
அதாகப்பட்டது:
இதுவரை சினிமாவை விமர்சனம் செய்கிறேன் என சிலப் பல படங்களை, நடிகர்களை ஜீம்பூம்பாவாக்கிய பெருமை வாய்ந்த நண்பர், பதிவர் செங்கோவி அவர்களின் முதல் கன்னி முயற்சி இந்த ஜீம்பூம்பா குறும்படம்.
.
அதுவும் சினிமாவிற்குள் எந்த விதத்திலும் உள் நுழைய தமக்கென தகுதித் தேர்வுகள் நடத்தி அதில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற குறிக்கோளை அடிக்கடி சொல்லும் செங்கோவி, தனது முதல் தேர்வை நம் முன் படைத்துள்ளார். அதில் தேறியுள்ளாரா? பார்ப்போம்...
.
ஒரு ஊர்ல:
திரைப்படங்களின் முன்னோடி மௌனப்படம். அதன் பிறகே வசனங்கள் இணைந்த படங்கள் வெளிவந்தது. அது போலவே தனது முதல் படியை மௌனப்படமாக வைத்துள்ளார் செங்கோவி.
.
உரிச்சா:
படத்தின் மொத்த நீளம் ஆறு நிமிடங்கள் என்பதும் யுடுப் லிங்க் டைட்டிலில் Thriller with Funny Moments என இருந்ததும் காரணம். அப்படி என்ன திரில்லர் funny இருக்குனு பார்த்தா பொறந்த நாளுக்கு தலைல வைக்கற பப்பூன் தொப்பியை வச்சு படம் காட்டியுள்ளார். நாயகி கையில் கிடைக்கும் தொப்பி, சில பொருட்களை மறைத்து விடுகிறது என்ற கான்செப்ட் தான் திரில்லர்.
.
நாயகி ஹரிணி:
ஹரிணி மாடலிங் கேர்ள் என்பதால் மேக்கப் சற்று தூக்கலாக தெரிந்தாலும் கண்ணை உறுத்தவில்லை. மாறாக நம் கண்களை கவர்கிறார். என் பார்வைக்கு ஏற்கனவே ஹரிணியை செங்கோவி காட்டியிருந்ததால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அட, நெசமா.. நம்புங்க... அஞ்சு நிமிசமும் ஹரிணியை சுற்றி வந்ததில், அஞ்சு நிமிசமும் அஞ்சு நொடியில் பாஸ்ட்டா போயிருச்சு... அடுத்த படத்திலும் ஹரிணிக்கே வாய்ப்பு தருமாறு இயக்குனரை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
.
இயக்குனர் செங்கோவி:
செங்கோவி தனது சினிமா பயணத்தை கதை, திரைக்கதை, வசனம் என்ற மட்டிலுமே பயணிப்பார் (மன்மதன் லீலைகள் படித்த பாதிப்பு) என்ற எனது எண்ணத்தை பொய்யாக்கி இயக்குனராகவும் பயணித்துள்ளார். இப்படித்தான் கதை என்பதை தீர்க்கமாக முடிவு செய்து, களமிறங்கியிருப்பதால் சொதப்பல் இல்லாமல் இருக்கிறது.
.
வெறும் ஆறு நிமிச படத்தில் அப்படி என்ன சொதப்பல் வந்திரும்னு நினைக்கறிங்களா? நாமளே, மொபைல்ல ஒரு போட்டோவை ஓகே செய்ய அடுத்தடுத்து எத்தனை க்ளிக் பண்றோம்??? அதான் காட்சி சொதப்பல் இல்லை. ஆனாலும் சில குறைகள் உள்ளது. என்னான்னு அடுத்து சொல்றேன்.
.
ஒளிப்பதிவாளர் செங்கோவி:
எனக்கு படத்துல ரொம்ப பிடிச்சதே கேமரா கோணங்கள் தான். சில இடங்களில் லைட்டிங் குறைவா தெரிஞ்சாலும் ஒரு அறைக்குள்ளான லைட்டிங் அப்படித்தான் இருக்கும்னு தேத்திக்கலாம்... மாடியில் இருந்து தொப்பி விழும் காட்சியும், பறவையை மூடும் காட்சியும் மிக இயல்பாக வந்திருக்கிறது.
.
ம்ம்ம்... அப்புறமா, கிளைமாக்ஸ் இரவு காட்சிகளில் மட்டுமே ஒளிப்பதிவில் சற்று சறுக்கல். லைட்டிங் சரியாக இல்லாமல் காட்சி கிளாரிட்டி குறைவாக உள்ளது. சிறிது மெனக்கட்டிருக்கலாம்.
.
எடிட்டர் செங்கோவி:
பத்து நிமிசத்துக்கும் சற்றே நீளமான படத்தை 6:50 நிமிடங்களில், சொல்ல வந்ததை குழப்பமில்லாமல் கத்தரித்து சுருக்கியுள்ளார் எடிட்டர்.
.
இசை:
வாவ், செம...
மௌனப்படத்திற்கு இசை மிகவும் முக்கியம். அதுவும் உறுத்தாத வகையில் இருக்க வேண்டும். அதோடு திரில்லர் படத்திற்கான எபெக்ட்ஸ் அவசியம். அதை ஜோஸ் பிராங்க்ளின் அருமையாக செய்துள்ளார்.
.
நெடுநெல்வாடை எனும் புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் அவர் தான். வாழ்த்துக்கள் ஜோஸ்.
.
குருவின் வழியில் டெக்னிகல் குறியீடு:
- ஹரிணி டிவியை ஆன் செய்கையில் ஹிட்ச்காக் படமான the birds ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் குறியீடு எதற்காக என்பதை விளக்கவும். அதற்காக அந்த படத்தை முழுசா பாருங்கன்னு சொல்லக் கூடாது செங்கோவி.
.
- ஜீம்பூம்பா தொப்பியை ஹரிணி மேசையில் வைக்கும் போது தொப்பியின் முகம் பின்னால் இருக்கும். அதற்கு அடுத்த காட்சியில் முகம் ஹரிணியை பார்த்தவாறு இருக்கும். அதே போல கிளைமாக்ஸில் பின்பக்கமாக இருக்கும் முகம் சிறுவனை பார்க்க தானாக திரும்பும். இந்தக் குறியீடுகள், மனிதர்களை ஜீம்பூம்பா தேடுகிறது என்பதற்காகத்தான் போல..
.
- மாமியை ஏன் ஜீம்பூம்பா மறைக்கவில்லை என்பதை அந்த சிறு கார் பொம்மை காட்சியை குறியீடாக வைத்துள்ளார். ஆம், எப்படியெனில், அந்த தொப்பி ஒரு பொருளை முழுமையாக மூடினால் மட்டுமே, அப்பொருளை மறைக்கும். இல்லா விட்டால் மறைக்காது. அதற்கு இன்னோர் உதாரணம் கார் மீது உட்கார்ந்திருக்கும் பறவை மறைவது. மாறாக, உயிருள்ள, உயிரற்ற என்ற பாகுபாடெல்லாம் ஜீம்பூம்பா தொப்பிக்கு கிடையாது.
.
நெகட்டிவ் பாயிண்ட்ஸ்:
ஜீம்பூம்பா டைட்டிலை ஆங்கிலத்தில் வைத்தது.
.
ஹரிணி இன்ட்ரோ காட்சியில் கேமராவைப் பார்த்து லேசாக தலையாட்டிய படி நடந்து வருவது. அதை இயக்குனர் கவனிக்க தவறி விட்டாரா?
.
ஹரிணி கதவை திறந்து மூடும் கட் காட்சிகள் சினிமாவிற்கே உரிய அரத பழசு. புதுசா யோசிச்சிருக்கலாம்.
.
லிப்ட்டில் கண்ணை உருட்டும் மாமி சிரிப்பை அடக்கிட்டு இருக்காங்க. இன்னும் ரெண்டு டேக் போயிருக்கலாம்.
.
கடைசி கிளைமாக்ஸா அது. இன்னும் சில நொடிகள் சேர்த்து எதாவது திகிலா காட்டியிருக்கலாம். பசக்குன்னு முடிஞ்சிருச்சு.
.
பாசிட்டிவ் பாயிண்ட்ஸ்:
ஹிட்ச்காக் வழியில் காட்சி குறியீடுகள் வைத்தது. அவர் படத்தில் நன்கு கவனித்தோமானால் கிட்டத்தட்ட எல்லா காட்சிகளுமே குறியீடாக இருக்கும் என்பதற்காக the birds படத்தை டிவியில் ஓட விட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.
.
மேலே சொன்னது போல கேமரா கோணங்கள் செம. செங்கோவி படிச்ச புத்தகங்கள் சிறந்த வழிகாட்டியாய் இருந்திருக்கிறது.
.
இயக்குனராகவும், எடிட்டராகவும் கதை சொல்கிறேன் பேர்வழி என தேவையில்லாத காட்சிகள் இல்லாதது நிறைவு.
.
மௌனப் படமாக இருந்தாலும், வசனம் இல்லையே என நாம் நினைக்க முடியாதபடி தெளிவான காட்சியமைப்புகள். அருமை செங்கோவி..
.
பார்க்கலாமா:
கண்டிப்பாக பார்க்கலாம்.
.
தனது முதல் தேர்வில் நூறு மார்க் அளவிற்கு இல்லாட்டியும் பர்ஸ்ட் கிளாஸில் பாசாகியுள்ளார் செங்கோவி. மேலும் சிறந்த படைப்புகள் படைத்து தனது கனவை நனவாக்க வாழ்த்துக்கள் செங்கோவி..
2 கருத்துரைகள்:
இந்தக் கதையின் விமைசனத்தைப் படிக்க வில்லை என்றால் கதையில் சொல்ல வந்தது புரியுமா சந்தேகமே
முதல் முயற்சி...
இனி வரும் அடுத்தடுத்த படைப்புக்களில் சிறப்பான இடத்தைப் பிடிக்க செங்கோவியை வாழ்த்துவோம்...
நண்பர் என்பதற்காக ஆஹா... ஒஹோன்னு புகழாமல் நெகட்டிவ் பாயிண்ட்ஸ் சொன்னது சிறப்பு...
அந்த மாமி வர்ற சீனில் எல்லாம் அவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை... முதல் காட்சியில் ஓவர் மேக்கப் நாயகி தலையாட்டிச் செல்வது... வீட்டுக்குள் நுழைந்த பின்னர் கதவைத் தட்டுவது... குட்டிப் பையன் பபூன் தொப்பி பார்த்தும் வராமல் இருப்பானா என்ற யோசனை என நிறைய சொதப்பல்ஸ் தெரிந்தாலும் செங்கோவியின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
அடுத்த படைப்பில் கலக்குங்க நண்பா...