நம்ம நண்பர்கள் எல்லோரும் இருக்காங்களான்னு நம்பர் சொல்ல சொன்னப்போ நக்கீரனை காணவில்லை. அவர் எங்கே போனார்????????
எல்லோரும் போட்டோவுக்கு போஸ் தர சிபி மொபைலுக்கு போஸ் தாரார் போல! |
ஹி... ஹி...அந்த மண்டபம் புல்லா தேடி ஒரு வழியா பாத்ரூமில் அவர கண்டுபிடிச்சோம். மறுபடியும் எல்லோரும் இருக்குற இடத்துக்கு வந்தா பாதி பேர காணல. எல்லா பயபுள்ளைகளும் அர்ஜென்ட்டா போயிட்டாங்க. அப்புறம் ஒரு வழியா எல்லோரும் அசெம்பிள் ஆயிட்டு மஹாலை விட்டு வெளியே வந்தா ஒரு கார் நின்னுட்டு இருந்துச்சு. உடனே மனோ வேகமா பேனட்ல ஏறி உட்கார்ந்தார். மனோ கார்ன்னு நெனச்சு சிபியும் ஏற முயற்சிக்க, யோவ், ஒரு போட்டோ எடுக்க காருக்கு வந்தா நீயும் பின்னாடியே வர்றீயே, என மனோ கலாய்க்க, சிபி நானும் போட்டோவுக்கு தான்யா வந்தேன் என சொல்ல,அவருடன் நாங்களும் இணைந்து கொள்ள காருடன் கிளிக் செய்யப்பட்டது.
கூலிங்கிளாஸ் போட மறந்த சிபி |
மெட்ராஸ்பவன் சிவா ஐயாயிரம் தருவதாக சொன்னது மனோ மொபைலுக்கு தான் |
மனோ தனது பேஸ்புக் ஆயுதத்தால் எங்களை சுட்டார். (அதாங்க மொபைல்ல போட்டோ). கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு மண்டபத்திற்கு போனோம். கொஞ்ச நேரத்தில் திருமணம் இனிதே நடைபெற்றது. ஆபிசர் மேக்கப் அளவா போட்டு இளமையாக இருந்தார். ஈவ்னிங் ரிசெப்சனுக்கு வருவதாக அவரிடம் சொல்லி விட்டு அவரவர் ரூமுக்கு வந்தோம்.
சும்மா ஒரு கிரியேட்டிவிட்டி. ஹி..ஹி... |
நாங்கள் அவரவருக்கு தேவையான அளவு பானங்களை அடித்துவிட்டு பிரியாணி, சிக்கன் என புல் கட்டு கட்டிவிட்டு தூங்கிப் போனோம். ஈவ்னிங் எல்லோரையும் எழுப்பி மகாலுக்கு கூட்டிட்டு போறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு. சிபி காலையில் பவுடரை அப்பியது போல மாலையும் அப்பிக் கொண்டிருக்க, போட்டோ எடுத்திருவோம்னு பயமுறுத்தியவுடன் பவுடரைக் குறைத்தார்.
மதிய உணவாக பிரியாணி |
மகாலில் பிரபுவும், கௌசல்யா அக்காவும் மரக்கன்றுடன் இருந்தார்கள். காலை முதல் அவர்கள் விருந்தினர்களுக்கு பசுமையை பரிசாக தந்து கொண்டிருந்தார்கள். கூடல் பாலா போனில் இருமுறை பேசினார். அவரது ஊருக்கு கடைசி பஸ் டைம் ஆச்சுன்னு கிளம்பிட்டேன் என சொன்னார்.
விஜயன் மற்றும் வெடிவேல் ஐயாவுடன் |
யானைக்குட்டி ஞானேந்திரன் குடும்பம் சகிதம் வந்திருந்தார். பதிவுலக நண்பர்களைப் பார்த்ததில் அவருக்கு மிக மகிழ்ச்சியாக இருந்ததாக சொன்னார். அனைவரிடமும் கலகலப்பாக பேசினார். ஜோஸ்பின் கதைக்கிறேன் ஜோசப்பின் அவர்களும் குடும்பம் சகிதம் வந்திருந்தார். ஏற்கனவே போன வருஷ நெல்லை சந்திப்பில் நாங்கள் பார்த்திருந்ததால் உடனே அறிமுகம் ஆயிட்டோம். பின்னர் ஒவ்வொருத்தரையும் தனித்தனியே பெயர், பிளாக் பெயர் என கேட்டுக் கொண்டார்.
யானைக்குட்டி ஞானேந்திரனுடன் ராஜா |
துபாய் ராஜா என்ற பதிவர் எங்களிடம் அறிமுகம் ஆனார். அனைவரது பதிவுகளையும் வாசித்திருப்பதாக சொன்னார். மனோ, பேஸ்புக் புகழ் விஜயன் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். மனோ மகளிடம் அப்பா மாங்காய் தந்தாரா என கேட்டால் இல்லை என சொன்னார். அட, பேஸ்புக்ல மகளுக்கு உப்பு காரம் போட்டு தந்ததா ஸ்டேடஸ் போட்டிருந்தது சும்மா என மனோ சொல்ல ஒரே ரகளையா இருந்துச்சு. IQ-225 level சாதனை பெண் விசாலினி பெற்றோருடன் வந்திருந்தார்.
IQ-225 level சாதனை பெண் விசாலினி |
மேடையேறி மனமக்களிடம் கிப்ட் அளித்துவிட்டு ஆபீசரிடம் ஒவ்வொருத்தரா விடை பெறவே அந்த மேடை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது. இன்னிசை கச்சேரியில் மேலோடி மெட்டுகள் முதல் குத்து மெட்டுக்கள் வரை களை காட்டிக்கொண்டிருந்தது. அவர்களையும் கிளிக் செய்தோம். நானும் சுரேஷ்ம் விஜயனிடம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போ விஜயன் சுரேஷை பார்த்து நீங்க யாருன்னு கேட்க நாங்க சிரிச்ச சிரிப்பில் விஜயன் ஒரு மாதியா ஆனார். நான் வீடு சுரேஷ் என அவர் சொல்ல, அட பேஸ்புக்ல சண்டை போட்டுட்டு இவ்ளோ நேரமா யாருன்னு தெரியாம பேசிட்டு இருந்தேனே என விஜயன் அதிர்ச்சி அடைந்தார்.
டின்னரை ரசித்து சாப்பிடும் நக்கீரர், ராஜா |
பின்னர் அனைவரும் டின்னர் சாப்பிட சென்றோம். சிபி மட்டும் தனியாக ஒரு மூலையில் சாப்பிட இடம் பிடிச்சார். எங்களுக்கு முன்னாடி சாப்பிட உட்கார்ந்த அவர் நாங்க சாப்பிட்டு முடிச்சு கால் மணி நேரம் கழிச்சே சாப்பிட்டு முடிச்சார். மனோவும், கருனும் சாப்பிடவில்லை. என்ன மர்மம் என தெரியவில்லை.
ஆபீசருடன் விடைபெறுகையில் |
இன்னிசைக் கச்சேரி முடியும் தருவாயில் விருந்தினர்களை நடனம் ஆட குழுவினர் அழைக்க ஒரு சின்ன பெண் முன் வந்தார். கலாசலா கலசலா என பாட்டு அதிர ஆட்டம் ஆரம்பமானது. நடுவில் சௌந்தரும் டான்ஸ் ஆடினார். நெல்லையை விட்டுச் செல்லும் நேரம் நெருங்க மறுபடியும் ஆபீசரிடம் விடைபெற்றுக் கொண்டோம். கருனும், சௌந்தரும் கன்னியாகுமரிக்கு பிளான் போட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு நெல்லை ஜங்க்சனுக்கு சென்றோம் நெல்லையின் பாரம்பரியமான அல்வாவை வாங்கிக் கொண்டு...
கச்சேரியில் நடனம்:
கச்சேரியில் நடனம்:
ஒரு நாள் எப்படி போச்சுன்னே தெரியல. ஆபிசரின் அன்பான வரவேற்பு, ருசியான உபசரிப்பு, முகம் பார்க்காமல் நண்பர்களாக இருந்த பதிவர்கள் முகம் பார்த்து கலாய்த்த தருணங்கள் என நெல்லைப் பயணம் வாழ்வில் மறக்க முடியாத பயணமாய் இருந்தது.
-End-
முந்தைய பாகங்களுக்கு:
26 கருத்துரைகள்:
ஆஃபீசர் ஃபோட்டோ போடலாமா?ன்னு கேட்டுக்குங்கப்பா ஹி ஹி
கலக்கிட்டீங்க ப்ரகாஷ் ! மறக்க முடியாத பயணம் !
ராஜா, சௌந்தர், கருண், சிபின்னு வரிசையா இருக்குற போட்டொ ரொம்ப நல்லா இருக்கு. அலப்ப்பறை முடிஞ்சுதா? இன்னும் இருக்கா? மிஸ் பண்ணிட்டோமேன்னு ஏங்க வைக்குது உங்க பதிவு
ஹலோ பிரகாஷ் சார் நான் இந்தியா வரும் போது உங்கள் கல்யானத்தை வைச்சுகங்க நானும் பதிவர் வீட்டு கல்யாணத்தில் கலந்து கொண்டது மாதிரி இருக்கும். உங்கள் கல்யாணம் செய்து கொள்ளும் போது மறக்காமல் அழைபிதழ் அனுப்பி உடன் டிக்கெட்டும் வைத்து அனுப்புங்கள் மதுரை மக்கா
கல்யாணத்தை நேரில் பார்த்த அனுபவம் உங்கள் பதிவின் மூலம் ஏற்பட்டது
நல்ல நண்பர்கள்,நல்ல சாப்பாடு,செம பாட்டு செம ஆட்டம் எல்லாத்துக்கும் மேல ஆபிசரின் அன்பு பிரமாதம்.
உங்க எல்லாரையும் விட ஆபீசர் தான் ஜம்முன்னு இருக்கார்; அவர் சட்டை ஒன்னே போதும் ! சூப்பர்
போட்டோக்களும், வர்ணனைகளும் நேரில் சென்று வந்தது போல அழகாக இருந்தது.
\\\நாங்கள் அவரவருக்கு தேவையான அளவு பானங்களை அடித்துவிட்டு பிரியாணி, சிக்கன் என புல் கட்டு கட்டிவிட்டு தூங்கிப் போனோம்\\\ உங்களோட வாய்மை புல்லரிக்க வைக்குது!
\\\மதிய உணவாக பிரியாணி\\\ அட!...அனிமல் பிளானட் சேனல்!
சிறப்பு தொகுப்பு
ஹலோ பிரகாஷ் சார் நான் இந்தியா வரும் போது உங்கள் கல்யானத்தை வைச்சுகங்க நானும் பதிவர் வீட்டு கல்யாணத்தில் கலந்து கொண்டது மாதிரி இருக்கும். உங்கள் கல்யாணம் செய்து கொள்ளும் போது மறக்காமல் அழைபிதழ் அனுப்பி உடன் டிக்கெட்டும் வைத்து அனுப்புங்கள் மதுரை மக்கா
//////////////////////////////////////////
என்னது பிரகாஷ்க்கு இன்னோறு கல்யாணமா? பூரிகட்டை அடி இன்னிக்கு கன்பார்ம்!
@Avargal Unmaigal
ஹலோ பிரகாஷ் சார் நான் இந்தியா வரும் போது உங்கள் கல்யானத்தை வைச்சுகங்க நானும் பதிவர் வீட்டு கல்யாணத்தில் கலந்து கொண்டது மாதிரி இருக்கும். உங்கள் கல்யாணம் செய்து கொள்ளும் போது மறக்காமல் அழைபிதழ் அனுப்பி உடன் டிக்கெட்டும் வைத்து அனுப்புங்கள் மதுரை மக்கா ///
அண்ணனுக்கு ரொம்ப தான் நக்கலு...
வளமையான தொகுப்பாய், நினைவில் உள்ளவற்றை அருமையாய் கண்முன்னே அகல விரித்துள்ளீர்கள்..
வாழ்த்துக்கள்..
ஆபீசர் கலக்கிட்டார்..... எல்லாரும் செமையா எஞ்சாய் பண்ணி இருக்கீங்க........ ம்ம்ம்........!
பகிர்வு நன்றாக இருக்கிறது. படங்களுடன் பல நண்பர்களையும் கண்டுகொண்டோம்.
//மெட்ராஸ்பவன் சிவா ஐயாயிரம் தருவதாக சொன்னது மனோ மொபைலுக்கு தான்//
ஆளை எஸ்கேப் ஆக விட்டுட்டீங்களே..!! இட்ஸ் ஓக்கே. சைட்டை ஹாக் பண்ணிடுவோம்.
//துபாய் ராஜா என்ற பதிவர் எங்களிடம் அறிமுகம் ஆனார். அனைவரது பதிவுகளையும் வாசித்திருப்பதாக சொன்னார்.//
அவருக்கு ஆண்டவன் இப்படி ஒரு சோதனையை தந்திருக்க வேண்டாம்...
//மனோவும், கருனும் சாப்பிடவில்லை. என்ன மர்மம் என தெரியவில்லை. //
ஆளுக்கு ஒரு பந்தியில்தான் சோறு பரிமாறப்படும் என ஆபீசர் கண்டிஷனாக சொல்லிட்டார் போல???
இனிமையான நினைவுகள்....
u look so handsome brother
ஆப்பிஸரின் திருமணம் பலரை இணைக்கும் விழாவாகிப்போனதும் அதன் சுவையை எங்களுக்கு வழங்கியதும் சந்தோஸம் பிரகாஸ் அண்ணா !மனோ வேற எஸ்கேப் எங்க போய் இருப்பார் என்று எனக்கு புரியும்!:))))
வீடு சுரேஸ் வேற கலாய்ப்புத் தான்.
அதுசரி பிரகாஸ் கலியாணம் தையில் வைத்தால் நானும் ஓடி வருவேன் !தையில் சென்னையில் இருப்போம் இல்ல்ல்ல்ல்ல்ல்ல் ல!:))
போட்டோகளோடு பதிவு அருமை..
அருமையான இனிப்பான மகிழ்ச்சியான...தித்திப்பான.....சந்திப்பு.