CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

இந்தியா  பந்துவீச்சு:
 பெங்களூரில் இன்று நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் யுவராஜ் சிங் மற்றும் ஜாகிர் கான் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக அயர்லாந்து அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இங்கிலாந்தே இதே மைதானத்தில்தான் சில நாட்களுக்கு முன்பு புரட்டிப் போட்டு புல்டோசர் ஏற்றி காலி செய்து அசத்தியது அயர்லாந்து. இதனால் இன்றைய போட்டியில் அந்த அணியை இந்தியா சற்று முன் ஜாக்கிரதையுடனேயே சந்தித்தது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோணி, அயர்லாந்தை முதலில் பேட் செய்யப் பணித்தார். அவர்கள் ரன் குவிப்பதைத் தடுக்கும் வகையில் பீல்டிங் மற்றும் பந்து வீச்சு வியூகத்தை அமைத்தார் டோணி. அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

ஜாகிர்கான் பந்து வீச்சில் முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது அயர்லாந்து. அடுத்த விக்கெட் மேலும் சில பந்துகளில் கிடைக்க இந்தியா உற்சாகமானது.

ஆனால் அதற்குப் பின்னர் கேப்டன் போர்ட்டர்பீல்டும், நியால் ஓ பிரையனும் நிதானமாக ஆடி ரன் சேர்க்க ஆரம்பித்தனர். இதனால் விக்கெட் விழவில்லை. இந்தியத் தரப்பில் சற்று சோர்வு தெரிய ஆரம்பித்தது.

இந்த நிலையில்தான் யுவராஜ் சிங் மூலம் இந்தியாவுக்கு புத்துணர்ச்சி கிடைத்தது. சிறப்பாக பந்து வீசிய யுவராஜ் சிங் ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார்.

சதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த போர்ட்டர்பீல்ட் 75 ரன்களில் யுவராஜிடம் வீழ்ந்தார். ரன் குவிப்பில் குதித்த குசாக்கையும் யுவராஜ் சிங்கே வீழ்த்தினார்.

தொடக்கத்தில் ஜாகிர்கான் 2 விக்கெட்களை வீழ்த்தியதும், ஆட்டம் முழுவதும் யுவராஜ் சிங் அசத்தியதும், இந்தியாவுக்கு பெரும் பலமாக அமைந்தது.

முக்கிய வீரர்களான நியால் ஓ பிரையன், கெவின் ஓ பிரையன் ஆகியோரை சொற்ப ரன்களில் இந்தியா வீழ்த்தியதால் அயர்லாந்து அணியால் ரன் குவிக்க முடியாமல் போனது.

இந்தியப் பந்து வீச்சில் ஜாகிர், யுவராஜ் சிங் பந்து வீச்சு சிறப்பாக இருந்தாலும் மற்றவர்களின் பந்து வீச்சு அவ்வளவு பிரமாதம் என்று சொல்ல முடியாது.

 ஹர்பஜன்  சிங் சிறப்பாக பந்து வீசிய போதிலும் விக்கெட் கிடைக்கவில்லை. பியூஷ் சாவ்லா பந்து வீச்சை அயர்லாந்துக்காரர்கள் பிரித்து மேய்ந்து விட்டனர். 8 ஓவர்கள் வீசிய அவர்56 ரன்களை வாரிக் கொடுத்தார்.

இறுதியில், 47.5 ஓவர்களில் அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 207 ரன்களை எடுத்தது.

இந்தியத் தரப்பில் யுவராஜ் சிங் 5 விக்கெட்களைச் சாய்த்தார். இது அவருக்கு முதல் ஐந்து விக்கெட் பவுலிங் ஆகும். ஜாகிர்கான் 3 விக்கெட்களை எடுத்தார்.


இந்தியா மட்டைவீச்சு:
         41-
வது ஓவரில் 167/5 என்று இருந்த இந்தியா 46-வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெற்றிக்கான ரன்களை யூசுப் பவுண்டரி மூலம் பெற்றார்.

        41-
வது ஓவரில் தோனி 34 ரன்கள் எடுத்து டாக்ரெல் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனவுடன் ஆட்டம் லேசாக அயர்லாந்து பக்கம் செல்கிறதோ என்ற ஐயம் எழுந்தது. ஆனால் அதே ஓவரில் மீதமிருந்த 5 பந்துகளில் லாங் ஆன் திசையில் இரண்டு மிகப்பெரிய சிக்சர்களையும் அதே திசையில் ஒரு பவுண்டரியையும் அடித்து அந்த ஓவரிலேயே அயர்லாந்தின் வெற்றி ஆசைகளைத் தகர்த்தார் அதிரடி மன்னன் யூசுப் பத்தான்.
         பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய யுவ்ராஜ் சிங் பேட்டிங்கிலும் 50 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
        ஒரே போட்டியில் 50 ரன்களையும் 5 விக்கெட்டுகளையும் இதுவரை ஒருவரும் எடுத்ததில்லை என்று கூறப்படுகிறது.
         சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்த பிறகு கோலியும், யுவ்ராஜும் இணைந்து ஸ்கோரை 100 ரன்களுக்கு உயத்தினர், அப்போது யுவ்ராஜ் அடித்த ஷாட்டிற்கு படு வேகமாக ஓடினார் கோலி ஆனால் யுவ்ராஜ் பாதி தூரம் வந்து பின்பு தன் பேட்டிங் முனைக்க்கு திரும்பினார். கோலி ரன் அவுட்டாக 100/4 என்று மைதானத்தில் நிசப்தமும், தோல்வி குறித்த அச்சமும் ரசிகர்களிடையே எழுந்தது.
        ஆனால் அதன் பிறகு களமிறங்கிய தோனி, யுவ்ராஜுடன் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 67 ரன்களைச் சேர்த்தனர்.
          அப்போதூ 50 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்த தோனி டாக்ரெல் பந்தை மேலேறி வந்து வெளுத்து வாங்குவதற்குப் பதிலாக காலைப் போட்டு என்னவோ செய்யப்பார்த்தார், பந்து மட்டையைத் தாண்டி பின்னங்காலில் பட்டது. நடுவர் அவுட் என்றார். தோனிக்கு சிறிய சந்தேகம் மேல்முறையீடு செய்தார். ஆனால் பெரிய திரையில் ரீ-பிளேயைப் பார்த்த அவர் தானே பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார்.
          அப்போது களமிறங்கிய யூசுப் பத்தான் முதல் பந்தை விட்டார், இரண்டாவது ஷாட் பிட்ச் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்து லேசாக டாக்ரெலால் பிளைட் செய்யப்பட தூக்கி சிக்சருக்கு அடித்தார். மீண்டும் அடுத்த பந்தில் ரன் இல்லை. அடுத்த பந்து லேசான பிளைட் மீண்டும் லாங் ஆன் திசையில் ரசிகர்கள் மத்தியில் பந்து போய் விழுந்தது.
         அதன் பிறகு ஆஃப் ஸ்பின்னர் ஸ்டர்லிங் பந்து ஒன்றும் லேசாக பிளைட் செய்யப்பட அதனையும் சிக்சருக்குத் தூக்கினார் யூசுப் பத்தான்.
        அதன் பிறகு யுவ்ராஜ் சிங் ஃபுல்டாஸ் பந்தை மிட்விக்கெட் பவுண்டரிக்கு விரட்டி அபார அரை சதத்தை எடுத்து முடித்தார்.
        கடைசியில் யூசுப் பத்தான் பைன்லெக் திசையில் பவுண்டரி அடித்து வெற்றி பெறச் செய்தார்.

          24
பந்துகளைச் சந்தித்த யூசுப் பத்தான் 2 பவுண்டரிகளையும் 3 சிக்சர்களையும் அடித்து 30 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
        அயர்லாந்து அணியின் கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட் அபாரமாக அணியை வழி நடத்தினார். நல்ல ஃபீல்டிங் வியூகம் அமைத்தார். பந்து வீச்சு குறிப்பாக ஜான்ஸ்டன், ரான்கின், ஸ்பின்னர் டாக்ரெல் ஆகியோர் இந்தியாவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றனர்.
         உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் முறையாக 50 ரன்கள் 5 விக்கெட்டுகள் என்ற சாதனையை நிக்ழ்த்திய யுவ்ராஜ் சிங் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
        அயர்லாந்து 8 பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தினர். இதில் ஜான்ஸ்டன், டாக்ரெல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரான்கின் விக்கெட்டுகளை எடுக்காவிட்டாலும் 10 ஓவர்களில் 34 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு கைதேர்ந்த வேகப்பந்து வீச்ச்சளர் போல் வீசினர்.
நெருக்கடியிலிருந்து இந்தியா ஒருவழியாக மீண்டு வந்து வென்றது.

அப்படியே இதையும் படிச்சிட்டு போங்க!

சுட  சுட ஹைலைட்ஸ்:




நன்றி: தட்ஸ்தமிழ், யாகூ


26 கருத்துரைகள்:

தமிழ் 007 said... Best Blogger Tips

வடை....

Rathnavel Natarajan said... Best Blogger Tips

நல்ல பதிவு.வாழ்த்துக்கள் பிரகாஷ்.

shanmugavel said... Best Blogger Tips

பதிவு நன்று.வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி..

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

ஒரு சிறு அணியிடம் ஏன் இந்த அளவுக்கு இந்தியா திண்டாடியது என்று எனக்கு புரிய வில்லை..

200 ரன்கள் எடுக்க 48 ஓவர்களா..?

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

Thanks 4 giving updated news.

Asiya Omar said... Best Blogger Tips

நல்ல விளக்கமான பகிர்வு.

ஆனந்தி.. said... Best Blogger Tips

பட் பிரகாஷ்...அயர்லாந்து கவனிக்க படவேண்டிய ஒரு டீம் ஆக எழுச்சி பெற்றுகிட்டு வருது என்பதும் மறுக்கவே முடியாது...

Unknown said... Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி நண்பா

Unknown said... Best Blogger Tips

207 அடிக்கிறதுக்குள்ள இந்தியாவுக்கு நாக்கு தள்ளீடுச்சு இவிங்க வேஸ்டுங்க எனக்கென்னமோ நம்பிக்கை இல்ல

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@தமிழ் 007
///வடை....///

வடை இல்ல, வெற்றி....

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

# கவிதை வீதி # சௌந்தர்,
///ஒரு சிறு அணியிடம் ஏன் இந்த அளவுக்கு இந்தியா திண்டாடியது என்று எனக்கு புரிய வில்லை..

200 ரன்கள் எடுக்க 48 ஓவர்களா..?////

இதெல்லாம் சகஜம்... பெரிய விஷயமா எடுதுக்கராதிங்க...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@வேடந்தாங்கல் - கருன், asiya omar,

வெற்றியை கொண்டாடுவோமே...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ஆனந்தி..
///பட் பிரகாஷ்...அயர்லாந்து கவனிக்க படவேண்டிய ஒரு டீம் ஆக எழுச்சி பெற்றுகிட்டு வருது என்பதும் மறுக்கவே முடியாது...///

அந்த பயத்துல தான் டூவீலர்ல போறப்ப கூட ஹெட்போனை மாட்டிக்கிட்டு FM - ல சொல்ற ஸ்கோர் கேட்டுக்கிட்டேன்....

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@நா.மணிவண்ணன்
///207 அடிக்கிறதுக்குள்ள இந்தியாவுக்கு நாக்கு தள்ளீடுச்சு இவிங்க வேஸ்டுங்க எனக்கென்னமோ நம்பிக்கை இல்ல///

சரிங்க மணி... கொஞ்சம் பொறுமையா இருங்க...

Chitra said... Best Blogger Tips

Cool coverage! :-)

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Chitra

வாங்க வணக்கம்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@asiya omar
///நல்ல விளக்கமான பகிர்வு.///

நிஜமாலுமேவா?!!!

ஸாதிகா said... Best Blogger Tips

பகிர்வு அருமை.பகிர்வுக்கு நன்றி

தமிழ் உதயம் said... Best Blogger Tips

சுட சுட ஹைலைட்ஸ் - சுவையான ஹைலைட்ஸ்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ஸாதிகா

முதல் வருகைக்கு நன்றி... தொடர்ந்து வாங்க.

YESRAMESH said... Best Blogger Tips

ரொம்ப சுடுதே

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

எனக்கு கிரிக்கெட் தெரியாதே....
இருந்தாலும் ஒரு வணக்கத்தை போட்டு வைப்போம்...

ரேவா said... Best Blogger Tips

கிரிக்கெட் பற்றிய பகிர்வுக்கு நன்றி நண்பரே....

Anonymous said... Best Blogger Tips

கிரிக்கெட் விளையாண்ட உணர்வு

cheena (சீனா) said... Best Blogger Tips

தகவல்கள் நிறைந்த இடுகை - நேரடி ஒளிபரப்பு போல இருக்கிறது - நன்று நன்று

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1