சாலை பாதுகாப்பு வார விழா கடந்த ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. காவல் துறையினர், விபத்தைக் குறைக்கவும், சாலை விதிகளை கடைபிடிக்கவும் பல இடங்களில் வாசக பேனர்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தியும் வருகின்றார்கள்.
இரு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு:► இரு சக்கர வாகனம் இருவருக்காக மட்டுமே இருவருக்கு மேல் பயணம் செய்யக் கூடாது.
► உரிய சைகைகள் காட்டாமல் திரும்பக் கூடாது.
► பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டக்கூடாது.
► முன் செல்லும் வாகனத்தை முந்தும் போது இடது பக்கமாக முந்துதல் கூடாது.
► மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டுதல் கூடாது.
► 50 கி.மி. வேகத்திற்கு குறைக்காமல் செல்லக்கூடாது.
► சாலை சந்திப்புகளில் வேகத்தை முறைக்காமல் செல்லக்கூடாது.
► மஞ்சள் கோட்டைத் தாண்டி வாகனத்தை ஓட்டக்கூடாது.
► வளைவுகளில் முன் செல்லும் வண்டியை முந்தக்கூடாது.
► வாகனங்களில் சரக்குகளை ஏற்றிச் செல்லக்கூடாது.
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு:
► ஓட்டுனர்களுக்கு அருகில் பயணிகளை அமரச் செய்து ஓட்டக்கூடாது.
► மூணு நபர்களுக்கு மேல் ஆட்டோவில் பயணிகளை ஏற்றக்கூடாது.
► பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது பைகள் வெளியே தொங்கிக் கொண்டு வருமாறு எடுத்துச் செல்லக்கூடாது.
► அளவுக்கு அதிகமாக பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவில் அடித்துச் செல்லுதல் கூடாது.
► சீருடை பெயர் வில்லை அணியாமல் ஒட்டுதல் கூடாது.
► அனுமதி பெறாமல் விளம்பரப் பலகை மாட்டக்கூடாது.
► அதிக பிரகாசமுள்ள மஞ்சள் விளக்குகளை வாகனத்தின் முன்பாக பொருத்தக் கூடாது.
► புகை பிடித்துக் கொண்டு ஆட்டோ ஓட்டக் கூடாது.
► மது அருந்திய நிலையில் ஆட்டோ ஓட்டக் கூடாது.
► வாகனங்களை சரக்குகள் ஏற்றிச் செல்ல பயன்படுத்துதல் கூடாது.
சுற்றுலா வாகனங்கள் மற்றும் கார் ஓட்டுனர்களுக்கு:
► அனுமதிக்கப்பட்ட வேகமாகிய 65கி.மீ. வேகத்திற்கு மேல் வாகனத்தை ஓட்டக் கூடாது.
► சீருடை பெயர் வில்லையின்றி ஓட்டக்கூடாது.
► உரிய அனுமதிச் சீட்டின்றி வாகனத்தை ஓட்டுதல் கூடாது.
► தகுதிச் சான்று இன்றி வாகனத்தை ஓட்டுதல் கூடாது.
► உபரி இருக்கைகள் அமைத்து வாகனத்தை ஓட்டக்கூடாது.
► நடைச் சீட்டு பராமரிக்காமல் இருத்தல் கூடாது.
► அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது.
► வாகனங்களில் சரக்குகள் ஏற்றிச் செல்ல பயன்படுத்தக் கூடாது.
► சட்ட விரோத செயல்களுக்கு வாகனத்தை பயன்படுத்தக் கூடாது.
►மது அருந்திய நிலையில் வாகனத்தை ஓட்டக் கூடாது.
சரக்கு வாகன ஓட்டுனர்களுக்கு:
► ஓவர் லோடு சரக்குகள் ஏற்றக் கூடாது.
► அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது.
► அதிகப்பிரகாசம் தரும் உபரி முகப்பு விளக்குகள் பொருத்தக் கூடாது.
► மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டக்கூடாது.
►தூக்கக் கலக்கத்துடன் வாகனம் ஓட்டக்கூடாது.
► கிளீனரிடம் வாகனத்தை ஓட்டச் செல்லக்கூடாது.
► அதிக உயரமான சரக்கு வாகனங்களை ஓட்டிச் செல்லக் கூடாது (தரையிலிருந்து 380 செ.மீ. க்கு மேல் இருக்ககூடாது).
► பர்மிட், இன்சூரன்ஸ், தகுதிச் சான்றிதழ்களை சரி பார்க்காமல் ஓட்டக் கூடாது.
► அனுமதிக்கு மேல் நபர்களை கேபினில் ஏற்றக்கூடாது.
► சரக்குகளின் மேல் அபாயமான முறையில் ஆட்களை ஏற்றிச் செல்லக் கூடாது.
பேருந்து ஓட்டுனர்களுக்கு:
► அளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது.
► புட் போர்டுகளில் பயணிகளை அனுமதிக்க கூடாது.
► முன் இடது இருக்கைகளில் ஓட்டுனர் பார்வையை மறைக்கும்படி பயணிகளை அமர வைக்கக்கூடாது.
► கால அட்டவணை பேருந்தில் இல்லாமல் இருக்கக் கூடாது.
► முன்னால் இருக்கும் பயணிகளிடம் பேசிக் கொண்டு பேருந்தை ஓட்டக் கூடாது.
► இசை நாடா ஒலி இருப்பின் அதில் கவனம் செலுத்திக் கொண்டே பேருந்தை ஓட்டக் கூடாது.
► சீருடை, பெயர் வில்லை அணியாமல் பேருந்தை ஓட்டக் கூடாது.
► புகைபிடித்துக் கொண்டு பேருந்தை ஓட்டக் கூடாது.
►மது அருந்திய நிலையில் பேருந்தை ஓட்டக் கூடாது.
பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்போம்! விபத்தைக் குறைப்போம்!!
THANKS: S.B. RAAJENDRAN
DISTRICT CHAIRPERSON ROAD SAFETY & TRAFFIC AWARENESS
22 கருத்துரைகள்:
சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பதால் எங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்து கொள்ள முடியும் . நல்ல பகிர்வு அண்ணே .
சாலை பாதுகாப்பு ,
"சாலையே இல்லையே"
நல்ல விழிப்புணர்வு அவசியமான நேரத்தில்... அந்த நத்தை படம் சூப்பர்
விழிப்புணர்வு பதிவுக்கு நன்றிகள் உங்களுக்கு!
வாகன ஓட்டிகளுக்கு தேவையான அறிவுரைகள்தான்..பகிர்வுக்கு நன்றி..
மிகவும் அவசியமான கருத்துக்கள்தான். சின்ன வயசுலேருந்து சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க. ஆனா யாரும் கேட்பதில்லையே? அவங்கவங்க புத்தியில உரைக்கணும்...
வணக்கம் பிரகாஷ்!சாலை விதிகள் பாதுகாப்பு வாரம் ஓ.கே!ஆனால்,கூடாது,கூடாது என்று சொல்லாமல் இப்படித்தான் விதிகள் (கூடும்)என்று பிரசாரிக்கலாமே????
நீங்க டிரைவரா? அப்போ கண்டிப்பா உங்களுக்குத்தான்..////அப்போ உங்களுக்கு இல்லியா?(நீங்க டிரைவர் இல்லியா?)ஹி!ஹி!ஹி!!!!!
இவைகளை கடைபிடிப்பதால், நம் உயிர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்கள் உயிருக்கும் அது பாதுகாப்பாக இருக்கும் என்பது சத்தியமான உண்மை...!!!
விழிப்புணர்வு பதிவு அருமை, பாராட்டுக்கள்...!!!
கோவிந்தராஜ்,மதுரை. said...
சாலை பாதுகாப்பு ,
"சாலையே இல்லையே"//
ஹா ஹா ஹா ஹா அண்ணே விடுங்க விடுங்க ஹி ஹி...
Avaciyamana
pathivu
நல்ல பதிவு! நன்றி நண்பரே!
சாலைப்பாதுகாப்பு வாரத்தில் நல்ல விழிப்புணர்வு பதிவு.
நம்நாட்டில் அனேகருக்கு சாலைவிதிகள் தெரியும். ஆனால் என்ன கடைபிடிக்கத்தான் மாட்டார்கள்...அவர்க்ள் உயிரோடு மற்றவர்கள் உயிருக்கும் சேர்த்து உலைவைத்துவிடுவார்கள்.
நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கீங்க. நன்றி.
நல்ல பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள் பிரகாஷ்.
NALLA VISAYAM... ANAIVARUM KADAI PIDIKKA VENDUM.. PATHIVUKKU VAALTHTHUKKAL
என்னுடைய வரம்தருவாய் புத்தாண்டே கவிதையில் கூட சாலை விதிகளைப் பின்பற்றுவதன் அவசியத்தைக் கூறி "விதி மீறா மனநிலைக்கு வித்திடுவாய் புத்தாண்டே" என் வர்ம் கேட்டுள்ளேன்!
நல்ல பயனுள்ள பதிவு! தொடரட்டும் உங்கள் பயந்தரும் பதிவுகள்!
என்னுடைய வலைப்பூ முகவரி
www.esseshadri.blogspot.com
நன்றி!
காரஞ்சன்(சேஷ்)
Useful informations for various line of drivers and public. Thanks for sharing.
நல்ல தகவல். மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும் மனோவிற்கு சில யோசனைகள் சொல்லி இருக்கலாம்.
வாகன ஓட்டிகள் அனைவருக்கும் மிகவும் உபயோகமான பதிவு நண்பா.
நன்றி.
Enter your comment... ருல்ஸ்சை எல்லாரும் கடை பிடிப்பது கிடையாது