வணக்கம் வலை நண்பர்களே,
இத்தொடரில் இதுவரை வலைப்பூ துவங்கி பதிவுகளை எழுதி வெளியிடுவது எப்படி என பார்த்தோம். இனி, வலைப்பூவிற்கு மிக முக்கியமான Template, Layout settings பற்றி பாப்போம்.
Template:
மேலே இணைக்கப்பட்டுள்ள template settings படத்தில் சில இடங்களில் 1, 2, 3, 4 என எண்களை வட்டமிட்டு காட்டியுள்ளேன். அதில்,
1 என்பது Customize நமது template அமைப்பில் சில மாற்றங்கள் செய்யலாம்.
2 என்பது வலைப்பூவின் HTML settings-இல் தேவையான மாற்றங்களை செய்யலாம்.
3 என்பது வலைப்பூவை mobile view-க்கு மாற்ற பயன்படும் settings ஆகும்.
4 என்பது வலைப்பூவின் html settings அனைத்தையும் backup எடுக்க பயன்படும்.
Backup/Restore:
நமது வலைப்பூ html settings-ஐ கண்டிப்பாக கணினியில் சேமித்து (BACKUP) வைக்க வேண்டும். HTML - இல் ஏதேனும் மாற்றங்கள் செய்யும் போது தவறு நேர்ந்து விட்டால், கணினியில் சேமித்த BACKUP file மூலம் திரும்ப மீட்டு விடலாம்.
Backup செய்வது எப்படி?
மேலே படத்தில் download full template என்பதை அழுத்தி நமது கணினியில் சேமித்து வைக்கலாம்.
Restore செய்வது எப்படி?
டெம்ப்ளேட் மாற்றத்தின் போது தவறு நேர்ந்தால் ஏற்கனவே சேமித்து வைத்த backup file-ஐ மீட்டெடுக்க Browse என்பதை க்ளிக் செய்து கணினியிலிருந்து தேர்வு செய்து upload தர வேண்டும். அவ்வளவு தான்...
அடுத்து மேலே முதல் படத்தில் எண் மூன்று கொடுத்திருக்கும் mobile view பற்றி பாப்போம்.
கம்ப்யூட்டரில் நமது வலைப்பூ நாம் தேர்வு செய்துள்ள டெம்ப்ளேட்-ன் படி அழகாக காட்டும். ஆனால் மொபைலில் வலைப்பூ டெம்ப்ளேட்-இல் பார்க்கும் போது பதிவுகளை வாசிக்க சற்று சிரமாக இருக்கும். ஆதலால், மொபைலில் வலைப்பூவை பார்க்க தனியே மொபைல் வியு என ஒரு வசதி உள்ளது. அந்த வசதியை நாம் தேர்வு செய்தால், மொபைலில் பதிவுகள் மட்டும் தனித்து, வாசிக்க எளிமையாக இருக்கும்.
mobile view activate செய்வது எப்படி?
டெம்ப்ளேட், மொபைல் பகுதியில் சக்கரம் போன்ற ஐகானை க்ளிக் செய்தால் மேலே படத்தில் உள்ளது போல ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் yes, show mobile themplate on mobile devices என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், மொபைலுக்கு என்றே சில டெம்ப்ளேட் உள்ளது, அவற்றில் உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து கொள்ளவும். பின்னர், Save என்பதை க்ளிக் செய்தால் போதும்.
மேலே படத்தில், வலைப்பக்கம் இருக்கும் View மொபைல் View ஆகும். இடப்பக்கம் இருப்பது Desktop view(normal view).
ஒவ்வொரு
பகுதியாக, முடிந்தளவு கூடுதல் விளக்கங்கள் பகிர விரும்புவதால் சில
விஷயங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். மேலும் விளக்கம் தேவையெனில்
எனது மின்னஞ்சலை admin@tamilvaasi.com தொடர்பு கொள்ளவும்.
முந்தைய பாகங்களுக்கு இங்கே அழுத்துங்கள்.
முந்தைய பாகங்களுக்கு இங்கே அழுத்துங்கள்.
6 கருத்துரைகள்:
விளக்கம் பலருக்கும் மிகவும் உதவும்...
நான் பிளாகர் தந்த டெம்பிளேட்டிற்கு பதிலாக வேறு ஒரு தளத்திலிருந்து தரவிறக்கிய டெம்பிளேட்டை பயன்படுத்துகின்றேன்.அந்த டெம்பிளேட்டுக்கு தமிழ்மணம்,தமிழ் 10 ஓட்டுப்பட்டைகளை இணைக்க முடியாதுள்ளது.அவற்றை இணைக்க என்ன செய்யலாம்
@திண்டுக்கல் தனபாலன்
விளக்கம் பலருக்கும் மிகவும் உதவும்...//
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..
@S.டினேஷ்சாந்த்
நான் பிளாகர் தந்த டெம்பிளேட்டிற்கு பதிலாக வேறு ஒரு தளத்திலிருந்து தரவிறக்கிய டெம்பிளேட்டை பயன்படுத்துகின்றேன்.அந்த டெம்பிளேட்டுக்கு தமிழ்மணம்,தமிழ் 10 ஓட்டுப்பட்டைகளை இணைக்க முடியாதுள்ளது.அவற்றை இணைக்க என்ன செய்யலாம்/////
http://www.tamilvaasi.com/2012/05/vote-buttons-version-2.html
மேற்கண்ட லிங்க்-கை பயன்படுத்தி பாருங்கள்.
நல்லதொரு விளக்கமான பதிவு! புதியவர்கள் பலருக்கும் பயன்படும்! பழையவர்களின் சந்தேகங்களும் தீரும்! அருமையான பகிர்வுக்கு நன்றி!
முக்கியமான இடத்திற்கு வந்தாச்சி............... படித்தேன் ,படிப்பேன் நன்றி விளக்கத்திற்கு