பொங்கல் பண்டிகையின் சிறப்பு நிகழ்வாக, பாரம்பரிய விளையாட்டாக தொடரும் ஜல்லிக்கட்டு, அரசின் பல்வேறு கெடுபிடிகளுக்கு நடுவில், மதுரை அவனியாபுரத்தில் நேற்று கோலாகலமாக நடந்தது. ஜல்லிக்கட்டிற்கு தடை கோரி பிராணிகள் நல வாரியம், விலங்குகள் நல ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த ஐகோர்ட் அனுமதியளித்தது. ஜல்லிகட்டு இந்தாண்டு நடக்குமா? என்ற சந்தேகத்தில் இருந்த மாடுபிடிவீரர்கள் நேற்று அவனியாபுரத்தில் உற்சாகத்துடன் களம் இறங்கினர். கலெக்டர் சகாயம், எஸ்.பி., ஆஸ்ரா கர்க், மத்திய பிராணிகள் நலவாரிய நிர்வாகிகள் தலைமையில் ஜல்லிக்கட்டு துவங்கியது. சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் விழாக்குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலில் நாட்டாமைகளின் மாடுகள் களம் இறங்கின. இவற்றை வீரர்கள் பிடிக்க கூடாது என அறிவிக்கப்பட்டது. அதன் பின் தொடர்ச்சியாக 260 மாடுகள் களத்தில் இறங்கின.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மாடுகள் பங்கேற்றன. சீருடை அணிந்த வீரர்கள் மட்டும் மாடுகள் பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு வழக்கம் போல் மிக்சி, கிரைண்டர் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன.
அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் ரோட்டில் குருநாதன் கோயில்முன் வாடி வாசல் அமைக்கப்பட்டது. அப்பகுதி தார் ரோடாக உள்ளதால், காளைகள் வழுக்கி விழுந்துவிடாமலும், வீரர்கள் தவறிவிழுந்து காயம் அடையாமலும் இருக்க, வாடிவாசல் முதல் 200 அடி தூரத்திற்கு தேங்காய் நார் போடப்பட்டது.காலை 10.30மணிக்கு பூஜைகள் முடிந்து, கலெக்டர் காமராஜ் துவக்கி வைத்தார். முதலில் சுவாமி மாடுகள், நாட்டாமை, கிராமத்தினர் மாடுகள் வாடிவாசல் வழியாக திறந்து விடப்பட்டன.
தொடர்ந்து மதுரை, திருச்சி, விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 154 மாடுகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. 131 வீரர்கள் காளைகளை பிடிக்க பெயர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் மூன்றுபேர் 21வயதிற்கு குறைவாக இருந்ததாலும், இரண்டுபேர் போதையில் இருந்ததாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.பல காளைகள் சீறிப்பாய்ந்து, வீரர்களிடம் பிடிபடாமல் ஏமாற்றி சென்று பரிசுகளை பெற்றன. எனினும் காளைகளை வீரர்கள் திறமையாக பிடித்து பரிசுகள் பெற்றனர். இந்த ஜல்லிக்கட்டில் 42 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களில் 12 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பார்வையாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வீடியோ இணைப்பு:
thanks: riya tv, dinamalar
12 கருத்துரைகள்:
முதல் படையல்
உடனடி இணைப்பு அருமை
பிரகாஷ் நீங்க மாடு பிடிச்சிங்களா?
தெடர்புடைய இடுகை..:
"அவனியாபுரம்" சென்ற பதிவர்’ஸ்(மாட்டை அடக்க!!!!!!?????????)
மாப்ள நல்ல வேல அந்த சரக்கடிச்சவங்க தப்பிச்சாங்க போல ஹிஹி!
கலக்கல்...
நல்லாருக்கு.....
வணக்கம் நண்பா,
நல்லதோர் வீடியோ பகிர்வு,
அதுவும் பின்னணியில் பாடல்கள், வர்ணனை ஒலிக்க வீரர்கள் மஞ்சள் உடையுடன் காளையை அடக்க போட்டியிடும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது,
அதே நேரம் பயமாகவும் இருக்கிறது.
தமிழர் கலாச்சாரத்தினையும், பண்பாட்டினையும் உணர்த்தும் விளையாட்டினை நான் என் வாழ்நாளில் நேரே பார்த்ததில்லை.
பகிர்விற்கு நன்றி.
பிரகாஸ் நீங்க பார்வையாளரா? இல்ல மாடு பிடிப்பவரா?
வணக்கம் பிரகாஷ்!வீடியோ அருமை!எல்லோரும் இருபத்தொரு வயதுக்கு மேற்பட்டவர்களா, நம்பவே முடியவில்லையே???
உடனடி வீடியோ இணைப்பு அருமை பிரகாஷ்...
நல்ல் வீடியோ பதிவு.வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு.
வாழ்த்துகள் பிரகாஷ்.