1. சிபி எந்த ஊருக்கு போனாலும் ஒரு கடைக்கு மறக்காம போறார். என்ன காரணம்???
2. மனோ மொபைல் மெமரி கார்டுக்கு விலை ஐயாயிரம். ஏன்?
மேற்கண்ட இரண்டு கேள்விகளுக்கும் பதில் இந்த பதிவில்...
24/04/2012 செவ்வாய் காலை எட்டு மணிக்கு கருண் போன் செய்து மச்சி ட்ரெயின் எக்மொர்ல கிளம்பிருச்சு. மதுரைக்கு ஈவ்னிங் போர் தர்ட்டிக்கு வந்திரும், கரெக்டா வந்திருடான்னு சொல்ல, ரைட்டுயான்னு சொல்லி போனை கட் பண்ணிட்டு தூங்கிட்டேன். ஆமாங்க நைட் டூட்டி பார்த்ததால தூக்கம். ஈவ்னிங் மூட்டை முடிச்ச தூக்கிட்டு கூடல்நகர்ல இருந்து ஜங்சனுக்கு வந்து சேரும் போது நல்லா மழை பெய்ய ஆரம்பிச்சது. நனஞ்சுட்டே ரெண்டாவது பிளாட்பாரம் போயி நிக்க பத்து நிமிசத்துல ட்ரெயின் வந்துச்சு. கருண், சௌந்தர் உடன் கூட்டணி சேர்ந்தாச்சு. விடாது மழையுடன் ட்ரெயின் மதுரையிலிருந்து கிளம்பியது. நக்ஸ்ம் ராஜபாட்டையும் மயிலாடுதுறை பேசஞ்சரில் பஞ்சராகி வந்திட்டு இருப்பதாக போன்ல அப்டேட் செஞ்சாங்க.
விருதுநகர் ஜங்சனில் கொட்டும் மழையில் சௌந்தர் |
நெல்லை வந்து சேரும் போது மழை பெய்துவிட்டிடுச்சு. எங்களுக்கு போட்ட ரூமுக்கு போயிட்டு ரெப்ரெஷ் ஆயிட்டு லைட் டிபன் சாப்பிட்டுட்டு நல்லா தூங்கியாச்சு.
வேடந்தாங்கல் கருண், சௌந்தர், நான் |
பவுடரை குறைத்த பின் சிபி |
சுரேஷ்'ம் நானும் |
25/04/2012 காலை, வீடு சுரேஷ், சிபி, தமிழ்பேரன்ட்ஸ் சம்பத் எங்களுடன் இணைந்து கொண்டார்கள். சிபி பேர்அன்ட்லவ்லி, பவுடர் போட்டு செம தூக்கலா இருந்தார். அண்ணே, கொஞ்சமா தொடச்சுக்கங்க என எல்லோரும் கோரசா சொல்ல மேக்கப் கண்ணாடியை கொஞ்ச நேரம் அழ வச்சிட்டு வந்தார். கண்டிப்பா கோயிலுக்கு போகனும்னு சிபியின் கண்டிசனோட பக்கதிலிருந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு போயிட்டு இருக்கறப்போ திடீர்னு சிபிய காணோம், என்னடா இது கோயிலுக்கு போகனும்னு சொன்ன மனுஷன காணோம்னு சுத்தி முத்தி தேடுனா ஒரு மெடிக்கல் ஷாப் கடையில என்னமோ வாங்கிட்டு இருந்தார்.
இந்த மனுஷன் ஈரோட்டுலயும் மெடிக்கல் ஷாப்ல என்னமோ வாங்கினார். இங்க நெல்லையிலும் ஏதோ பர்ச்சேசிங். கேட்டா கேமராவுக்கு பேட்டரி வாங்குனேன்னு சொல்றார். என்ன மர்மமோ? கோயிலுக்கு போயி சாமி கும்பிட்டுட்டு வெளிய வர சிபி திடீர்னு ஒரு காரை கட்டிப்பிடிச்சார். என்னான்னு கேட்டா ஹி..ஹி.... போட்டோ எடுயா, கார் கூட போஸ் தர்றேன்ல, என காமெடி செய்தார். இந்த போட்டோவை வீடு சுரேஷ் பக்காவா கிராபிக்ஸ் செய்து அவர் பிளாக்கில் வெளியிடுவதாக சொல்லி இருக்கார்.
ஐ.. ஐ... காரு... காரு.... |
நக்ஸ் எங்கன்னு நீங்க கேட்கறது தெரியுது. அவர போன் போட்டு எழுப்பியும் இதோ வரேன்னு சொல்லிட்டு இருந்தார். ஆனா எங்களுடன் இணையவில்லை. பஸ் ஏறி மகாலுக்கு சென்றோம். வாசலில் ஆபீசர் வரவேற்று டிபன் சாப்பிட அழைத்து சென்றார். கேசரி, இட்லி, பொங்கல், வடை என சிம்பிள் வித் டேஸ்ட்டி ப்ரேக்பாஸ்ட் சாபிட்டோம்.
சம்பத், சுரேஷ், மனோ, பிரபு கிருஷ்ணா |
நக்ஸ்ம் ராஜபாட்டையும் எங்களோட சேர்ந்துகிட்டாங்க. யோவ், தனியா விட்டுட்டு வந்துடிங்களேன்னு அவரு கதற நம்ம வீடு சுரேஷும், சம்பத் அவரை கூல் செய்தார்கள். அவரு மனோ கேமரா எங்க, எங்க என தீவிரமா தேட, மனோ கூலா மொபைல் மூலமா போட்டோஸ் எடுக்க ஆரம்பிச்சார். ஆகா, இந்த கேமரா தான் மனோ பிளாக், பேஸ்புக்ல சுத்தி சுத்தி வருதான்னு அவர் மொபைலை ஆட்டைய போட மனோ பின்னாடியே சுத்திட்டு இருந்தார். மனோவிடம் விசயத்தை சொல்ல உஷாராகி வேற பக்கமா உட்கார்ந்தார்.
நக்கீரனை பார்த்து மனோ ஆச்சர்யப்படுகிறார் |
சிபி தன் ஆண்ட்ராய்டு மொபைலுடன் ரொம்பவே கொஞ்சிக் கொண்டிருந்தார். அப்புறமா திடீர்னு ஒருத்தருக்கு போன் போட்டு என்னமோ குசுகுசுன்னு பேசினார். ஓட்டு கேட்டப்போ தனது பாஸ்வேர்ட் சொல்லிட்டு இருந்தார். போஸ்ட் போட. திருமண சடங்குகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. அதற்கிடையில் சிபி கையில மொபைலும் வாயில பல்லுமா ரொம்பவே துள்ளினார். என்ன என்ன என எல்லோரும் பதறி கேட்க, அவரோட போஸ்ட் பப்ளிஷ் ஆகி மொத கமென்ட்டும் வந்திருச்சுன்னு கூலா சொன்னார்.
தனது ஆண்ட்ராய்டு மொபைலுடன்கொஞ்சிக் கொண்டிருக்கிறார் |
சிபி மொபைலுடன் கொஞ்சுவதை ரசிக்கும் சம்பத், நக்ஸ் |
போஸ்ட் பப்ளிஷ் ஆச்சு, கமென்ட்டும் வந்தாச்சு. ஹே.. ஹே.. ஹே.. |
அடங்கோ, நக்கீரர் டென்சன் ஆக அவரையும் கூல் பண்ண போனா அவரும் மொபைலில் ஏதோ ஒரு பதிவை ரீடரில் வாசித்து கொண்டிருந்தார். அவரை நாங்க முறைக்க, ஹி..ஹி..ன்னு வழிஞ்சார். அது என்ன பதிவுன்னு கீழே போட்டோல பாத்து தெரிஞ்சுக்கங்க.
நக்ஸ் மொபைலில் என்ன படித்தார்? நக்சஸிடம் போனில் கேட்கவும் |
மண்டபம் போரடிக்க எல்லோரும் மகால் என்ட்ரன்ஸ்க்கு வந்தோம். அங்க பிரபுவும், கௌசல்யா அக்காவும் செடிகளுக்கு மத்தியில நின்னுட்டு இருந்தாங்க. என்னான்னு விசாரிச்சா பசுமை விடியலின் பிட் நோட்டிஸ் தந்து எல்லோருக்கும் ஒரு மரக்கன்று திருமண பரிசா தந்துட்டு இருந்தாங்க.
நம்ம நண்பர்கள் எல்லோரும் இருக்காங்களான்னு நம்பர் சொல்ல சொன்னப்போ நக்கீரனை காணவில்லை. அவர் எங்கே போனார்????????
அடுத்த பாகத்தில்....
23 கருத்துரைகள்:
வணக்கமுங்க..எப்படியோ..எங்களுக்கு பொறாமை பட வச்சிடீங்க..
நக்ஸ் படித்த பதிவு நமீதா மாதிரி உதடு சிகப்பாக என்ன செய்ய வேண்டும்.....
அப்படி என்ன தாங்க வாங்கினாரு...சிபி..? கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை
என்ஜாய் பண்ணீங்க போல ஹஹா!
சீக்கிரம் அடுத்த அலப்பறை பார்ட் போடுங்க ..
Antha post....
Make up mannan....
Cibi....ku
eduthu kooduthathu......
கலக்குங்கள் நீங்கள் குதூகலித்த அனுபவம் அருமை
கலக்கிறீங்க பாஸ்!
சிபி நிலமைய நினச்சா ரொம்பக் கவலையா இருக்கு! :-)
வீடு சுரேஷ் வித்தியாசமா இருக்கார்...profileல பார்த்ததுக்கு!
படங்களை பார்த்தாலே சுவாரஸ்யமா இருக்கு. அருமை. அனைவருக்கும் நல்ல மகிழ்வான சந்திப்பாக அமைந்தது தெரிகிறது
/ஜீ... said...
வீடு சுரேஷ் வித்தியாசமா இருக்கார்...profileல பார்த்ததுக்கு!//
Yes. I too felt the same thing.
திருமணத்தில் தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி!!!
ரூம் ல நடந்த மேட்டர்லாம் இன்னும் வரலையே .. அது 5 வது பாகத்துல வருமா ?
சிபி அண்ணனோட அழகு ரகசியம் தெரிஞ்சிடுச்சி!
எல்லா அலப்பறையும் வெளிய வரணும்?!
மூணாவது படம். கருண் போதைல சொக்கி விழும்போது யாருய்யா போட்டோ எடுத்தது?
11 வது படம். சிபி மொபைல நக்கி மாமா ஏன் இப்படி வெறியோட பாக்கறாரு?
குதூகலமான பயணம் போல இருக்கு .., கும்முவது தொடரட்டும் ..!
சிபி பேர்அன்ட்லவ்லி, பவுடர் போட்டு செம தூக்கலா இருந்தார்.
>>>
செண்ட், லிப்ஸ்லாக்லாம்??!!
கலக்கிட்டீங்க ப்ரகாஷ் !
நிகழ்ச்சிக்கு வர முடியாத குறையை போக்கிட்டீங்க
வாழ்த்துகள் பிரகாஷ்.
//பிரபுவும், கௌசல்யா அக்காவும் செடிகளுக்கு மத்தியில நின்னுட்டு இருந்தாங்க. என்னான்னு விசாரிச்சா பசுமை விடியலின் பிட் நோட்டிஸ் தந்து எல்லோருக்கும் ஒரு மரக்கன்று திருமண பரிசா தந்துட்டு இருந்தாங்க. //
ரொம்ப நல்ல காரியம்!