தமிழ்நாட்டுல ஆட்சி மாற்றத்துக்கு அப்புறமா பஸ் டிக்கட் ரேட் அதிகரிச்சது நம்மளுக்கு இப்போ பழகிப் போன விஷயம். பழைய ரேட்டுல இருந்து சுமாரா ஒன்னரை மடங்கு கூடியிருக்கு. இதனால அதிக தூரம் போற விரைவு எக்ஸ்பிரஸ் பஸ்களில், உதாரணத்துக்கு சென்னை டூ மதுரைன்னு எடுத்துகிட்டா மதுரைக்கு பத்து டிக்கெட்டும், திருச்சிக்கு ஒரு பத்து டிக்கெட்டும் ஏறும். ஆனா சென்னைக்கும் திருச்சிக்கும் இடையில விழுப்புரம், செங்கல பட்டு, என இடையில இருக்குற ஊர்களுக்கு ஆட்கள் ஏறுறது இல்லை. அதுக்கு என்ன காரனம்னா அந்த ஊர்களுக்கு போற சாதாரண அரசு பஸ்களின் ரேட் விரைவு பஸ்களின் ரேட்டை விட கம்மி. அதனால அந்த இடையில இருக்குற ஊர்களுக்கு கிலோ மீட்டருக்கான ரேட்டை ஒரு முக்கிய ஆபிசர் குறைச்சார். அதனால சாதாரண அரசு பஸ்களின் ரேட்டும், விரைவு பஸ்களின் ரேட்டும் கிட்டத்தட்ட ஒரே அளவா இருந்துச்சு. அதனால மக்களும் விரைவு பஸ்சில் ஓரளவு ஏறினாங்க. சரிங்க, இது நல்ல விஷயம் தானே, என்ன சொல்ல வரேன்னு கேட்கறிங்களா? ரேட் குறைக்காத வரைக்கும் அந்த ஆபீசர் நல்லா தான் இருந்தார். ரேட்டை குறைச்சதுக்கப்புறம் அவருக்கு ஆப்பு வச்சுட்டாங்க. ஆமாங்க, அதுக்கு காரணமா சங்கரன்கோவில் தேர்தலை சொல்லி இருக்காங்க அரசு தரப்பு. அதாவது தேர்தலுக்காக ரேட் கொறச்சிருகாங்கன்னு சிலர் பேசியதே காரணமாம். இப்போ அந்த ஆபீசர் வேற டிப்பார்ட்மென்ட்டுக்கு மாத்திட்டாங்க.
********************************
இங்க போன ஆட்சியில பஸ்ஸ்டாண்டு, ஆஸ்பத்திரி போன்ற சில முக்கியமான இடத்துல தற்போதைய முக்கிய அரசியல்வாதி இலவச டாய்லெட்களை கட்டி விட்டாரு. நவீன முறையில காசு வாங்காம இலவசமா மக்கள் யூஸ் பண்ற மாதிரி இருந்துச்சு. டாய்லெட்டை சுத்தம் செய்ய ஆட்களும் இருந்தாங்க. அடிக்கடி சுத்தம் செஞ்சு டாய்லெட் அசிங்கமா இல்லாம பார்த்துட்டாங்க. அப்புறமா காலப்போக்கில ஆட்சி மாறுச்சு. அந்த டாய்லெட் நிலைமையும் மாறுச்சு. கொஞ்ச நாளா பூட்டு போட்டிருந்தாங்க. இப்ப திடீர்னு தொறந்து டாய்லெட் முன்னாடி கல்லா கட்டி ஒருத்தர் திடீர்னு வந்திருக்காரு. பிரீ யூஸா (free use) இருந்தது இப்போ பே யூஸா (pay use) மாறியிருச்சு. யார என்ன சொல்றது? நல்லதுக்கும் காலம் இல்லையான்னு டவுட் வருது?
21 கருத்துரைகள்:
கற்காலத்தை நோக்கி தமிழகம் சென்று கொண்டுள்ளது ஜெயா அரசின் அவலம் இது
பஸ் டிக்கட்டின் விலை மட்டுமா? கிட்டத்தட்ட அனைத்துமே இவ்வாட்சியில் விலை ஏறிவிட்டதே....
விவேக் சொல்ற மாதிரி
"அரிசி ஒரு ரூபா..ஆய்க்கு ரெண்டு ரூபாயா?"
confusing...
சொன்னது சில!இன்னும் வரும்
பல!
இலை போட்ட போதுமென்று
செல்லி, இப்போ சோறு கேட்டா
எப்படி..?
புலவர் சா இராமாநுசம்
மாட்டும் தாவணி முகப்பின் எதிரே மூக்கை இழுக்கும் விளம்பரம் உள்ள TOILET யா சொல்றீங்க
நல்லதுக்கு எப்போதுமே காலம் இல்லை போலிருக்கிறதே நண்பரே
எல்லாம் பண மயம்!
Tamilvaaci-ku
AUTO.....
Conform......
A, B, C, D, .........>.......Z.
#Nai-Nakks:-
Pls attempt suicide.
:-)
நல்லவனுக்கு காலமில்லை...கலிகாலம் !
எங்கேயும் நல்லவனுக்கு மதிப்பில்லை ..!
என்ன செய்ய பிரகாஷ்?எல்லாத்துக்குமே காசு தான் வேணும்!சலூன் கடையில வெட்டிக் கொட்டுற தலைமுடிய கலெக்ட் பண்ணுறாப்புல,இந்த சலம்(மூத்திரம்)மலத்துக்கும் கலெக்சன் வந்தா???????ஹ!ஹ!ஹா!!!!!
பணமும் பதவியும் படுத்தும் பாடு - மக்கள் நலன்??? ஹி ஹி ஹி போடங்...கோ.
வெளங்காதவன் said...
A, B, C, D, .........>.......Z.
#Nai-Nakks:-
Pls attempt suicide.
:-)////
vilangura mathiri comment poduya....
உங்க ஊருலயும் இதே கதைதானா?
எல்லாம் நல்லதுக்கு எண்டு நினைச்சுகோங்க...
நல்லது நடக்கும் கொஞ்சம் நாளாகும்
காசு வாங்கித் தொலச்சாலும் பரவால்ல, சுத்தமா வெச்சிருந்தா சரிதான்.
எங்கேயும் எப்போதும் பணம் !
ஏதோ அவர்களால் முடிந்தது...
என்ன கொடுமை சாமி இது?
மக்களுக்காக விலையைக் குறைத்தா அதையும் எவனாவது சாக்கு சொல்லி மாத்திடறான்!
கொடுமை!