வணக்கம் வலை நண்பர்களே,
இதுவரை இத்தொடர் வாயிலாக பிளாக் ஆரம்பித்து, என்னென்ன settings செய்ய வேண்டும்? பதிவுகளை எப்படி எழுதுவது? எங்கு எழுதுவது? என்றும் பார்த்தோம்.
அடுத்து எழுதிய பதிவை வலைப்பூவில் வெளியிடுவதற்கு முன் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது பதிவிற்கான குறிச்சொற்கள் - LABELS.
குறிச்சொல் - label என்றால் என்ன?
குறிச்சொல் என்பது பதிவிற்கு ஏற்ற சுருக்கமான வார்த்தைகள் தேர்ந்தெடுத்து கொடுப்பது என்றும் சொல்லலாம். இந்த குறிச்சொல் வார்த்தைகள் மூலம் இணையத்தில் தேடும் பொழுது உங்கள் பதிவின் குறிச்சொல் பொருந்தினால் உங்கள் பதிவு அந்த தேடுதலில் காட்டக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் உங்கள் வலைப்பூவை அவர்கள் பார்வையிட வாய்ப்பு உள்ளது.
உதாரணமாக, கூகிள் தேடல் பகுதியில் ஜப்பான் சுனாமி என்றும், டயட் சார்ட் என்றும் தேடிப் பாருங்களேன். தமிழ்வாசி தளத்தில் பகிர்ந்த பதிவுகள் தேடுதல் வரிசையில் முதல் மூன்று இடங்களிலேயே காட்டும். அதற்கான படங்கள் கீழே:
மேற்கண்ட படத்தில் டயட் சார்ட் என்ற வார்த்தையை கூகிளில் தேடினால் தமிழ்வாசி தளத்தில் வந்த பதிவு முதல் மற்றும் மூன்றாவது பதிவாக காட்டுகிறது. இரண்டாவதும், நான்காவதும் அந்த பதிவை காப்பி செய்தவர்களின் தளத்தை காட்டுகிறது. என்ன செய்ய? காப்பி/பேஸ்ட் செய்பவர்களை நம்மால் தடுக்க இயலாது நண்பர்களே!!!
குறிச்சொல் தருவதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டுவது
1. பதிவிற்கு சம்பந்தமான வார்த்தைகள் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
2. நீளமாக இல்லாமல் சுருக்கமான வார்த்தைகள் அவசியம்.
3. திரட்டிகளுக்கு (திரட்டிகள் பற்றி பின்னர் ஒரு பாகத்தில் பாப்போம்) ஏற்ப குறிச்சொல் வார்த்தைகள் தேர்ந்தெடுத்தல்அவசியம்.
4. உங்கள் வலைப்பூ சம்பந்தமான வார்த்தைகளும் குறிச்சொல்லாக தரலாம்.
5. தமிழ், ஆங்கிலம் கலந்தும் குறிச்சொற்கள் தரலாம்.
5. தமிழ், ஆங்கிலம் கலந்தும் குறிச்சொற்கள் தரலாம்.
பதிவிற்கான குறிச்சொல்லை எங்கு கொடுப்பது?
மேற்கண்ட படத்தில் பாருங்கள். பதிவு எழுதக் கூடிய பக்கத்தில் வலப்பக்கம் post settings என்ற option இருக்கிறதா? அதில் labels என்ற option இருக்கிறதா? அதுதான் குறிச்சொல் தரும் பகிரும் இடம். label என்பது குறிச்சொல் என்பதற்கான ஆங்கில சொல் அவ்வளவே. அந்தக் கட்டத்தில் சில குறிச்சொற்கள் கொடுத்துள்ளேன். அவை இந்த தொடரின் குறிச்சொற்கள் ஆகும். இதே போல உங்கள் பதிவிற்கும் பொருத்தமான குறிச்சொற்களை கொடுங்கள்.
ஒவ்வொரு
பகுதியாக, முடிந்தளவு கூடுதல் விளக்கங்கள் பகிர விரும்புவதால் சில
விஷயங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். மேலும் விளக்கம் தேவையெனில்
எனது மின்னஞ்சலை admin@tamilvaasi.com தொடர்பு கொள்ளவும்.
முந்தைய பாகங்களுக்கு இங்கே அழுத்துங்கள்.
முந்தைய பாகங்களுக்கு இங்கே அழுத்துங்கள்.
10 கருத்துரைகள்:
/// காப்பி/பேஸ்ட் செய்பவர்களை நம்மால் தடுக்க இயலாது ///
தானாக திருந்தினால் தான் உண்டு...
திருடர்கள் என்றுமே திருந்தியதில்லை. தொடர்பதிவு வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துகள்...!
புதிதாக வலைப்பூ ஆரம்பித்துள்ளேன் .. உங்கள் பதிவுகள் உபயோகமாக உள்ளது..
@திண்டுக்கல் தனபாலன்
தானாக திருந்தினால் தான் உண்டு... //
கரெக்ட் சார்...
@தங்கம் பழனி
வாழ்த்திற்கு நன்றி பழனி
@விமல் ராஜ்
புதிதாக வலைப்பூ ஆரம்பித்துள்ளேன் .. உங்கள் பதிவுகள் உபயோகமாக உள்ளது.. //
நேற்றே உங்கள் பதிவை வாசித்தேன்.... நல்ல பதிவு...
நானும் இஞ்சினியர் தான்...
தகவல்கள் பெரும் உதவியாய் உள்ளது
அண்ணே எப்படி இருக்கீங்க ..சுப்பர்னே இன்னும் அதுல CUSTOM PERMALINK இருக்கு அத பத்தியும் எழுதுகன்கனே
தங்களின் பதிவுகளை ஆர்வத்தோடு படிப்பது மாத்திரமன்றி, இதோ வழிகாட்டுதல் தொடர்களைப் பத்திரப் படுத்தியும் வருகிறேன். எளிய நடையில், விளக்கப் படங்களோடு நீங்கள் விடயங்களை அழகாக விளக்கிச் செல்கிறீர்கள். என் உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள்.
புதிதாக வலைப்பதிவு ஆரம்பிக்க நினைத்த எனக்கு உங்களின் இந்த தொடர் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.நானும் தமிழ் பூங்காவனம் எனும் பெயரில் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து விட்டேன்
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.நண்றி....