மதுரையில டூவீலர் ஓட்டுறவங்க கட்டாயம் ஹெல்மெட் போடணும்னு சட்டம் வந்து சுமாரா ரெண்டு வாரம் ஆச்சு. போலிசும் சிக்னல் மற்றும் பொது மக்கள் கூடும் இடத்தில மைக் போட்டு ஹெல்மெட்டின் அவசியத்தை எடுத்து சொல்லி மக்களை ஹெல்மெட் அணியும் படி சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஹெல்மெட் சட்டம் வந்ததுல இருந்து பழைய ஹெல்மெட்டை தேடிக் கண்டுபிடிச்சு தூசி தொடச்சு நிறைய பேரு யூஸ் பண்றாங்க. ஹெல்மெட் இல்லாதவங்க புதுசா ஹெல்மெட் வாங்கி யூஸ் பண்றாங்க. இந்த ரெண்டு வாரத்துல நான் பார்த்த அளவுல நிறைய பேரு ரோட்டோரத்துல விக்கிற ஹெல்மெட் வாங்கறாங்க. இந்த ஹெல்மெட் வாங்க முதல் காரணம் ரேட் ரொம்ப கம்மி. அதனால இங்க தான் கூட்டம் அதிகமா இருக்குதுங்க. ஆனா இந்த ஹெல்மேட்டுகள் தரமா இருக்கான்னு யோசிக்கறாங்களான்னு தெரியல. ஐஎஸ்ஐ முத்திரை இருக்கான்னு பாக்கிறாங்களான்னு தெரியல. கலர் கலரா, டிசைன் டிசைனா இருக்கான்னு தான் பாக்கிறாங்க. அதுல நிறைய பேரு ஏதோ சட்டம் போட்டுட்டாங்க, அதுக்கு கண் துடைச்ச மாதிரி பாதி மண்டையை மட்டும் கவர் பண்ற மாதிரியான ஹெல்மெட்கள் தான் அதிகமா வாங்கறாங்க. ஹெல்மெட்டுல நம்ம பாதுகாப்பு இருக்குதுங்கிறத மறந்து போயிருறாங்க. வாங்கறது வாங்கறோம், முழுசா தலையை கவர் பண்ற மாதிரி வாங்கி போட்டா நமக்கு தானே நல்லது. முழுமையான ஹெல்மெட் இருந்தாதான் விபத்துன்னு நடந்தா தலையை பாதுகாக்கும். பாதி ஹெல்மெட் போட்டிருந்தா முகம், தாடை போன்ற பகுதியில அடி பட வாய்ப்பு இருக்கே. அதை நிறைய பேரு மறந்துடுறாங்க. ஆக, ஹெல்மெட்டை சட்டத்துக்காக மட்டுமே யூஸ் பண்றாங்க போல.
நிறைய பேரு ஹெல்மெட்டை வண்டியில மாட்டி விட்டுட்டு தான் ஓட்டராங்க. போலிஸ் செக் போஸ்ட்க்கு பக்கத்துல வந்ததும் எடுத்து தலையில மாட்டிக்கறாங்க. ஒரு நாள் கோரிப்பாளையம் சிக்னல்ல நின்னுட்டு இருந்தேன். அப்போ ஒரு கான்ஸ்டபில் ஹெல்மெட் போடாம நின்னுட்டு இருந்தவங்கள பிடிச்சிட்டு இருந்தாரு. அப்போ எனக்கு முன்னாடி ஒரு வயசானவரு ஹெல்மெட்டை வண்டிக்கு பின்னாடி கயிறு போட்டு கட்டி வச்சிருந்தார். அந்த சிக்னல்ல வண்டிய ஸ்டாப் பண்ணிட்டு இறங்கி வேக வேகமா கயிறை கழட்டி ஹெல்மெட்டை எடுக்றதுக்குள்ள சிக்னல் ஓபன் ஆயிருச்சு, பின்னாடி எல்லோரும் ஹாரன் அடிக்க அவரு ரொம்ப பதட்டம் ஆயிட்டாரு. ஹெல்மெட் கட்டின கயிறை மடிச்சு வைக்க கூட நேரமில்லாம வண்டி ஹேன்ட்பாரில் சுத்திகிட்டு வண்டிய கிளப்பினார். கயிற சரியா வைக்காம ஒரு பக்கம் தரையில ஒரசிட்டே போச்சு. இவர மாதிரியே இன்னும் நிறைய பேரு வண்டி மிர்ரர்ல மாட்டுறதும், பெட்ரோல் டேங்க் மேல வைக்றதும், சைடுல மாட்டி வைக்ரதுமா இருக்காங்க. இன்னும் சிலர் பெட்ரோல் டேங்க்ல சின்ன குழந்தைகளை உட்கார வச்சிட்டு, குழந்தை தலையில மாட்டி விட்டுடுறாங்க. குழந்தைக்கு அது எவ்ளோ இம்சையா பீல் பண்ணும்ங்கிறதையே மறந்துறாங்க.
அப்புறமா பெட்ரோல் டேங்க்ல வச்சிட்டு போறதுல எவ்வளவு ஆபத்து இருக்குன்னு நிறைய பேரு உணர மாட்டிங்கறாங்க. கலெக்டர் ஆபிஸ் ரோட்டுல நாலு நாளுக்கு முன் போயிட்டு இருந்தேன். அந்த ரோட்டுல ஸ்பீட் பிரேக்கர் அதிகம். முன்னாடி போன பைக் ஸ்பீட் ப்ரேக்கர்ல ஏறி இறங்கறப்ப வண்டியில இருந்து ஹெல்மெட் விழுந்திருச்சு. இதனால எதுத்த மாதிரி வந்த பைக் அந்த ஹெல்மெட் மேல மோதி தடுமாறி நின்னுச்சு. ஹெல்மெட் சொந்தக்காரரும் வண்டிய நிறுத்த அப்படியே அந்த இடத்துல டிராபிக் ஜாம் ஆயிருச்சு. இதுக்கு காரணம் பெட்ரோல் டேங்க்ல ஹெல்மெட்டை வச்சதே காரணம். புதுசா ஹெல்மெட் போடறவங்க தான் இந்த மாதிரி செய்றாங்க. தலை வேர்க்கும், முடி கொட்டிப் போயிரும். காத்தோட்டமா இல்லை இப்படி நிறைய காரணம் வேற சொல்வாங்க. ஹெல்மெட் போட்டு போட்டு பழகினா தானே இந்த மாதிரி காரணம் சொல்லாம இருக்க முடியும்.
விபத்துல தலைக்காயத்துனால தான் நிறைய உயிர் பலிகள் நடக்கிறது என ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. தலைக்காயத்தை ஓரளவு தடுக்கவே ஹெல்மெட். பேப்பர்ல டூவீலர் விபத்து பத்தி படிக்கறப்போ ஹெல்மெட் அணியவில்லை அப்படின்னு பிராக்கெட் போட்டு குறிப்பிட்டு இருப்பாங்க, நிறைய பேர் பார்த்திருப்பிங்க, அதுக்கு காரணம் என்னான்னா டூவீலர் விபத்துல ஹெல்மெட் போடாம இருந்து இறந்துட்டாங்கன்னா இன்சூரன்ஸ் கம்பெனி பொறுப்பு ஆகாது. அதாவது இன்சூரன்ஸ் பணம் தர மாட்டாங்க. அதுக்கு ப்ரூப் தான் அந்த பேப்பர் நியூஸ். ஹெல்மெட் போட்டிருந்தும் தலையில அடிபடாமவா இருக்கப் போகுது? என வியாக்கியானம் பேசுறவங்க பேசிட்டே தான் இருப்பாங்க. அத பத்தி கவனத்துல எடுத்துக்காம நமக்காக, நம்ம குடும்பத்துக்காக ஹெல்மெட்டை வண்டிக்கு மாட்டாம, நம்ம தலையில மாட்டுவோம்.
21 கருத்துரைகள்:
Vizhippunarvu pathivu....!!!!
நல்ல பதிவு பிரகாஷ் !
நல்ல பதிவு. நான் தலைலதான் மாட்டுவேன். என்னோடது ISI தான், வாங்கி ஆறு வருஷமாச்சு. ஆனா இப்பதான் உபயோகிக்க ஆரம்பிச்சுருக்கேன். என்ன பாஸ் பண்றது? :-)))))))
தலைக்கவசம்
உயிர்க்கவசம்
என்பதை மீண்டும்
உணர்த்தும் இன்னுமொரு
அழகான விழிப்புணர்வுப் பதிவு....
என்ன நண்பரே பண்றது? நம்ம மக்களுக்கு பட்டாதான் புத்தியே வருது...
சிந்திக்கவும்
பழகுவது கொஞ்சம் கஷ்டம் தான் தோழரே, அதுவும் குனிந்து வண்டி ஓட்டி பழக்கப் பட்டவர்களுக்கு ஹெல்மெட் அணிவது மிகவும் கடினம்.. ஏனெனில் நீங்கள் தலையில் ஹெல்மெட் அணிந்தவுடனேயே முதுகு தானாகவே நிமிர்ந்து விடும்... விபத்தை தவிர்க்க தீர்வை தேடாமல் தற்காலிகமாக தீர்வு என்று எண்ணிக் கொள்வது சரியல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்...
நமக்காக, நம்ம குடும்பத்துக்காக ஹெல்மெட்டை வண்டிக்கு மாட்டாம, நம்ம தலையில மாட்டுவோம்.
>>>
சிந்திக்க வேண்டிய விசயம். ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் வண்டியோட்டும்போது ஹெல்மட் அணிவது நல்லது. நல்லதொரு விழிப்புணர்வு பது. பகிர்வுக்கு நன்றி.
//ஹெல்மெட் போட்டு போட்டு பழகினா தானே இந்த மாதிரி காரணம் சொல்லாம இருக்க முடியும்.//
உண்மை. இது எனது அனுபவம்.
:-)
சிலபேரு சுரங்கத்துல வேலை செய்யறவங்க போடற மாதிரி தலையை மூடாத ஹெல்மெட் போட்டுட்டு வண்டி ஓட்டறதைப் பாத்திருக்கேன். நல்ல விஷயத்தைப் பகிர்ந்த அருமையான பகிர்வு பிரகாஷ். மிக்க நன்றி.
இப்படியெல்லாம் சொன்னா உடனே கேட்டுக்குற புத்திசாலிங்களா நம்மூர் மக்கள்!
கண்டிப்பாக வாகன ஓட்டிகள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு...!
பகிர்வுக்கு நன்றி பிரகாஷ் சார் ..!
அறிந்திருக்க வேண்டிய நல்ல கருத்துள்ள பதிவு.....
சீப்பான ஹெல்மெட் அணியும் போது ஆக்சிடெண்ட் ஏற்படும் போது தான் அதன் பாதிப்புத் தெரியும்.
தமிழ்வாசி வீட்டுல ஹெல்மெட் போடுவதின் ரகசியம் என்ன?
வீடு K.S.சுரேஸ்குமார் said...
தமிழ்வாசி வீட்டுல ஹெல்மெட் போடுவதின் ரகசியம் என்ன?
>>>
வாங்குன குட்டு வெளில தெரியாம இருக்க...,
உண்மை தான்..
மக்களில் பலருக்கு பாதுகாப்பின் அவசியம் பெரும்பாலும் புரிவதில்லை..
புரிந்தவர்களுக்கு சட்டங்களே தேவை இல்லை.
நெல்லையில் இதே பிரச்சனை வந்த போது எப்படி சமாளித்தார்கள்? பதிவு ரெடியாகிக்கிட்டு இருக்கு!
நீங்க சொல்றது எல்லாம் சரிதான்...ஆனா அத போடுறதில எவ்வளவு சங்கட்டம் இருக்குன்னு தெரியுமா...??சைடுல வருகிற எந்த வண்டியையும் பாக்க முடியாது...திரும்பும்போது யாராவது வருகிறார்களா என்று பார்க்க முடியாது...இன்டிகேட்டர் போட்டு திரும்பினா..டக்குன்னு எவனாவது வந்து இடிச்சிடறான்...கேட்டான் திட்டுறான் சார்.....
தேவையான மிக முக்கியமான
பதிவு!
அனைவரும் உணரவேண்டிய
பதிவு!
புலவர் சா இராமாநுசம்
நல்லாச் சொன்னீங்க..எத எதுக்கு செய்றோம்னு புரிஞ்சு செஞ்சா நல்லது..ஹெல்மெட் நம்ம பாதுகாப்புக்குன்னு உணரனும்..இதுல அங்க இங்க வச்சு ஆபத்த அதிகரிக்கிராங்களே ...