
கபாலி பாட்டெல்லாம் கேட்டாச்சு...
சூப்பர் ஸ்டார் ரஜினி இளம் இயக்குனர் பா. ரஞ்சித் இணைந்து கலக்க வரும் படம் கபாலி. ரஜினி டாணாக நடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் பாடல்கள் மிக எளிமையாக நேற்று வெளியிடப்பட்டது.
ஏற்கனவே கபாலி டீசர் பல சாதனைகளை தகர்த்தெறிந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான், அதே போல கபாலி பாடல்கள் சாதனைகளை தகர்க்குமா?
கபாலி பாடல்கள் பற்றிய என் கருத்து இங்கே:
முதல்லே சொல்லிருறேன்... சந்தோஷ் நாராயணன் ரஜினிக்காக ஸ்பெஷலாக எதுவுமே செய்யல...
.
மொத்தம் அஞ்சு பாட்டு...
மாயநந்தி:
ஆண்/ பெண் வாய்ஸ் மெலோடியாக வருது. ரெண்டுதரம் கேட்டாச்சு.. ஆனா மனசுக்கு பிடிக்கல... ஒருவேளை படத்துல பார்த்ததுக்கு அப்புறம் பிடிக்கும்னு நினைக்கிறேன்..
.
நெருப்புடா:
ஏற்கனவே டீசரில் பலமுறை கேட்ட தீம் என்பதால் மனசில் லேசா ஒட்டுது... ரஜினி வாய்ஸ் அவ்வப்போது வருகிறது. இதற்கு மட்டுமே மகிழ்ச்சி...
.
உலகம் ஒருவனுக்காக:
டான் ரஜினிக்காக, ரசிகர்களுக்காக இந்தப் பாடல் மட்டுமே.. முதல்முறை கேட்டவுடனே பிடித்து விட்டது. ஆனால், இசை புதுமையா இல்லாதது மட்டுமே குறை..
.

வானம் பார்த்தேன்:
சோக மேலோடி... இந்தப் பாட்டு படத்துல அங்க அங்க காட்சிக்கு இசைக்கு பதிலா வரும்னு நினைக்கிறேன்.
அப்படி இல்லாம, முழுப் பாடலா வந்தா தியேட்டர்ல சிகரெட் விற்பனை பிச்சிக்கிரும்...
.
வீர துறந்தாரா:
கேட்க நல்லாஇருக்கு... கபாலியாக மிஷன் செய்யும் காட்சிகளுக்கு பின்புல பாட்டாக வரும்னு நினைக்கிறேன்..
.
மொத்தத்தில் கபாலி பாடல்கள் சந்தோஷ் நாராயணின் டெம்ப்ளேட் வகையை சார்ந்ததாக உள்ளது. ரஜினி டெம்ப்ளேட் கொஞ்சம் கூட இல்லை...
4 கருத்துரைகள்:
இன்னும் கேட்கவில்லை. கேட்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு.
இன்னும் கேட்கவில்லை. ஆனால் இப்பதிவு ஆவலைத் தூண்டுகின்றது
இன்னும் கேட்கவில்லை.
நெருப்பு சார் .... ethilumpudhumai.blogspot.in