CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



வோடாபோன் வாடிக்கையாளரின் குமுறல்கள்

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
சேவையாளர்:  சார்...சார்...

வாடிக்கையாளர்:  சொல்லுங்க.. உங்களுக்கு என்ன வேணும்?


சேவையாளர்:  இங்க (.. பெயர்...) யாருங்க? அவர்கிட்ட பேசணும்..

வாடிக்கையாளர்:  நான் தான் (..பெயர்...)  என்ன விசயமா பேசணும்?

சேவையாளர்:  சார்... நாங்க வோடாபோன் சேவையாளர் மையத்திலிருந்து வர்றோம்... நீங்க, வோடாபோன் தானே யூஸ் பண்றீங்க,, அதான் சேவை எப்படியிருக்குன்னு கேட்க வந்திருக்கோம்.. சொல்லுங்க சார், வோடாபோன் ஆபெர்கள் உங்களுக்கு பிடிச்சிருக்கா?

வாடிக்கையாளர்:  என்ன சார் ஆபர் போடுறிங்க? ஒரு புல் டாக்டைம் ஆபர் இருக்கா? சுத்த வேஷ்டுங்க...


சேவையாளர்:  சார்.. அதான் 200 , 300   க்கு புல் டாக்டைம் ஆபர் போடுறோமே ...

வாடிக்கையாளர்:  போடுறிங்க சரி.. ஆனா 100 க்கு கீழே ஏதாவது ஆபர் போடுறிங்களா... எங்க சொல்லுங்க... விடியோகானை  எடுத்துக்கங்க... 45 க்கு 55 , 62 க்கு 62 . இன்னும் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்... நீங்களும் உங்க ஆபரும்...

சேவையாளர்:  ஆபர் பத்தின sms நிறைய போடுறோமே, அதுல பாருங்க சார்...

வாடிக்கையாளர்:  ஆமா, ஆபர் பத்தி என்ன sms போடுறிங்க? வெறும் விளம்பரமா தான் போடுறிங்க.. மத்த மொபைல் சேவைய பாருங்க... நிறைய ஆபர் போடுறாங்க... டிவில அந்த பொம்மைக்குட்டி விளம்பரம் போடுறீங்களே? அதுல எந்த இடத்திலாவது இந்த சேவை இலவசம், அந்த சேவை இலவசம்னு போடுறீங்களா? இல்லை... எல்லாம் பிரயோஜனம் இல்லாத காசை பிடுங்கிற விளம்பரமாத் தான் போடுறீங்க.


சேவையாளர்:   சரிங்க சார், உங்க கருத்தை நோட் பண்ணிகறேன்..

வாடிக்கையாளர்:  நல்லா, நல்லா நோட் பண்ணிக்கங்க.

சேவையாளர்:  கவரேஜ் எப்படி சார் இருக்குது? அத பத்தி சொல்லுங்க...

வாடிக்கையாளர்:  வொர்ஷ்ட்டான கவரேஜ் சார்.. இதோ இப்ப நாம ரெண்டு பெரும் இங்க தான் நின்னிக்கிட்டு இருக்கோம். அதோ அங்க தெரியுது பாருங்க அதான் உங்க டவர்.
 எனக்கு கால் பண்ணுங்க.. கால் வந்துச்சுன்னா, இதோ என் பாக்கெட்டுல இப்ப 200 ரூபா இருக்கு, கால் வந்திருச்சுன்னா 200 ரூபா  பெட்டு, என்ன கால் பண்றீங்களா?

சேவையாளர்:  சார், பெட்டேல்லாம் வேணாம்... கால் பண்றேன் சார், கண்டிப்பா கால் வரும். ( கால் பண்ணுகிறார்)

வாடிக்கையாளர்:  என்ன சார்.. குக்..குக்..குக்...குகுன்னு சத்தம் மட்டும் வருதா?

சேவையாளர்:  அமாம் சார்..


வாடிக்கையாளர்:  இப்ப, வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கார்ன்னு சொல்றாங்களா? இதே தொல்ல தான் நான் எங்க போனாலும்? வேலை செயற இடத்துலயும் டவர் கிடைக்காது, வெளியூருக்கு போற பக்கமும் டவர் கிடைக்காது.. இதோ இப்ப வீட்டுலயும் டவர் கிடைக்க மாட்டேன்கிறது. சார்... வீடியோகான் நம்பருக்கு போன் பண்ணுங்க... உடனே எடுக்கும்.

சேவையாளர்:  சரிங்க சார், பரவாயில்ல... உங்க கம்ப்ளைன்ட்ட எழுதிக்கறேன்...

வாடிக்கையாளர்:   எழுதுங்க...எழுதுங்க... நல்லா எழுதிக்குங்க...அப்புறம் ஒரு விஷயம் சார்...

சேவையாளர்:   சொல்லுங்க என்ன விஷயம்?

வாடிக்கையாளர்:    குறுகிய காலத்தில் வோடாபோன் மக்கள் மனசுல இடம் பிடிச்சுசு... ஆனா இப்ப மக்கள் இப்ப வெறுக்க ஆரம்பிச்சுட்டாங்க...கொஞ்ச சில மாசத்துக்கு முன்னாடி, சம்பந்தமே இல்லாம இன்கமிங், அவுட்கோயிங் கால்களை கட் பண்ணிட்டிங்க, எனக்கு மட்டும் இல்லை... நெறைய பேருக்கு இந்த நிலைமை தான்.. என்னான்னு கஸ்டமர்கேர்ல விசாரிச்சதுக்கு, உங்களோட புரூப்  மறு பதிவு செய்ய வேண்டியிருக்கு, உடனே அருகில் உள்ள வோடபோன் ஆபீசுக்கு புரூப் எடுத்துட்டு போய் பதிவு செய்ங்க.. அப்ப தான் மொபைல் இயங்கும்னு சொன்னாங்க. சரின்னு, புரூப் எடுத்துட்டு ஆபீசுக்கு போனா கூட்டம் அல மோதிச்சு... ஆனா அங்க, என்ன சொன்னாங்கன்னா? பக்கத்துல இருக்குற ஒரு மண்டபத்துக்கு போங்க.. அங்கதான் பதியராங்கன்னு சொன்னாங்க..  வேற எந்த மொபைல் நிறுவனமும் இப்படி தொல்ல கொடுக்குறது இல்லை... இப்படி வோடாபோனை வச்சிக்கிட்டு நான் ரொம்ப இம்சை படறேன்... அதனால, நம்பர மாத்த முடியாது.. சுமார் நாலஞ்சு வருசமா வச்சிருக்கேன். வேற மொபைல் வசதிக்கு மாற போறேன்...

சேவையாளர்:  சரிங்க சார்.. உங்க ஆதங்கத்தை புரிஞ்சுக்க முடியுது. வேற எந்த நிறுவனத்திற்கு மாற போறிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? 

வாடிக்கையாளர்: அத எதுக்குங்க கேக்குறிங்க... உங்க சேவையில இருக்க மாட்டேன் போதுமா?

சேவையாளர்: சரிங்க சார்.. நீங்க சொல்ல வேணாம்... இதுவரைக்கும் நீங்க சொன்னத என் கம்ப்ளைன்ட் நோட்டுல எழுதிக்கிட்டேன்...  இதுல கையெழுத்து போட முடியுமா?

வாடிக்கையாளர்:  எத்தனை கையெழுத்து போடணும்? எங்க போடணும்? நான் ரெடி சார்.

சேவையாளர்:  சார், கையெழுத்து போட்டதுக்கு நன்றி...சார்... அப்ப நான் கிழம்பறேன்...

வாடிக்கையாளர்: ம்..ம்....ம்...

நண்பர்களே! இந்த உரையாடல் ஜோடிக்கப்பட்டது அல்ல... என் நண்பருக்கு நேர்ந்த உண்மை சம்பவம்.

இன்றைய பொன்மொழி:
உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நீங்கள் விரும்பியதைப் பெறலாம்.

இன்றைய விடுகதை:
போவான் வருவான் திம்மப்பன்
ஒரு காலில் நிற்பான் திம்மப்பன் - அவன் யார்?


விடை அடுத்த பதிவில்......

முந்தய பதிவிற்கான விடுகதையின் விடை: சவுக்கு மரம்.
 
முந்தய விடுகதையின் பதிவை பார்க்க: 
 ஜெயலலிதா கடவுள், விஜயகாந்த் பக்தர் (ஓர் தெய்வீக கூட்டணி?)



19 கருத்துரைகள்:

ramalingam said... Best Blogger Tips

நல்லவேளை. என் கண்ணைத் திறந்தீர்கள். வோடாபோனுக்குத்தான் மாற நினைத்திருந்தேன். ஒரு நூறு பேருக்கு இதை ஃபார்வேர்ட் பண்ணி விடுகிறேன்.

Chitra said... Best Blogger Tips

உண்மை சம்பவமா? அவ்வ்வ்......

மதுரை சரவணன் said... Best Blogger Tips

வோடோ போன் மேல ஏன் இவ்வளவு கோபம் ,,,!

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ramalingam
///நல்லவேளை. என் கண்ணைத் திறந்தீர்கள். வோடாபோனுக்குத்தான் மாற நினைத்திருந்தேன். ஒரு நூறு பேருக்கு இதை ஃபார்வேர்ட் பண்ணி விடுகிறேன்.///

வோடாபோனுக்கு எதிரானவன் அல்ல நான்... ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சில நிறைகுறைகள் உண்டு.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Chitra
///உண்மை சம்பவமா? அவ்வ்வ்......///

நிச்சயம்மாக உண்மை தான் அக்கா

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@மதுரை சரவணன்
///வோடோ போன் மேல ஏன் இவ்வளவு கோபம் ,,,!///

இந்த வோடாபோன் நண்பரை தினமும் சந்திப்பேன்... மனுஷன் பொலம்பி தள்ளிருவார்...

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

கலக்குங்க தலைவா..

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_02.html

Unknown said... Best Blogger Tips

சரிதான் நானும் வேற கம்பெனிக்கு சேஞ் ஆகலாம்னு இருதேன்

அப்படி சேஞ் ஆனா வோடபோனுக்கு சேஞ் ஆகக்கூடாது

ஓகே ஓகே

பிரபாஷ்கரன் said... Best Blogger Tips

மொபைல் போன் நிறுவனங்களால் நாம் படும் தொல்லைகள் ஏராளம் .. நன்கு வெளிபடுத்தி இருகிறீர்கள்

Jayadev Das said... Best Blogger Tips

நான் ஊருக்குப் போனப்ப, ஓட போன் என்பதை ஓட்ட [ஓட்டை] போன் என்று எண்கள் ஊரில் என் சொல்றாங்கன்னு இப்பதான் புரியுது.

Unknown said... Best Blogger Tips

நானும் வோடபோன் தான் யூஸ் பண்ரேன், எனக்கு எந்த பிரச்ச்னையும் இல்லை, நல்ல கவரேஜ் கிடைக்குது, ஒவ்வொரு நெட்வொர்க்கலயும் ஒவ்வொரு பிரச்ச்னை இருக்கும் போல...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@நா.மணிவண்ணன்
///சரிதான் நானும் வேற கம்பெனிக்கு சேஞ் ஆகலாம்னு இருதேன்

அப்படி சேஞ் ஆனா வோடபோனுக்கு சேஞ் ஆகக்கூடாது ///

நல்ல மொபைல் கம்பெனிக்கு மாற வாழ்த்துக்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@பிரபாஷ்கரன்
///மொபைல் போன் நிறுவனங்களால் நாம் படும் தொல்லைகள் ஏராளம் .. நன்கு வெளிபடுத்தி இருகிறீர்கள்///

அண்ணே! முதல் வருகைக்கு நன்றி...

sunday சந்திப்பு எப்படி இருந்தது உங்களுக்கு?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Jayadev Das
////நான் ஊருக்குப் போனப்ப, ஓட போன் என்பதை ஓட்ட [ஓட்டை] போன் என்று எண்கள் ஊரில் என் சொல்றாங்கன்னு இப்பதான் புரியுது.///

அப்ப ஓட்டை போணுல இருந்து ஊரையே மாதிருவோம்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@இரவு வானம்
///நானும் வோடபோன் தான் யூஸ் பண்ரேன், எனக்கு எந்த பிரச்ச்னையும் இல்லை, நல்ல கவரேஜ் கிடைக்குது, ஒவ்வொரு நெட்வொர்க்கலயும் ஒவ்வொரு பிரச்ச்னை இருக்கும் போல...///

அண்ணே! உண்மைய சொலுங்க... உங்களுக்கு வோடாபோன் ஆபர் விஷயத்துல பிடிச்சிருக்கான்னு?

Unknown said... Best Blogger Tips

முதல்ல நண்பா இந்த ip address matter உங்க தளத்துல இருந்து தூக்குங்க என்ன மாதிரி கம்யுனிச நாட்டுல இருந்து வர்ற பர்திவர்களுக்கு சரியான பிரச்சினை ப்ளீஸ்!

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@விக்கி உலகம்
///முதல்ல நண்பா இந்த ip address matter உங்க தளத்துல இருந்து தூக்குங்க என்ன மாதிரி கம்யுனிச நாட்டுல இருந்து வர்ற பர்திவர்களுக்கு சரியான பிரச்சினை ப்ளீஸ்!///

அண்ணே! கண்டிப்பா உங்க கோரிக்கையை நிறைவேற்றுகிறேன், ஆனா என்ன பிரச்சனைன்னு சொன்னா நல்லா இருக்கும்... என் தனி மெயில் - க்கு அனுப்பலாமே...

Anonymous said... Best Blogger Tips

இந்த மாதிரி அனுபவம் எனக்கும் ஏற்பட்டது. வித்தியாசம்,என்னவெனில் அருகில் இருந்த வாடிக்கையாளர் மையம் நிர்வாகி என்னை அழைத்து " மிக மிக மரியாதையாக பேசினார்". நல்ல வேளை நம்ம பதிவர்கள் யார் காதிலும் விழ வில்லை அந்த நல்ல வார்த்தைகள்.

cheena (சீனா) said... Best Blogger Tips

ஏர் டெல் மட்டும் என்ன வாழுதாம் - எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டங்க தான் - டிரான்ஸ்ஃபரன்ஸியே கிடையாது - இஷ்டத்துக்கு ரூல்ஸ மாத்த வேண்டியது - சும்மா ஏதாச்சும் மெசேஜ் அனுப்ப வேண்டியது - எதையாவது அமுக்கிட்டாப் போச்சு - 50 ரூபா ஸ்வாஹா - எல்லாமே கஸ்டமர் கேர்ல போன்ல தான் கம்ப்ளிஎயிண்ட் பண்ணனும் - அவங்க ஆஃபீஸ் போனாலும் ஒண்ணூம் நடக்காது - மட்டமான சர்வீஸ் னா அது ஏர்டெல் தான்

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1