வணக்கம் வலை நண்பர்களே,
நாம் அனைவரும் ஒன்று கூடி நமது நட்புறவை மேலும் வளர்க்க, முகமறியா பதிவர்களுக்கு ஒரு பாலமாக, கருத்துக்களை பரிமாற்றிக் கொள்ளும் மேடையாக உள்ள பதிவர் திருவிழா வருகிற செப்டம்பர் முதல் தேதி(01-09-2013) சென்னை - இசைக் கலைஞர்கள் சங்க மகாலில் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான நிகழ்ச்சிநிரல் மற்றும் அழைப்பிதழ் தயாராகி உள்ளது. பதிவுலக நண்பர்கள் அனைவரையும், தவறாது கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துத் தரும்படி இந்த அழைப்பிதழ் மூலமாக அழைக்கின்றோம்.
இதுவரை விழாவில் கலந்து கொள்ள வருகையை தெரிவிக்காமல் இருப்பவர்கள், விரைவில் தங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பதிவர்கள் தெரிவிக்க வேண்டிய விபரங்கள்:
1. வலைப்பூ பெயர், முகவரி ( blog name & blog url address)
2. தொடர்பு மின்னஞ்சல் முகவரி,
3. தொலைபேசி எண்,
4. ஊர் பெயர்,
எனது மின்னஞ்சல்: thaiprakash1@gmail.com
பதிவர்களே, உங்களது தனித்திறமையை காட்ட விழா மேடை தயாராக உள்ளது. அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது, உங்களது தனித்திறமை பற்றி இரண்டு வரியில் சுருக்கமாக மின்னஞ்சல் அனுப்புங்கள். அப்போது தான், உங்களுக்கான நேரம் ஒதுக்க முடியும்.
பதிவர்களே, ரெடியா????
18 கருத்துரைகள்:
நான் ரெடி... அட நீங்க ரெடியா :-))))))))
ரைட்டு... அசத்திடுவோம்...!
அழைப்பிதழே அட்டகாசமாக உள்ளது...விழா சிறக்க வாழ்த்துகள் !
All the best.
கலக்கலாக நடைபெற வாழ்த்துககள்
விழா சிறக்க வாழ்த்துகள்
ச்கூல் பையன் பாட்டு பாட போறாராம். நீங்க டான்ஸ் ஆடுங்க பிரகாஷ்!!
அடியுங்க அடியுங்க பிளைற் ரிக்கற் காசு மிஞ்சும் நாங்க ஓசியிலேயே
அங்கின வந்து விழுவோம் :)))) வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எலோரும்
ஒன்று கூடி கும்மியடித்து விழாவைச் சிறப்புற செய்யட்டும் .
விழா சிறக்க வாழ்த்துகள் !
தனிமரம் said...
விழா சிறக்க வாழ்த்துகள் !
இப்படின்னு சொல்லிட்டு தனிமரம் தோப்புக்குள்ளேவரமாட்டார் போலிருக்கே ...அவரை விடாதீங்க பிரகாஷ் !உங்க டான்ஸ்சை காண நானும் வர்றேன் !
ஸ்பை பாட்டுக்குத் தவாபி டான்ஸா?!
சூப்பரப்பு!
சென்னையில் சந்திப்போம்....
போனமுறை சந்திக்காத பல பதிவர்களை இந்த முறை சந்திக்கக் காத்திருக்கிறேன்.
எனது சிறிய வேண்டுகோள்: எங்கள் வீட்டில் ஒரு திருமணம் அன்று. அதனால் மதியத்திற்கு மேல் தான் வரமுடியும். அங்கு வரும் அத்தனை பதிவர்களையும் எனக்காக தயவு செய்து அங்கேயே - பாதியில் வீட்டிற்குத் திரும்பிவிடாமல் - இருக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். ஒவ்வொருவருடனும் பேச ஆசை.
அன்பின் பிரகாஷ் - ராஜியின் விருப்பத்தினை நிறைவேற்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிவர்கள் மட்டுமே வரலாம்.மற்றவர்கள் வர முடியாதா?
விழா சிறக்க வாழ்த்துகள்
விழா சிறக்க வாழ்த்துகள்