CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-7

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
வணக்கம் வலை நண்பர்களே,
ஒரு வலைப்பூ துவங்கி settings அமைப்பது பற்றியும், பதிவு எழுதுவது பற்றியும் கடந்த பாகங்களில் பார்த்தோம். இனி பதிவு எழுதக்கூடிய பக்கத்தில் உள்ள சில icons பற்றியும், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது எனவும் பார்ப்போம்.
பதிவை மெருகூட்ட பயன்படும் வசதிகள்
கடந்த பாகத்தில் அம்புக்குறி குறித்த icons பற்றி பார்த்தோம். இந்த பதிவில் இவற்றில் அம்புக்குறி இல்லாத icons பற்றி பார்ப்போம்.
 
B என்பது வார்த்தை/எழுத்துக்களை பெரிதாக்கி காட்ட பயன்படுகிறது.

I என்பது வார்த்தை/எழுத்துக்களை சாய்வாக காட்டப் பயன்படுகிறது.

U என்பது வார்த்தை/எழுத்துக்களில் அடிக்கோடு இட பயன்படுகிறது.

ABC என்பது வார்த்தை/எழுத்துக்களில் குறுக்காக கோடு இட பயன்படுகிறது.



அடுத்து லிங்க் என்பது என்ன?
 ஒரு வார்த்தை, வாக்கியத்திற்கு வேறு வலைதள/வலைப்பூ முகவரியை இணைப்பாக கொடுக்க இந்த லிங்க் என்ற option பயன்படுகிறது. உதாரணமாக இங்கு "இணையப்பூங்கா" என எனது இன்னொரு வலைப்பூ தலைப்பை எழுதியுள்ளேன். இப்பொழுது நீங்கள் அந்த இணையப்பூங்கா தளத்திற்கு செல்ல அந்த வார்த்தையில் இணையப்பூங்கா வலைப்பூவின் முகவரியை இணைப்பாக கொடுத்தால் தான் அங்கு செல்ல முடியும். இப்போது இணையப்பூங்கா  என்பதை க்ளிக் செய்யுங்கள். அந்த வலைப்பக்கம் புதிய விண்டோவில் திறக்கிறதா? ஆம், லிங்க் option பயன்படுத்தியுள்ளதால் ஓபன் ஆகிறது.

லிங்க் தர என்ன செய்ய வேண்டும்?
1. லிங்க் தர வேண்டிய வார்த்தை/ வாக்கியத்தை மவுஸ் மூலம் தேர்வு செய்து கொள்ளுங்கள். வார்த்தை/வாக்கியத்திற்கு இறுதியில் மவுஸ் பாயிண்ட்டை வைத்து இடது பட்டனை அழுத்திக் கொண்டே அந்த வார்த்தை/வாக்கியத்தின் முதல் எழுத்து வரை கொண்டு சென்றால் அந்த வார்த்தை/வாக்கியம் நீல பின்புல வண்ணத்துடன் காட்டும். அப்படியெனில் வார்த்தை/வாக்கியம் தேர்வு செய்தாயிற்று என அர்த்தம். பார்க்க படம் கீழே.

2. லிங்க் என்பதை க்ளிக் செய்தால் கீழ்க்கண்ட விண்டோ ஓபன் ஆகும்.
இந்த விண்டோவில் text to display என்ற கட்டத்தில் நாம் தேர்வு செய்த வார்த்தை/வாக்கியம் காட்டும்.

3. web address என்ற கட்டத்தில் நாம் பகிர வேண்டிய தளத்தின் முகவரியை கொடுக்கவும்.

4. open this link in a new window என்ற கட்டத்தை டிக் செய்தால் அந்த லிங்க் புதிய விண்டோவில் திறக்கும். டிக் செய்யாவிட்டால் அதே விண்டோவில் திறக்கும். இதனால் பழைய விண்டோ மறைந்து விடும். எனவே புதிய விண்டோவில் திறக்குமாறு டிக் மார்க் செய்யவும். பின்னர் கீழே உள்ள ok என்பதை அழுத்தினால் நமது வார்த்தை/வாக்கியத்திற்கு லிங்க் கிடைத்து விடும். 


அடுத்து பதிவு எழுதும் பக்கத்தில் கடைசியாக இருக்கும் ஐந்து icons பற்றி பாப்போம்.
மேலே படத்தில் முதலில் இருப்பது வரிசை எண்களை தரக் கூடியது.

இரண்டாவதாக இருப்பது வரிகளுக்கு முன் bullet - புள்ளி(dot) தரக் கூடியது. பார்க்க படம் கீழே

மூன்றாவதாக இருப்பது மேற்கோள் காட்டக் கூடியது. நாம் தேர்வு செய்துள்ள டெம்ப்ளேட்க்கு ஏற்றவாறு இவை காட்டும். மேலும் இந்த மேற்கோள் அமைக்க இணையதளத்தில் நிறைய டிப்ஸ் உள்ளது. அதில் ஒன்றை நான் எனது டெம்ப்ளேட்டில் அமைத்துள்ளேன். பார்க்க இந்த பாராவை.
நான்காவதாக இருப்பது remove formating ஆகும். ஏதேனும் format-ஐ உதாரணமாக வரிசை எண்கள் கொடுத்து பின்னர் அவை தேவையில்லை எனில் இந்த வசதி மூலம் நீக்கி கொள்ளலாம்.

கடைசியாக இருப்பது spell check ஆகும். ஆங்கிலத்திற்கு மட்டுமே பயன்படும். 

நண்பர்களே, இனி பதிவு எழுதக் கூடிய பக்கத்தில் படத்தை எவ்வாறு இணைப்பது என்பது மட்டும் உள்ளது. அவற்றை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.


8 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

பல நண்பர்களுக்கு குழப்பம் உள்ள Link பற்றிய விளக்கம் பயன்படும்...

தொடர வாழ்த்துக்கள்...

Unknown said... Best Blogger Tips

அண்ணே எனக்கு அந்த புல்லெட் பத்திலாம் தெரியாது இதை படித்த பின்பு தான் அறிந்து கொண்டேன் நன்றி

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@திண்டுக்கல் தனபாலன்
பல நண்பர்களுக்கு குழப்பம் உள்ள Link பற்றிய விளக்கம் பயன்படும்...//

ஆமாம்... நிறைய நண்பர்களுக்கு இதில் குழப்பம் தான்..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@சக்கர கட்டி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சக்கரை

பூ விழி said... Best Blogger Tips

தெளிவா இருக்குங்க புரியும் படி நல்ல பொறுமை உங்களுக்கு நன்றி

சசிகலா said... Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி சகோ.

சிகரம் பாரதி said... Best Blogger Tips

வணக்கம். திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் வலைப்பதிவில் கருத்துரை இடும்போது நமது தளத்துக்கான இணைப்பை வழங்குவது எவ்வாறு என்று உதவி கேட்டிருந்தேன். அவர் இந்த இணைப்பை தந்தார். நன்றி. மற்றபடி பதிவில் உள்ளவை நான் அறிந்தவை தான். எனினும் தொடர்கிறேன் உங்களை. நமது வலைத்தளம் : சிகரம்

Abi said... Best Blogger Tips

மிக்க பயனுள்ளது மகிழ்ச்சியும் நன்றியும் சகோ

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1