இனிய உறவுகளே!
கடந்த சில இல்லையில்லை பல நாட்களாக நான் ஒவ்வொரு பதிவின் கீழேயும் பொன்மொழிகளும், விடுகதைகளும் எழுதுவது இல்லை. பதிவு எழுதுவதற்கே நேரமில்லாமல் இருக்கும் போது பொன்மொழிகளுக்கும், விடுகதைகளுக்கும் நேரம் ஒதுக்க முடியாமல் போயிற்று. என் நண்பர்கள் சிலர் ஏன் எழுதுவது இல்லை என நச்சரித்தனர். சில பதிவுகள் மொக்கையாக இருந்தாலும் பொன்மொழிகளும், விடுகதைகளுமே நன்றாக இருந்ததே என்றும் சொன்னார்கள். குறைந்த பட்சம் பொன்மொழிகள் மட்டுமாவது எழுத வேண்டும் என சொன்னார்கள். (பாருடா, என் பொன்மொழிகளுக்கும், விடுகதைகளுக்கும் இம்புட்டு வரவேற்பு இருக்குதா?) அவர்களின் வேண்டுகோளை ஏற்று இன்றைய பதிவு முழுவதுமே பொன்மொழிகள், விடுகதைகள் தான்.
பொன்மொழிகள்:
அறியாமை ஆண்டவனின் சாபம். அறிவே
விண்ணை நோக்கி நாம் பறக்கும் இறக்கை.
இந்த உலகில் நஞ்சால் அழிந்தவர்களை விட
ஆசையால் அழிந்தவர்களே அதிகம்
பொறுமை மிகவும் துன்பமானது,
அதான் விளைவோ மிகவும் இனிமையானது.
பகைவனின் பலவீனத்தை அறிய அவனை
நண்பனாக பாவிக்க வேண்டும்.
அன்புக்கு உற்பத்தி ஸ்தானம் அன்னை,
அறிவுக்கு உற்பத்தி ஸ்தானம் தந்தை.
விடுகதைகள்:
சுற்றுவேன் அந்தச் செடியைச்
சூடேன் அந்த பூவை
நத்துவேன் அந்தக் காயை
நாடேன் அந்தப் பழத்தை. அது என்ன?
சங்கரன் கோயில் டப்பா
தாயும் மகளும் தேய்ப்பா. அது என்ன?
மலையிலே மலைச் சரிவிலே
மயங்கி நிற்கும் பெண்ணே
உன்னைக் கிள்ளலாம்;
கிளிக் கூண்டில் போட்டு அடைக்கலாம். அது என்ன?
ஓடுது குதிரை ஒளியுது குதிரை
தண்ணீரைக் கண்டாலே தவிக்குது குதிரை. அது என்ன?
எங்கப்பன் ஊர் சுற்றி
எங்கள் அம்மா குந்தாணி. அது என்ன?
விடை அடுத்த சில நாட்களில்...
27 கருத்துரைகள்:
இதோ ஞாபகப்படுத்திக் கொண்டு வருகிறேன்...
///
குறைந்த பட்சம் பொன்மொழிகள் மட்டுமாவது எழுத வேண்டும் என சொன்னார்கள்.////
இந்த பிட்டை யாரு போட்டது...
///
இந்த உலகில் நஞ்சால் அழிந்தவர்களை விட
ஆசையால் அழிந்தவர்களே அதிகம்
/////
இது நல்லாயிருக்கு..
அதைவிட..
///இந்த உலகில் நஞ்சால் அழிந்தவர்களை விட
நாவால் அழிந்தவர்களே அதிகம்///
இப்படியும் நாம்க மாத்துவோம்ல...
விடுகதை யோசிக்கிற அளவுக்கு நேரம் இல்ல..
இல்லன்னா..
எஸ்கேப்...
இந்த உலகில் நஞ்சால் அழிந்தவர்களை விட
ஆசையால் அழிந்தவர்களே அதிகம்
super
என் நண்பர்கள் சிலர் ஏன் எழுதுவது இல்லை என நச்சரித்தனர்//
கொஞ்சம் அவுங்க அட்ரஸ் கொடுத்தா ஆட்டோ அனுப்ப வசதியா இருக்கும்...
பொன்மொழிகள் சூப்பர்! விடுகதை -- ஐயோ ஆளை விடுங்கப்பா! நம்ம என்ன அந்தளவு அறிவாளியா?
பொன் மொழிகள் ஓ, கே. விடுகதைகளுக்கு விடை யோசித்துக்கொண்டிருக்கேன்.
பொன்மொழி கலக்கல்ஸ்....!!!
பொன்மொழி சிறப்பு.. விடுகதை யோசிக்க முடியவில்லை.. தொடருங்கள்..
இங்கே,
தமிழக கல்வியில் புதியதோர் அதிர்ச்சி.!!
http://eerigal.blogspot.com/2011/06/blog-post.html
விடுகதை "ங்கே"....
பொன்மொழி சூப்பர் எண்டு டெம்ளேட் கமென்ட் போட விருப்பமில்லை..ஆனாலும் சூப்பர் ஹிஹி
பொன்மொழிகள் அருமை...
எங்கப்பன் ஊர் சுற்றி
எங்கள் அம்மா குந்தாணி. அது என்ன?
ஹேய்.... அது ஆட்டுஉரலும் குழவியும்தானே??
ஓடுது குதிரை ஒளியுது குதிரை
தண்ணீரைக் கண்டாலே தவிக்குது குதிரை. அது என்ன?
தவளையா சகோ?
மத்ததெல்லாம் தெரியல... போங்கப்பா நீங்களும் உங்க விடுகதையும்....
விடு ஜூட்.....
//என் நண்பர்கள் சிலர் ஏன் எழுதுவது இல்லை என நச்சரித்தனர்//
ஹய்.... சும்மா ஜோக்தானே.
//என் நண்பர்கள் சிலர் ஏன் எழுதுவது இல்லை என நச்சரித்தனர்// மாப்பு, யாரோ உங்களை வச்சுக் காமெடி பண்ணியிருக்காங்க..அது புரியாம..
சகோ, பொன் மொழிகள் அருமை.
ஆனால்.....விடுகதைகள் முடியலை மாப்பு
மாப்ள ஹிஹி!
கலக்கல் நண்பா தலைப்பு சுப்பர்
அன்பின் பிரகாஷ் - பொன் மொழிகளும் விடுகதைகளும் எழுது - தொடர்ந்து எழுது. நன்று நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பொன்மொழிகள் அருமை...
பொன்னான மொழிகள்....
செம டைட்டில்
நானும் வந்துட்டேன்..
/////
குறைந்த பட்சம் பொன்மொழிகள் மட்டுமாவது எழுத வேண்டும் என சொன்னார்கள்.////
விடுங்க தல யாரோ உங்கள பிடிக்காதவன் சொன்னா !!!!!
ஹஹஹஹஹா
ஓடுற குதிரை ஒளியுற குதிரை........ செருப்பு/ காலணி
அப்பன் ஊர் சுற்றி..............
ஆட்டுரல். குழவியும் உரலும்.
மத்ததுக்கு அப்பாலிக்கா வர்றேன்.