
நண்பர்களே, இன்றைய காலகட்டத்தில் நாம் நம் குடும்பத்தை வசதியாக வைத்திருப்பதற்கும், மற்றவர்களுக்கு முன் நம்மை தரம் உயர்த்தி காட்டவும் பணம் தேவைப்படுகிறது. அந்த பணத்தை நாம் அடைய பல வழிகளில் முயற்சிக்கிறோம். அந்த பணத்திற்கான உழைப்பை செலவளிக்கும் நாம் நம் ஆரோக்கியத்தை மறந்து விடுகிறோம். பணத்தை பதுக்கும் நாம் நம் வயிற்றின் தேவையை மறந்து விடுகிறோம். நம் வயிற்றுக்கு தேவையானது பணம் அல்ல, உணவு அதுவும் சரியான வேளையில் உணவு. இந்த உணவிற்காக தானே நாம் சம்பாதிக்கிறோம். ஆகவே நம்மை வெளிப்படுத்திக்கொள்ள காட்டும் அக்கறையில் கொஞ்சமாவது வயிற்றையும் கவனிக்க வேண்டும். வயிறு நிறைந்தால் தான் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும். சக்தி இருந்தால்தான் உழைப்பு உழைக்க முடியும். அந்த உழைப்பு இருந்தால் தான் பணம் கிடைக்கும். வயிற்றுக்கு தேவையான உணவு கிடைக்காவிடில் அல்சர் என்ற நோய் வரும்.
அல்சர் என்றால் என்ன?
வயிற்றில் அல்சர் உண்டாவதற்கு முக்கியமான காரணம் ஒரு வகை கிருமி. இந்த கிருமியின் பெயர் எச் - பைலோரே. இந்த கிருமி இரைப்பையின் சுவர்களில் எப்போதும் ஒட்டிக கொண்டே இருக்கும். வயிற்றில் சுரக்கும் அமிலம் நெருப்பு போன்ற வீரியம் கொண்டதால், அமிலம் சுரக்கும் போது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இந்தக் கிருமி இரைப்பையின் சுவர்களைத் துளைத்துக் கொண்டு பதுங்கி விடும். அமிலத்தன்மை குறைந்தவுடன் வெளியே வந்து விடும்.
இப்படி மாறி மாறி பல்வேறு இடங்களில் இரைப்பையைத் துளைத்து புண்ணாக்கி விடுவாதனால் அல்சர் நோய் உண்டாகிறது. அல்சர் நோயைக் கட்டுப்படுத்த ஒரே வழி சரியான நேரத்தில் உணவை உட்கொள்வது தான். நினைத்த நேரம் உணவு உன்ன நாம் ஒன்றும் சாமியார் இல்லை. நமது வீடும் உணவகம் இல்லை. எனவே, சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட்டு அல்சருக்கும், அதனால் உண்டாகும் மருத்துவமனை அலைச்சலுக்கும் விடை கொடுப்போம்.
27 கருத்துரைகள்:
Vadai
அக்கறையான பகிர்வு !
நன்றி பிரகாஷ்
Very useful news
டாக்டர் பிரகாஷ் வாழ்க.. ( சைவம்)
good post best of luck
மிகச் சரியான விபரம்.....நன்றி
நன்றி நண்பரே
டாக்டர் பிரகாஷ் வாழ்க!!!.........
தமிழ் வாசி ஒசிஎல்லாம் சரிவராது
இரண்டு போட்டுள்ளேன் வட்டியோட
திருப்பீடுங்க ஆமா அம்புட்டுதா...........
அக்கறையான பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
கண்டிப்பாக அல்சர் கவணிக்க பட வேண்டிய ஒன்று .ஏனென்றால் அல்சரின் கடைசி முடிவு கேன்சர். தங்களின் பகிற்வு பலருக்கு விழிப்புணர்வு
thulithuliyaai.blogspot.com
பிரயோசனமான பதிவு ..நன்றி நண்பா
//டாக்டர் பிரகாஷ் வாழ்க!!!.........// ஹா...ஹா..நீங்க தானா அது? ரொம்ப நாள் டவுட்டு இன்னைக்கு தீர்ந்துச்சு..
நல்ல பதிவு..
நன்றி..
பிரகாஷ் முக்கியமான தகவல். இந்த அல்சர் நோயினால் தினம் தினம் ஆயிரக்கனக்கானோர் அவதிப்படுகின்றனர். இதை வாராமல் தடுக்க நீங்கள் கொடுத்திருக்கும் ஆலோசனை மிகவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு பயனுள்ள தகவல் மாப்ள..
பதிவருக்கு நன்றி..
பதிவருக்கு நன்றி..
பயனுள்ள தகவல் ..
சிலருக்கு அசிடிக் தன்மை அதிகமாய் இருக்கும் அவர்களுககு தான் அல்சர் வருகிறது. அனுபவத்தால் (எனக்கல்ல )கண்ட உண்மை. சீரகத்தை (சோம்பு அல்ல) வெறும் சட்டியில் கொஞ்ச நேரம் வறுத்தால் நல்ல வாசனை வரும். அதை எடுத்து வைத்துக் கொண்டு, ஒவ்வொரு நேரம் மதிய உணவுக்கு பின் கொஞ்சம் சாப்பிட்டால் அசிடிக் தன்மை குறையும். அதனால் அல்சரும் குறையும்
திருமண நாள் நல்வாழ்த்துக்கள் !!
நல்லதகவல் டாகுடர் பிரகாஷ்.... !
பயனுள்ள பதிவு நன்றி.
வணக்கம் சகோ,
பயனுள்ள பதிவினைத் தந்திருக்கிறீங்க.
அல்சரைக் குறைப்பதற்கேற்று
நேரம் தவறாது உண்ணும் உணவும்,
பச்சைப் பால்/ காய்ச்சாத பாலும் மிகச் சிறந்தவையாகும்.
வணக்கம் அண்ணே நல்ல பயனுள்ள தேவையான பதிவு .
கூடுதலான பேருக்கு அல்சர் பிரச்சனை இருக்கிறது,,
உங்கள் பதிவிற்கு நன்றிகள்..
வாழ்த்துக்கள் உங்கள் அக்கறைக்கு,,,
அன்பின் பிரகாஷ் - தகவலுக்கு நன்றி - பயனுள்ள தகவல். நட்புடன் சீனா