இன்று பேப்பரில் வாசித்த சில ஆராய்ச்சி துணுக்குகள்:
நம்ம பூமியில் இருந்து 33 ஒளி ஆண்டுகள் தூரத்தில் ஒரு புதிய கிரகம் இருப்பதாக கண்ண்டறியப்பட்டுள்ளது. இந்த கிரகத்தில் நமது பூமியின் வெப்பத்தை விட குறைவாக இருப்பதாகவும், உயிரினங்கள் வாழ ஏற்ற சில சூழ்நிலைகள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த புதிய கிரகத்திற்கு GJ 667 C என பெயரிடப்பட்டுள்ளது.
பீர் மற்றும் ஒயின் குடிப்பவர்களை வைத்து ஒரு ஆராய்ச்சி அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. மிதமான பீர் சாப்பிடுபவர்களில் சுமார் 31 சதவீதம் நபர்களுக்கு இருதய நோய் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்கிறது. பீரில் அதிக தண்ணீரும், குறைந்த அளவு ஆல்கஹாலும் இருப்பதால் குறைந்த அளவு ஆல்கஹால் மட்டுமே உடலில் சேர்க்கிறது. இதனால் இருதய நோய் தாக்கம் அவர்களுக்கு இருப்பது இல்லை.
உடல் எடையை குறைக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் பால் கலக்காத டீ சாப்பிட வேண்டும். ஏனெனில் உடல் எடையை குறைக்கும் பல மூலப்பொருட்கள் டீயில் உள்ளன. ஆனால் நாம் கலக்கும் பாலில் உடல் எடையை அதிகரிக்கும் கொழுப்புச் சத்துக்கள் இருப்பதால் உடல் எடை அதிகரிக்கிறது. எனவே பால் இல்லாத டீ குடிப்பது நல்லது. மேலும் பால் கலக்காத டீ தினமும் மூன்று வேளைகள் அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குறைவதாக ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
வயிற்றுப்புண் மற்றும் நெஞ்சு எரிச்சலுக்கு பி.பி.ஐ என்ற மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்தால் கடும் பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார்கள். இம் மருந்து உட்கொள்பவர்களுக்கு எலும்பு மெல்ல மெல்ல பலவீனம் அடைவதாகவும், 45 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு எலும்பு பாதிப்பு அதிகம் ஏற்படுவதாகவும், பெண்களுக்கு இடுப்பு எலும்பை சேதப்படுத்துவதாகவும், எலும்பு முறிவு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சர்க்கரை விஷத்தன்மை வாய்ந்ததாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். சர்க்கரையை அதிகம் சாப்பிட்டால் உடல் பருமன், இதய நோய், புற்று நோய், கல்லீரல் நோய் ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளார்கள். எனவே, ஆல்கஹால், புகையிலைக்கு கட்டுப்பாடு விதித்திருப்பது போல சர்க்கரை விற்பனைக்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என இந்த ஆராய்ச்சி வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
அதிக அளவு சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு குடல் புற்று நோயின் தாக்குதல் குறைவாக இருக்கும் என ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். சாக்லேட்டில் கோகோ கலக்கப்படுகிறது, அதில் ஆன்டி அக்சிடேன்ஸ் என்ற உயிர் எதிர்ப்பு சக்தி உள்ளது, இதனால் புற்று நோய் தாக்கும் மூலக்கூறுகளை அழிக்கும் வல்லமை அந்த எதிர்ப்பு சக்திக்கு இருப்பதாக கண்டுபிடித்துள்ளார்கள்.
21 கருத்துரைகள்:
டைட்டில்ல ஆங்கில வார்த்தை, நான் தமிழன் ஹி ஹி
அப்போ இனி எல்லா பொட்டிக்கடைலயும் பீர் கிடைக்குமான்னு விக்கிம் மனோ அண்ணா சார்புல கேட்குறேன்.
@ராஜி
அப்போ இனி எல்லா பொட்டிக்கடைலயும் பீர் கிடைக்குமான்னு விக்கிம் மனோ அண்ணா சார்புல கேட்குறேன்.///
அவர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைப்போம்...
மாப்ள உங்க பகிர்வு மூலம் பீர் குடிப்பதை நீங்க ஆதரிக்கரதை பார்த்தா ஹிஹி...அங்கயும் மப்பா ஹிஹி..
இதுல எங்களுக்காக வேற கோரிக்கை...ஏன்யா ஏன் ஹிஹி!
@விக்கியுலகம்
மாப்ள உங்க பகிர்வு மூலம் பீர் குடிப்பதை நீங்க ஆதரிக்கரதை பார்த்தா ஹிஹி...அங்கயும் மப்பா ஹிஹி..
///
ஒரு ஆராய்ச்சிய சொன்ன ரிப்பீட்டு ஆகுதே? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
அட..அப்படியா....????
வணக்கம் பிரகாஷ்,
பயனுள்ள தகவல் பகிர்வு.
நல்ல தகவல்...பகிர்வுக்கு நன்றி! விக்கி,மனோ,நக்ஸ் மகிழ்ச்சியில் இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தகவல்!
சரியாப் போச்சி ! வாழ்க 'குடி'மக்கள் !
பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் தான்...
பகிர்வுக்கு நன்றி
அட நீங்க வேற? சும்மாவே பீர் ஆறா ஓடிக்கிட்டிருக்கு. ஏதோ சொல்றீங்க கேட்டுக்கிறேன். நன்றி
நிறைய தகவல்கள்... நன்று.
அன்பின் பிரகாஷ் - தகவல் பகிர்வினிற்கி நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
சாக்லேட் பற்றி சாக்லேட் தகவல்.
பால் கலக்காத டீ என்பது சரிபடாத விடயம்.
வணக்கம் சகோ,
முதலாவது கண்டு பிடிப்பு தகவல் புதுமையாக இருக்கிறது.
பயனுள்ள சுகாதார தகவலைக் கொடுத்திருக்கிறீங்க.
ரொம்ப நன்றி சகோ.
Arumaiyana Pathivu Sir. Beer is not o.k. Neengale ippadi sollalaama?
TM 9.
நுpறைய விசயங்கள் சொல்லியிருக்கீங்க
அருமை...
தகவல்களை தொகுத்தளித்தமைக்கு நன்றி!
தகவலுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in