வணக்கம் வலை நண்பர்களே,
கடந்த ஞாயிறு(01-09-2013) அன்று சென்னையில் பதிவுலக நண்பர்களால் பதிவர் சந்திப்பு மிக பிரம்மாண்டமாக நடந்தது. சந்திப்பு பற்றிய பதிவுகள் நிறைய நண்பர்களால் எழுதப்பட்டு வரும் இவ்வேளையில், சந்திப்பு பற்றிய என் முதல் பதிவாக, பிற்பகல் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர் திரு. கண்மணி குணசேகரன் அவர்களின் பேச்சிலிருந்து ஆரம்பிக்கிறேன். தனது கணீர் குரலில் பல்வேறு குட்டிக்கதைகள் சொல்லி, நகைச்சுவை ததும்ப பேசிய, அவர் சொன்ன சிறுகதைகளில் என் நினைவில் நின்ற கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
இரவு நேரம்... அந்த வீட்டில் ஒரு தம்பதி இருக்கிறார்கள்.
அவர்களுக்குள் சிறு வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது...
கணவன் பேசிக் கொண்டே மனைவி முந்தானையை இழுக்கிறான். அவளோ அவன் கையை தட்டி முந்தானையை பிடுங்குகிறாள்... இவன் மறுபடியும் முந்தானையை இழுக்கிறான்... அவளோ மறுபடியும் அவனைத் தட்டி விட்டு முந்தானையை பிடுங்குகிறாள்.. அவனாலும் முந்தானை இழுப்பதை நிறுத்த முடியவில்லை. அவளும் அவனுக்கு இடம் தரவில்லை. இப்படியே கொஞ்ச நேரம் அவர்களுக்குள் முந்தானைப் போராட்டம் நடந்தது.
சிறிது நேரத்தில் பொறுமையை தொலைத்த அவள் "இந்தா பிடி.. நான் எவ்வளவு சொல்லியும் நீ திருந்த மாட்ட" என சொல்லியபடி அவனுக்கு ஒரு சிகரெட்டை தருகிறாள்.
அவனைத் திருத்த முயற்சிக்கும் மனைவி, தனது முயற்சியில் தோற்கிறாள் என்பதை உணர்த்துகிறது அவரது இச்சிறுகதை
நண்பர்களே, என்ன கதை பிடித்திருக்கிறதா? இது மாதிரியான எதார்த்த சம்பவங்களை கருவாக எடுத்து கதை சொல்வதே திரு. கண்மணி குணசேகரனின் சிறப்பு.
திரு. கண்மணி குணசேகரன் பற்றி அறிந்து கொள்ள இங்கே கிளிக்குங்கள்.
பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகள், புகைப்படங்கள் இன்னும் வரும்.
16 கருத்துரைகள்:
நாங்க்லாம் பார்ட் 1, பார்ட் 2ன்னு பதிவு போடலாம்ன்னு இருக்கோம். நீங்க ஒரு பதிவருக்கு ஒரு போஸ்ட்ன்னு போடுவீங்க போல!!
@ராஜி
ஆமா.. கரெக்டா சொன்னிங்க உங்களுக்கு மட்டும் தனி பதிவு இருக்கு..
// பதிவர் சந்திப்பு மிக பிரம்மாண்டமாக நடந்தது. சந்திப்பு பற்றிய பதிவுகள் நிறைய நண்பர்களால் எழுதப்பட்டு வரும் இவ்வேளையில், //
இன்னும் யாரும் விரிவாக செய்தியாக எழுதவில்லை. எழுதியவர்களுக்கும் இன்னும் திருவிழா மயக்கம் தீரவில்லை.
// பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகள், புகைப்படங்கள் இன்னும் வரும். //
நேரடி ஒளிபரப்பு ஏமாற்றமாகி விட்டது. எனவே விரிவாக விரைவாக படங்களுடன் சென்னையில் நடைபெற்ற தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா பற்றி எழுதவும்.
வாழ்த்துகள் பிரகாஷ்.
யதார்த்த கதைகள் மூலம் சொன்னது அவரின் சிறப்பு...
மற்ற பகுதிகள் பற்றிய பதிவுகளையும் புகைப்படங்களையும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
சிறப்பாக ஆரம்பித்தார்! நிறுத்தாமல் தொடர்ந்து பேசினார்.முதலில் சுவாரஸ்யம்! பின்னர் அலுத்துவிட்டது! பகிர்வுக்கு நன்றி!
எல்லாம் விவரமா தான் இருக்கிங்க.. எங்காவது படங்களை சுடலாம் என்று பார்த்தால் யாரும் போடுவதாக தெரியவில்லை.
நான் குணசேகரன் பேசியபோது அரங்கில் இல்லை. ஆனால் நண்பர் சுரேஷ் கூறியதுபோன்றே இன்னும் சிலரும் அவருடைய பேச்சு அளவுக்கு மீறி சென்றுவிட்டது போலிருக்கிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே!
அன்பின் பிரகாஷ் - தகவல் மற்றும் புகைபபடஙகள் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
தொடருங்கள் தோழரே
நல்ல கதை..!!!
நல்ல கதை..!
கதை அருமை சூப்பர் அண்ணே
நாலு வரிக்கதை நச்சுனு இருந்தது...இன்னும் நிறைய பதிவுகள் புகைப்படத்துடன் போடவும்...
பதிவர் சந்திப்பை இணையம் வழி பார்க்க முயற்சித்தேன். வீடியோ கிளியராக இருந்தது ஆடியோ வரவேயில்லை... யார் என்ன பேசுகிறார்கள் என்பதே தெரியவில்லை.... அதை யாருமே கவனிக்க வில்லையா....?