CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-11

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
வணக்கம் வலை நண்பர்களே,
 இனி பதிவு எழுதும் பக்கத்தில் இருக்கும் post settings-இல் Shedule, Permalink, ஆகியவைகளைப் பற்றி பார்ப்போம்.

Shedule:
இதில் இரண்டு வகைகள் உள்ளன.


Automatic:
இந்த முறையில் எழுதிய பதிவை உடனே Publish என்பதை க்ளிக் செய்வதன் மூலம் வலைப்பூவில் வெளியிடலாம் (Automatic publish method)

Set date and time: (Sheduled post)

இதன் மூலம் பதிவு வெளிடப்பட வேண்டிய நேரத்தை முன்கூட்டியே திட்டமிட்டு வெளியிடலாம். பதிவு வெளியாக வேண்டிய தேதி, நேரம் ஆகியவற்றை மேலே உள்ள படத்தில் உள்ளவாறு தேர்வு செய்து பின்னர் done என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதோடு நில்லாமல் மறக்காமல் அந்தப் பதிவில் publish என்பதையும் க்ளிக் செய்ய வேண்டும். இதனால் நாம் தேர்வு செய்த தேதி/நேரத்தில் (Shedule post) பதிவு வெளியிடப்படும்.

Links - Permalink:
Automatic permalink:
பதிவை வெளியிடும் போது அந்த பதிவிற்கான URL முகவரி automatic-ஆக create ஆகும். நாம் தமிழில் தலைப்பு கொடுத்திருப்பதால் கீழே படத்தில் automatic permalink என காட்டுகிறதே, அந்த URL தான் create ஆகும்.
இதனால், இணைய தேடுதலில் நமது பதிவு காட்டப்படக் கூடிய வாய்ப்பு குறையும்.

Custom permalink:
custom permalink என்பதை தேர்வு செய்தால் கீழே ஒரு கட்டம் திறக்கும். அதில் நமது பதிவிற்கு ஏற்ற ஆங்கில சொற்களை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் (hiphen symbol-) என்ற குறியீடு கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலே படத்தில் பாருங்கள். blog tips tamil part elevan 11 என்பதை blog-tips-tamil-part-elevan-11 என்று கொடுத்துள்ளேன். சரியான சொற்களை கொடுத்த பின்னர் done என்பதை அழுத்தவும். பின்னர் பதிவை publish செய்தால் அந்த பதிவின் URL முகவரியாக permalink-இல் நாம் கொடுத்த சொற்கள் இருக்கும். இந்த தொடரின் எல்லா பாகங்களுக்கும் இந்த முறையைப் பயன்படுத்தியே url அமைக்கின்றேன்.


Post settings-இல் Location, options என்ற இரு பகுதிகள் உள்ளன. அவை அவ்வளவாக முக்கயத்துவம் இல்லை.


பதிவு எழுதும் பக்கத்தில் உள்ள அனைத்தையும் விளக்கமாக பார்த்து விட்டோம்.முக்கியமான ஒன்றைத் தவிர. அவற்றை பின்னர் பார்ப்போம்.

அடுத்து blog dashboard-இல் posts என்பதில்,
இணையப்பூங்கா தளத்தில் சில பதிவுகளை நான் எழுதியிருப்பதால் அதன் தலைப்புகள் வரிசையாக காட்டுகின்றன. அதில், இரண்டாவதாக உள்ள பதிவில் (நீல வண்ண வட்டமிட்ட பகுதி) நான்கு options காட்டுகிறது. அவற்றை பற்றி இங்கு பாப்போம்.


Edit:
இங்கு க்ளிக் செய்தால் ஏற்கனவே எழுதிய பதிவுகளில் திரும்ப மாற்றங்கள்(edit) செய்யலாம்.

View:
இங்கு க்ளிக் செய்தால் எழுதிய பதிவு புதிய விண்டோவில் நமது வலைப்பூவில் அந்த பதிவு ஓபன் ஆகும்.

Share:
இங்கு க்ளிக் செய்தால் Google plus சமூக தளத்தில் பகிரப்படும்.

Delete:
இங்கு க்ளிக் செய்தால் பதிவானது பதிவு லிஸ்டில் இருந்து நீக்கப்படும். பதிவை நீக்கும் போது பலமுறை யோசித்து நீக்குங்கள். ஏனெனில் நீக்கி விட்ட பிறகு பதிவை திரும்ப பெற இயலாது.

மேற்கண்ட, படத்தில் வலைப்பூ நுட்பங்கள் என்ற முதல் பதிவின் தலைப்புக்கு மேலே label icon, publish, revert to draft, delete என்பவை உள்ளன. அவற்றை பற்றியும் இங்கு பாப்போம்.

Label icon:
ஒவ்வொரு பதிவிலும் குறிச்சொல் - label தருவோமே, அந்த குறிச்சொற்கள் இங்கு வரிசையாக இருக்கும், அவற்றில் நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுப்பதன் மூலம் நாம் எழுதிய பதிவுகளை வரிசைப்படுத்தலாம்.

Publish:
ஏற்கனவே எழுதி வைத்துள்ள பதிவுகளை நாம் வெளியிடாமல்(publish) இருந்தால் அந்த பதிவுகளின் தலைப்புக்கு அருகில் உள்ள கட்டத்தை டிக் (select) செய்து மேலே உள்ள publish என்பதை க்ளிக் செய்தால் அந்த பதிவு வெளியிடப்படும்.

Revert to draft:
ஏற்கனவே publish செய்துள்ள பதிவுகளை நாம் முடக்க, அதாவது வலைப்பூவில் இருந்து நீக்க விரும்பினால், இந்த post list-இல் அந்த பதிவை டிக் செய்து revert to draft தர வேண்டும். இதனால் அந்த பதிவு வலைப்பூவில் இல்லாமலும், இங்கு post list-இல் மட்டும் இருக்கும். மீண்டும் பதிவை வெளியிட விரும்பினால் அந்த பதிவின் கட்டத்தில் டிக் செய்து publish கொடுத்தால் வலைப்பூவில் வெளியாகும்.

அடுத்து மேலே படத்தில் இடப்பக்கம் posts என்பதற்கு கீழே, All, Draft, Published என வரிசையாக உள்ளதே, அவற்றில், .
All என்பது நமது வலைப்பூவில் எழுதிய பதிவுகள், பதிவுகள் எழுதி வெளியிடப்படாமல் இருக்கும் பதிவுகள் என அனைத்து எண்ணிக்கைகளையும் காட்டுகிறது.

Draft எனபது வலைப்பூவில் வெளியிடப்படாமல் உள்ள பதிவுகளின் எண்ணிக்கைகளை காட்டும்.மேலே படத்தில் வலைப்பூ நுட்பம் என்ற பதிவை நான் வெளியிடவில்லை. ஆனால் பதிவு லிஸ்டில் இருப்பதால் Draft ஒன்று என காட்டுகிறது.

Published என்பது வலைப்பூவில் வெளியிட்ட பதிவுகளின் எண்ணிக்கைகளை காட்டுகிறது.

இதுவரை blogger dashboard-இல் posts பற்றி பார்த்தோம். அடுத்த பாகத்தில் மிக முக்கியமான Layout, Template பற்றி பார்க்கலாம்.

ஒவ்வொரு பகுதியாக, முடிந்தளவு கூடுதல் விளக்கங்கள் பகிர விரும்புவதால் சில விஷயங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். மேலும் விளக்கம் தேவையெனில் எனது மின்னஞ்சலை admin@tamilvaasi.com தொடர்பு கொள்ளவும்.

முந்தைய பாகங்களுக்கு இங்கே அழுத்துங்கள். 


8 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

Location - Options இதற்கு இடையில் Search Description என்று ஒன்று உள்ளதே... அதைப் பற்றி ...?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@திண்டுக்கல் தனபாலன்
Location - Options இதற்கு இடையில் Search Description என்று ஒன்று உள்ளதே... அதைப் பற்றி ...? ///

எனது blogger-இல் அப்படி ஒரு option இல்லையே தனபாலன் சார்???

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

ரைட்டு.... தலைவரே....

அப்புறம் சங்க தேர்தல் எப்போ..?

மின் உலகம் said... Best Blogger Tips

its useful for beginners.
thank you.
http://minulagam.blogspot.com/

பூ விழி said... Best Blogger Tips

லிங்க் பற்றி நன்றாக புரிந்தது நன்றி பதிவுகளுக்கு டைட்டில் ஆங்கிலத்திலும் கொடுக்கவேண்டுமா ?

'பரிவை' சே.குமார் said... Best Blogger Tips

பயனுள்ள பகிர்வு....
தொடருங்கள்.

”தளிர் சுரேஷ்” said... Best Blogger Tips

அருமையான தெளிவான விளக்கத்துடன் பகிர்ந்துள்ளீர்கள்! நன்றி!

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

கவிதை வீதி... // சௌந்தர் //
மின் உலகம்
poovizi
சே. குமார்
s suresh///

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1