சீறிப்பாயும் காளையை அடக்க பாயும் வீரர் |
மதுரை மாவட்டம் பாலமேட்டில், நேற்று நடந்த ஜல்லிக்கட்டில், 355 காளைகள் சீறி வந்து, ஆக்ரோஷமாக பாய்ந்தன. காளைகளை அடக்க முயன்ற, ஆறு வீரர்கள் படுகாயமடைந்தனர். 20 பேர் லேசான காயம் அடைந்தனர். பாலமேடு மஞ்சமலையாற்றில், காலை 10 மணிக்குத் துவங்கிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், முதலில், ஐந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 10.15 மணி முதல், வாடிவாசல் வழியாக மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள், பச்சை நிறத்தில் சீருடை அணிந்திருந்தனர். மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன. பாதுகாப்புப் பணியில், 1,500 போலீசார் ஈடுபட்டனர்.
காளைகளை அடக்க களத்தில் இறங்கும் வீரர்கள் |
கூரிய கொம்புகள், வெறியும் பயமும் கலந்த பார்வை, மிரட்டும் திமில்களுடன் காளைகள் களத்தில் இறங்கின. பயிற்சி பெற்ற வீரர்கள், "வந்து பார்...' என, திமில்களை பிடித்தும், காளையின் கால்களை தங்களின் கால்களால் மடக்கியும் அடக்கினர். வீரர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், மிக்சி, கிரைண்டர், சைக்கிள், பீரோ, பணம் பரிசுகளாக வழங்கப்பட்டன.பிடிபடாத மாடுகளின் உரிமையாளருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
சீறும் காளைகள் முட்டிக் கொள்ளும் காட்சி |
ஊமச்சிகுளம் வினோத், சின்ன ஊர்சேரி தினேஷ், முடக்கத்தான் மணி, அரிட்டாபட்டி கருப்பணன் போன்ற வீரர்கள், சீறிய காளைகளை, லாவகமாக அடக்கி, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியதுடன், பரிசுப் பொருட்களையும் அள்ளிச் சென்றனர். கீழசின்னாளபட்டி பாஸ்கர், நான்கு மாடுகளைப் பிடித்து, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார். மாலை 4.10 மணிக்கு ஜல்லிக்கட்டு முடிந்தது. இதில், 355 மாடுகள் பங்கேற்றன. விதி மீறல் காரணமாக, 35 மாடுகள், சோதனையின் போது தகுதியிழப்பு செய்யப்பட்டன.
வீடியோ தொகுப்பு - 1
வீடியோ தொகுப்பு - 2
வீடியோ தொகுப்பு - 3
thanks: Dmax, dinamalar
தொடர்புடைய இடுகை:
8 கருத்துரைகள்:
vikki ulagam angry on u .. hi hi
இந்த பொழப்பு தேவையா...இதுக்கு பேரு வீரமா...கொய்யால!
@விக்கியுலகம்
இந்த பொழப்பு தேவையா...இதுக்கு பேரு வீரமா...கொய்யால!///
ஹி..ஹி.. ஜல்லிக்கட்டில் களம் இறங்கி பாரும்மையா.....
தமிழ்களின் வீர விளையாட்டு...
இருதரப்புக்கும் சேதாரமும் துன்புறுத்தலும் இல்லாமல் இருந்தால் நல்லதுதான்...
வணக்கம் பிரகாஷ்!பகிர்வுக்கு நன்றி!வீடியோ பார்க்கவில்லை,நேரம் இருக்கும்போது(ஆமா,இவரு கவர்னர் உத்தியோகம் பாக்குறாரு!) பார்க்கிறேன்!///தமிழ்வாசி பிரகாஷ் said...
@விக்கியுலகம்
இந்த பொழப்பு தேவையா...இதுக்கு பேரு வீரமா...கொய்யால!///
ஹி..ஹி.. ஜல்லிக்கட்டில் களம் இறங்கி பாரும்மையா.....///இதுக்கோசரம் வியட் நாமிலேருந்து இங்க வர முடியுமா?
நானும் இந்த பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தொலைக்காட்ச்சியில் பார்த்தேன் சகோ.. முறையான பாதுகாப்போடு நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கும் வண்ணம் இருந்தது...
தமிழ்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு
தங்களின் திருமணம் கூட காளை அடக்கி தான் நடந்ததோ!