமல், கமல் ஏமாந்ததை என்னவென்று சொல்வது?