வணக்கம் நண்பர்களே,
இந்த பதிவு நமது தமிழ்வாசியின் 500-வது பதிவு. இதுக்கெல்லாம் ஒரு பதிவா என நீங்கள் நினைக்கறீர்களா? ஆம்... சில விசயங்களை குறிப்பிட்டு சொன்னால் அதற்கு தனி சிறப்பு தான். என்ன சில விஷயங்கள் என கேட்கறீர்களா? இதோ பார்ப்போமே....!!!
தமிழ்வாசி பெயர்க் காரணம்:
தமிழ்வாசி என்ற பெயரை எப்படி தேர்ந்தெடுத்திங்க என நிறைய நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சொல்லிய விளக்கத்தை உங்களுக்கும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். 2010ம் வருட ஆரம்பத்தில் "என் தமிழ்ப் பதிவு" என்ற பெயரில் ஒரு வலைப்பூ ஆரம்பித்து என்ன எழுதுவது என தெரியாமலே நாளிதழ்களில் வரும் செய்திகளை இரண்டு மாதங்கள் வரை ஏதோ என பகிர்ந்து கொண்டிருந்தேன். யாராச்சும் வாசிப்பாங்களா? என வலைப்பூவை ரெப்ரெஷ் செய்து செய்து பார்ப்பேன். ம்ஹும்... பக்க எண்ணிக்கைகளை பார்த்தால் நான் ரெப்ரெஷ் செய்த எண்ணிக்கைகளையே காட்டும். ஹி..ஹி... என்ன செய்ய?
அப்படி காற்று வாங்கிக் கொண்டிருந்த என் வலைப்பூவில் திடீரென புதிய பதிவுகள் எழுதும் பக்கம் பிழை (ERROR) ஆனது. டெம்ப்ளேட்டில் என்ன மாற்றம் செய்தேன் என தெரியவில்லை. அந்த பக்கம் சரியாக திறக்கவில்லை. நானும் எப்படியாவது சரி செய்ய வேண்டும் என இணையத்தில் தேடினால் ஒரு வழியும் புலப்படவில்லை. பிறகு ஓரிரு மாதங்கள் வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இணையத்தில் ஏதேதோ மேய்ந்து கொண்டிருந்தேன். ஒரு நாள் அந்த வலைப்பூவில் என்ன தவறு செய்தோம், என என்னையே விசாரித்துக் கொண்டு இருந்தேன். அப்போது ஒன்றை அறிந்தேன். இனி புதிதாக ஒரு வலைப்பூ ஆரம்பிப்போம். அதன் டெம்ப்ளேட்-ஐ விவரம் தெரியாமல் திருத்தக் கூடாது என எனக்குள் ஒரு உறுதி எடுத்துக் கொண்டு வலைப்பூவுக்கு நல்ல பெயரை தேர்ந்தெடுக்க விரும்பினேன்.
ஆனால் தமிழ் என்ற சொல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என விரும்பி அதையொட்டியே சில பெயர்களை இணையத்தில் தேடினால் அவை அனைத்தும் வலைதளங்களாகவெ இருந்தது. அப்போது தமிழ் என்பதை விடுத்தது வசிக்கிற ஊர் பெயரை மையமாக வைத்து சில பெயர்களை யோசித்துப் பார்த்தேன். அப்போது மதுரைக்காரன், என் மதுரை... இப்படி யோசித்து மதுரை வாசி என கடைசியில் முடிவு செய்தேன். அப்போது "வாசி" என்பதற்கு வாசித்தல் என்றும், வசித்தல் என்றும் இரு பொருள்கள் வருவதை கண்டு தமிழுடன் பொருத்தி தமிழ்வாசி என இணையத்தில் தேடியபொழுது இணையதளமா, வலைப்பூவோ இல்லை என அறிந்து அப்பெயரையே தேர்வு செய்தேன்.
"தமிழ்வாசி" தமிழகத்தில் வசிப்பவன் என்றும், தமிழை வாசிப்பவன் என்று இரு பொருள்களில் அமையும். சரி வலைப்பூ பெயர் வைத்தாயிற்று. அடுத்து பதிவுகள் எழுத வேண்டுமே, என்ன செய்வது என அறியாமலே சில தளங்களில் பகிர்ந்த பதிவுகளை எடுத்து (அவர்கள் அனுமதி பெறாமலே) எனது வலைப்பூவில் பகிர்ந்தேன். ஆனால் அவ்வாறு செய்யக் கூடாது என அறிந்ததும் என்னைத் திருத்திக் கொண்டேன்.
(வாசிக்க போரடிக்கிறதா... ஹி..ஹி...)
தமிழ்வாசி பெற்றுத் தந்த நண்பர்கள்:
இணையத்தில் வாசிக்க வந்த காலத்தில் இருந்தே தொழில்நுட்ப தளங்களை அதிகமாக வாசித்து வருவதால் பல்சுவை பதிவுகளுடன் தொழில்நுட்பங்கள் பற்றியும் பதிவிட ஆரம்பித்தேன். இதனால் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அதோடு மட்டுமில்லாமல் எனக்கு தெரிந்த நுட்பங்களை பிறருக்கும் சொல்லிக் கொடுத்துள்ளேன். நிறைய நண்பர்களின் வலைப்பூவின் தோற்றத்தை அமைத்துக் கொடுத்துள்ளேன். அவர்கள் மனம் மகிழும் போது எனக்கும் சந்தோஷம் தான்... தொழில்நுட்பத்திற்கு என தனியாக இணையப்பூங்கா என வலைப்பூ வேறு தொடங்கினேன். அதிலும் தற்சமயம் தொடர இயலவில்லை
இந்த பதிவுலகம் மூலமாக நான் நிறைய நண்பர்களைப் பெற்றுள்ளேன். இன்னும் பெற்றுக் கொண்டு தான் இருக்கிறேன். இந்தப் பதிவுலகில் நான் எழுத வந்து பெற்ற பயன்கள் என்றால் எனது நண்பர்கள், நண்பர்கள், நண்பர்கள்... தான். என்னைப் பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும் என் எண்ணம் என்னவென்று? "எனக்கு எல்லோரும் வேண்டும். யாரும் பகையாளியாய் இருக்கக் கூடாது என" இந்த வரியை சில சமயம் எனது நண்பர்களிடம் அதிகமாக சொல்லி இருக்கிறேன். ஏனெனில் இவ்வாறு சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் சில சமயம் வந்துள்ளது. அந்த சில சந்தர்ப்பத்திற்காக இப்போதும் திரும்ப சொல்கிறேன்,"எனக்கு எல்லோரும் வேண்டும். யாரும் பகையாளியாய் இருக்கக் கூடாது என"
(வாசிக்க போரடிக்கிறதா... ஹி..ஹி...)
பதிவுலக ஓய்வு பற்றி:
சரி, நண்பர்களே... தலைப்பில் சற்று ஓய்வு பெறப் போகிறேன் என போட்டுள்ளேன். ஆமாம்... தொடர்ந்து என்னால் இடுகைகள் எழுத முடியவில்லை. காரணம், சொந்த வேலைகள் சில தலைக்கு மேலே உள்ளது. அதற்காக நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது. சில மாதங்களாகவே, பதிவுலகில் ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. அப்புறம் சில நேரம் பதிவெழுத நேரம் கிடைத்ததால் சில பதிவுகள் எழுதி வந்தேன். ஆனாலும் சொந்த வேலைகளுக்கு கண்டிப்பாக நேரம் தேவை என்ற சமயம் இப்போது வந்து விட்டதால் இந்த ஓய்வு முடிவு... பதிவுலகில் ஓய்வு என்றாலும் எனது நண்பர்களை மறந்துவிட மாட்டேன். கண்டிப்பாக தொடர்பில் இருப்பேன். அவர்களின் பதிவுகளை நேரம் கிடைக்கையில் கண்டிப்பாக வாசிப்பேன்...
வலைச்சரத்தில் நான் ஆசிரியர் குழுவில் இருப்பதால் அதில் மட்டும் இணைந்திருக்கலாம் என முடிவெடுத்துள்ளேன். ஏனெனில் சில சமயம் மட்டுமே அதில் பொறுப்புகள் வரும். ஆகையால் அந்த பொறுப்பை கவனிக்க முடியும் என நினைக்கிறேன்.
எனது வேலைகள் நல்ல படியாக முடிந்த பின் மீண்டும் பதிவுலகம் பக்கம் வருவேன். எப்போது வருவேன் என உறுதியாக சொல்ல முடியவில்லை.
மெக்கானிக்கல் நண்பர்களுக்காக ஒரு தொழில்நுட்ப தொடர் எழுதி பாதியில் நிறுத்தியுள்ளேன். என்றைக்காவது நேரம் கிடைக்கையில் அந்த தொடரை மட்டும் எழுதலாம் என நினைத்துள்ளேன். முடியுமா என தெரியவில்லை. பார்ப்போம் முடியுமா என?
(வாசிக்க போரடிக்கிறதா... ஹி..ஹி...)
ஐநூறாவது பதிவு பற்றி:
நண்பர்களே, தலைப்பில் 500வது பதிவு என போட்டுள்ளேன். ஆம்... இந்த பதிவு என் வலைப்பூவில் வெளியாகும் 500வது பதிவாகும். எப்படியோ சில காப்பி/பேஸ்ட் பதிவுகளையும் ( உண்மையை ஒத்துக்கனும்ல) உள்ளடக்கி ஐநூறை தொட்டாச்சு. இதுவரை என்னைத் தொடர்ந்து வந்த நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். நான் பதிவிட்ட ஒர்த் இல்லாத/ ஏதோ கொஞ்சம் ஒர்த்தான(ஹி..ஹி..) பதிவுகளையும் வாசித்து மெனக்கட்டு கமென்ட் எழுதிய நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
தமிழ்வாசி இதுவரை:
மொத்த பதிவுகள்: 500மொத்த கருத்துரைகள்: 10371 (இந்த பதிவு பதிவிடுவதற்கு முன்)
மொத்தம் பக்கப் பார்வைகள்:(இந்த பதிவு பதிவிடுவதற்கு முன்)
மொத்தம் தொடர்பவர்கள்: 571
அலாஸ்கா மற்றும் இண்டி பிளாக்கரில்:
தொடர்புக்கு:
முகநூல்:https://www.facebook.com/sprakashkumar
முகநூல்:https://www.facebook.com/sprakashkumar
மொபைல் எண்: 9894567375
(வாசிக்க போரடிக்கிறதா... ஹி..ஹி...) என அடிக்கடி மேலே எழுதினேனே, அதற்கு காரணம் பதிவு கொஞ்சம் நீளமா இருக்குல அதான்... அடுத்து எப்போ எழுதப் போறோம்னு தெரியலைல. அதான் கொஞ்சம் நீளமா எழுதிட்டேன்.
நல்லதொரு நாளில் புதிய பதிவின் வழியாக உங்களை சந்திக்கும் வரை என்றும் நன்றியுடன் தமிழ்வாசி பிரகாஷ்.
65 கருத்துரைகள்:
நீண்ட ஓய்வு வேண்டாம்.விரைவிலே திரும்பவும்.
ம்
தங்களை போன்ற தரமான எழுத்தாளர்களை இழப்பது தமிழ் மொழிக்கு நல்லதல்ல.!
யுவர் ஹானர் .., ப்ளீஸ் ரீ கன்சிடர் யுவர் டிஸிஸன் :)
500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
எல்லா பதிவர்களிடமும் சகஜமாக பழகுபர் நீங்கள்...நீண்ட இடைவெளி விடாமல் ஷார்ட் கமெர்சியல் பிரேக் மாதிரி எடுத்துக்குங்க. என் பதிவுகளையும் படித்து அவ்வப்போது கமென்ட் போடுவீர்கள் (அட்லீஸ்ட் அதையாவது தொடரவும்..ஹி..ஹி..).விரைவிலே ஐ யாம் பேக் என்று பதிவு போடுவீர்கள் என்று நம்புகிறேன்.
யோவ், என்னய்யா இது திடீர்னு?
உண்மையிலேயே எல்லாரையும் நண்பர்களாக நினைக்கும் உங்கள் இயல்பு பாராட்டுக்குரியது..
ரொம்ப கேப் எடுத்துக்காம சீக்கிரம் திரும்பி வரவும்...
hey...hey... jolly..jolly..
நண்பரே!
ஏற்கனவே நான் ஓய்வில்.
இப்போது நீங்களுமா?
பதிவுலகமே ஒருவேளை ஸ்தம்பித்துப்போய் விடுமோ? ;)
அதுபோல ஸ்தம்பிக்க விடக்கூடாது.
எனவே நீங்களாவது விரைவில் திரும்ப வந்துவிடுங்கள்.
500 க்கு என் அன்பான வாழ்த்துகள்.
வணக்கம் மக்கா...
உங்களின் தொடர்பணி பற்றி நானறிவேன்.
எடுத்துக் கொண்ட பணி வெற்றிகரமாய் முடிய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்
தொடர்பிலிருப்போம் மக்கா..
:(
;(
:o
500வது பதிவுக்கு நன்றி. என் இனிய இனைய நண்பா விரைவில் நம் இனைய உலகிற்கு வர கேட்டுக்கொள்கிறேன்
////
NAAI-NAKKS said...
:(
;(
:o
/////
யோவ் நக்ஸ் உம்ம தொல்ல தாங்கமுடியலடா சாமி..இதுக்கு நீங்க சும்மா வாசிச்சுட்டு மட்டும் போயிரலாம்
500க்கு வாழ்த்துக்கள்.
முதலில் நம் வீட்டுப் பணி... பின்னர்தான் எழுத்துப் பணி... அதனால் வேலைகளை முடித்து விரைவில் வலைப்பூவில் வாசம் செய்ய்யுங்கள்... தொடர்பில் இருப்போம் நண்பரே...
வேலைகளை முடித்து விட்டு சட்டுபுட்டுன்னு வந்துடுங்க அண்ணே.
500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே...Comeback soon...
அன்பின் பிரகாஷ் - ஓய்வு தேவைதான் - பொறுப்புகள் -பணிகள் அதிகரிக்கும் போது இணையத்தில் இருந்து சற்று ஓய்வு தேவைதான். 500 வது பதிவினிற்கு மிகக் குறைந்த காலத்தில் 500 வது பதிவினிற்கு நல்வாழ்த்துக< - நட்புடன் சீனா.
முதலில் 500-வது பதிவிற்கு வாழ்த்துக்கள் !
விரைவில் பதிவு இட வாருங்கள் !
எங்கள் ஊர் பக்கம் வரும் போது கண்டிப்பாக போன் செய்யவும் !
தங்கள் நினைத்த வேலைகள் விரைவில் வெற்றி பெறட்டும் ! அட்வான்ஸ் வாழ்த்துக்கள் பிரகாஷ் !
500வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ்
விரைவில் மீண்டும் பதிவுலகம் திரும்பி வர வாழ்த்துக்கள் பாஸ்
500 பதிவு எழுதிட்டியா நண்பா? நானெல்லாம் 200ஐத் தொடுவனான்னே தெரியாம முழிச்சுட்டிருக்கேன். உங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
சரி.. ஓய்வு எடுக்காம யாரும் வேலை செய்ய முடியாது. சொந்தப் பணிகளை நிறைவா முடிச்சுட்டு கேப் கிடைக்கறப்ப மீண்டும் வாங்க. ஆவலோட காத்திருக்கோம்!
Congratulations 4 500 posts . Then nothing words
முதற்கண் 500-வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்! எனக்கு ஆரம்ப கால முதல் ஆக்கமும் ஊக்கமும் அளிப்பவர் களில் தங்களுக்குத் தனியிடம் உண்டு சொந்தப் பணி காரணமாக ஓய்வு தவிர்க வேண்டாதது நேரம் கிடைப்பின் எழுதுங்கள் வாழ்க வளமுடன்! வருக நலமுடன்!
புலவர் சா இராமாநுசம்
ட்ரீட் எப்ப மச்சி......
ஸ்வீட் எடு கொண்டாடு...
அடுத்தது யாருப்பா...?
ayya gopala krishnan avargalae!!!
Field la Vadivelu illatha kuraya innaikku therthuttinga!!!
Eppadi unganala mattum ippadi!!!
Mudiyala!!!hmmmmm
வேலைகளை முடிச்சிக்கிட்டு சீக்கிரம் வர்ர வழிய பாருங்க......
///பதிவுலகிலிருந்து சற்று ஓய்வு பெறப் போகிறேன் //
கிளம்புய்யா! கிளம்பு!
காற்று வரட்டும்....
//(500TH POST)///
வாழ்த்துக்கள்!
நல்லா கிளப்புராங்கய்ய பீதியை
ஹைநூறு!!!! இனிய பாராட்டுகள்.
ரெண்டு நாள் ஓய்வு எடுத்துக்கிட்டு மீண்டும் வந்து சேருங்கள்.
//ஹைநூறு!!!! இனிய பாராட்டுகள்.
ரெண்டு நாள் ஓய்வு எடுத்துக்கிட்டு மீண்டும் வந்து சேருங்கள். //
Repeattu !!
வாழ்த்துக்கள்...
@வரலாற்று சுவடுகள்
adengappaa.
porumaiyaa vaanga.. :)))
நான் தங்களுக்கு அறிமுகமான நேரம் பார்த்தா இப்படி சீக்கிரமே வந்து விடவும் சகோதரரே .
எல்லோருக்கும் சற்று ஓய்வு தேவைதான்! விரைவில் புதிய பதிவுகளுடன் மீண்டும் கலக்குங்கள் நண்பரே!
விரைவில் திரும்பி வந்து 1000 வது பதிவை எழுத விழைகிறேன்..
500 வது பதிவிற்கு வாழ்த்துகள்..
500-வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா! வேலைகளை முடித்து விரைவில் மீண்டும் எழுதவும்.
வாழ்த்துக்கள்.. 500 ஆவது பதிவிற்கும் கூடவே தங்கள் வேலைகள் சிறப்புற நிறைவுபெறவும்..
தமிழ்வாசி - விளக்கம் அருமை! சட்டென கவரும் பெயர்! :) சீக்கிரமே திரும்பி வந்து தமிழ் வாசம் செய்யுங்கள்!
@Karthik Somalinga
கேள்வி: இந்த பதிவுக்கு ஓட்டளித்து உங்களை உற்சாகப்படுத்துபவர்கள் உங்கள் நண்பர்களா, எதிரிகளா?
பதில்: தெரியலையேப்பா! ;)
@Manimaran
நீண்ட ஓய்வு வேண்டாம்.விரைவிலே திரும்பவும்.//////
நீண்ட ஓய்வு இல்லை... சற்று ஓய்வு தான்..... எதிர்பார்த்த வேலைகள் முடியட்டும்..... மீண்டும் வருகிறேன்.
@வீடு சுரேஸ்குமார்
ம்////
ம்ம்ம்ம்.....
@வரலாற்று சுவடுகள்
தங்களை போன்ற தரமான எழுத்தாளர்களை இழப்பது தமிழ் மொழிக்கு நல்லதல்ல.!/////
அப்படியா? ஏன் பாஸ் இந்த கொலைவெறி....
என் பதிவுகளையும் படித்து அவ்வப்போது கமென்ட் போடுவீர்கள் (அட்லீஸ்ட் அதையாவது தொடரவும்..ஹி..ஹி..).///
ஹி,...ஹி.. நண்பரே... பதிவுக்காக உங்களை தொடரா விட்டாலும், இன்னொரு விசயத்திற்காக தங்களை தொடர்பு கொள்வேன் நண்பா..
500வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா.
விரைவில் வாருங்கள்..
WE ARE WAIT 4 U ANNAA
யோவ், உதை விழும் வாரம் 1 போஸ்ட் போடுய்யா
500-வது பதிவிற்கு வாழ்த்துகள்....
வாரத்தில் ஒரு மணிநேரம் கண்டிப்பாக கிடைக்கும் ஒரு பதிவு எழுதவும் தொடருங்கள் உங்கள் புதியவேலை நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள் விசெசதுக்கு கூப்பிடுங்க............. தொடரவும்
வணக்கம்,பிரகாஷ்!உங்கள் சொந்த வேலைகளையும் கவனிக்க வேண்டியது அவசியம் தான்.வேண்டியவர்கள்,அல்ல அல்ல பதிவுலகில் சில காலங்களாவது சிந்திக்கும்,ரசிக்கும் பதிவுகள் தந்த பதிவர்கள் ஒவ்வொருவராக தற்காலிக ஓய்வுக்குச் செல்வது வருத்தமே!எனினும்,மீண்டும் மீண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம்/காத்திருக்கிறோம்!நன்றி பிரகாஷ்!!!!
வாழ்த்துகள் பிரகாஷ்.
போகுதே....போகுதே...என் பைங்கிளி வானிலே...
இப்போ இந்த மாதிரி சோக பாட்டு தான் பாட தோணுது....
500 க்கு வாழ்த்துக்கள் ! 1000 , 2000 ம்னு போவீங்கன்னு பார்த்தா என்ன சட்டுன்னு விலகிட்டீங்க ... வலைச்சரத்தில் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ...
@! சிவகுமார் !
மெட்ராஸ்பவன் அண்ணே., நான் இங்லிபீசுல கொஞ்சம் வீக்கு தமிழ்ல சொன்னா நல்லாயிருக்கும் ஹி ஹி ஹி.!
அட கடவுளே வலைத்தளத்தில் திட்டு வாங்க ஒரு ஆள் இல்லாமல் போச்சே!...நான் இப்பதானே வந்தன் சரி சகோ
500 பதிவுகள் போட்ட உங்களுக்கு என் (நிட்சயமாய் என் பதிவுகளை எடுத்திருக்க மாட்டார் :) )வாழ்த்துக்கள்.........
விரைந்து வந்து உங்கள் பணியைத் தொடருங்கள் .மிக்க
நன்றி பகிர்வுக்கு .
500 வது பதிவிற்கு வாழ்த்துகள்..
விரைந்து மீண்டும் பணியைத் தொடருங்கள்..........
மன்னிக்கணும் பிரகாஸ் இப்போ தான் பதிவை கவனித்தேன்...
முதலில் 500 தொட்டதற்கு வாழ்த்துக்கள்..
தங்கள் பரிவு பறறி பார்த்தேன் சற்று வருத்தமாகத் தான் இருந்தது ஆனால் எனக்கும் இதில் அனுபவம் இருப்பதால் புரிந்து கொண்டேன்...
தமிழ் நாட்டு உறவுகளை மிகவும் அதிகமாக நேசிப்பேன் அதிலும் எனக்கு கிடைத்த சிறந்த நண்பர்களில் நீங்களும் ஒரு வர் மீண்டும் நாம் சந்திப்போம்..
VGK ஐயா அவர்களின் வலைப்பூ மூலமாகத்தான் உங்களுடைய வலைப்பூவைப் பார்த்தேன் .. ஆனால்! இங்கு வந்து பார்த்தால் சகோ அவர்கள் ஒய்வு எடுக்கபோவதாக கூறியிருப்பது மிகவும் வருத்தமாக தான் இருக்கிறது.. விரைவில் வர வேண்டும் வலைப்பூவின் உலகிற்கு...
உங்களுடைய 500 - வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.....
நாட்டாம ... தீர்ப்ப மாத்திச் சொல்லு!!!
அப்படியே 500வது பதிவுக்கும் வாழ்த்துக்கள் !!!
எழுத்தாளர்களுக்கு ஓய்வு ஏது?
தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!
தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....
ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....
அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....
மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215
hi... good website..today only i'm seeing this...Nice..
For More Entertainment..I welcome everybody for my site..
http://www.viswaroobam.com
500க்கு வாழ்த்துக்கள்! தொடரட்டும் தங்கள் சேவை!