RockMelt என்று ஒரு ப்ரௌசர் உள்ளது. பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள். அறியாதவர்களுக்காக இந்த பதிவு. RockMelt - Not a browser. A WOWser என்ற அடைமொழியுடன் உள்ள இந்த ப்ரௌசரின் தனித்தன்மை என பார்த்தோமானால் சமூக தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பல சமூக தளங்களை தாங்கி வந்துள்ளது. அதிலும் குறிப்பாக பேஸ்புக் சமூக பயனாளிகளுக்கு உதவிடும் வகையில் இதன் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகள் உள்ளன. மேலும் ப்ரௌசிங் செய்கையிலும் விரைவான செயல்பாட்டையே தருகிறது. ஆனால் இந்த ப்ரௌசர் எல்லோராலும் பயன்படுத்திட முடியாது. பேஸ்புக் அக்கௌன்ட் வைத்திருப்பவர்களால் மற்ற பேஸ்புக் அக்கவுன்ட் வைத்திருப்பவர்களுக்கு அழைப்பு கொடுத்த பின்னர், அவர்களால் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
1. http://www.rockmelt.com/ என்ற தளத்திற்கு சென்று டவுன்லோட் செய்யவும்.
2. டவுன்லோட் செய்த மென்பொருளை இன்ஸ்டால் செய்யவும். இன்ஸ்டால் செய்த பின்னர் கீழே படத்தில் உள்ளவாறு ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும். இங்கே உங்களது பேஸ்புக் அக்கௌன்ட் மூலம் லாகின் செய்யவும்.
3. லாகின் செய்த பின்னர் கீழே உள்ள பக்கம் ஓபன் ஆகும். இங்கே use app என்பதை கிளிக் செய்யவும்.
4. Use app கிளிக் செய்தவுடன் கீழே உள்ள பாக்ஸ் ஓபன் ஆகும். அதில் சில options-களுக்கு permission கொடுக்க வேண்டும். பின்னர் கீழே allow என்பதை கிளிக் செய்யவும்.
5. அடுத்து ஓபன் ஆகும் பாக்சில் நமக்கு தேவையான சில applications செலக்ட் செய்து add and continue செய்யவும்.
6. அடுத்து ஓபன் ஆகும் பாக்சில் நீங்கள் விரும்பும் பேஸ்புக் பயனாளிகளுக்கு invite செய்யலாம்.
7. அடுத்து connect with facebook கிளிக் செய்து லாகின் செய்தால் ப்ரௌசர் ஓபன் ஆகும்.
8. லாகின் செய்கையில் keep me logged in to rockmelt என்ற கட்டத்தை மறக்காமல் கிளிக் செய்யவும்.
9. கீழே படத்தில் உள்ளது போல ப்ரௌசர் ஓபன் ஆகும். இதில் பேஸ்புக்கின் அத்து வசதிகளும் இணைந்தே வருவதால் மற்ற தளங்களை இயக்கிக் கொண்டே பேஸ்புக்கில் தொடர்பில் இருக்கலாம்.
முக்கியமாக இந்த ப்ரௌசரில் இருந்து வெளியேறுகையில் மறக்காமல் log out செய்யவும்.Rockmelt browser-ன் சில வசதிகள்:
- எந்த தளத்தில் நீங்கள் இருந்தாலும் பேஸ்புக் நண்பர்களுடன் சாட் மற்றும் மற்றைய தொடர்பில் இருக்க முடியும்.
- உங்கள் ஸ்டேடஸ். ட்வீட்ஸ், வால் போஸ்ட் ஆகியவைகளை எளிதாக ஷேர் செய்ய வசதி உள்ளது.
- சமூக தளங்களில் இணைந்தே இருப்பதால் அண்மைய செய்திகளை உடனுக்குடனே அப்டேட் செய்து அறிந்து கொள்ளலாம்.
- உங்களுக்கு விருப்பமான தளங்களில் இருந்து (Facebook, Twitter, Tumblr, and more) உடனடி செய்திகளை உடனுக்குடனே அறிந்து கொள்ளலாம்.
- Automatic sync மூலமாக மற்றைய ப்ரௌசர்களில் இருந்து புக்மார்க் செய்யப்பட்ட தளங்களை rockmelt-க்கு எளிதாக அப்டேட் செய்யலாம்.
மேலும் அறிய விரும்பினால் இந்த வீடியோவை பார்க்கவும்.
11 கருத்துரைகள்:
தேவையான நுட்பம்.
புதிய தகவல் அன்பரே நன்றி
Aaha..arumai....
Ithu ellam....
Thozhil nutppa pathiva..????
Neenga konjam.....
Mathavanga...pathivai
parthu....kathukkunga...
Ippadi oruthan...
Comment....poduvaan.....
Avanai.....en blog-ku
vara sollunga....
Thanks....
மாப்ள பகிர்வுக்கு நன்றி..எனக்கு முக புத்தக வசதி இல்லை ஹிஹி..
"NAAI-NAKKS said... "
யோவ் நக்ஸ் நீ அடங்கவே மாட்டியா...!
//RockMelt என்று ஒரு ப்ரௌசர் உள்ளது. பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள். அறியாதவர்களுக்காக இந்த பதிவு.///
செம...
RockMelt என்று ஒரு ப்ரௌசர் உள்ளது. பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள். அறியாதவர்களுக்காக இந்த பதிவு
>>>>
இதுவரை அறிந்ததில்லை. முயற்சி செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி சகோ
ஹை அந்த ப்ரோபைல் இமேஜ்ல் என் படம் இருக்கு ............
புதிய தகவல் ! நன்றி பிரகாஷ் !
இன்னும் நம்ம பக்கத்திற்கு (உபுண்டு/ லினக்ஸ்) வரலை..
வந்த பின் முயற்சிப்போம்!
அருமையான பதிவு.
வாழ்த்துகள் பிரகாஷ்.