வணக்கம் வலை நண்பர்களே,
இதுவரை இத்தொடர் வாயிலாக பிளாக் ஆரம்பித்து, என்னென்ன settings செய்ய வேண்டும்? பதிவுகளை எப்படி எழுதுவது? எங்கு எழுதுவது? என்றும் பார்த்தோம்.
இனி பதிவை எப்படி வெளியிடுவது என பார்ப்போமா?
இத்தொடருக்காக பதிவை வெளியிடுவதை விளக்க இணையப்பூங்கா தளத்தில் ஒரு பதிவு எழுதியுள்ளேன். அதன் விளக்க படம் கீழே.
தலைப்பு, பதிவின் சாராம்சம், குறிச்சொற்கள் ஆகியவை சரியாக கொடுக்கப்பட்ட பின்னர் தலைப்பு கட்டத்திற்கு வலப்பக்கம் Publish என்பதை க்ளிக் செய்தால் பதிவு வெளியிடப்படும்.
பதிவை வெளியிடாமல் சேமித்து வைக்க விரும்பினால் Save என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
பதிவை வெளியிடும் முன் அந்த பதிவு வலைப்பூவில் எவ்வாறு தெரியும் என்பதை முன்னோட்டமாக பார்க்க விரும்பினால் Preview என்பதை க்ளிக் செய்யவும்,
பதிவு எழுதிய பக்கத்தை மூட விரும்பினால் Close என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
அந்தப் பதிவை Publish - வெளியிட்டால் இணையப்பூங்கா தளத்தில் எவ்வாறு காட்டும் என்பதை கீழே படத்தில் பாருங்கள். நேரடியாக இணையப்பூங்கா தளத்தில் பார்க்க விரும்பினால் இங்கே க்ளிக் செய்யுங்கள்.
நண்பர்களே, பதிவை எழுதி வலைப்பூவில் எவ்வாறு வெளியிடுவது என பார்த்தோம். இந்த பத்தாவது தொடர் வரை நீங்கள் தொடர்ந்து வாசித்து அதன்படி செய்தால் உங்களாலும் புதிய வலைப்பூ துவங்கி பதிவுகளை வெளியிட முடியும். இந்த தொடர் இதோடு முடிந்து விடவில்லை. இன்னும் தொடர்ந்து எழுத நிறைய விஷயங்கள் உள்ளன. எனவே இத்தொடர் இன்னும் வளரும்.
ஒவ்வொரு
பகுதியாக, முடிந்தளவு கூடுதல் விளக்கங்கள் பகிர விரும்புவதால் சில
விஷயங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். மேலும் விளக்கம் தேவையெனில்
எனது மின்னஞ்சலை admin@tamilvaasi.com தொடர்பு கொள்ளவும்.
முந்தைய பாகங்களுக்கு இங்கே அழுத்துங்கள்.
முந்தைய பாகங்களுக்கு இங்கே அழுத்துங்கள்.
10 கருத்துரைகள்:
சிறப்பாக தொகுத்து வரும் இந்த விளக்கத்தொடர் இன்னும் தொடரவேண்டும் .
மேலும் தொடர வேண்டும்... வாழ்த்துக்கள்...
தொடருங்கள் நன்றி (முக்கியாமா புரியாதவங்க மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு கேட்கலாம் என்று ஒருஒரு தடவையும் கொடுரீங்க பாருங்க அது தான் சூப்பர் அதுக்கு தனியாக சிறப்பு நன்றி )
அன்பின் தமிழ்வாசிக்கு. பதிவுகளுக்கு நன்றி. எனக்குப் புரியாததும் விளங்காததும் எதிர்படும்போது மின் அஞ்சலில் அணுகுவேன். மேலும் தொடர வாழ்த்துக்கள்.
@தனிமரம்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நேசன்..
@திண்டுக்கல் தனபாலன்
கண்டிப்பாக சார்... இன்னும் தொடரும்
@poovizi
சரியாக சொன்னீர்கள் பூவிழி...
சந்தேகம் கண்டிப்பாக வரும். அதற்காக தான் மெயில் ஐடி..
@G.M Balasubramaniam
கண்டிப்பாக கேளுங்கள் ஐயா... காத்திருக்கிறேன்.
admin@tamilvaasi.com க்குஎழுதியுள்ளேன். என் கடைசிப் பதிவைப் பார்த்தால் இன்னும் விளங்கலாம்
@G.M Balasubramaniam
ஐயா, பதில் மெயில் அனுப்பியுள்ளேன். பாருங்கள்.