வணக்கம் வலை நண்பர்களே,
நம்மில் அனைவரும் பேஸ்புக்-கில் (முகநூல்) கணக்கு வைத்திருப்போம். அதில் பொதுவான மொழியான ஆங்கில மொழியை தேர்வு செய்திருப்போம். நாம் தேர்வு செய்யாவிட்டாலும் கணக்கு ஆரம்பித்தவுடன் ஆங்கிலமே மொழியாக எடுத்துக் கொள்ளும்.
பேஸ்புக்கில் பல்வேறு நாட்டில் பயன்படுத்தும் முக்கியமான மொழிகளை பயன்பாட்டு மொழியாக மாற்ற வசதி உள்ளது. அதில் நம் தமிழ் மொழியும் ஒன்று.
- பேஸ்புக்கில் நமது கணக்கை ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு எவ்வாறு மாற்றுவது என பார்ப்போம்.
- அதே போல நமது அடையாள பெயரை (user name ie: time line name) எவ்வாறு தமிழ் பெயராக மாற்றுவது என்றும் பார்ப்போம்.
பேஸ்புக் கணக்கை தமிழுக்கு மாற்றுவது எப்படி?
1. நமது பேஸ்புக் கணக்கை திறந்து அதில் மேலே வலது மூலையில் உள்ள வட்ட ஐக்கானை க்ளிக் செய்யவும் (பார்க்க கீழேயுள்ள படம்).
2. Genaral Account Settings என்ற மெனு ஓபன் ஆகும். அதில் கடைசியாக Language என்ற ஆப்சன் இருக்கும். அதில் வலது புறமாக edit என்பதை க்ளிக் செய்தால் choose primary ஓபன் ஆகும். அதில் கீழ் நோக்கிய பட்டனை அழுத்தினால் என்னென்ன மொழிகள் உள்ளன என்ற லிஸ்ட் ஓபன் ஆகும். அதில் தமிழ் மொழியை தேர்வு செய்து save changes தர வேண்டும். (பார்க்க கீழே உள்ள இரண்டு படங்களையும்)
அவ்வளவு தான். இனி உங்கள் பேஸ்புக் கணக்கு முழுவதும் தமிழ் மொழிக்கு மாறியிருக்கும். (பார்க்க கீழேயுள்ள படம்)
ஆங்கிலத்திற்கும், தமிழுக்கும் உள்ள வித்தியாசத்தை கீழே உள்ள படங்கள் மூலம் அறிக.
பேஸ்புக்கில் நமது அடையாள பெயரை தமிழுக்கு மாற்றுவது எப்படி?
1. நமது பேஸ்புக் கணக்கை திறந்து அதில் மேலே வலது மூலையில் உள்ள வட்ட ஐக்கானை க்ளிக் செய்யவும் (பார்க்க மேலே முதல் படம்).
2. Genaral Account Settings என்ற மெனு ஓபன் ஆகும். அதில் முதலாவதாக name என்ற ஆப்சன் இருக்கும். அதில் உங்களது தற்போதைய பெயர் காட்டும். அதன் வலது பக்கம் edit என்பதை க்ளிக் செய்தால் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு ஓபன் ஆகும். அதில் first, middle, last, display as என காட்டும்.
3. அதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பெயரை தமிழுக்கு மாற்றி, உங்கள் பேஸ்புக் password கொடுத்து save changes க்ளிக் செய்யவும். சுமாராக ஒரு நாளில் உங்களுக்கு விருப்பமான தமிழ் பெயர் பேஸ்புக்கில் மாறியிருக்கும்.
சந்தேகம் இருப்பின் கமென்ட்-இல் கேட்கவும்.
10 கருத்துரைகள்:
நல்ல தகவல் .நன்றி
பகிர்வுக்கு நன்றி! ஆனா, நான் ஏற்கனவே மாறிட்டேனே! இப்போ என்ன பண்ணாலாம்?!
நல்ல தகவல் பிரகாஷ்..நானும் பெயரை தமிழுக்கு மாற்றுகிறேன்.
பலருக்கும் உதவும் தகவல்...
நல்ல தகவல் பாஸ்
உபயோகமான தகவலுக்கு நன்றி
நன்றி நண்பரே...
நீண்ட நாள் எனது பிரச்சனைக்கு நொடியில் தீர்வு தந்துள்ளீர்கள்.
தங்கள் ஆலோசனையின் பேரில் மாற்றியமைத்து விட்டேன்.
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி பகிர்வுக்கு.
பயனுள்ள பகிர்வு!நன்றி.
அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (20.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி எழுதுகிறேன். நாளைய வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!